சென்ற வாரம் நண்பகல் காட்சியாக சென்னை மினர்வாவில் [பாட்ஷா] கலக்கிய ராஜபார்ட் ரங்கதுரை நேற்று 7-ந் தேதி முதல் சென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தகவல் உதவி திரு ராமஜெயம்.
அன்புடன்
Printable View
சென்ற வாரம் நண்பகல் காட்சியாக சென்னை மினர்வாவில் [பாட்ஷா] கலக்கிய ராஜபார்ட் ரங்கதுரை நேற்று 7-ந் தேதி முதல் சென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தகவல் உதவி திரு ராமஜெயம்.
அன்புடன்
இது உலக சாதனை
ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை
இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு
1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது
அதன் பின்னர் அதே அரங்கில் 7 .5 .1976 ல் திரையிடப்பட்ட
கௌரவம்நள்இரவு
12 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை புரிந்தது
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமன்னதாக மதற் காட்சி
ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்
10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு
12. 05 மணிக்கு
ஆரம்பித்து சாதனை படைத்தது
இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்
எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
ஆனால் முடியாமல் போய்விட்டது
15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு
2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது
சிவாஜியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.
Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor 9pag252)
Sivaa sir
Appreciate your contribution and your recall value. But let also not compare unnecessarily like others who practice.
Hope you will understand . Thanks..
All Legends have their own records...plus and minuses...
from our end let us not drag anybody..
regards
நடிகர் திலகத்தின் "அவன்தான் மனிதன்" திரைப்படத்தின் சிறந்த வரவேற்ப்பை அடுத்து, கோவை மாநகரில் வரும் 14, வெள்ளி முதல் 1972இல் வெளியாகி சக்கை போடு போட்ட பாலாஜியின் சுஜாதா பில்ம்ஸ் வெளியீடில் வெளிவந்த நீதித்துறையின் பெருமையை பறைசாற்றிய உன்னத சித்திரம் தினசரி 4 காட்சிகளாக ராயல் திரையரங்கில் "நீதி" திரையிட உள்ளது.
1972, திரையுலகில் உள்ள எவரும் மறக்க மறுக்க முடியாத வருடம் :
நடிகர் திலகத்தின் 7 திரைப்படங்கள் வெளியாயின
1) ராஜா
2) ஞான ஒளி
3) நீதி
4) வசந்த மாளிகை
5) தர்மம் எங்கே
6) பட்டிக்காடா பட்டணமா
7) தவப்புதல்வன்
அந்த 7 காவியத்தில்
1) ராஜா 2) நீதி 3) தவப்புதல்வன் 4) வசந்த மாளிகை 5) பட்டிகாடா பட்டணமா 6) ஞான ஒளி ஆகிய 6 நூறு நாட்கள் படங்கள்
வசந்த மாளிகை 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் தமிழகம் மற்றும் இலங்கையில் அப்படி ஒரு வசூல் சாதனை அன்றுமுதல் இன்றுவரை
பட்டிகாடா பட்டணமா 175 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரைப்பட வரலாற்றில் கருப்பு வெள்ளை படங்களிலயே அதிக வசூல் சாதனை செய்த திரைப்படம்
நடிகர் திலகத்திற்கு மசாலா திரைபடத்தில் உள்ள சண்டை காட்சிகள் வராது என்று குறையும் கிண்டலும் செய்தவர்களை வாய்மூட வைத்த படம் "ராஜா"
ஸ்டைலும், SMARTNESS கலந்த அப்படி ஒரு HANDSOME நடிகர் திலகம் ....! வயது கூட கூட உண்மையிலயே SMARTNESS அதிகரித்த ஒரு தவப்புதல்வன் நம் நடிகர் திலகம் !
நடிகர் திலகத்தை பொறுத்த வரை 1952 இலிருந்து தொடர்ந்து சாதனை..சாதனை ...சாதனை...அதில் 1972உம் ஒன்று !
http://www.youtube.com/watch?v=lvUb1m0f5Bk
திரிசூலம் பொள்ளாச்சியில் 128 நாட்கள் ஓடியது..முதல் 100 நாள் படமும் அதுவே..
Dear Ravikiran Surya Sir, What you pointed out is really good /healthy conversation/argument/discussion unnecessary comments need not bring to track other line
திருச்சியில் தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீரங்கம் பகுதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உலகம் போற்றும் உத்தமன் சிவாஜி அவர்களின் கட் அவுட்டிற்கு பணமாலை அணிவித்து மகிழ்கிறார்கள் அப்பகுதி சிவாஜி மன்றத்தினர். தொடர்ந்து 50 வருடங்களாக 1 லட்ச ரூபாய்க்கும் மேலாக பணமாலை அணிவித்து அசத்தும் சிவாஜி ரசிகர்களின் இச்செயலை பாராட்டி வியந்து இவ்வார கல்கி இதழில் படத்துடன் சிறப்பு செய்தி வந்துள்ளது. அகில உலக சிவாஜி ரசிகர்கள் கல்கி வார இதழை பார்த்து திருச்சி சிவாஜி மன்றத்தினரின் சிறப்பை போற்றுவோம்.
அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.
இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அப்போது "உலகின் தலைசிறந்த நடிகர்" என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவுக்கும் , நடிகர் திலகத்துக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர்_நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
நடிகர் திலகத்தை, மக்கள் திலகம் வரவேற்ற அந்த அறிய புகைப்படம் உங்களுக்காக. — with Sps Suresh.
Attachment 3103
திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது கண்ணதாசனா அல்லது கவி.கா.மு.ஷெரீப்பா?
இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது. இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது திரு.ஜெயகாந்தன் அவர்கள்.
‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். திருவிளையாடல் படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தன்னுடைய நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவர கா.மு.ஷெரீப் ஒப்புகொண்டார் " என்று தன்னுடய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.
இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை. ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் ஜெயகாந்தன்.
கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார்.
“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை கவியரசர் கண்ணதாசனிடம் இருந்து ஏ.பி.என் எதிர்பார்த்தார்.
Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.
‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும்.
‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு. அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு. நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.
யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு.
நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் / டி.எம்,செளந்தர்ராஜன் / யாருமே இப்போது உயிரோடு இல்லை.
வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.
ஊஹூம்......
கட்டுரை நன்றி: அப்துல் கையூம்
Dear Sir,
Not only they, even the great Nadigar Thilagam who enacted for the song is no more. But i remember reading his statement about Mr.Sheriff and the song Paatum Naanae...
Nadigar Thilagam acknowledged the greatness of the song and mentioned "a song perhaps to be marked in the history written by a non-hindu poet for a hindu god that pleased every individual of the state. long live the poet and his contribution"
thanks for sharing..!
Regards