தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்???
இந்த கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் இப்படி மூன்று தலைமுறை முன்னணி இணைகள் இந்த போட்டியை சந்தித்து உள்ளார்கள்... அவற்றில் எம்.ஜி.ஆர், ரஜினி வெற்றியும் பெற்றனர். முன்றாம் தலைமுறையில் யார் வெற்றிபெறுவார்கள் என்று பலர் ஆவலோடு எதிர்பார்க்க ஏற்கனவே வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், ரஜினி கடந்து வந்த சவால்கள் அவர்கள் வெற்றிக்கான காரணங்கள் என்பதை அளவிட்டு பார்த்தால் விஜய், அஜித் இவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது சந்தேகம் இன்றி இப்போதே தெரியும்...
சினிமா என்பது வர்த்தகம் தான் அதில் மிக முக்கியம் வசூல் எந்த குதிரை மீது பணம் கட்டினால் முதலுக்கு மோசம் இல்லாமல் போகும் என்பது மிக முக்கியம்.. எம்.ஜி.ஆர் அவர்களை மினிமம் கேரண்டீ நாயகன் என்று அழைப்பார்கள் அவரது படம் என்றும் முதலுக்கு மோசம் ஆனது இல்லை. தோல்வி படமாக இருந்தாலும் போட்ட முதல் வந்துவிடும்.. அதே போல் வசூல் சாதனை என்று பார்த்தால் பல ஆண்டுகளாக ss.வாசன் அவர்களின் பிரமாண்ட படமான "சந்திரலேகா" வசூலை எந்த படமும் நெருங்க முடியவில்லை அதை எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் தான் வென்றது...
இன்று திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 120 வரை விற்கபடுகிறது அப்படி பார்த்தால் அன்று வெறும் 10 ரூபாய் தான் அதிக பட்ச விலை அப்போதே கோடி ரூபாய் வசூல் செய்த படம் வாத்தியாரின் "உலகம் சுற்றும் வாலிபன்" அப்படி என்றால் இன்றைய ரூபாயின் மதிப்பை கணக்கிட முடியாது... வசூலை பொறுத்த வரை அன்றைய டிக்கெட் கட்டணம் இன்றைய டிக்கெட் கட்டணம் என்று பார்ப்பதை விட திரைபடத்தை எத்தனை மக்கள் திரையரங்குகளில் பார்த்தார்கள் என்பதே கணக்கு.. அந்த பெருமை "உலகம் சுற்றும் வாலிபன்" படத்திற்கு பல மடங்கு அதிகம்.. எம்.ஜி.ஆர் சாதனை பல ஆண்டுகளாக எந்த நடிகனாலும் முறியடிக்க படவில்லை ஏன் இன்னும் சொல்ல போனால் அவர் சினிமாவில் இருக்கும் வரை வேறு யாரும் "உலகம் சுற்றும் வலிபான்" வசூலை நெருங்க கூட முடியவில்லை... சிவாஜி எத்தனையோ வெற்றிப்படங்கள் கொடுதிருந்தாலும் அவை அனைத்தும் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் பாதி வசூலை கூட நெருங்கவில்லை சிவாஜி நடித்து அதிகம் வசூல் செய்த படம் "திரிசூலம்" இந்த படம் "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை கடந்து லாபம் தந்தது ஆனால் ஒன்றை மறந்துவிட கூடாது "உலகம் சுற்றும் வாலிபன்" "திரிசூலம்" இந்த இரண்டு படத்துக்கும் உள்ள கால இடைவேளை முன்பே சொன்னது போல அப்போது இருந்த "உலகம் சுற்றும் வாலிபன்" காலத்து டிக்கெட் கட்டணம் திரிசூலம் வந்த போது இருந்த டிக்கெட் கட்டணம் என பல வித்யாசம் உண்டு எனவே திரைபடத்தை பார்த்த மக்களின் எண்ணிக்கை விற்றுத்தீர்ந்த டிக்கெட்டின் எண்ணிக்கை என்று பார்த்தால் சிவாஜி கடைசி வரை எம் ஜி ஆரின் நிழலை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை அடுத்த தலைமுறை ரஜினி கமல்...
எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்த பின் அனைவரின் கவனமும் அடுத்த தலைமுறை நடிகர்கள் மீது விழுந்தது... அப்போதைக்கு கமல் தான் இளம் தலைமுறையின் பெரிய நடிகர் போட்டியின்றி பந்தயத்தில் ஓடிகொண்டிருந்தார் கமல்.. அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினி போட்டியில் பங்குகொண்டார், ஆரம்பத்தில் மிக பெரிய மாஸ் படங்கள் எல்லாம் இல்லை வெறும் உப்பு சப்பு இல்லாத படங்களை போக முள்ளும் மலரும் பைரவி என தனது இன்னிங்க்சை தொடங்கினார் ரஜினி போக போக அவரது அதிர்ஷ்டம் வேகமெடுக்க உச்சத்தை அடைந்தார்...
கமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனது வெற்றியை பதிவு செய்ய ரஜினி தனது இடத்தை தமிழில் அந்த சமயம் பார்த்து நிலை நிருத்திகொண்டார்... கமல் ஹிந்தி சினிமாவின் ஆசை நாயகனாக வளம் வர இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை விட்டே ஒதுங்கி நின்றார்... ரஜினி மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை ஆழமாக பதித்தார்.. கமல் திரும்பி வந்த போது பலமான போட்டியை சந்திக்க நேர்ந்தது ரஜினி எனும் சூப்பர் ஸ்டார் அடுத்த எம்.ஜி.ஆர் என அனைவரும் பாரட்ட கமல் சுதாரிக்க அதுவரை தமிழ் சினிமா உலகின் மாபெரும் வெற்றி படமான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் வசூலை முறியடிக்க வந்தான் "சகலகலாவல்லவன்" அதுவரை இருந்த அணைத்து சாதனைகளையும் முறியடித்து கமல் தனது பலத்தை காட்டினார்.. ரஜினி தனக்கு ஒரு சகலகலாவல்லவன் எப்போது அமையும் என்று ஏங்கி இருக்க கமல் அடுத்த அதிரடியை காட்டினார் "நாயகன்" தமிழ் அல்லாமல் இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்த படம் வசூலில் சகலகலாவல்லவனை ஓரங்கட்டிய படம்.. ஆனால் ரஜினியின் வளர்ச்சியை கமலின் வெற்றி ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரஜினி படத்திற்கு என்று ஒரு தனி மவுசு இருந்தது..குடும்பங்கள் பெண்கள் ஆனைவரும் ரஜினியை விரும்ப கமல் சினிமா ரசிகர்களை மட்டுமே நம்பி படம் எடுக்க சரித்திரம் மாற்றி எழுதபட்டது...
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் "பாட்ஷா" வந்தது ரஜினியின் கனவு நிறைவேறியது... அதுவரை தமிழ் சினிமாவின் மிகபெரிய வெற்றிப்படமான நாயகனின் வசூலை முறியடித்து ரஜினிக்கு மணிமகுடம் சூட்டியது முன்பே சொன்னது போல பல படங்கள் நாயகனின் வசூலை தாண்டி வசூல் செய்து இருந்தாலும் நாயகன் வந்த நேரத்தில் இருந்த டிக்கெட் கட்டணம் பார்த்த மக்களின் எண்ணிக்கை கொண்டு கணகிட்டால் பாட்ஷா வரும் வரை அதன் சாதனையை வெல்ல யாராலும் முடியவில்லை... பாட்ஷா வெற்றி ஒரு மயில்கல்லாக இருந்தது இனி அதன் சாதனையை முறியடிக்க யாராலும் முடியாது என முடிவே செய்துவிட்டார்கள் சினிமா துறையினர்.... ரஜினி அதற்கு பிறகு பல படங்கள் நடித்தார் கமழும் தனது பங்கிற்கு பல படங்களை வெளியிட்டு பார்த்தார்.... ஆண்டுகள் பல ஓடின ரஜினியின் சாதனையை ரஜினியே முறியடிக்க பல ஆண்டுகள் ஆனது "படையப்பா" வந்தது பாட்ஷா வசம் இருந்த மகுடம் படையப்பா வசம் வந்து சேர்ந்தது... அதன் பின் ரஜினி சிவாஜி, எந்திரன் என்று பிரமாண்ட படங்கள் நடித்து இருந்தாலும் கமல் தசாவதாரம் விஸ்வரூபம் என்று வெற்றிகண்டாலும் இந்த படங்கள் எதுவும் படையப்பாவின் வசூல் அதாவது திரையரங்குகளில் மொத்தம் விற்ற டிக்கெட் பார்த்த மக்களின் எண்ணிக்கை என பல சாதனைகளை முறியடிக்க முடியவில்லை ஆனால் ஒரு படம் முறியடித்து ரஜினியின் படமல்ல கமலின் படமல்ல யாருடையது????????
ரஜினி கமல் இவர்களது ஆதிக்கம் இன்று வரை தமிழ் சினிமாவில் இருந்துகொண்டே தான் இருக்கிறது முன்பே சொன்னது போல இருவரும் அடுத்த சாதனை படைக்க முயன்று கொண்டு தான் இருக்கீறார்கள்.... ஒரு கட்டத்தில் ரஜினி-கமல் இருவரும் வருடத்துக்கு ஒரு படம் என்ற நிலைக்கு வர ஆரம்பித்த நேரம் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறைக்கான தேடல் ஆரம்பித்தது...
