http://i57.tinypic.com/uxxzn.jpg
Printable View
ஹீரோயிசம் காட்டாத எம்.ஜி.ஆர்!
கலங்கரை விளக்கம் 50 ஆண்டுகள் நிறைவு
http://i59.tinypic.com/bfhldi.jpg
‘கலங்கரை விளக்கம்’ என்ற இந்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1965-ல் வெளிவந்து அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம் கே. சங்கர். கதை மா. லட்சுமணன். இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்.
கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் சித்தம் கலங்குகிறாள். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார்.
கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார். (நம்பியாரின் உச்சரிப்பில் றெவி) நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார். அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடமா என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை, கதாசிரியரும் இயக்குநரும் ரொம்பவும் சாமர்த்தியசாலிகள்!
உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். இரட்டை வேடப் படங்களில் ஒரு கதாபாத்திரத்தை இரக்கமில்லாமல் கொல்லக் கதாசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் கோணமே இதுதான்!
மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார். தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.
கதை முடிச்சு சுவாரஸ்யமாக இருந்தாலும் படத்தின் பிற்பகுதி சவ்வாக இழுக்கிறது. உருவ ஒற்றுமையையும் மனப் பிறழ்வையும் வைத்துக்கொண்டு இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘இத்திரைக்கதையில் வலு இல்லை’, ‘வசனங்கள் சுமார்’ என்றெல்லாம் எழுதுவது தர்மமில்லை.
ஒரு பெரிய திருப்பம் வரும் என்று கடைசிவரை எதிர்பார்த்தால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிவு மாதிரி தொடக்கத்திலிருந்தே கணித்துவிடும்படியாக இருக்கிறது.
1965-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்க வீட்டுப் பிள்ளையும், ஆயிரத்தில் ஒருவனும் பிளாக் பஸ்டர்கள் ஆயின. என்றாலும் அதே ஆண்டில் பணம் படைத்தவன், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களோடு இந்தக் கலங்கரை விளக்கம் படத்திலும் நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். படம் என்றாலும் அவரது ஹீரோயிஸத்துக்கு அதிக இடம் தராத படம். என்றாலும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. தனக்கேற்ற வேடம் என்று பார்க்காமல் பாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை எம்.ஜி.ஆர். தந்திருக்கிறார். அவருடைய முத்திரை களும் ஆங்காங்கே படத்தில் உண்டு.
நகைச்சுவைக்கு நாகேஷ், வீரப்பன், மனோரமா. மகாபலிபுர டூரிஸ்ட் கைடுகளாக வரும் நாகேஷும், வீரப்பனும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக அதிக ‘நெருக்கமாக’ நடித்திருப்பது கோபாலகிருஷ்ணன்தான்!
பாடல்களும் இசையும் ஜீவனுள்ளவை. இப்போது கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கின்றன.
‘நான் காற்று வாங்கப்போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ பாடல் எளிய கவித்துவம் மிக்க வரிகளாக பாமர ரசிகனை பண்டித ரசிகனையும் ஒருசேர ஈர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் அன்று நிஜமாகவே வாலிபராக இருந்த வாலி. பாரதி தாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் மணிக்குரலில் இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது.
உணர்ச்சி மிக்க அந்தப் பாடலுக்கு நன்கு இசையமைத்திருந்தாலும், கதாநாயகனே அடிக்கடி ‘நீலா’, ‘நீலா’ என்று அரற்றுவதால் ரசிகர்களும் நிச்சயம் சரோஜா தேவியின் ரியாக்*ஷன் என்னவென்று அந்தக் காலத்தில் கவனித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ ஆகிய பாடல்கள் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் மறக்க முடியாதவை. பின்னாளில் தமிழ் சினிமாவில் சாதனைகள் படைத்த வி.சி. குகநாதன் இந்தப் படத்தின் உதவி வசன கர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனகர்த்தா ஜி.பாலசுப்பிரமணியம்.
