Originally Posted by
murali srinivas
தமிழகமெங்கும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வெளியீடு பற்றிய செய்திகள் தொடர்கின்றன.
நெல்லை - பம்பாய் திரையரங்கில் இன்று முதல் வசந்த மாளிகை திரையிடப்பட்டிருகிறது. அது போன்றே தூத்துக்குடி ஸ்ரீ முருகன் திரையரங்கிலும் வசந்த மாளிகை ரிலீஸ்.
தூத்துக்குடி சத்யா திரையரங்கில் [கடந்த இரண்டு வாரங்களில் உத்தமன் மற்றும் எங்கள் தங்க ராஜா ஓடிய அரங்கு] நாளை முதல் திரிசூலம் வெளியாகிறது.
சென்னை - பிராட்வே திரையரங்கில் நண்பகல் காட்சியாக [noon show] ஊட்டி வரை உறவு திரையிடப்பட்டிருக்கிறது.
மதுரையில் வசந்த மாளிகை திரையிடப்படும் அரங்குகளில் ஒரு சின்ன மாற்றம். புதிய தமிழ் திரைப்படமான மரியான் மதுரை சோலைமலை திரையரங்கில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் இந்த வாரம் வெளியாவது சந்தேகம் என்ற தகவல் வந்ததால் வசந்த மாளிகை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் மரியான் வெளியாகி விட்டதால் வசந்த மாளிகை மதுரையில் அலங்கார் திரையரங்கில் மட்டும் வெளியாகியிருக்கிறது.
அனைத்து தகவல்களுக்கும் நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
அன்புடன்