நமது மக்கள் திலகத்தின் ரசிகர் திரு பாஸ்கரின் மகள் செல்வி சண்முகப்ரியா - செல்வன் கணேசன் தம்பதியருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க
என்று வாழ்த்துகிறோம் .
Printable View
நமது மக்கள் திலகத்தின் ரசிகர் திரு பாஸ்கரின் மகள் செல்வி சண்முகப்ரியா - செல்வன் கணேசன் தம்பதியருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க
என்று வாழ்த்துகிறோம் .
1973 - மே மாத அரசியல் - சினிமா - நிலவரம் .
உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்ட வெற்றி
திண்டுக்கல் இடைதேர்தல் அமோக வெற்றி
அகில இந்தியாவின் பத்திரிகைகள் நமது மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு - குறித்து அருமையான தலையங்கம் எழுதினார்கள்
மக்கள் திலகத்தின் வெற்றியினை ஜீரணிக்க முடியாதவர்கள்
வழக்கம் போல குறை கூறினார்கள் .
தயாரிப்பாளர்கள் பலர் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்க
போட்டி போட்டனர்
அரசியல் பிரமுகர்கள் அண்ணா திமுகவில் தினமும் இணைந்த வண்ணம் இருந்தனர் .
அதே நேரத்தில் ஆளும் கட்சியினர் மறைமுக தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தி தோல்வி கண்டே தோய்ந்து போனார்கள் .
மக்கள் திலகம் ஒரே நேரத்தில் 10 படங்கள் மேல் ஒப்பந்தம் ஆனார் .
1973 - திண்டுக்கல் விதை ......
1974 - புதுவை - கோவை மேற்கு வளர்ந்து
1977 - நாடாளுமன்ற தேர்தலில் பூத்துக்குலுங்கி செடியாகி
1977 - சட்டசபை தேர்தலில் கனி தரும் மரமாக வளர்ந்து
2013 - இன்று ஆலமரமாக விருத்தி அடைந்தது என்றால்
அது
நமது தெய்வம்
மக்கள் திலகம் அவர்களின் உழைப்பு -
புரட்சித்தலைவரின் நேர்மை
செல்வாக்கு
புகழ்
இரட்டை இலை சின்னம்
தமிழ் நாட்டுக்கு அவர் செய்த எண்ணிலடங்கா சேவை
ஏழைகளின் நன்றி
கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு
என்றால் அது - உண்மை - உண்மை .
சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு கச்சேரி.
http://i125.photobucket.com/albums/p...ps2754b06d.jpg
என்னை மறந்து பாடிக் கொண்டிருக்கிறேன். நான் கச்சேரியில் பாடிக்கொண்டிருக்கும் போது ஒரு வி.வி.ஐ.பி. வந்தார். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் தனது வருகையால் கச்சேரிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக அனைவரிடமும் தன் விரலசைவாலேயே அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டு இருக்கையில் அமர்ந்தார். அவர் ஆணையிட்டால் என்ன நடக்கும் என்பது தான் உலகறிந்ததாயிற்றே. அவர் வந்த சுவடே தெரியவில்லை. நான் அவர் வந்ததை அறியாமலே பாடிக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பாடல் ராம நாமம் நல்ல நாமம். பாடல் முடிந்தவுடன் பலத்த கைதட்டல். மற்ற பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட அந்தப் பாடலுக்கு மிகுந்த வரவேற்பு. காரணம் புரியாமல் நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அதற்குப் பிறகு தான் புரிந்தது. நான் தசரத ராமனைப் பற்றிப் பாடினேன். அதை ராமவரம் ராமனைப் பற்றிப் பாடியதாக நினைத்து மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஆம் வந்திருந்த வி.வி.ஐ.பி. சாட்சாத் எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திதான்.
சொன்னவர் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்.
நேற்று இன்று நாளை -1974.
1971ல் நடிகர் அசோகன் அவர்கள் தன்னுடைய மகன் அமல்ராஜ்
பெயரில் துவக்கிய படம் .
மக்கள் திலகம் அவர்களின் நேரிடை பார்வையில் எல்லா பாடல்களும் மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் இனிமையான பாடல்கள் உருவாகி வந்தன .
அசோகனின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு
1971 இறுதியில் மக்கள் திலகம் தான் நடிக்கும்
உலகம் சுற்றும் வாலிபன்
இதயவீணை
ராமன் தேடிய சீதை
நினைத்ததை முடிப்பவன்
4 படங்கள் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தும் போது
அசோகனுக்கு ஒரு செலவில்லாமல் ''நீ என்னென்ன சொன்னாலும் கவிதை '' பாடலை படமாக்கினார் .
1972 மக்கள் திலகம் தனி இயக்கம் கண்ட போது அசோகன் அவர்களின் நிலையில் தடுமாற்றமும் -தெளிவில்லாமல்
போனதும் படபிடிப்பு தள்ளி போனது .
1974 மே மாதத்தில் மக்கள் திலகம் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுத்து படத்தை வெற்றிகரமாக ,எல்லா எதிர்ப்பையும் தவிடு பொடியாக்கி ''நேற்று இன்று நாளை '' படம் - வசூல் ரீதியாக மாபெரும் சாதனை புரிந்தது என்ற வரலாற்றை உருவாக்கினார் .
இதை புரியாத ஒரு சிலர் கட்டிய கதை - கதையாகவே முடிந்து போனது .
நடிகர் அசோகனின் குடும்பத்துக்கு இன்றும் வருமானம் தரும் படம் நேற்று இன்று நாளை .