http://i64.tinypic.com/2rr8l5z.jpg
Printable View
http://i65.tinypic.com/ngc9hk.jpg
தொடரும் ..............!!!!!!!!
இரண்டு நாட்கள் முன்பாக நான் இந்தப் பதிவை இட்டிருந்தேன். சிலைக்கு எதிராக வழக்கு போட்டவர் (சீனிவாசன் என்பவர்) இறந்துவிட்டாராம். அது எனக்குத் தெரியாது. அவர் இறந்துவிட்ட தகவலை என் பதிவை பார்த்த நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
இது விஷயத்தை சத்தம் போடாமல் அந்தப் பதிவிலேயே திருத்தம் செய்யவோ, அல்லது விஷயத்தை நமக்குள்ளேயே அமுக்கவோ செய்யாமல் நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்த தகவலை நேர்மையாக பதிவு செய்கிறேன். எனக்கு தகவல் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.
மற்றபடி, நான் பதிவிட்டிருந்த கருத்துகளில் மாற்றம் இல்லை.
http://i68.tinypic.com/2uenv34.jpg
பொதுவாக, கிருஷ்ணன் -பஞ்சு இயக்கும் படத்தின்
'செட்' இல் நுழைபவர்கள், இயக்குனர்கள் இல்லாமல், அவர்களுக்காக காத்திருப்பர். ஆனால் அவர்கள் "செட்' க்குள் நுழைவதை கண்டால் எழுந்து நின்று அந்தஇயக்குனர்களுக்கு மரியாதை செய்யும் பழக்கம் உண்டு
ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா " படத்தின் "செட்'இல் இரடை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணனுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது . இயக்குனர் கிருஷ்ணன் வந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மக்கள்திலகம் எம்ஜிஆர் உள்ளே நுழைந்தார்
எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டனர் !
இயக்குனர் கிருஷ்ணன் ? அவருக்கு நிற்பதா அல்லது உட்கார்ந்து கொண்டே இருப்பதா என்று குழப்பம் ! என்ன பண்றது......ஒன்றும் தோன்றாமல் மெதுவாக எழுந்து நின்றார் !
எம்ஜிஆர், கிருஷ்னன் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்துவதைக்
கொண்டு , பெரும் சினம் கொண்டார் ![
நேராக, அவர் கிருஷ்ணனை நோக்கி வந்து
" நீங்கள் செய்த காரியம் உங்களுக்கே நன்றக இருக்கிறதா ? "
என்று கோபமாக கேட்டார் !
எல்லோருக்கும் எம்ஜிஆர் கோபம் கொண்டு பேசியதைப் பார்த்து
" டென்ஷன்" ஆயினர் !
" என்ன நடக்குமோ ! "
என்கிற அச்சம் அங்கே நிலவியது !
உடனே கிருஷ்ணன் , எம்ஜிஆரிடம் ஏஏதோ காதில் கூறினார் அதனைக் கேட்டு
எம் ஜிஆர் பலமாக சிரித்து விட்டார்......மீண்டும் சிரித்தார் !
எல்லோருக்கும் குழப்பம் !
என்ன சொன்னார் கிருஷ்னன், எம்ஜிஆர் இடம் ?
இதுதான் :
" எனக்கு நானே மரியாதை கொடுக்கத்தான் எழுந்து
நின்றேன் ! "
( இந்த அளவு இயக்குனர் கிருஷ்ணன் மீது மக்கள் திலகம்
எம்ஜியார் பெரு மதிப்பு வைக்கக் காரணம் , மக்கள் திலகத்தில்
முதல் படமான ' சதி லீலாவதி ' யில் துணை இயக்குனராகப்
பணியாற்றிவர் கிருஷ்ணன் )
நன்றி ;சந்திரன் வீராசாமி அவர்கள் முகநூல்
சந்திரபாபு நடவடிக்கையை நாசுக்காக சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
அப்படியும் பின்னாளில் அவருக்கு உதவினார் புரட்சித் தலைவர்.
ஜெமினி கணேசன் துப்பாக்கியை துடைக்கும்போது சுட்டுக் கொண்டதாக செய்திகள் வந்தது. முதல்வர் புரட்சித் தலைவர் பிரச்சினையை முடித்து வைத்தார்.
இதேபோல பலருக்கும் உதவியிருக்கிறார்.
நன்றி கெட்ட உலகம்டா.
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.
புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.
மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.
முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.
எம்.ஜி.ஆர்.
அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..
காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..
courtesy - vallamai
நான் அறிந்த எம்.ஜி.ஆர்!
குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.
வாழ்ந்தவர் கோடி,
மறைந்தவர் கோடி,
மக்களின் மனதில் நிற்பவர் யார்!
என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்!
வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் சூட்டவும், பாராட்டவும் செய்தது. வாழ்ந்த நாட்களில் சரித்திரம் படைத்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் தான் ம.கோ.ராமசந்திரன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தொழில் எனும் பொழுது ஒரு மாதிரியாகவும், அதுவே நிஜ வாழ்க்கை எனும் பொழுது வேறாக இருக்கும். ஆனால் ம.கோ.ராமசந்திரன் அவர்களோ தொழில், வாழ்க்கை என்றெல்லாம் வேறு படுத்திப்பார்க்கத் தெரியாதவர்.
