சி.க ஆமாம் சாரதாவிற்கு 70 வயசாம். நம்பத்தான் முடியவில்லை. இன்றும் கண்ணில் அதே அழுத்தப்பார்வை. அந்த சின்னச் புன்முறுவலுடன் அழகாகத்தான் இருக்கிறார்
Printable View
சி.க ஆமாம் சாரதாவிற்கு 70 வயசாம். நம்பத்தான் முடியவில்லை. இன்றும் கண்ணில் அதே அழுத்தப்பார்வை. அந்த சின்னச் புன்முறுவலுடன் அழகாகத்தான் இருக்கிறார்
ஆதிராம் அவர்களே!
நேரிடையாகக் கேட்கிறேன்? உங்களுக்கு என்ன வேண்டும்?
ஏன் தேவையே இல்லாமல் சதா எப்போதும் வம்பு பேசிக் கொண்டு இதே வேலையாய் அலைகிறீர்கள்?
உங்களுக்கு இதே பிழைப்பாய் போயிற்று. திருக்குறள் என்று முரளி பதிவிற்கு நான்தானே பதில் சொன்னேன். கோபால் எங்கு சொன்னார்? ஏன் தேவையே இல்லாமல் புறம் பேசுகிறீர்கள்?
அன்று ரவி போட்ட ஜாலி பதிவிற்கு கேலி பேசினீர்கள். அப்புறம் சின்னக் கண்ணன் பெயர் சொல்லி புலம்பினீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?
இது ஒரு பொதுத் திரி என்ற சாதாரண விஷயம் கூட உங்களுக்குத் தெரியாதா? மற்றவையெல்லாம் நன்றாகத் தெரிகிறதே. இல்லை வம்பு பேசுவதற்கு தெரியாதது போல் நடிக்கிறீர்களா?
இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். எங்கள் மனதிற்கு சரியென்று பட்டதைத்தான் நானும், இங்குள்ள அன்பர்களும் எழுதிக் கொண்டிருக்கிறோம் ஹப்பின் வரைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு. இங்கு யாரும் ஒருவருக்கு ஒருவர் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு எழுத வரவில்லை. அனைவரும் ஒரு மன நிம்மதிக்காக, ரிலாக்சுக்காக, தங்களுக்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள வருகிறார்கள்.
இதில் முட்டுக்கட்டை போட நீங்கள் யார்? இப்படி போட வேண்டும்... இப்படிப் போடக் கூடாது என்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
கோபால் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, அவர் எச்சரிக்கை மணிக்குக் கட்டுப்பட்டு நான் பதிவிடும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்பது போல உங்கள் இஷ்டத்திற்கு அள்ளி விடுகிறீர்கள். கோபாலாயிருந்தால் என்ன... யாராய் இருந்தால் என்ன.... யாரும் யாரையும் இங்கே கட்டுப்படுத்த முடியாது அவர்கள் தவறு செய்யாத வரையில். கோபாலின் நம்பிக்கையைக் காப்பற்ற எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றும் அதை சொல்லித்தர வேண்டாம். கோபாலையும் உங்கள் கைப்பிள்ளையாக்கி அவர் முதுகில் சவாரி செய்து அவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்.
இது பாடல்கள் திரி. இங்கு அவர் இவர் என்ற பேதமில்லாமல் எல்லா நடிகர்களின் பாடல்களும் அலசப்படுகின்றன. இங்கு அவர் பாடல்களைப் போடக்கூடாது... இவர் பாடல்களைப் போடக் கூடாது என்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ, சுற்றி வளைத்தோ நீங்கள் சொல்ல வேண்டாம். திரிக்கு வரம்பை நீங்கள் உருவாக்காதீர்கள். வீணே வம்புக்கும் அலைய வேண்டாம்.
இங்கு நடிகர் திலகம், திரு எம்.ஜி.ஆர், ரவி, ஜெய், சிவக்குமார் முத்துராமன், கமல், ரஜினி என்று அத்தனை பேருடைய பாடல்களும் அலசப்படுகின்றன. நான் எம்.ஜி.ஆர் பாடல் எழுதிப் பதிவிட்டால் நான் எம்.ஜி.ஆர் அடிவருடியாக ஆகிவிட முடியாது. கலைவேந்தன் சார் வினோத் சார் ஆகியோர் நடிகர் திலகம் பாடல்கள் போட்டால் அவர்கள் நடிகர் திலகம் பக்தர்களாகி விட முடியாது. இந்த சின்ன கான்செப்ட் கூடவா உங்களுக்குப் புரியவில்லை? நான் எம்.ஜி.ஆர் பாடல் எழுதினால் நான் என்னவோ நடிகர் திலகத்திற்கும் அவர் குடும்பத்திற்கும் பெரும் துரோகம் இழைத்து விட்டது போல புறம் பேசுகிறீர்கள். அதனால் நானென்னவோ நடிகர் திலகம் பக்தன் என்பதே சந்தேகம் என்பது போல ஒரு மாயையை கிரியேட் செய்கிறீர்கள். உங்களுக்கே அருவருப்பாக இல்லை? சே! நீங்கள் நடிகர் திலகம் ரசிகர்தானா என்று இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது.
இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் மனதிற்கு சரியென்று பட்டதைத்தான் பதிவு செய்கிறோம். பதிவு செய்வோம். உங்களுக்குத் தைரியம் இருந்தால் என்னை நேருக்கு நேர் கேள்வி கேளுங்கள். அதை விடுத்து அங்கங்கே போய் புலம்பி புலம்பி சீரியல் மருமகள் போல அழாதீர்கள். பதிவுகளில் தவறிருந்தால் சொல்லுங்கள். சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை விடுத்து இவருக்கு கட்டுப்பாடு, எச்சரிக்கை மணி என்றல்லாம் சீண்டிப் பார்க்காதீர்கள். இங்கு யாருமே எல்லை மீறி, விதிகளை மீறி எதுவும் செய்யவில்லை. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாய், ஜாலியாய், சகோதரர்களாகத்தான் அனைவரும் பழகுகிறோம். மதுர கானங்களின் ஒற்றுமையும், வெற்றியும் பிரிக்க முடியாது. ஏன் வயிறு எரிகிறீர்கள்?
இதில் உள்ளே நுழைந்து கட்டுப்பாடு விதிக்க, இதைப் போட வேண்டும்... அதைப் போடக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லை. என்ன புரிந்ததா?
உங்கள் கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி பேச்சையெல்லாம் வேறு திரிகளில் வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்காகப் பதிவுகள் போடுவதாய் இருந்தால் இங்கு தாராளமாகப் போடுங்கள். கிண்டி விட்டு வேலை பார்ப்பதாய் இருந்தால் அதை மறந்து விடுங்கள்.
உங்கள் அநாகரீகமான கிண்டல் என்ன கேலி என்ன....
பண்பாக, நாகரீகமாக நாங்கள் ஒருவரை ஒருவர் ஜாலியாக அடுத்தவர் மனம் புண்படாதபடி கேலி, நையாண்டிகள் செய்து கொண்டு ரொம்ப நாளாகிறது. உங்கள் ஜிகினா வித்தையெல்லாம் இங்கே காட்டாதீர்கள்.
எடுபடாது.
நல்ல விதமாகவே சொல்கிறேன். இது போன்ற புறம் பேசுதல்கள், அடுத்தவரை நோகச் செய்யும் கேலி பேசல்கள், பதிவிட முடியாமல் எழுத விடாமல் மறைமுகமாக தடை செய்தல் (ரவி சார் உங்கள் கேலிப் பதிவால் திரியை விட்டு விலகுகிறேன் என்று சொன்னார்) போன்ற வேலைகளில் ஈடுபட்டால் ஹப்பின் விதிகளின் கீழ் மாடரேட்டர்களிடம் இது பற்றி முறையாகப் புகார் செய்வோம் என்று இதன் மூலம் கூறுகிறேன்.
இந்தப் பதிவிற்கு பதில் பதிவு கூட உங்களுடையது புலம்பல் பதிவாகத்தான் இருக்கும் என்பது தெரியும். அது பற்றி இனி எனக்குக் கவலையில்லை. உங்களுடைய கேலிக் கூத்துக்களுக்கு இனி இங்கே இடமில்லை. உங்களை ஒரு பொருட்டாகவும் இனி மதிக்கப் போவதில்லை.
இங்கிருப்பவர்களின் சார்பாகத்தான் உங்களுக்கே இந்த எச்சரிக்கை மணி. புரிந்து நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படியே திருந்தியும்.
நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லு.
Memento - Christopher Nolan -2000.
ஒரு கடினமான complex variable M .S c maths கணக்கு போட்டிருக்கிறீர்களா? Integration ,Differentiation பண்ணியதுண்டா? அதற்கு சற்றும் குறையாத புதிர் இந்த படம். சும்மா உட்கார்ந்து பார்த்து விட்டு கடக்க முடியாது.இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக நான் கருதும் புத்திசாலி படைப்பு. திரைக்கதை,எடிட்டிங் இரண்டிலும் வெளுத்து வாங்கிய Neo Noir வகை Psychological thriller .
