-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 58
கே: சிவாஜியைப் பற்றி கேட்ட கேள்விக்கு 'அவரே ஒரு நடிப்புக் கல்லூரி ஆயிற்றே' என்று கூறியிருக்கிறீர்கள். சிவாஜி, கருணாநிதிக்கு எதிர் அணியில் இருந்தாலும் இதைக் கூறியிருப்பீர்களா? (த.சுப்பிரமணியம், சென்னை - 18)
ப: எந்த அணியில் இருந்தாலும் அவர் உலகத்தின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் என்கிற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
(ஆதாரம் : குங்குமம், 6.1.1980)
அன்புடன்,
பம்மலார்.
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 59
கே: நான் சிவாஜிக்கு சிகரெட் அனுப்பலாமென்றிருக்கிறேன். அவர் என்ன சிகரெட் பிடிப்பார்? (பி.எஸ்.ராமசாமி, பனங்காட்டூர்)
ப: ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555!
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1958)
அன்புடன்,
பம்மலார்.
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 60
கே: சிவாஜி கணேசன் இளைத்ததன் காரணம் என்ன? (வாழவல்லான் ஜெயா, திருச்சி - 1)
ப: ஆசையை, உணவை கட்டுப்படுத்தியதாக அவரே கூறினார்.
(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1970)
அன்புடன்,
பம்மலார்.
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 61
கே: சிவாஜியால் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் எப்படி நிலைத்து நிற்க முடிந்தது? (மு.இருதயராஜ், வார்தா)
ப: திறமை, தொழிற்சிரத்தை; புதிது புதிதாய் அலைவீசும் கலையுலகில் காலத்திற்கு ஏற்ப தன்னை வளைத்துக் கொண்டு புதியவர்களுடனும் இணைந்து பணிபுரிகிறார். வளர்ந்தவர்களிடத்தில் வளையும் குணம் இருப்பது அபூர்வம்.
(ஆதாரம் : கல்கண்டு, 16.10.1986)
அன்புடன்,
பம்மலார்.
-
வெள்ளித்திரை சக்கரவர்த்தியின் வெள்ளிவிழாக் காவியங்கள் (திரையரங்கு வாரியாக)
[ஊர் - திரையரங்கம் : திரைக்காவியம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. சென்னை - சாந்தி : பாவமன்னிப்பு - 177 நாட்கள், திருவிளையாடல் - 179 நாட்கள், வசந்த மாளிகை - 176 நாட்கள், தங்கப்பதக்கம் - 181 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள், முதல் மரியாதை - 177 நாட்கள்
2. சென்னை - சித்ரா : பாசமலர் - 176 நாட்கள்
3. சென்னை - கிரௌன் : திருவிளையாடல் - 179 நாட்கள், தங்கப்பதக்கம் - 176 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்
4. சென்னை - புவனேஸ்வரி : திருவிளையாடல் - 179 நாட்கள், தங்கப்பதக்கம் - 176 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்
5. சென்னை - பால அபிராமி : படிக்காதவன் - 175 நாட்கள்
6. சென்னை - அன்னை அபிராமி : தேவர் மகன் - 175 நாட்கள்
7. சென்னை - ஆல்பர்ட் & பேபி ஆல்பர்ட் : படையப்பா - 210 நாட்கள்
8. சென்னை - அபிராமி & சக்தி அபிராமி : படையப்பா - 210 நாட்கள்
9. சென்னை - உதயம் & சந்திரன் : படையப்பா - 181 நாட்கள்
10. சென்னை - பிருந்தா : படையப்பா - 175 நாட்கள்
11. மதுரை - நியூசினிமா : வீரபாண்டிய கட்டபொம்மன் - 181 நாட்கள், வசந்த மாளிகை - 200 நாட்கள்
12. மதுரை - சிந்தாமணி : பாகப்பிரிவினை - 216 நாட்கள், தியாகம் - 175 நாட்கள், திரிசூலம் - 200 நாட்கள்
13. மதுரை - சென்ட்ரல் : பட்டிக்காடா பட்டணமா - 182 நாட்கள், படிக்காதவன் - 175 நாட்கள்
14. மதுரை - சினிப்ரியா & மினிப்ரியா : தீர்ப்பு - 177 நாட்கள், நீதிபதி - 175 நாட்கள்
15. மதுரை - சுகப்ரியா : சந்திப்பு - 175 நாட்கள்
16. மதுரை - ஸ்ரீமீனாக்ஷி & ஸ்ரீமீனாக்ஷிபாரடைஸ் : தேவர் மகன் - 180 நாட்கள்