50 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது குறைகள் தெரிந்தாலும் படத்தின் ஆதாரமான தொனியில் இருக்கும் நேர்மையும் எளிமையும் இன்றும் கவர்கின்றன. சாகாவரம் பெற்ற பாடல்கள் படத்தின் சிறப்பு முத்திரை.
பின் குறிப்பு: சங்கே முழங்கு பாடலை வானொலியில் கேட்கும்போதெல்லாம் ஒரு வருத்தம் உண்டு எனக்கு. ‘தமிழ் எங்கள் மூச்சாம்’ என்ற கடைசி வரிதான் நம்மை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்வது. இசைத் தட்டில் இசைக் கோர்ப்புக்கேற்ப, ‘தமிழ் எங்கள் மூச்சா……..ம்’ என்று நீட்டித்திருப்பார்கள். ஆகாஷ்வாணியில் அந்த நாளில் இந்தப் பாடலை நான் கேட்கும்போதெல்லாம் ‘மூச்சா….’ என்றே முடித்துவிடுவார்கள். ஒலிபரப்பியவர்களுக்கு என்ன ஆச்சோ...!?
Courtesy : The Hindu - Tamil
Courtesy : The Hindu - Tamil
http://i58.tinypic.com/15pln3k.jpg
Courtesy : The Hindu - Tamil
http://i57.tinypic.com/34nh113.jpg
Courtesy : The Hindu - Tamil
http://i62.tinypic.com/2dhusmq.jpg
புதிய தலைமுறை - ஜூலை 2015
http://i61.tinypic.com/15moh92.jpg
http://i57.tinypic.com/xd585d.jpg
Courtesy: http://devimanian.blogspot.in/
http://i62.tinypic.com/2ypf71e.jpg
மதுரை மாலை முரசு செய்தியாளனாக பணியாற்றிய காலம்.
பசுமையான நினைவுகள்!
பதிந்து கிடக்கின்றன ஆழமாய்!
சசிவர்ண தேவர்,மூக்கையா தேவர்,ஏ.ஆர்.பெருமாள் ,வேலாயுதன் நாயர்,கரியமாணிக்கம் அம்பலம்,கோச்சடை பெரியசாமி,கரு.சீமைச்சாமி ,சிங்கராயர்,ஆ.ரத்தினம்,மதுரை முத்து,காவேரி மணியன் ,கு.திருப்பதி என இன்னும் பல அரசியல் பிரபலங்களுடன் உரையாடி செய்திகளை சூடாக்கி பதிவு செய்த அந்த காலத்தை என்னால் மறக்க இயலாது.
மதுரை முத்து அதிமுகவில் இணைந்து அந்த கட்சிக்கு வலு கூட்டிய நேரத்தில் அமரர் எம்.ஜி.ஆர்.மதுரை வந்தார்.
அவர் அதிமுக தலைவராக முதல் முறையாக மதுரை வருகிறார்.
பாண்டியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
ஒவ்வொரு பத்திரிகையாளரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.
என் முறையும் வந்தது.
''நான் மணி !.மாலை முரசு'' என்றதும் அவர் முகம் சுருங்கி விட்டது..அந்தகாலக்
கட்டத்தில் தினத்தந்தி,மாலைமுரசு பத்திரிகைகள் அவருக்கு எதிராக செய்திகளை பிரசுரித்து வந்தன.ஆளும் கட்சியான திமுகவுக்கு ஆதரவாக இருந்தன.பொதுவாக இந்த குழும பத்திரிகைகள் ஆளும் கட்சியாக எந்த கட்சி வந்தாலும் ஆதரவு தரும்.
''நான் உங்களை கூப்பிடவில்லையே?''என்றார் எம்.ஜி.ஆர்.
''எங்கு செய்தி கிடைக்குமோ அங்கு பத்திரிகையாளன் போவதற்கு தடை இல்லை.இங்கு நான் இருந்தால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது பத்திரிகையில் வரும்.வெளியில் அனுப்பிவிட்டால் நான் என்ன கேள்விப் படுகிறேனோ அதை செய்தியாக்கி விடுவேன்.'' என்றேன்.
