http://i60.tinypic.com/2gxmav4.jpg
Printable View
MGRRaamamoorthi Sir,
The answer to your question is below:
http://i57.tinypic.com/11c8cw9.jpg
MGR shared a good on-screen Chemistry with both Saroja Devi and Jayalalithaa. He was paired up with Saroja Devi in 27 films and with Jayalalithaa in 28.
Courtesy: Deccan Chronicle[/QUOTE]
B.Saroja Devi and JJ both became popular and Madam JJ is the Chief Minister of Tamil Nadu and MGR's AIADMK party supremo. All Credit goes to the Magical acronym MGR.
நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.
எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.
ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.
காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு `ரவீந்தர்` எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.
எம்.ஜி.ஆர் நடித்த `இன்பக் கனவு`, `அட்வகேட் அமரன்` ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் `குலேபகாவலி`. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாஸ¥ம் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.
1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் `நாடோடி மன்னன்`தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.
இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.
எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான `அடிமைப்பெண்` படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.
32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.
கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த `பாக்தாத் பேரழகி` படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.
1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.
நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய் வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.
ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது `என்ன வேண்டும்?` என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.
ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் மூத்த சகோதரர் கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.
ரவீந்தருக்கு தயக்கம். `என்ன விஷயம்?` என்றார் எம்.ஜி,ஆர். `உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?` என்று ரவீந்தர் கேட்டதற்கு `புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்` என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.
அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த `இணைந்த கைகள்` படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.
`குலேபகாவலி` போன்று `அப்பாஸ்` என்னும் சுவையான அரபுக் கதையை அதே பெயரில் திரைப்படமாக்க முயற்சி செய்து, இவரே சொந்தமாக தயாரித்து இயக்கத் தொடங்கினார். கே.ஆர்.விஜயா, மனோரமா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. நிதி நெருக்கடியால் பாதியிலேயே நின்று போனது அப்படம்.
தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி `கலைமாமணி` பட்டம் வழங்கி கௌரவித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார். அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருக்கு மூன்று மகன். மூன்று மகள்
இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!
- ஹ.மு.நத்தர்சா -தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2002
Courtesy : Mr. Chandran Veerasamy, FB.
http://i60.tinypic.com/9qcyo1.jpg
http://i57.tinypic.com/30ctw28.jpg
Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
http://i58.tinypic.com/xbwpk8.jpg
Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
நமது மக்கள் திலகம் திரியில், பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் பதிவிடப்பட்ட கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தாங்க முடியாத அறிவு ஜீவி ஒருவர் தனது அபிமான நடிகர் பெயரில் இருக்கும் மற்றொரு திரியில் புலம்பி தீர்த்திருக்கிறார்.
முதலில் இதை நான் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. ஆனாலும், அந்த நண்பர் அடிக்கடி "வரலாற்று பிழை" ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பொய்யான மறுப்புரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், நானும் உண்மை நிலவரத்தை இந்த திரியினை பார்வையிடுபவர்கள் அறியும் வண்ணம் ஒரு விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.
மக்கள் திலகம் திரியில், தனது அபிமான நடிகருடன் நம் பாரத் எம். ஜி. ஆர். அவர்களையும் சேர்த்து பொதுவான புகழாரம் சூட்டுவது, பின்னர் தனது அபிமான நடிகரின் திரியில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படங்களையும், அவரையும் எதிர்மறையாக விமர்சிப்பது ஏன் இது போன்ற கபட நாடகத்தை அரங்கேற்றி அதில் இரட்டை வேடம் தாங்கி நடிப்பது என்று புரிய வில்லை.
நம் தலைவனின் திரைப்படங்கள் புரிந்து வருகின்ற மறு வெளியீட்டு சாதனைகள் பற்றி நாம் எழுதக்கூடாதாம். உங்கள் அபிமான நடிகரின் திரைப்படங்கள், மறு வெளியீட்டில் ஏதேனும் ( ? ) ஒன்றிரண்டு சாதனைகள் புரிந்திருந்தால் அதை பதிவிட்டு அற்ப சந்தோசம் அடைவது தானே ? முதல் வெளியீட்டில் மட்டும் என்ன சாதனைகள் வாழுகிறதாம் என்று நம் திரி அன்பர்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
தனது அபிமான நடிகர் நடித்த படங்கள் பல இருக்கிறதாம் அதில் எதை பதிவிடுவது என்று தெரிய வில்லையாம் - எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தொலைக்காட்சி விளம்பர பாணியில் ஒரு பிதற்றல். ஆடத் தெரியாதவள் கூடம் பத்தாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
மற்றொரு அறிவு ஜீவி பாரகன் தியேட்டர் சென்னை திருவல்லிக்கேணியில் தானே இருந்தது என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம் .... தாத்தா சாஹிப் பால்கே விருது என்ன நம் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாரத்" , " பாரத ரத்னா" பட்டங்களை விட உயரந்ததா என்ன ? அவ்வப்போது இதை ஒரு தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஊளையிடுவது.
