நன்றி, திரு. முரளி ஸ்ரீனிவாஸ்! :)Quote:
Originally Posted by Murali Srinivas
Printable View
நன்றி, திரு. முரளி ஸ்ரீனிவாஸ்! :)Quote:
Originally Posted by Murali Srinivas
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1956
1. முதன் முதலாக ஏ,பி.என் நடிகர் திலகத்தோடு இணைந்த படம் - நான் பெற்ற செல்வம்
2. முதன் முதலாக நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் (படத்தின் ஒரு காட்சியில்) நடித்த படம் - நான் பெற்ற செல்வம்.
வருடம் - 1957
1. முதன் முதலாக வட்டார வழக்கு மொழி, தமிழ் சினிமாவில் இடம் பெற்றது நடிகர் திலகத்தின் படத்தில் தான். வட்டார மொழி - கொங்கு தமிழ். படம் - மக்களை பெற்ற மகராசி.
2. தமிழகத்தின் திரைப்பட சரித்திரத்திலேயே, ஏன் இந்திய திரையுலகிலே முதன் முதலாக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது நடிகர் திலகத்திற்கு தான்.
படம் - வணங்காமுடி
இடம் - சென்னை சித்ரா திரையரங்கம்
உயரம் - 80 அடி.
3. மதுரை தங்கம் திரையரங்கில் புதிய வசூல் சாதனை படைத்தது வணங்காமுடி படம். 100 நாட்கள் ஓடாமலேயே அதிக வசூல் செய்தது வணங்காமுடி தான்.
ஓடின நாட்கள் - 78
மொத்த வசூல் - Rs 1,26,904 - 11 அணா - 5 ந பை
வரி நீக்கிய வசூல் - Rs 1.00,845 - 8 அணா-7 ந பை
விநியோகஸ்தர் பங்கு - Rs 55,716 - 12 அணா -8 ந பை
[அன்றைய காலக்கட்டத்தில், அதாவது 51 வருடங்களுக்கு முன்பு, இந்த 1.26 லட்சம் என்பது எத்தனை கோடிகளுக்கு சமம் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்].
4. ஒரு நடிகர் திலகத்தின் படம் தான் இன்னொரு நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக அமையும் என்பது வெறும் வார்த்தையல்ல. 78 நாட்களை வெற்றிகரமாக கடந்த வணங்காமுடி நிறுத்தப்பட்டதன் காரணம் தங்கமலை ரகசியம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது தான். இல்லாவிடின் மதுரை தங்கத்தில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் 100 நாட்களை கடந்திருக்கும்.
5. முதன் முதலாக தமிழ் படத்தில் டார்ஜான் வேடத்தில் நடித்தவர் நடிகர் திலகம் தான். படம் - தங்கமலை ரகசியம்.
6. தமிழில் ஒரு முன்னணி கதாநாயகன் பாதி படத்திற்கு மேல் ஊமையாக நடித்தார் என்பதும் நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியமாயிருக்கிறது. படம் - தங்கமலை ரகசியம்.
7. தி.மு.கவுடனான உறவு முறிந்த பிறகு கலைஞர் கதை வசனத்தில் நடிகர் திலகம் முதன் முதலாக நடித்தது இந்த வருடத்தில் தான். படம் - புதையல்.
8. முதன் முதலாக நடிகர் திலகம் என டைட்டில் கார்டு வந்தது இந்த வருடத்தில் தான். படம் - அம்பிகாபதி.
9. 1954 -ம் வருடத்திற்கு பிறகு 1956 மற்றும் 1957-ம் வருடங்களிலும் நடிகர் திலகம் தலா 9 படங்களில் நாயகனாக நடித்து மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை நிகழ்த்தினார்.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
A brief introduction of NT's life and NT book (by Theodar Baskaran) release function
http://www.kumudam.com/webtv_streami...91%20&leftid=6
Balumahendra ,Bagyaraj addressed.
