http://i62.tinypic.com/b3stbr.jpg
Printable View
நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு, நம் புரட்சித்தலைவர் அவர்கள் வீட்டை மீட்பதற்கு மட்டுமா பண உதவி செய்தார். அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புக்களை "பறக்கும் பாவை",, "கண்ணன் என் காதலன்" மற்றும் "அடிமைப்பெண்" காவியங்கள் மூலம் வழங்கி , நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் நம் மக்கள் திலகம்.
ஆனால், சந்திரபாபு போதிய நிதி இல்லாத காரணத்தினாலும், இதர காரணங்களாலும், "மாடி வீ ட்டு ஏழை" திரைப்படத்தை தொடர முடியாமல் போனதற்கு, நமது பொன்மனசெம்மலின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், காழ்ப்புணர்ச்சி கொண்டு சில இழி பிறவிகள் அவர் மீது புழுதி வாரி தூற்றினர்.
உண்மை நிலையை பலரும் அறியும் வகையில், இந்த கட்டுரை மூலம், பதிவிட்டு, அந்த அநாகரீகவாதிகளை வாயடைக்க செய்த திரு.வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !
இந்த திரியினில் அருமையான நற் பதிவுகளை வழங்கி வரும் திரு. வி..பி. சத்யா அவர்களின் தந்தையார் நேற்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது பூத உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்களை வேண்டிகொள்கிறேன்.
தந்தையாரை இழந்து வாடும் திரு. வி..பி. சத்யா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.