Quote:
கோலங்கள்’ திருசெல்வம் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் புதியதாக தயாரித்து, இயக்கி, நடிக்கும் தொடர் ‘பொக்கிஷம்’. இத்தொடரை பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது.
என்ன மாதிரியான பொக்கிஷம் மக்களுக்கு கொடுக்க போறீங்க?
பொக்கிஷம் சொல்ல வருகிற விஷயம் என்னவென்றால் இப்போ நம்நாடு நாகரீக வளர்ச்சியடைந்து விட்டது. இதில் ஆண்களும், பெண்களும் தனித்து அவரவர் வாழ்க்கையை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதில் பலருக்கும் சேர்த்து வைக்க வேண்டியது என்ன வெட்டிவிடுகிற விஷயம் என்ன என்கிற குழப்பநிலையில் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. நாகரீக வளர்ச்சியின் காரணமாக உடை, நடை பாவனை வேண்டுமானல் மாறியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் கணவன், மனைவி குடும்பம் என்கிற உறவுமுறைகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் எதை நாம தொலைக்கிறோம், எதை தேவையில்லாமல் இணைத்துக் கொள்கிறோம் என்பதை சொல்வது தான் பொக்கிஷம். பொதுவா தங்க குவியல், புதையல் அல்லது பல காலமாக பத்திர படுத்தி வரும் பொருட்களையோ தான் பொக்கிஷம் என்பார்கள். ஆனால் என்னை பொருத்தவரை நல்ல மனித நேயம் உள்ள மனிதர்களின் குணத்தை தான் பொக்கிஷம் என்பேன். ஒரு தாய்க்கு மகன் பொக்கிஷம், ஒரு மனிதனுக்கு நல்ல நண்பன் ஒரு பொக்கிஷம். இப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நல்ல கேரக்டர்கள் வருவார்கள். அதை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால். உங்கள் பொக்கிஷத்தை இழந்து விடுவீர்கள் ஆனால் அதன்பிறகு நீங்கள் தேடி அடைகிற பொக்கிஷம் என்பது உயிரற்ற வெறும் பொருட்களாக தான் இருக்கும் அதில் முழுமையான சந்தோஷம் கிடைக்காது. வரும் காலங்களில் இந்திய உறவுமுறைகளை பற்றியும், இது தான் சரியான வாழ்க்கை முறை என்று மேலை நாடுகளில் கூட பேசக்கூடிய தருணங்கள் வரும் காலக்கட்டங்களில் நாம் ஏன் அதைப் பற்றி யோசிக்ககூடாது என்பதை சொல்வது தான் பொக்கிஷம்.
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட கணவன் மனைவிக்குள்ள அவர்களை சுற்றி இருக்கும் உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், பெண் விடுதலையைப் பற்றி பெண்கள் சுதந்திரத்தை நிறைய பேசும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிப் போகிறார்கள் என்பதை எல்லாம் நோக்கி தான் கதை நகர்கிறது. தொடர் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது அதனால கதையை பற்றி இதற்கு மேல் சொன்னால் பொக்கிஷத்தின் மீதுள்ள ஆர்வம் குறைந்துவிடும்.
‘பொக்கிஷம்’ தலைப்புக்கு காரணமென்ன?
பொக்கிஷம்ங்கிற வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தையும் கூட, போகலங்கள் தொடரில் கூட பார்த்தீங்கன்னா நிறைய இடத்தில் நட்பை பற்றி சொல்லும் போது பொக்கிஷம்ங்கிற வார்த்தையை உபயோப்படுத்தியிருப்பேன். அப்போவே அடுத்த தொடர் பண்ணும்போது பொக்கிஷம்னு தான் டைட்டில் வைக்கனும்னு நினைத்திருந்தேன். இந்த தொடரின் கதையும் அதற்கு பொருத்தமா அமைந்தால் அந்த தலைப்பையே வைத்துவிட்டேன்
.
பொதுவா சீரியல் ஹீரோயின்கள் எப்போதும் அழுது கொண்டே இருப்பார்கள்? உங்கள் ஹீரோயின் எப்படி?
எங்கள் ஹீரோயின் ரொம்ப பாஸிட்டிவ்வான ஹீரோயின். இது வழக்கமான சீரியலாக இருக்காது. கண்டிப்பாக ஆடியன்ஸுக்கு பிடிக்கும். வேலைக்கு போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் இந்த களத்தில் இருக்கிறது. அதேப் போல இன்வஸ்ட்மண்டுக்காக போகும் பெண்களை பற்றியும் இதில் சொல்லியிருக்கிறேன். இதுப் போன்ற இன்வஸ்ட்மெண்ட் வேலை செய்யும் வயதான பெண்களை சந்தித்து பேசினோம். அப்போ அவர்கள் என்ன மாதிரி பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்கள்னு சொல்லும் போது தான் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதான்னு தோன்ணுச்சு. இதையெல்லாம் ரொம்ப ஸ்போட்டிவ்வா எடுத்து கொள்கிற கேரக்டர் தான் நாம ஹீரோயின். ஒரு சின்ன பில் இருக்கும் அதற்காக கலங்கி நிக்கிறவள் கிடையாது.