(need login)
நடிகர் திலகம் பற்றி பாலுமகேந்திரா
"இலங்கையில் பிறந்து வளர்ந்த நான் ,விபரம் தெரிந்த நாளிலிருந்து சிவாஜி சாரின் தீவிர ரசிகன் .சிறுவனாக இருக்கும் போதே சிவாஜி சாரின் படங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது என்பது கட்டாயம் .தப்பித்தவறி என்னால் பார்க்க முடியவில்லையென்றால் ,பார்த்து விட்டதாக நண்பர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படத்தின் போஸ்டரை பார்த்து நானாக ஒரு கதையை கற்பனை செய்து சொல்லி விடுவேன்.
எனக்கு 14 வயது இருக்கும் போது சிவாஜி சார் கொழும்பு வருகிறார் என கேள்விப்பட்டு எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என்று 250 கீமீ தூரத்தில் உள்ள கொழும்புக்கு போக தலைப் பட்டேன் .வழக்கம் போல வீட்டில் அனுமதிக்க வில்லை .ஆனால் சிவாஜி சாரை பார்க்கும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை .ஒரே வழி ,வீட்டை விட்டு ஓடுவது தான் .எனவே சிவாஜி சாரை பார்க்க வீட்டை விட்டு ஓடினேன் .பயணச்சீட்டு இல்லாமல் கொழும்பு சென்று சிவாஜி சார் பேசும் இடத்தை அடைந்த போது கூட்டம் கீ.மீ கணக்கில் இருந்தது .மேடையில் சிவாஜி சார் வரும் போது ஏதோ ஒரு சிறிய உருவம் தான் எனக்கு தெரிந்தது .ஆனால் அவர் பேச ஆரம்பித்ததும் அந்த சிம்மக்குரல் என்னை அப்படியே அவர் அருகே கொண்டு போனது .அவர் பேச தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை நான் இப்படியே நின்றிருந்தேன் (தலைக்கு மேல் கும்பிட்டவாறு) .
என்னுடைய கடைசி இந்திப்படத்தை நான் சிவாஜி சாருக்கு அர்ப்பணித்தேன் .அதில் "என்னைப் போன்ற எத்தனையோ கலைஞர்களுக்கு தூண்டுகோலாக இருந்த ,இப்போதும் இருக்கின்ற ,வருங்காலத்திலும் இருக்கப்போகின்ற சிவாஜி சாருக்கு சமர்ப்பணம்" என குறிப்பிட்டேன்.
நடிகர் திலகம் இறந்த போது நான் குறிப்பிட்டது இது தான் .."யார் சொன்னது சிவாஜி சார் இறந்து விட்டார் என்று ? அவர் இறக்கவில்லை ..அவருக்கு இறப்பு கிடையாது ..பாரதி போன்ற ,சிவாஜி சார் போன்றவர்களுக்கு இறப்பு கிடையாது "
-நடிகர் திலகம் புத்தக வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா ஆங்கிலத்தில் பேசியது.
Murali sir,Quote:
Originally Posted by Murali Srinivas
" நடிகர் திலகம் " என்கிற பட்டம், ஒரு பத்திரிக்கை நடத்திய போட்டியில் ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று படித்த ஞாபகம். இது உண்மையா ?
மோகன்,
உண்மை. பேசும் படம் இதழ் தான் நடிகர் திலகம் என்ற பட்டத்தை வழங்கியது.
அன்புடன்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1958
1. முதன் முதலாக ஒரு முழு நீள படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடித்தது இந்த வருடம் தான். படம் - உத்தமபுத்திரன்.
2. முதன் முதலாக நடிகர் திலகம் - பீம்சிங் கூட்டணியின் "ப" வரிசை படங்கள் ஆரம்பித்தது இந்த வருடத்தில் தான். படம் - பதிபக்தி.
3. முதன் முதலாக படத்தின் நாயகனாக இல்லாவிடினும், நாயகனை விட பெயரும் புகழும் பெற முடியும் என்பதை நிரூபித்ததோடு, வசூலிலும் சாதனை செய்ய முடியும் என்பதையும் வெளிப்படுத்திய படம் - சம்பூர்ண ராமாயணம்.
4. முதன் முதலாக *சக்கரவர்த்தி திருமகனை" எழுதிய மூதறிஞர் ராஜாஜி அவர்கள் படத்தை பார்த்து விட்டு "பரதனைக் கண்டேன்" என்று சொன்ன படம் - சம்பூர்ண ராமாயணம்.