பத்மஸ்ரீ பட்டமோ ஆண்டுதோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கலை, சமூகப் பணி, விஞ்ஞானம் - பொறியியல், வியாபாரம் - தொழில், மருத்துவம், இலக்கியம் - கல்வி, விளையாட்டு போன்ற துறைகளின் வல்லுனர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் கலைத்துறையை சார்ந்த 24 நபர்களுக்கு ஆந்திரா மாநிலம் கஜம் அஞ்சையா வில் தொடங்கி ராஜஸ்தான் மாநிலம் ஷகிர் அலி வரை மொத்தம் 24 பேருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாரத் - பாரத ரத்னா பட்டம் என்ன வருடந்தோறும் இத்தனை நபர்களுக்கு அளிக்கப்படும் பட்டமா ?
பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் ஒரு தொகை கட்டினால் கிடைக்கக் கூடிய பட்டமே என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையாக இருக்கக் கூடும். ஏன் என்றால் சென்னையிலேயே செவாலியர் விருது அளிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கின்றனாராம்.
அலெக்ஸ் என்ற நடிகர் (அதிகம் கேள்விப்படாத நடிகர்) கூட செவாலியர் விருது பெற்றிருக்கிறார் என்று தகவல்.
1997ல் கொடுக்கப்பட்ட தாத்தா சாஹிப் பால்கே விருதுக்கே இப்படி ஒரு அவல கூக்குரல் என்றால் 1972லேயே பாரத் பட்டம் பெற்ற கலைவேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கர்ஜிக்க வேண்டும் ? நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா பட்டம் பெற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் எவ்வளவு குதிக்க வேண்டும். ஆனாலும் எங்கள் தலைவன் பாணியில் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறோம்.
ஒடாத ராஜபார்ட் ரங்கதுரை, ராஜ ராஜ சோழன் (இத்தனைக்கும் முதல் ஸ்கோப் படம்), விளையாட்டு பிள்ளை, சுமதி என் சுந்தரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையெல்லாம் 100 நாட்கள் பட்டியிலில் சேர்த்து அற்ப சந்தோசம் அடைந்தீர்கள்.
விட்டால், அன்பளிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை அலைகள், நாம் பிறந்த மண், கவரிமான், வெற்றிக்கு ஒருவன், அமர காவியம், மோகனப்புன்னகை, ஊருக்கு ஒரு பிள்ளை, கருடா சவுக்கியமா, ஊரும் உறவும், மிஸ்டர் மகேந்திரா , இரு மேதைகள், நாம் இருவர், சுமங்கலி, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் (பட டைட்டில் எங்கள் இதய தேய்வத்துக்குத் தான் பொருந்தும்), குருதட்சனை, காவல் தெய்வம், அஞ்சல் பெட்டி 520, திருடன், எதிரொலி, தேனும் பாலும், தர்மம் எங்கே, மூன்று தெய்வங்கள், பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், மனிதனும் தெய்வமாகலாம் , அன்பைத்தேடி அன்பே ஆருயிரே சித்ரா பௌர்ணமி, இளைய தலைமுறை, நிறைகுடம், வம்ச விளக்கு, [படிக்காத பண்ணையார்), நேர்மை, லட்சுமி வந்தாச்சு, குடும்பம் ஒரு கோயில், ராஜ மரியாதை, வீர பாண்டியன் அன்புள்ள அப்பா, என் தமிழ் என் மக்கள் உட்பட பல 50 நாட்கள் கூட ஒடாத படங்களைக் கூட ஓடியதாக கதை விடும் பலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்கள் நீங்கள். ஒரு சாம்பிளுக்கு தான் இந்த படங்கள். 1952 முதல் பட்டியலிட்டால் தோல்விப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.
உங்கள் திரியில், இது போல் நீங்கள் அள்ளி விடும் சரடுகளை நாங்கள் ஏதேனும் விமர்சனம் செய்கிறோமா ? அதுதான் எங்கள் தலைவர், தனது காவியங்கள் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த நாகரீகம், பண்பாடு.
எது ஒன்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. எங்களை சீண்டினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.