உங்கள் எபிசோட்க்கான கதைகளை எப்படி தயார் செய்கிறீர்கள்?
முதலில் ஒரு பேஸ் எடுத்துக் கொண்டு அதிலிருந்து அப்படியே எடுத்துச் செல்வோம். இதில் நான் ஸ்பேஷலா எடுப்பது என்னன்னா அந்த சம்பவம் எங்காவது நடந்திருந்தால் அதை ரெபரன்ஸுக்கு எடுத்துக்கொள்வேன். அடுத்து நாம வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை வைத்து மக்களுக்கு அைதை சொல்ல நினைக்கிறேன். ஒரு பொண்1 வேலைக்கு வருகிறாள் என்றால். எங்கள் குடும்பத்தை சொல்லனும், குடும்பத்தை சார்ந்தவர்களை சொல்லனும், பிறகு அவள் தினமம் வந்து போகிற வழியை சொல்லனும் பிறகு வேலை செய்கிற இடத்தை பற்றி சொல்லனும் அதன்பிறகு தான் அவளுடைய பிரச்சனை சொல்லனும். இதை சொல்வதற்கு கிளைக்கதைகள் நிறைய கிடைக்கும். அதை எப்படி இண்டரஸ்ட்டா சொல்கிறோம் என்பது தான் கதை. உண்மையா சொல்லனும்ன்னா உண்மையோட கொஞ்சம் கற்பனை கலந்து மெருகுட்டுவது தான் கான்சப்ட்.
நெடுந்தொடர் என்பதற்காக பல வருஷங்கள் ஒரு தொடரை இயக்குவது சரியா?
ஒரு நெடுந்தொடரை பொருத்தவரை. சினிமா போன்று 60 சீன்களில் முடிகிற விஷயம் கிடையாது. இது ஒரு செய்திதாள் மாதிரி நேற்றை விஷயங்களையும் அதில் இணைக்கலாம். அதுப்போன்ற நல்ல விஷயத்தை ஏன் ஒரு மாதம் ரெண்டு மாதம்னு குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். ஒரு விஷயம் என்னவென்றால் நம்ம ஊர் ஆளுங்களுக்கு ஒருவன் வளருவதும் பிடிக்காது, வளராம இருப்பதும் பிடிக்காது. இது ரெண்டுக்கும் இடையில் போராடுகிற ஒரு மனோ நிலை இருக்கும். அதனால நம்ம சொல்ல வந்த விஷயத்தை சரியா யூஸ் பண்ணும் தப்பா யூஸ் பண்ணக் கூடாது அதையும் இந்த நேரத்துல சொல்லிக் கொள்ள நினைக்கிறேன். வெளிநாடுகளில் பார்த்தீங்கன்னா ஒரு சில தொடர்கள் பத்து வருடம், 12 வருடம் வெற்றி கரமா இயக்கியிருக்காங்க, ஒரு சில தொடர்கள் இன்னுமும் தொடர்ந்து போய்கிட்டு இருக்கு. அந்த ஊர்ல பார்த்தீங்கன்னா அந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் தான் டாப்ஸ்டார்ஸ்ஸா இருக்காங்க. அவங்க டிவிக்குன்னு ஒரு தளம் ,கலர் வெச்சிருக்காங்க. நம்ம ஊர்ல அது ஒரு தப்பு நடக்கது அதை நான் இல்லன்னு மறுக்கல. அதிலிருந்து மாறுபட்டு என் சீரியல்களை கொண்டு வரணும்ன்னு நினைக்கிறேன். சினிமாவில் கொடுக்கிற விஷயங்களையே என் தொடர்களிலும் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதற்காக சில வித்தயாசங்கள் செய்ய நினைக்கிறேன். எத்தனையோ நல்ல நாவல்கள் இருக்கிறது. அதையெடுத்து தொடர் செய்யனும்னு ஆசையிருக்கு. ஆனால் அதற்காக நிறைய மெனக்கெடனும். சேனல்ஸ் ஒத்துக்கனும். மார்க்கெட்டிங் சப்போர்ட் பண்ணனும் எல்லாரும் இதை வெறும் பிஸினஸா பார்க்னாம , பேரா பார்த்தால் நிச்சயமா அடுத்து கட்டத்துக்கு சீரியல்கள் போகும். ஆனால் இந்தக் காலக்கட்டதுல அதுப்போல யாரும் பார்க்கதில்ல. அதே சமயத்தில் சேனல்கள் நம்மை நம்பி சேனல்கள் சலாட் கொடுக்கும் போது அதை சிறப்பா செய்து கொடுக்கனும். இதுலயும் நிறைய நல்ல விஷயங்களை சொல்லலாம். இந்தத் தொடரை பொருத்தவரை நிறைய யூமர் இருக்கும்.