எம்.ஜி.ஆர்.மதுரை முத்துவைப் பார்த்தார்.
''மணி,செய்திகளை தப்பா போட மாட்டார் நம்ம பையன்தான்''என்றார்.
எம்.ஜி.ஆர்.சிரித்தபடி ''நான் என்ன சொன்னாலும் திரிச்சுதான் உங்க ஆபிசில் போடுவாங்க''என்றார்.
''இல்லை.யாரோ உங்களுக்கு தப்பான அட்வைஸ் பண்ணி இருக்காங்க. இன்னிக்கி உங்க பேட்டியை சாயங்கால மாலைமுரசில் பாருங்க''என்றேன்.
அதன் பின்னர் எம்.ஜி.ஆர்.மதுரைக்கு வந்தால் கூப்பிடுங்க மணியை என்று சொல்கிற அளவுக்கு அக்கட்சியில் பிரபலமாகி விட்டேன். அன்று அந்த இயக்கத்தில் இருந்த பலர் இன்று ஒதுங்கிக் கிடக்கிறார்கள் .
அமைச்சராக இருந்த கா ளிமுத்துவை அவரது கல்லூரி வாழ்க்கையின் போதே தெரியும்.கல்வித் தந்தை கருமுத்து.தியாக ராசரின் கல்லூரியில் தீவிர திமுக வாக இருந்தார்.
அவரும் ந.காமராசனும்.மாணவ பட்டாளத்துடன் ஆவேசமாக முழங்கியபடி முனிச்சாலை ரோடு வழியாக அன்றைக்கு இருந்த ராஜாஜி திடலுக்கு போனார்கள். இன்று அந்த திடல் மார்க்கெட்டாக மாறி விட்டது.அங்கு தான் கட்டாய இந்தி திணிப்பை கண்டிக்கும் வகையில் அரசியல் சட்டப் பிரிவு தாளை எரித்தனர்.
டைப் செய்யப்பட தாள் அது! அது ஓரளவு எரியும் வரை காத்திருந்து பின்னர் அதை கைப்பற்றினார்கள் போலீசார்.காளிமுத்து,நா.காமராசன் இருவரும் கைது செய்யப் பட்டனர்.
அதன் பின்னர்தான் மாணவர் போராட்டம் வலுப் பெற்றது!
Courtesy: http://devimanian.blogspot.in/
தென்மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் .சுற்றுப் பயணம் செய்கிறார் என்றால் அவருடன் செல்லும் பத்திரிகையாளர்களில் நானும் ஒருவனாகி விட்டேன்.சென்னையில் இருந்து வரும் பத்திரிகையாளர்கள் ஒரு காரிலும் ,மதுரையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் தனிக் காரிலும் செல்வது வழக்கம்.மதுரை பத்திரிகையாளர்களில் 'மக்கள் குரல்' சண்முகம் ஒருவர்.தினமலரில் இருந்து யாரேனும் ஒருவர் வருவார்.அத்தனை பத்திரிகையாளர்களையும் ஜேப்பியார் அரவணைத்து செல்வார்.சென்னையிலிருந்து வரும் கார்க்கி எங்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்வார்.
