vettaikaran rerelease ad 31.12.1976
Attachment 3193
Printable View
vettaikaran rerelease ad 31.12.1976
Attachment 3193
mattu kara velan rereleased ad 05.03.1982
Attachment 3194
எக் காலத்திலும் தலைவரின் வெற்றிகளை கண்டு அஞ்சும் எதிரிகள்
அன்று இன்ப கனவு நாடகத்தில் கால் முறிந்தபோது அவரின் எதிர்காலம் அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இன்று வரை அவரின் புகழ் எட்டாத உயரத்திற்கு போய்கொண்டு இருப்பதை பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .
இனபகனவு யார் கண்டார்களோ அவர்களுக்கு உங்கள் பதில் உரித்தாகட்டும். உங்கள் பதில் நடிகர் திலகம் அவர்களுக்கு என்றால், அவருக்கு உங்களை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாத நிலை 1953 முதல் 1986 வரை.
உங்கள் தரப்பில் இருந்துதான் ( MGR அவர்களை கூறவில்லை, சிவாஜிக்கு எதிராக வேலை செய்தவர்களை பற்றி மட்டுமே ) கணேசன் பல் விளக்கினாரா? குளித்தாரா ? எத்துனை படங்கள் நடித்துகொண்டு இருக்கிறார் ? யார் யார் தயாரிப்பாளர்கள் ? எப்படி நற்பெயரை கெடுக்கலாம் ? என்பது போன்ற கேள்விகள், விஷயங்கள் சேகரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் போன்ற செயல்கள் அரங்கேறின.
தலைவருக்கு சமுக படங்கள் ஒத்துவராது என்று சொன்னவர்கள் திருடாதே முதல் தொடர் வெற்றியினை கொடுத்ததை யாராலும் மறந்திடமுடியாது .
சமூக படங்கள் ஒத்துவராது என்று யார் கூறினார்களோ அவர்களுக்கு உங்கள் பதில் போய் சேரட்டும். நடிகர் திலகத்திற்கு அல்ல !
காரணம் உங்களை பற்றி, இவ்வளவு ஏன் ? தன குடும்பத்தை பற்றி கூட சிந்திக்க நேரம் இல்லாமல் 1953 முதல் 1986 வரை எல்லா வருடமும் சுமார் 15 படங்கள் மேல் நடித்துகொண்டிருந்த நேரம். நடிகர் திரு ஜெய் ஷங்கர் அவர்கள் தவிர வேற எந்த நடிகரும் இவ்வளவு பிஸியாக நடிக்கவில்லை ! அந்த காலத்தில் வாய் சவடால் விட்ட எவரும் இந்தளவிற்கு திரைப்படத்தில், தயாரிப்பாளர்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமானவர்களாக இருந்ததில்லை.
நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் பேர் நடித்து மிகுந்த பொருள் செலவுகளோடு வந்த திரைபடங்கள் வந்த காலத்தில் தலைவர் அவர்கள் தேவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஓன் மேன் ஷோவாக நடித்து வெற்றி கோடி நாட்டியது உலகம் அறிந்த உண்மை .(மிக மிக குறைந்த செலவில் படம் எடுக்கப்பட்டு மிக மிக அதிக லாபம் சம்பாதித்தவர்கள் தேவர் அவர்கள்)
கர்ணன் வெளியீடு - வெளியிட்ட திரை அரங்குகள் - 30 - 4 திரை அரங்குகள் முறையே 104, 104, 104 மற்றும் மதுரை தங்கம் - 2538 இருக்கைகள் - 108 நாட்கள். 17 திரை அரங்குகளில் -85 நாட்கள் (நடிகர் திலகத்தின் நடிப்பில் AVM வெளியீட்டில் பச்சை விளக்கு வெளியானபோது COMPULSORY யாக ஏற்கனவே செய்த ஒப்பந்தம் காரணமாக வழிவிடவேண்டிய நிலை) இது நடக்காதிருந்தால் 21 திரை அரங்குகளில் 100 நாட்கள் ! திரையிட்ட அனைத்து திரையரங்கிலும் 50 நாட்கள் கடந்த காவியம்.
மகாபாரதம் கதை எடுக்கும்போது அதில் உள்ள கதாபாத்திரம் மற்ற நடிகர்கள் நடிக்காமல் MONO ACTING முறையிலா எடுக்க முடியும். ஆகவே இதுபோல முட்டாள்தனமான வாதங்களில் ஈடுபடுவதால் யாருக்கு என்ன பயன் ?
வேட்டைக்காரன் - COST OF PRODUCTION = PEANUTS கர்ணனை COMPARE செய்தால் ? SO OBVIOUSLY NET PROFIT PERCENTAGE WILL DIFFER ! IT IS QUITE COMMON LOGIC ! IT IS NOT A RECORD !!!
