ஞாபகம் வ்ரவில்லையே ஜி.... இன்னும் ஏதாவது க்ளூ இருந்தா கொடுங்களேன்.
Printable View
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி பாடலைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது...
அனேகமாக கதா நாயகிகளுக்கு எல்லாம் பி.சுசீலாதான் குரல் கொடுப்பார். ஒரு சில படங்களில் ( குமரிப்பெண் etc. ) ஈஸ்வரியின் சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறந்தது. அந்த வரிசையில் வைராக்கியம் என்று ஒரு படம். ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா, ஜோதிலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வந்தது.
தெருவில் கூத்தாடிப் பிழைக்கும் எஸ்.எஸ்.ஆரையும் அவர் சகோதரி நிர்மலாவையும் சுற்றி ஓடும் கதை. நிர்மலாவின் ஜோடியாக படித்த வாலிபன் ஜெமினி.
கூத்தாட உடன் வந்து சேரும் ஜோதிலட்சுமி கடைசியில் கொலைக் குற்றம் செய்த எஸ்.எஸ்.ஆரைக் கண்டு பிடிக்க வந்த சி.ஐ.டி எனும் புதிய பறவைக் கதையில்.. அனேகமாக எல்லாப் பாடல்களுமே பெண் குரலுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியையே சார்ந்து இருந்தன.
ஆரம்பப்ப் பாடலான "தென் பாண்டிச் சீமையிலே நான் பிறந்தேன்.. தெம்மாங்கு பாட்டுப் பாடி ஆட வந்தேன்" என்று டி.எம்.எஸ் விருத்தம் பாட..
"தேருக்குச் சேலை கட்டி தெருவில் விட்டா.. யாருக்கும் ஆசை வரும் பார்வை பட்டா" என்று ஈஸ்வரி தேன் சொட்டப் பாடலைத் தொடர்வார்.
டி.எம்.எஸ், ஈஸ்வரி டூயட்டான "சொல்லத் துடிப்பது என்ன.. மெல்லச் சிரிப்பது என்னா.. மூடி மறைப்பது என்ன.. மோகம் பிறக்குது வா வா" என்ற பாடலும்..
"ஏண்டா மனுஷன் ஏய்க்கிறான்" என்ற பாடலும் நினைவுக்குள் மீண்டும் இசைக்க... தேடோ தேடென்று தேடியதில் ஒன்றே ஒன்றுதான் வீடியோவாக சிக்கியது. மிச்சம் எல்லாம் ஆடியோ
தேருக்கு சேலை கட்டி
http://www.inbaminge.com/t/v/Vairakk...aatti.vid.html
சொல்லத் துடிப்பது என்ன
http://www.inbaminge.com/t/v/Vairakk...0Enna.vid.html
ஏண்டா மனுஷன் ஏய்க்கிறான்
http://youtu.be/Bclxte_Xopw
அந்த சர்ர்ர்.. சர்ர்.... என்ன அருமையாக ஒலிக்குது ?
நண்பர் ஒருவர் இடம் இருந்து காலையில் ஒரு மெயில் வந்து இருந்தது
அதில் இரண்டு பாடல்களை அனுப்பி இருந்தார்
ஒன்று மாயா பஜார் படத்தில் இடம் பெற்று இருந்த தமிழ் பாடல் 'கல்யாண சமயல் சாதம் ' கண்டசால இசை அமைப்பு
மற்ற ஒன்று பிரெஞ்சு மொழி பாடல் என்று கூறி உள்ளார்
http://www.youtube.com/watch?v=kdcov5ycWdg
http://www.youtube.com/watch?v=tDBEDNyhbSc
குமுதம் 6 வித்யாசங்கள்
மதுஜி,
நிஜமாகவே தூள். நானும் வைராக்கியத்துடன் தேடித் தேடி அலுத்து வைராக்கியம் இழந்து விட்டு விட்டேன். ஆனால் நீங்கள் அட்டகாசமாகத் தேடிக் கண்டு பிடித்துத் தந்து விட்டீர்கள் இந்த ராட்சஸி ரசிகனுக்காகவே போலும்.
கொன்னுட்டீங்க பாஸ். தேங்க்ஸ்ஜி. ஆமாம். பானுமதி பாட்டு கேட்டாச்சா?
அறிவிப்பு
இன்றோ அல்லது நாளையோ அல்லது அடுத்த வாரமோ வாசுதேவன் அவர்களின் 'இன்றைய ஸ்பெஷல்' பாடலாக மலரவிருப்பது, கண்ணதாசனின் கருப்புப்பணம் படத்திலிருந்து (தப்பா எடுத்துக்காதீங்க... கண்ணதாசன் தயாரித்த கருப்புப்பணம்) மெல்லிசை மன்னர்களின் அருமையான இசையில், ஜி.ஆர்.நாதனின் அற்புத ஒளிப்பதிவில், சீர்காழி மற்றும் ராட்சசி அசத்தும் பாடல்
"தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது
எண்ணங்கள் மெல்லமெல்ல எங்கெங்கோ போகுது"
நடனக்குழு மங்கையரின் அழகான ஒருமித்த கைதட்டலுக்காகவே பார்த்துக் கொண்டிருக்கலாம்...
மதுஜி!