கதாநாயகன் Antero Grade Amnesia என்ற மறதி நோய். எதையுமே ரொம்ப நேரம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாமல் புகை படம் ,குறிப்புகள்,நிரந்தர விஷயங்களை பச்சை குத்தி கொண்டு.(ஞாபகம் வந்து தொலைக்கிறது. இதைத்தான் உருக்குலைத்து கஜினி பண்ணி கழுத்தறுத்தார்கள். சிரிப்பு காப்பாற்றியது தமிழை. மூல இயக்குனருக்கு insult இந்த copy ) கருப்பு-வெள்ளை முன்னோக்கி விரிய, வண்ணம் பின்னோக்கி செல்ல., சந்திக்கும் மைய புள்ளியை புரிந்து கொள்ளும் அறிவை பெற எனக்கே தலை சுற்றியது. என் பையனிடம் விளக்கம் கேட்டேன். (அவன் என்னை விட தேர்ந்த அற்புத சினிமா ரசிகன்) இதுவும் நேர்கோட்டில் பயணிக்காமல் வெட்டி வெட்டி பயணிக்கும் வகையே. ஒரு துண்டு துண்டு கிழித்து போட்ட காகிதத்தை ஒட்ட வைத்தது போல நினைவுகள்,மாயைகள்,துக்கம் நிறைந்த சுய -பிரமைகள் ,கொஞ்சமே கொஞ்சமாய் நடப்பு நிஜம் என்று புகை நடுவே பிம்பமாய் படம் விரியும். புரியும்-ஆனால் புரியாது. இதுதான் என கையில் பிடிக்க முடியாது.(நமக்கே குறிப்புகள் வேண்டும் தொடர)
இந்த படத்திற்கு எனக்கு மூன்று முறை பிடித்தது புரிய. ஆனால் தொடர்ந்தால் கிடைப்பது ஒரு புதிரை விடுவித்து பரிசு வாங்கிய பரவசம்.
இவரின் Prestige எனக்கு மிக மிக மிக மிக பிடித்த படம். இரு மந்திரவாதி நிபுணர்களின் போராட்டம் பற்றியது. Inception பற்றி குழந்தை கூட பேசும்.
1970 இல் பிறந்து 1998 முதல் இயங்கி வரும் அதி புத்திசாலி இயக்குனர்(தம்பியும் சேர்த்தே) பிரிட்டன் -அமெரிக்க பின்னணி. சிறு வயது முதலே கனவு-நினைவு அனைத்தும் சினிமாதான் இவருக்கு.
கோ,
ஆர்வமாய் இருக்கிறது. ஆனால் கேள்விப்பட்டதே இல்லை. அருமை. பார்க்க முயற்சி செய்கிறேன். Inception பற்றி இந்த குழந்தை கூட பேசும்.:)
கோ! இருங்கள்! இருங்கள்
பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஞாபகத்திற்கு வருதா என்று பார்க்கிறேன்.
என்ன வாசு சார் வம்பா போச்சு
கோபால் அவர்களின் மேற்கண்ட பதிவுக்கு தானே பதில் சொல்லியி ருக்கிறேன். இதில் உங்களை எங்கே இழுத்திருக்கிறேன். ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல இருக்கிறதே.
நான் செய்த மடத்தனம் அப்பவே கோபால் சார் பதிவை 'கோட்' பண்ணாமல் விட்டது.
இந்த திரிக்கு நான் வரக்கூடாது என்றால் சொல்லி விடுங்கள். நான் வரவில்லை. ஆனால் உண்மையை தெரிந்து கொள்ளாமல் இப்படி தடிமனான பதிவுகள் போட வேண்டாம். கோபால் சார் எல்லோரையும் ஒன்றிரண்டு வரிகளில் பாராட்டியது போல என்னையும் பாராட்டியுள்ளார். அதற்கு நன்றிப்பதிவு போட்டதற்கு ஏன் இப்படி கோபப் படுகிறீர்கள். அவர் பதிவு இதற்கு முந்திய பக்கத்தில்தான் இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். (Post No. 1120)
ராகவேந்தர் சார்.. கை கொடுங்க.. இதுவரை நானே ராஜா பார்த்ததில்லை..அதைப் பார்க்கும் ஆவலை க் கொண்டுவந்துவிட்டீர்கள் உங்கள் எழுத்தில்..ம்ம் ஊர் போய் டிவிடியில் பார்க்கிறேன்..
அப்புறம் மரகத மேகம் பாடலில் மேகம் ஒண்ணும் பச்சையாய் இல்லை..லோபட்ஜெட் படம் போல இருக்கு..பாட்டுமுழுக்க சரத்திற்கு ஒரேபாண்ட் சொக்கா, ஹீரோயின்(?!)க்கு நீல அல்லது கரு நீலப் புடவை..( நல்ல நிறங்க..அட புடவையைச் சொன்னேன் :) ) ஆமா யாராக்கும் அந்த நீலப் புடவைக் காரவுக..(இப்ப பக்கெட் வரும்!)