எல்லோரிடமும் திறமைகள் உண்டு, ஆனால் அந்த திறமைகள் தன்னிடம் இருப்பதை அறிந்து செயல் படுத்துபவர் ஒரு சிலரே, அப்படி தன்னிடம் இருந்த எல்லா திறமைகளையும் தெரிந்துக் கொண்டு இயக்குனர், தயரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து திரை உலகில் மிகப்பெரிதாக சாதித்துக் காட்டியவர். ஒரு மனிதன் அவனுடைய வாழ்நாளில் சேமிக்க வேண்டிய ஒரே பெரிய சொத்து நண்பர்களும், உறவினர்களும் தான், அப்படி ஒரு மாநிலத்திலிருக்கும் அனைவரையும் உறவினராய் சம்பாதித்தவர்.
அப்படி அனைவரின் அன்பை சம்பாதிக்க என்ன செய்யலாம். நல்லவனாக நடிக்கலாம், அதற்கு சிறந்த நடிகர் என பெயரும் வாங்கலாம்.ஆனால் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதால் ஒருவரை ஒரு மாநில மக்களே விரும்புவர்களா என்ன? விரும்பினார்கள் அதற்குக் காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர். நன்றாக சாப்பிட்ட ஒருவனிடம் “பசிக்கிறதா என்பதை விட, பசிக்கிற ஒரு மனிதனுக்கு அன்னமிடுவதே” சாலச் சிறந்தது.
அதைத்தான் அவர் “பசிக்கிற ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பசி என்கிற ஒவ்வொருவனுக்கும் உணவினை வாரி வழங்கினார்” அட்சய பாத்திரம் போல. அரசு கொடுக்கும் பொருட்களை சுரண்டல் இல்லாமல் அதை மக்களிடம் சேர்த்தார். அவர் அறிமுக படுத்திய திட்டங்கள் தான் எத்தனை? சத்துணவுத் திட்டம், விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள் இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.
அவர் கொடுத்த இலவச ஓட்டைக் கொண்டு வீட்டை அமைத்து, அதில் வாழ்கிற எத்தனையோ பெயரில் நானும் ஒருத்தியாய். சிலருடைய பெருமைகள் சொல்லி மாளாது எனினும் இவருடைய பெருமைகள் சொல்ல சொல்ல மாளாதவைகளாய்! நாம் தியாகிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உலகிற்கு மட்டுமே தியாகிகளாய், ஆனால் எப்போது தன் மனைவி குழந்தை பிறக்க இயலாமல், பிரசவத்தில் இறந்தாளோ அப்போதே தன்னால் இரண்டு உயிர் போனதே என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இப்படி ஒரு தியாக உள்ளத்தை மீண்டும் எங்கே காண்பது?
சிறு எறும்புக்கும் தீங்கு இழைக்காதவர், செல்ல பிராணிகளிடம் கூட உயிரையே வைத்திருந்தார். அவர் வளர்த்து வந்த செல்ல பிராணிகளான இரண்டு சிங்கங்களில், ஒன்று இறந்து விட அதனுடைய தனிமை துயரை காண சகியாதவராய் கொண்டு சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆருடைய பல படத்தின் பாடல் வரிகளுமே அவரையும், அவருடைய செய்கையையும் பிரதிபலிப்பனவாக, அதற்கோர் உதாரண பாடல் இங்கே.
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்,
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும், பகலும்
வெறும் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
தொண்டையில் துப்பாக்கி சூடுப்பட்டு, குரல் உடைந்த பிறகும் கூட நடித்து வெளிவந்த படமான காவல்காரன், பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தான் சாதிப்பதற்கு வயதோ, உடல் குறையோ தடை கிடையாது என்பதோ. இந்த காலத்தில் வீடுவீடாக சென்று லஞ்சம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத வாக்குகளை, உடல்நிலை முடியாமல், பிரசாரத்திற்கே வரமால் பெற்று முதல்வர் ஆன மாமனிதர்.
அந்த மாமனிதருக்கு
கிடைத்தது தான்
என்ன
எல்லோரையும் போல
சிறுவயதில் வறுமைதான்.
கல்வியும் கூட காசு இருப்பவனுக்கே!
வறுமையில் வாழ்க்கையை
எப்படி வாழ வேண்டும்
என்று மட்டுமல்ல,
எப்படி மாற்ற வேண்டும்
என்றும் கற்றுக் கொண்டாயா!
அதனால் தான் வறுமையில்
வாழ்ந்தவர்களுக்காக
வாழ்நாள் முழுவதும் போரடினாயா!
அத்தனை இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாயா!
உனக்கு பாரத ரத்னா விருது கூட சிறிதே!
அன்பை சம்பாதிப்பவனே ஆண்டவனை சம்பாதித்தவன், அனைத்தையும் சம்பாதித்தவன். அனைத்தையும் சம்பாதித்த அந்த மாமனிதனுக்காகவே இன்றுவரை அவர் வளர்த்த கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தான் எத்தனை!
மாமனிதரே இன்னொரு முறை தமிழ்நாட்டில் பிறப்பீராக… நாட்டின் தலையெழுத்தை மாற்ற!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது
முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்!
என்று உலகிற்கு வாழும் போதே சொல்லிவிட்டு போய்விட்டார்.
வாழ்க்கையில் வறுமை மனிதனுக்கு இருபாதையைக் காட்டி விடுகிறது.
ஒன்று நல்வழி, மற்றொன்று தவறான பாதை!
நாமும் வறுமையை ஒழிப்போம் நல்வழியில் நடந்து எம்.ஜி.ஆர் போல.
courtesy - vallamai
பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.
“படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.
படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!
இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.
துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன. நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.
செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.
எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன
courtesy - vallamai