Quote:
காதல் மன்னர் வெகு அபூர்வமாகவே இரட்டை வேடப் படங்களில் நடித்தார் ! மனம் போல மாங்கல்யம், சங்கமம், ஆடிப்பெருக்கு....அவ்வளவே!
சங்கமம் திரைப்படத்தில் அண்ணன் வேடத்தில் அவரது வித்தியாசமான கோட்டா ஸ்ரீனிவாச ராவை நினைவு படுத்தும் பஸ்....என்ற சிரிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது ...ஆடிப்பெருக்கில் முதியவர் வேடமும் நன்கு பொருந்தியது....மனம் போல மாங்கல்யம் அவரது தனித்தன்மை வாய்ந்த குணசித்திர
வேறுபாட்டுத் திறனை வெளிக்கொணர்ந்தது......ஏனோ இவ்வகைப் படங்களையும் ஆக்க்ஷன் படங்களையும் ஜெமினி தவிர்த்து விட்டார்....எனினும் வஞ்சிக்கோட்டை வாலிபன், கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், பூலோக ரம்பை,சரசுவதி சபதம்போன்ற ராஜாராணிப் படங்களிலும் ராமு, சாந்தி நிலையம், சங்கமம், பந்தயம், சக்கரம் போன்ற சமூகப் படங்களிலும் தனக்கும் சண்டை போடவரும் என்பதை நிரூபிக்க மெனக்கெட்டிருப்பார்!!