சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் என்பவர் (கோயில் பூஜாரியாராக இருந்தவர்... அய்யர்) அவரும் இன்னொருவரும் விபத்தில் அடிபட்டு இருப்பதைப் பார்த்து அந்த வழியே வந்த முதல்வர் புரட்சித் தலைவர் அவர் உயிர் பிழைக்க தேவையான உதவிகளை செய்திருக்கிறார். அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு சென்றுவிடாமல் தானே இறங்கி உதவி இருக்கிறார். சரி, இதுகூட பலர் செய்யக் கூடியதுதானே என்று சாதாரணமாய் தோன்றும்.
ஆனால், அப்போது அவர் முதல்வர். எத்தனை முதல்வர்கள் இம்மாதிரி செய்வார்கள். போன முறை திமுக ஆட்சியில் காயம்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலரை அந்த வழியே வந்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் என்ற அமைச்சர், தன் காரில் காவலரை ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பாமல் ஆம்புலன்ஸ் வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த காவலர் செத்துப் போய்விட்டார்.
புரட்சித் தலைவர் தானே இறங்கி செயலாற்றி சிவாச்சாரியாரையும் இன்னொருவரையும் காப்பாற்றியதோடு இன்னொன்றும் செய்தார். அதுதான் அவரது மனிதாபிமானம். காப்பாற்றியாகிவிட்டது என்று இல்லாமல் பின்னர் மருத்துவமனைக்கும் போய் தினமும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அவரின் எல்லா நடவடிக்கையிலும் நல்ல எண்ணமும் திட்டமும் இருக்கும். முதல்வரே வந்து பார்க்கிறார் என்றால் நோயாளிக்கு அக்கறையோடு நல்ல சிகிச்சை கிடைக்கும்.
பின்னர், புரட்சித் தலைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அந்த பூஜாரியார், புரட்சித் தலைவருக்காக வேண்டுதல் செய்திருக்கிறார். இதை பூஜாரியாரின் மகன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
எல்லாருமே மனிதர்கள்தான். இதுபோன்ற மனிதாபிமான நடவடிக்கைகளால்தான் மனிதர் என்பதையும் தாண்டி புரட்சித் தலைவரை புனிதர் என்கிறோம்.
http://i68.tinypic.com/2yzcvev.jpg