மேலும் வேட்டைகாரனும் 4 center JUST 100 நாட்கள்தான். என்னமோ வெள்ளிவிழா படம் போல மாயை ஏற்படுத்தவேண்டாம் ! எத்துனை திரை அரங்குகளில் 12 வாரம் ஓடியது ? திரையிட்ட அனைத்து இடங்களிலும் 50 நாட்கள் ஓடியதா? சும்மா மேம்போக்காக எதுவும் பதிவிடவேண்டாம் இது உங்கள் திரியானாலும் !
இயற்கை நடிப்பால் எல்லோர் மனதிலும் நிரந்தர இடத்தை பிடித்த ஒரே கதாநாயகன் தலைவர் அவர்கள் மட்டும் தான் .
எது இயற்க்கை நடிப்பு ? 15 பேரை ஒரு ஆள் மட்டும் ஒரு அடிகூட வாங்காமல் அடித்துக்கொண்டே இருப்பதா ? அல்லது கதாநாயகிக்கு எங்கு எப்போது ஆபத்து ஏற்பட்டாலும் உடனயே அந்த இடத்தில் வந்து சினிமாத்தனமாக காப்பாற்றுவது இயற்க்கைக்கு மாறாக உள்ள கதை அமைப்பு, இயற்க்கைக்கு மாறாக உள்ள காட்சிகள் ! இப்படி இயற்க்கைக்கு மாறாக எல்லாமே இருந்தும் , இயற்க்கை என்ற வாதம் ! வேண்டாம், இந்த இயற்க்கை செயற்கை வாதம் விவாதம் இனியும் !
ரசிகர் மன்றம் என்ற ஒன்றை ரசிகர்கள் தமிழகத்திற்கு அறிமுகபடுத்தியது எங்கள் வாத்தியாரின் நடிப்பை கண்டு தான் .
ஐயோ பாவம் ! 1952 பராசக்தி வெளியான தீபாவளி நாள் இரவே திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர் யார் என்றும், மதுரையில், கோவில் ரசிகர் மன்றம் கண்ட நடிகன் யார் என்று ஊர் அறியும் !
சண்டை காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் , நடிப்பு காட்சிகளிலும் புதிய ஒரு பரிமாணத்தை உலகிற்கு எடுத்துகாட்டிய மாபெரும் நடிக மன்னன் அவர் ஒருவர் தான் . பொது வாழ்வு கருத்துகளையும் , தான் சொன்ன கருத்துகளை நடைமுறை யாக்கியது எங்கள் குலதெய்வம் எம்ஜீஆர் அவர்கள் மட்டும் தான் .
காதல் மன்னர்கள் ஆயிரம் உண்டு...எக்காலமும் பேச படும் காதல் காவியம் - நடிக பேரரசின் வசந்தமாளிகை ஒன்று மட்டுமே ! வரலாற்று காவியங்கள் ஆயிரம் உண்டு - எக்காலமும் பேசப்படும் காவியம் - வீரபாண்டிய கட்டபொம்மன் ஒன்றே ! இதிகாச காவியம் ஆயிரம் உண்டு - எக்காலமும் பேசப்படும் காவியம் கர்ணன், சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம், 1965இல் தமிழ் திரையுலகை திருப்பி போட்ட திருவிளையாடல், கந்தன் கருணை காவியங்கள் ! ஸ்டைல் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ் திரை உலகில் பல ஸ்டைல் - நடை, உடை, பாவனை, இப்படி பல விஷயங்களை அறிமுக படுத்ஹியவர் எங்கள் நடிக பேரரசர் சிவாஜி ஒருவரே ! சினிமா மற்றும் நடிக nadigayara யாரையும் பிடிக்காத தந்தை பெரியார் எங்கள் சிவாஜி ஒருவருக்கு தான் எக்காலமும் நிலைக்கும் மற்றவர்கல் வயிறேரியும் வகையில் பெயர் கொடுத்து அத்துடன் கூத்தாடி என்று அழைப்பதையும் நிருத்திகொண்டார் ! பட்டியலிட்டால் பதிவுகள் பதப்படாது ! Nadigar thilagam is the only hero because of whom tamil film reached international and gained international fame !!
பாசமலர் திரைப்பட DIGITAL வெளியீட்டை கிண்டல் கேலி செய்தவர்கள் இன்று அந்த பாசமலர் அளவுக்கு கூட வசூல் ஈட்டமுடியாத நிலை ! இதுதான் உண்மை !
V C GANESAN என்பதற்கு வசூல் சக்ரவர்த்தி GANESAN என்ற மற்றொரு பெயர் 1952 முதலே உருவான ஒரு விஷயமாகும் !
3 வருடம் = 25 படங்கள் 6 வருடம் = 50 படங்கள் 8 வரடம் = 75 படங்கள் 12வருடம் = 100 படங்கள் 15 வருடம் = 125 படங்கள் 25 வருடம் = 200 படங்கள் !!!!!!!!!! இவை அனைத்தும் வசூல் சாதனையோ, வசூலோ ஏற்படுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்திருபார்களா ? விநியோகஸ்தர்கள் லாபம் இல்லையென்றால் வியாபாரம் ஆகியிருக்குமா ?