உங்க ஹீரோயின் புதுசா இருக்காங்களே அவங்களை பற்றி சொல்லுங்க?
அவங்க பேரு மீரா கிருஷ்ணா. மலையாளத்தில் ரெண்டு படங்கள் நடிச்சிருக்காங்க. மலையாள தொடர்களில் நடிச்சிருக்காங்க. இந்தக் கதைக்கு புதுசா யாராவது இருந்தால் நல்ல இருக்கும்னு தேடினோம். அப்ப நடிகை வனிதா மேடம் இருக்காங்கில்லையா அவங்க தான் மீராவை பற்றி சொன்னாங்க. உங்க கதைக்கு பொருத்தமா இருப்பாங்கனு. சரின்னு வரச் சொல்லி பார்த்தோம். கதைக்கு பொருத்தமா இருந்தாங்க சரின்னு அவங்களையே செலக்ட் பண்ணிட்டோம். அவங்க மலையாளத்தில் ஸ்டேட் அவார்ட் வாங்கினவங்க. பெஸ்ட் சீரியல் ஆர்ட்டிஸ்ட் அவார்ட்டும் வாங்கினவங்க. ஆனா இப்ப சென்னையில் தான் செட்டில் ஆகிட்டாங்க.
நீங்கள் பெரியதிரையில் ஒரு படம் இயக்குகிறிர்களாமே?
ஆமாம் படம் இயக்குவதற்காக எல்லாம் தயார் செய்துள்ளோம் நல்ல படியா அமைந்தது. அந்த தயாரிப்பாளர் இப்ப கொஞ்சம் பிஸியா இருப்பதால அது தள்ளி போட வேண்டியது ஆகிடுச்சு.
உங்க பொக்கிஷம் டீம் பற்றி சொல்லுங்க?
கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் நான். என்னோட பிரியாவும் வசனங்கள் எழுதறாங்க. ஒளிப்பதிவு தியாகராஜன், படத்தொகுப்பு கெளரி ரமேஷ், நவநீத் சுந்தர் டைட்டில் சாங் எழுதி கொடுத்திருக்காரு. அந்தப் பாடலை ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல வந்த நிவாஸ் பாடியிருக்கார். பாட்டை கேட்டு நிறைய பேர் பாராட்டு தெரிவித்தார்க்ள்.
உங்களை பற்றி சொல்லுங்கள்?
தாஞ்சாயூர் பக்கத்தில் உள்ள பட்டுக்கோட்டை தான் எனக்கு சொந்த ஊர். எங்க ஊர்ல அப்போது எல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. ஆண்களுக்கு 18, 19 வயது ஆகும் போதே திருமணம் செய்து விடுவார்கள். அப்படி எனக்கும் கல்லூரியில் படித்துக் கெண்டிருக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. என் மனைவி பேர் பாரதி. அப்போ நான் சினிமாவுக்குள்ள வருவேன் என்று நினைத்து கூட பார்த்தது கிடையாது. கல்லூரி முடித்து என்ன செய்யலாம் என்று நினைக்கும் போது. ஊமை விழிகள் படம் ரீலிஸ் ஆகி திரைப்பட கல்லூரி மாணவர்களை பற்றி நிறைய டிஎப்ட்டி, டிஎப்ட்டி என்று பிரபலமாக பேசினார்கள். இது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தேன். திரைப்பட கல்லூரி சேர்ந்து படித்தேன். அதன்பிறகு சவுண்ட் எண்ஜியனராக பிரசாத் லேப், இளையராஜா சார்கிட்ட எல்லாம் ஓர்க் பண்ணினேன்.
சில டாக்குமண்ட்ரி படங்கள் எடுத்திருக்கிறேன். அந்த நேரத்துல என்னோட திரைப்பட கல்லூரியில் படித்த என் நண்பர் திருமுருகன். ஒரு காவேரி என்ற தொடரை இயக்க போவதாக சொல்லி கூப்பிட்டார். அதன் பிறகு மெட்டி ஒலி ஆரம்பித்தார்கள். அந்த நேரத்துல விகாடன் இருந்து எனக்க வாய்ப்பு வந்தது. அதன்பிறகு கோலங்கள் ஆரம்பித்தேன்.
இப்படி சின்னதிரைக்குள்ள வந்தேன். எனக்கு ஒரு மகள் தான் அவள் பேரு பிரியதர்ஷினி. ஆனால் அபி என்று தான் கூப்பிடுவேன். அவள் பெயரை வைத்து தான் கோலங்கள் தொடரில் தேவயாணி அவங்க கேரக்டருக்கு அபின்னு பேரு வைத்தேன்..