அதாவது சென்னைப் பத்திரிகையாளர்கள் என்றால் உயர்ந்த ஸ்டேட்டஸ் உள்ளவர்கள் என்பது அவரின் நினைப்பு.மேலும் அவர் கட்சியின் பத்திரிகைக்கு எழுதுகிறவர். இரவு ஆகி விட்டால் சரக்கு தேவை.உருவத்துக்கும் அவரது
மீசைக்கும் பொருத்தமே இருக்காது .நல்ல முறுக்கு மீசை!அவரை நான் சட்டை செய்வதில்லை.எம்.ஜி.ஆரிடம். எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என எனக்கு சொல்லித் தருவார்.அவர் இன்றில்லை.எனவே மறைந்தவரைப் பற்றி எந்த அளவுக்கு சொல்லலாமோ அந்த அளவுக்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
பொதுவாக நள்ளிரவைக் கடந்தாலும் கிராம மக்கள் பெட்ரமாக்ஸ் விளக்குகளுடன் பெருமளவில் காத்திருப்பார்கள்.காரை நிறுத்தி அவர்களிடம் பேசிவிட்டுதான் செல்வார்.சில நேரங்களில் அந்த சந்திப்பு சுவையாக இருக்கும். ஆகவே அவரின் கார் நின்றவுடன் நாங்கள் ஓடிப்போய் நின்று அவர்களது பேச்சை பதிவு செய்து கொள்வோம்.எப்போது எம்.ஜி ஆர்.வருவார் என அந்த நள்ளிரவில் கடும் பனியில் பிள்ளை குட்டிகளுடன் முதியவர்களும் காத்திருப்பதைக் கண்டு வியந்து போவோம்! எம்.ஜி.ஆரின் சிரிப்பில் மயக்கவைக்கும் காந்த சக்தி இருக்கும்.அந்த சக்தி அந்த மனிதனிடம் மட்டுமே உண்டு.நான் அண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகன்,வெறியன் எனக் கூட சொல்லலாம். அப்படிப்பட்ட நான் எம்.ஜி.ஆரின் மகத்தான சக்தியை சொல்வது சிவாஜிக்கு சிறப்பு சேர்ப்பதாகும்.
பொதுவாக அதிகாலை மூன்று மணி வரை எம்.ஜி.ஆரின் சுற்றுப் பயணம் இருக்கும்.முடிந்து சர்கியூட் கவுஸ் அல்லது பாண்டியன் ஹோட்டல் திரும்பியதும் பத்திரிகையாளர்களை அழைத்து அன்றைய பயணத்தின் நிறை குறைகளைப் பற்றி கேட்பார்.
மக்கள் கூட்டம் பெருமளவில் கூடியிருந்தும் காரை நிறுத்தாமல் வந்து விட்ட இடங்களை சொல்வோம். உடனே பாலகுருவா ரெட்டியார்,அன்பழகன் ஆகிய இருவரை அழைத்து எங்களிடம் பேச வைப்பார். நாங்களும் சொல்வோம் .இங்கு நாங்கள் என சொல்வது என்னையும்,தின மலர் நிருபரையும் தான்!
இந்த நெருக்கம் எங்களை திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஊரில் நடுக்காட்டில் நள்ளிரவில் நிறுத்தி விட்டது!!!
Courtesy: http://devimanian.blogspot.in/
http://i62.tinypic.com/29nv2b7.jpg
நட்ட நடுக்காட்டில் நள்ளிரவில் நானும்,தின மலர் நிருபரும் தனித்து விடப்பட்டது ஏன்?
ஏராளமான பெண்கள் கைக் குழந்தைகளுடன் நிற்பதை பார்த்து விட்ட எம்.ஜி.ஆர்.தனது காரை நிறுத்த ,தொடர்ந்து வந்த கார்களும் நின்று விட்டன.கான்வாயில் ஏழாவதாக எங்கள் கார் இருந்தது.அன்று எங்களுடன் பயணித்தவர் கார்க்கி.மக்கள் குரலின் மதுரை நிருபரான சண்முகம் எங்களுடன் வந்தாலும் நல்ல தூக்கத்தில் இருந்தார்
நானும் ,தின மலர் நிருபரும் மட்டும் இறங்கி தலைவர் இருந்த இடத்துக்கு ஓடினோம்.அவரின் பெயர் மறந்து விட்டது.புகைப்படக்காரர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணனுக்குதெரியும்எனநினைக்கிறேன்.ராம நாதன்[ஹிந்து].எஸ் எஸ்.கைலாசம்,[பி.டி.ஐ.] திருமலை [தினமணி] இன்னும் சிலர் அனேகமாக ஓய்வு பெற்று இருப்பார்கள்.இவர்களை நன்றாக தெரிந்தவர் ஜேப்பியார்தான்.