பழைய ஞாபகத்தை கிண்டிக் கிளறி விட்டீர்கள். ஒரே நாளில் வெளியான நடிகர் திலகத்தின் இரு படங்கள். (சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள். 29.10.1970) கடலூரில் காலையில் நியூசினிமாவில் 'எங்கிருந்தோ வந்தாள்' பார்த்துவிட்டு, மதியம் பாடலியில் 'சொர்க்கம்' பார்த்துவிட்டு, ஈவினிங் ஷோ முத்தையா திரையரங்கில் 'வைராக்கியம்' பார்த்ததாக நினைவு. ('வைராக்கிய'த்தைப் பொறுத்த மட்டில் நினைவுதான். ஊர்ஜிதம் இல்லை. கார்த்திக் சார் மனது வைப்பாராக. 'வைராக்கியம்' ரிலீஸ் நான் சொன்னது சரியா இல்லையா என்று. சரியாய் இருந்தால் 'நல்ல ஞாபக சக்தி' என்று எனக்கு நானே 'ஷொட்டு' வைத்துக் கொள்வேன்:)..)
நீங்கள் இரண்டு வரியில் 'வைராக்கியம்' கதையை எழுதப் போக, வாழை மட்டை மாதிரி இருந்த புத்தி கற்பூரமாய் மாறி பக்கென்று பிடித்துக்கொண்டது. அப்படியே மல்லாக்க சாய்ந்து எண்ண அலைகளில் மூழ்கி விட்டேன். (வீட்டுக்காரம்மா சாப்பிடக் குரல் கொடுப்பது அதையும் மீறிக் கேட்கிறது.:) சாப்ட்டுட்டு வாரேன்)
//அறிவிப்பு
"தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது
எண்ணங்கள் மெல்லமெல்ல எங்கெங்கோ போகுது" //அடடா என்னா பாட்டு.. ம்ம் ஐயாம் வெய்ட்டிங்க்..ஓகே ஓகே வி ஆர் வெய்ட்டிங்க்..
மதுண்ணாவ் சேலைகட்டிய சிங்காரத்தேர் வீடியோவுக்கு நன்றி அண்ட் வைராக்கியம் நினைவலைகளுக்கும்..
வாசு சார் //சிகப்பு ரோஜாக்கள்// தாங்க்ஸ்..எதுக்காக்கும் இது :) ஆஹா ஹேமுவோட ஸ்டில்ஸ் அழகு.. அண்ட் அதைப்பற்றிய தகவல்கள்..சஞ்சீவ்குமார் ஹேமுவ லவ் பண்ணாரா என்ன? ந.தியோட ஜோடியா இருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்..ம்ம்
மாயாபஜார் ஃப்ரென்ஞ்ச் பாட் வீட்டில் போய்த் தான் கேக்கணும் க்ருஷ்ணாசார்..:)
//தேருக்குச் சேலை கட்டி தெருவில் விட்டா.. யாருக்கும் ஆசை வரும் பார்வை பட்டா" எ// எல்லாம் தேர்ப் பாட்டா இருக்கே..வேறென்ன இருக்கு..
தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே..இருதுருவம்
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன - தேடி வந்த மாப்பிள்ளை ?
திருத்தேரில் வரும் சிலையோ
வானமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டுச் செஒல்லுங்கள்
மாதாவைக் கேட்டுச் சொல்லுங்கள் - அன்னை வேளாங்கன்னி - ஜெ&ஜெ
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் - // அவ்ளோ குண்டா கதானாயகி ?!// பஞ்சவர்ணக்கிளி
//எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே..
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே.// என்னபடம்னு தெரில்லீங்கோவ்..
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே டூயட்
//திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது ஓடமுடியாமல்
தேர் நின்றது// காக்கும் கரங்கள் இசையரசி..(ஏன் இந்தப் பாட்ட யாரும் அலசலை :)
தேர் ஏது சிலை ஏது திரு நாள் ஏது - சுசீலாம்மா ந்னு நினைக்கறேன் படம் பாடல் மறந்து போச்சே
இவள் ஆவாரம் பூ தானா நடை தேர் தானோ - //போயும் போயும் அந்தக்கால ராதிகா..ம்ம் கி.போ. ரயில்/
மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்// வாசு சார் எழுதலாம்..இதப் பத்தி..
அட ரொம்பத் தான் தேரோட்டி இருக்காங்க போல..விட்டுப்போன தேர்களை it is there னு சொல்ல மாட்டீங்களா என்ன..:)
//இந்த விமர்சனம் என்றில்லை. அன்றைய விமர்சனங்கள் எதிலும் இசையைப் பற்றி எழுதுவதேஇல்லை. என்னவொரு கொடுமை...// கார்த்திக் சார் அந்தக் கால ப் பட விமர்சனங்கள்ள ஜெனரலா கதை முதலில் தென் பாடல்கள்.. மற்ற விஷயமெல்லாம் அவ்வளவாகச் சொன்னதில்லை என நினைக்கிறேன்.. இந்த நிலை மாறியது எண்பதுகளில் விகடன் மார்க் வழங்கும் உத்தியை ஆரம்பித்ததற்கு அப்புறம் தான்..அப்போதுதான் எடிட்டிங்க் ஒளிப்பதிவு வசனம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தன என நினைக்கிறேன்..