ஜூலை 21 - கலைமகள் தன் தவப்புதல்வன் திரை உலகில் சித்தராக விளங்கும் கணேச மூர்த்தியை பிறந்த பயன் முடிவடைந்த காரணத்தால் அவதாரம் எடுத்த கடமை, பயன் முடிந்தது, ஆகையால் திரும்பி வா மகனே என்று அழைத்த அந்த நாள்,
இன்றோடு 12 வருடம் நிறைவடைகிறது...இருள் சூழ்ந்த அமாவாசை ஒரு நாள் தான்....ஆனால் திரை உலகிற்க்கோ இன்றோடு 12 வருடம் .....!
நாடக, மற்றும் திரை உலகம் பயன்பெறும் வகையில் நடிப்பு என்றால் என்ன...தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும்... நவரசத்தையும் எப்படி முகத்தில் வரவழைக்கவேண்டும் ...நடிப்பு மட்டும் அல்லாது பிற கலை நுணுக்கங்களையும் எப்படி கற்றுக்கொள்ளவேண்டும் ..கலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கவேண்டும் என்று சகலர்க்கும் ஒரு வழிகாட்டியாய் வாழ்ந்த ஒரு மகான்...இனியும் தொன்றமாட்டாரா என்று உண்மையான தமிழன் மட்டுமல்லாது நாடக மற்றும் திரையை ரசிக்கும் ஒவொருவரும் எண்ணும் நாள் !
அனைவரது அன்பு வேண்டுகோள் தாளாமல் பாசத்தால் இதோ இருக்கிறேன் நான் உலகெங்கும் உங்களுக்காக என்று சென்ற வருடம் மார்ச் 17 முதல் கர்ணனாய் பிள்ளைகளுக்கு காட்சிதந்து சுமார் 152 நாட்கள் அவர்களுடன் திரைவடிவில் கூடவே இருந்தநாள்.
அந்த 152 நாட்கள் திரை உலகமே உலகெங்கும் திருவிழகோலம் கண்டது ! தன்னை நேசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை காட்சிதந்த வைபோகம் தான் கர்ண விஜயம்...!
இந்த வருடமும் தனது அன்பு பிள்ளைகளும் உண்மையாக தன்னை நேசித்த மக்களுக்காகவும் வரும் மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் சந்திக்கிறேன் என்று கூறி மீண்டும் கலைமகளிடதிலே ஐக்கியமானார் நம் சித்தர்..! தற்போது வருவதற்கான ஆயுத்தம் மேல் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது....வெகு விரைவில் நம் சித்தர் நம்மை எல்லாம் மகிழ்சிகடலில் ஆழ்த்த வருகிறார் என்று நினைக்கும்போது புளகாங்கிதம் அடைகிறது மனது !
இன்று நினைவுநாள் என்கிறார்கள்...மறந்தால் தானே நினைப்பதற்கு...! ஓய்வில்லாத உழைப்பல்லவா நம் சித்தருடயது...
1952 முன் நாடகத்திலும்...1952 முதல் 1997 வரை திரை உலகை வாழ வைத்த தெய்வம் அல்லவா...
ஓய்வு தேவை மீண்டும் வேறு வடிவெடுத்து உழைப்பதற்கு என்று 2001 ஜூலை 21ஆம் தேதி ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.
அப்படிதான் உண்மை தமிழன் மட்டும்மல்லாது மற்ற உண்மையான மக்களும் என்றும் நினைத்துகொண்டிருக்கின்றனர்.
நல்லவர் நினைவுநாள் என்பதால் தான் வருணனே இன்று வாழ்த்துகிறான் ! இந்த பேறு ஒன்றே போதும் !
https://www.youtube.com/watch?v=-L6M6UkaNlg
இந்நாட்டை ஆள்கின்ற திருடர்கள் ஒழியாமல் தேசிய நெஞ்சங்கள் ஓயாது என்ற பகத்சிங் வாக்கினைபோல
எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும் என்று
இன மற்றும் ஜாதி வெறி வளர்த்தவர்கள் மத்தியில் தேசியம் வளர்த்த திரையுலக தந்தையே !
ஒவ்வொரு காலகட்டத்திலும் சித்தர் வாழ்வில் நிஜத்தில் நடந்ததை பிரதிபலிக்கும் நிழல் காட்சிகள்...!
https://www.youtube.com/watch?v=GkxRC8ikSc4
https://www.youtube.com/watch?v=8132k86_LZE