5. முதன் முதலாக ஒரு ஆண்டில் முதலில் வெளியான மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் மட்டும் தான்.
1958 -ல் முதலில் வெளியானது
உத்தமபுத்திரன்.
வெளியான நாள் - 07.02.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை- காசினோ
மதுரை - நியூ சினிமா
மைசூர் - லட்சுமி.
இரண்டாவது படம்
பதிபக்தி
வெளியான நாள் - 14.03.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை - கெயிட்டி
மதுரை -கல்பனா
திருச்சி - ஜுபிடர்
கோவை - கர்னாடிக்.
மூன்றாவது படம்
சம்பூர்ண ராமாயணம்
வெளியான நாள் - 14.04.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
மதுரை - ஸ்ரீதேவி (165 நாட்கள்)
திருச்சி -சென்ட்ரல்
சேலம் -ஓரியண்டல்
கோவை - டைமண்ட்
தஞ்சை- யாகப்பா.
6. முதன் முதலாக நடிக்க வந்த 6 வருடங்களில் 50 படங்களில் அதுவும் நாயகனாக நடித்தவர் நடிகர் திலகம் தான்.
பராசக்தி - 17.10.1952 - முதல் படம்
சாரங்கதாரா - 15.08.1958 - 50-வது படம்
7. முதன் முதலாக ஒரே வருடத்தில் நான்கு 100 நாள் படங்களை கொடுத்த சாதனையும் நடிகர் திலகத்திற்கே உரியது.
1958-ல் நான்காவது 100 நாள் படம் - சபாஷ் மீனா.
8. முதன் முதலாக நாயகன் ஒரு வேடத்திலும் துணை நாயகன்/காமெடியன் இரண்டு வேடங்களிலும் நடித்த படம் = சபாஷ் மீனா. இரட்டை வேடம் பூண்டவர் - சந்திரபாபு. அந்த பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம்.
9. ஹாட்ரிக் என்று சொல்லுவது போல 1956,1957 -ஐ தொடர்ந்து, 1958 -ம வருடமும் 9 படங்களில் நடித்து மீண்டும் ஒரு சாதனை புரிந்தவர் நடிகர் திலகம்.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1959
இந்த வருடம் வெளியான படங்கள் - 6
இந்த ஆண்டு குறிப்பாக மதுரையில் சாதனை சரித்திரம் படைத்த ஆண்டு. இந்த சாதனையை இரண்டு படங்கள் பங்கிட்டு கொண்டன. முதலில்
வீரபாண்டிய கட்டபொம்மன்.
1. முதன் முதலாக சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடகம் திரைப்படமாக்கப்பட்டது இந்த படத்தின் மூலமாகத்தான்.
2. படமாக்கப்படுவதற்கு முன்பும், படம் வெளி வந்த பிறகும் மேடையேற்றப்பட்ட நாடகம் இது.
3. முதன் முதலாக ஒரு நாடகத்தின் மூலமாக கல்விக்கூடங்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்தது கட்டபொம்மன் தான்.
4. முதன் முதலாக ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்ட தமிழ் படம் கட்டபொம்மன்.
5. முதன் முதலாக டெக்னிக் கலரில் எடுக்கப்பட்ட தமிழ் படம் -கட்டபொம்மன்.
6. முதன் முதலாக லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம் - கட்டபொம்மன்.
கட்டபொம்மன் வெற்றி சரித்திரம் தொடரும்
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
Murali sir :clap:
BTW, y'day watched few scenes of " Color Enhanced " " Mughal - e - Azam " in TV. It was a different experience, but some films need to be left in B&W itself to give that classic feel.
IMO, foll. NT films would be more enjoyable to watch with color enhancement.
Galatta Kalyanam
Ponnoonjal
Lakshmi Kalyanam
Uyarndha Manidhan
Murali-sar, I am out of words.
If NT fans are growing day by day, we will also have to credit you. Not only because of your posts, but also because of all these facts and figures that we fans use in our arguments for NT. It had converted many non-fans into one. I personally will credit you for that. Thanks sar. Keep the wheel running...