பிரசாந்த் முதலில் வந்தார் சில காலம் இருந்தார் ஆனால் அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை பின்னாளில் விஜய் வந்தார் அவரை தொடர்ந்து அஜித் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் சமீபகாலமாக சூர்யா தனுஷ் என நடிகர்கள் பலர் வந்தாலும் அதில் தமிழ் சினிமாவின் இரடையர் வரிசையின் மகுடம் விஜய் அஜித் வசமே இருக்கிறது... ஆரம்பகாலத்தில் விஜய்க்கு வெற்றி என்றால் பூவே உனக்காக இந்த படத்தின் வெற்றி விஜயை ஒரு நடிகர் என்ற நிலையை உருவாக்கித்தந்தது பிறகு விஜய் காதலுக்கு மரியாதை, லவ் டுடே என முன்னேற, அஜித் தனது அத்தியாயத்தை ஆசை மூலம் துவக்கி காதல் மன்னன் அமர்க்களம் என ஆரம்பித்தார் இருவருக்கும் பெரிய போட்டி ஆரம்ப காலங்களில் இருந்தது விஜய் தனது குஷி படத்தின் மூலம் பெரிய வெற்றியும் வசூலையும் பெற அஜித் தீனா மூலம் பெரும் ரசிகர்களை கவர போட்டி அடுத்த நிலைக்கு சென்றது ஒரு பக்கம் அஜித் இளைஞர்களை கவர இன்னொரு பக்கம் விஜய் இளைஞர்கள் பெண்கள் குடும்பங்கள் குழந்தைகள் என பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தார் அஜித் காதல் மன்னன் என்றால் விஜய் பக்கத்துக்கு வீட்டு பையன் என்ற இமேஜ்... இவர்களது போட்டி ஒவ்வொரு முறையும் பலமாக இருந்தது "குஷி - உன்னை கொடு என்னைத்தருவேன்" "தீனா-ப்ரண்ட்ஸ்" "வில்லன்-பகவதி" "திருமலை-அஞ்சநேயா" "போக்கிரி-ஆழ்வார்" என தொடர்ந்தது....
முன்பே சொன்னது போல ரஜினியின் படையப்பாவின் வெற்றியை வெல்ல இவர்களது படங்களால் முடியுமா என சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது காரணம் ஒரு காலகட்டத்தில் இருவருக்கும் பெரும் சரிவு இருந்தது ரெட் ஜனா என அஜித் தோல்விகளை தேடி தேடி செல்ல விஜய் ஒரு பக்கம் புதியகீதை மூலம் மோசமான தோல்வி சந்திக்க நேர்ந்தது... அடுத்ததாக் அந்த மாபெரும் தருணம் வந்தது யாரும் எதிர்பார்காத விதமாக விஜய் நடித்த "கில்லி" வெளியானது குழந்தைகள் முதல் இளைஞர்கள் தொடங்கி குடும்பங்கள் பெரியவர்கள் என அனைவரையும் இந்த படம் கவர தமிழ் சினிமாவில் 50 கோடி வசூல் எனும் சாதனையை முதலில் படைத்த பெருமையை பெற்றது "கில்லி" பின்னாளில் பல படங்கள் 50 கோடியை கடந்து வசூல் செய்து இருந்தாலும் முன்பே சொன்னது போல திரைப்படம் வெளியான காலகட்டம் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் திரைபடத்தை பார்த்த மக்களின் எண்ணிக்கை என பல விஷயங்களை பார்த்தல் இன்று வரை கில்லியின் சாதனையை எந்த படத்தாலும்முறியடிக்க முடியவில்லை என்பதே நிஜம்.. "படையப்பா" படத்தின் சாதனை பல ஆண்டுகாலமாக யாராலும் அசைக்க கூட முடியாமல் இருந்த நிலையின் "கில்லி" அதை தகர்தெரிந்தது.....
கில்லிக்கு பிறகு அஜித் வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா என பல வெற்றிபடங்கள் தந்து இருந்தாலும் அவை அனைத்தும் கில்லியின் வசூலை மக்களின் ஆதரவையும் வெல்ல முடியவில்லை விஜய் கூட கில்லிக்கு பிறகு மாபெரும் வெற்றிகளை திருபாச்சி, சிவகாசி, போக்கிரி, துப்பாக்கி மூலம் பெற்றார்... துப்பாக்கி ஒருபடி மேலாக 100 கோடி வசூலை கடந்தது ரஜினிக்கு பிறகு ஒரு நடிகரின் படம் தமிழில் இதை சாதித்தது விஜயின் துப்பாக்கியே ஆனால் துப்பாக்கி வசூல் கூட கில்லின் மக்கள் செல்வாக்கை நெருங்கவில்லை என்பதே உண்மை... இப்போது ரஜினி கமல் என அணைத்து தமிழ் நாயகர்களும் ஒரு சாதனை படத்தை கொடுக்க முயன்றுகொண்டு தான் இருக்கீறார்கள் அப்படி ஒரு படத்தை வருங்கலத்தில் கொடுக்கநினைதால் அது கில்லியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே ஏழுத படாத விதி...பார்க்கலாம் வருங்காலத்தில் யார் இதை சாத்தியமாக்க போகிறார்கள் என்று ......