ஆகவே தேவையில்லாமல் சர்ச்சையை வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் !
என்ன இது? எதிரியை சுட்டி மக்கள் திலகம் புகழை ஒன்று சொல்ல விடமாட்டேன் என்கிறீர்களே!!! எல்லாவற்றிர்க்கும் எதிர் விவாதமா? 'ஆயிரத்தில் ஒருவன்'-ஐ உங்களை ஆயிரம் அல்ல ஒரு முறை பார்க்கச் சொல்லுகிறேன் திரையரங்கில். நீங்களே தெரிந்துகொள்வீர்கள் நிலவரத்தை.
கடல்கடந்து தாயகம் வந்திருக்கும் கல் நாயக் அவர்களே
ஒருவர் பதிவிட்ட பதிவுக்கு எனது விளக்கத்தை கொடுத்தேன். இதற்க்கு உங்களுடைய பதிவு வந்துள்ளது. சென்னை வந்துள்ள நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பார்த்தீர்களா ?
முதலில் நீங்கள் பார்த்த அனுபவத்தை பதிவிடவும். ..அதே போல நடிகர் திலகம் திரிக்கு வழக்கமாக வரும் நீங்கள் இத்துனை நாள் பதிவிடாததர்க்கு என்ன காரணம் ?
முதலில் உங்களை நீங்கள் அடையாளம் காட்டினாள் சால சிறந்தது. அதே போல என்னுடைய நீண்டநாள் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. திரு அதிரம், நீங்கள், திரு கார்த்திக், மற்றும் உங்களுக்கே தெரிந்த சிலர் login மட்டும் குறைந்த இடை வெளியில் தினமும் ஒருவர் பின் ஒருவராக பார்த்துவிட்டு போகிறார்கள் ஆனால் பதிவு எதுவும் பதிவு செய்வதில்லை.
ஆயிரத்தில் ஒருவன் பற்றி ஏன் வீண் கவலை. உங்களில் ஒருவர் யார் என்பது தெரிந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும்.
சென்னையில் நீங்கள் இருப்பதால் deviparadise திரை அரங்கில் இன்றோ நாளையோ சந்திப்போமா ?
அட அதுக்குள்ள நாம சென்னை வந்துள்ளதா லீக் ஆகிப்போச்சா? நம்பாளுங்ககிட்ட 'யாருகிட்டயும் சொல்லிடாதீங்கன்னு' சொல்லியிருந்தேனே. வர்றதுக்கு முன்னாடியே இப்படி லீக் பண்ணவங்களை நம்பி எப்படி வர்றது? நமக்கு இப்பிடி விளம்பரமா வர்றது பிடிக்காதே. (கல்யாணப்பரிசு தங்கவேலு நினைவிற்கு வந்தால் எனது குற்றமல்ல. போன பதிவிற்கும் அதே என்றால் அதைவிட மோசம்.)சரி. போதும். மாடரேட்டர் பாத்தா தூக்கிடுவாரு. உங்கள படத்த பாத்து நெலவரத்த பாத்துக்கச் சொன்னா இப்பிடியா வம்புக்கிழுப்பீக. வெவகாரம் பிடிச்சவுக-ன்னு நிரூபிச்சுட்டீகளே!!! இருந்தாலும் உங்க தைரியத்திற்கு பாராட்டுக்கள்.
திரு. ரவி கிரண் சூர்யா வுக்கு,
தங்களுக்கு எத்தனை முறைதான் கூறுவது என்றே தெரியவில்லை.
எங்கள் மக்கள் திலகம் திரியில், அவரது புகழ் பாடி கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இங்கு நுழைந்து விதண்டாவாதம் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.
உங்கள் அபிமான நடிகர் சாதனைகள் ஏதேனும் புரிந்திருந்தால் அதை அதற்கென்று இருக்கும் திரியில் பதிவிட்டு சந்தோஷம் அடையுங்கள். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். அதை விடுத்து இங்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி, உண்மைக்கு மாறான கருத்துக்களையும் பதிவிட்டு, பின் வீண் சர்ச்சைகள் வேண்டாமே என்று வேறு ஒரு பதிவு. இது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இருக்கிறது.
விழுப்புரம் சின்னையா கணேசனை வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்று தாங்கள் மட்டுமே விளித்திருப்பது பெரும் நகைச்சுவை தான் போங்கள்.
1956 முதல் வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நிரந்தரமாக தக்க வைத்திருப்பது எங்கள் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
இதை அன்றைய - இன்றைய திரைப்பட விநியோகஸ்தர்களை கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.
இதற்கு தாங்கள் கட்டாயம் பதில் ஒன்று உரைப்பீர்கள். அதனை, நான் உட்பட இத்திரி அன்பர்கள் எவரும் பொருட்படுத்தப் போவதுமில்லை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்