கிராம மக்கள் தங்கள் வறுமையை தலைவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.எங்களுக்கு நல்ல ஸ்டோரி கிடைத்த மகிழ்ச்சி!குறை கேட்ட எம்.ஜி.ஆர்.அவரது காரில் ஏறி அமர்ந்ததும் தொடர்ந்து வந்த எல்லா கார்களுமே வேகமெடுத்தன! நாங்கள் பயணித்து வந்த கார் எங்களை ஏற்றாமலேயே பறந்தது!
நாங்கள் கூச்சலிட்டதை அடுத்தடுத்து வந்த கார்களில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை என்றே நினைத்தோம் அந்த இரவில் எங்களையும் கிராமத்தவர்கள் என நினைத்திருக்கலாம்.
எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
நினைத்துப் பாருங்கள்!
எங்களுக்கு உதவியவர்கள் அந்த கிராமத்து மக்கள்தான்.
''சாலையிலேயே நில்லுங்கள்.ஏதாவது டாக்சி வரும் ஏற்றி விடுகிறோம்''என்று சொன்னதுடன் நிற்காமல் பத்து பேர் கூடவே இருந்தார்கள்.
வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு!
எம்.ஜி.ஆரை நேசிப்பவர்களுக்கும் உதவும் குணம் இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து ஒரு டாக்சி வந்தது.அதில் இருவர் மட்டும் இருந்தனர் அருப்புக்கோட்டைக்கு போய் கொண்டிருந்தார்கள்.நாங்கள் அதில் ஏறிக் கொண்டோம்.
அருப்புக்கோட்டையில் அவர்கள் இறங்கிக் கொண்ட பின்னர் நாங்கள் பழனிக்கு புறப்பட்டு விட்டோம்.அங்குதான் நிகழ்ச்சிப் படி எம்.ஜி.ஆர்..தங்கி விட்டு பிற்பகலில் கோவை சுற்று பயணம் செய்வதாக இருந்தது.
பாலகுருவா ரெட்டியார்,காளிமுத்து,ஜேப்பியார் ஆகியோரை சந்தித்து நடந்தவைகளை சொன்னோம்.
தலைவரை பார்த்து சொல்லாமல் மதுரைக்கு போவதாக இல்லை என்பதை பாலகுருவா ரெட்டியாரிடம் உறுதி பட சொல்லவே நாங்கள் கான்வாயில் பயணித்த கார் டிரைவரை அழைத்து விசாரித்தார்.
''கார்க்கி சார்தான் காரை எடுக்க சொன்னார்.பின்னால வரும் கார் ஏதாவது ஒன்றில் ஏறிவிடுவார்கள் என்று சொன்னதால் கிளம்பி வந்து விட்டேன் ''என உண்மையை சொன்னார்.
எம்.ஜி.ஆர். தூங்கி எழும் வரை நாங்கள் காத்திருந்தோம்.
நாங்கள் காத்திருப்பதை ஜேப்பியார் தலைவரிடம் சொல்லி விட்டார்.
வேறு யாரையும் சந்திக்காமல் எங்கள் இருவரை மட்டும் அழைத்து எம்.ஜி.ஆர் .ஆறுதல் சொன்னதுடன் நாங்கள் மதுரை செல்வதற்கான ஏற்பாடையும் செய்தார்.
சுற்று பயணம் முடித்து சென்னை திரும்பியதும் கார்க்கியை பத்திரிகை அலுவலகம் வருவதற்கு தடை விதித்து தண்டனை கொடுத்தார் என்பது எங்களுக்கு தெரிய வந்தது.எங்கள் மீது காரணமின்றி கார்க்கி வெறுப்பினை வளர்த்துக் கொண்டது காளிமுத்துவுக்கும் தெரியும்.