17. மதுரை - அமிர்தம் : படையப்பா - 175 நாட்கள்
18. திருச்சி - வெலிங்டன் : பராசக்தி - 245 நாட்கள்
19. திருச்சி - பிரபாத் : தங்கப்பதக்கம் - 181 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்
20. கோவை - கீதாலயா : திரிசூலம் - 175 நாட்கள்
21. கோவை - தர்ச்சனா & அர்ச்சனா : முதல் மரியாதை - 177 நாட்கள்
22. கோவை - ராகம் & அனுபல்லவி : படையப்பா - 210 நாட்கள்
23. சேலம் - ஓரியண்டல் : திரிசூலம் - 175 நாட்கள்
24. வேலூர் - அப்ஸரா : திரிசூலம் - 175 நாட்கள்
25. தஞ்சை - கமலா : முதல் மரியாதை - 177 நாட்கள்
26. பெங்களூர் - ஸ்டேட்ஸ் : ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்) - 188 நாட்கள்
27. கல்கத்தா - இம்பீரியல் : தர்த்தி(ஹிந்தி) - 266 நாட்கள்
28. பம்பாய் - மினர்வா : தர்த்தி(ஹிந்தி) - 259 நாட்கள்
29. பம்பாய் - ஆனந்த் : தர்த்தி(ஹிந்தி) - 231 நாட்கள்
30. பம்பாய் - அசோக் : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்
31. டெல்லி - நட்ராஜ் : தர்த்தி(ஹிந்தி) - 217 நாட்கள்
32. டெல்லி - அம்பா : தர்த்தி(ஹிந்தி) - 210 நாட்கள்
33. டெல்லி - மோட்டி : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்
34. டெல்லி - லிபர்ட்டி : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்
35. கொழும்பு - மைலன் : பராசக்தி - 294 நாட்கள்
36. கொழும்பு - கெப்பிடல் : வசந்த மாளிகை - 287 நாட்கள், பைலட் பிரேம்நாத் - 189 நாட்கள்
37. கொழும்பு - பிளாசா : வசந்த மாளிகை - 175 நாட்கள்
38. கொழும்பு - சென்ட்ரல் : உத்தமன் - 203 நாட்கள்
39. கொழும்பு - ராஜேஸ்வரா : பைலட் பிரேம்நாத் - 176 நாட்கள்
40. கொழும்பு - ஜெஸிமா : திரிசூலம் - 200 நாட்கள்
41. யாழ்ப்பாணம் - வெலிங்டன் : வசந்த மாளிகை - 217 நாட்கள்
42. யாழ்ப்பாணம் - ராணி : உத்தமன் - 179 நாட்கள், திரிசூலம் - 189 நாட்கள்
43. யாழ்ப்பாணம் - வின்ஸர் : பைலட் பிரேம்நாத் - 222 நாட்கள்
44. வெள்ளவெத்தை - சவோய் : பைலட் பிரேம்நாத் - 189 நாட்கள்
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
-
அன்பு முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களே
கரையினில் நெருப்பு பாடல் காட்சியில் கவிதையான முகபாவங்கள் காட்டும் நடிப்பரசர் பற்றிய இனிய பகிர்வு அருமை.
அன்பு பம்மலார் அவர்களே
அறுசுவை 60 வினா-விடைகள் ..
பார்த்துப் பரிமாறும் சேவை வளரட்டும்.
நன்றிகள்.
-
அன்பு பம்மலார் அவர்களே
சாதனைகளை மறைத்துப் பேசி ஏசிவந்த கூட்டம் இருந்த காலம் இருந்தது அன்று.
உங்களைப் போன்றவர்களின் தொண்டால் அந்தப் பொய்க்கோட்டைகள் பொடியாகின்றன இன்று!
-
பாராட்டிற்கு நன்றி காவேரி கண்ணன் அவர்களே.
சுவாமி,
வெள்ளி விழா கண்டவை 34 அரங்குகள் என்று நினைத்திருந்தோம். 34 அல்ல மொத்தம் 44 அரங்குகள் நடிகர் திலகத்தின் வெள்ளி விழாவை கொண்டாடியிருக்கின்றன என்ற தித்திக்கும் செய்தியை புள்ளி விவரப் பட்டியலோடு தந்தமைக்கு நன்றி.
அன்புடன்
-
திரு. காவேரிக் கண்ணன்,
பொங்கி வரும் காவிரி போல், துள்ளி வரும் தங்களின் தங்கத்தமிழ் நடை உள்ளத்தை அள்ளுகிறது. பாராட்டுக்களுக்கு பணிவான நன்றிகள்!
டியர் முரளி சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 62
கே: நடிகர் திலகம் சிவாஜிக்கு 'பாரத்' பட்டம் கிடைக்கவில்லையே, காரணமென்ன? (ச.பழனிசாமி, மயிலை)
ப: பாரதத்திலேயே சிறந்த நடிகர் என்ற பட்டம் ஏற்கனவே அவருக்குக் கிடைத்துள்ளது.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.3.1983)
அன்புடன்,
பம்மலார்.