தங்கத்தை தங்கம் என்று சொல்லவே வேண்டாம். அது எப்போதும் தங்கம் தான். அது போல் கோபால் சார் பதிவு எப்போதும் இந்த திரியின் கௌரவம் தான். ஓகேவா திரு. ரவி கிரண் சூர்யா.
Printable View
தங்கத்தை தங்கம் என்று சொல்லவே வேண்டாம். அது எப்போதும் தங்கம் தான். அது போல் கோபால் சார் பதிவு எப்போதும் இந்த திரியின் கௌரவம் தான். ஓகேவா திரு. ரவி கிரண் சூர்யா.
Thank you ravikiransurya sir.hope i can share the news of our nt in and around madurai side.
அஹி ம்சைக்கு காந்திஜி அரசியலுக்கு நேதாஜி
வீரத்திற்கு நேதாஜி . நடிப்புக்கு சிவாஜி...
அஹி ம்சைக்கு காந்திஜி அரசியலுக்கு நேருஜி
வீரத்திற்கு நேதாஜி . நடிப்புக்கு சிவாஜி...senthilvel45@gmail.com
ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி 2013 முதல் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் சாதாரண திரையரங்குகளிலும் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி வாகை சூடி வசூல் சாதனை செய்து வருவது யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம். அதற்க்கு வித்திட்ட முதல் திரைப்படம் நீதி. கிட்டத்தட்ட 2 மணிநேர டிராபிக் ஓட்டேரி மகாலச்மியில் ஸ்தம்பித்தது அனைவரும் அறிந்த ஒன்று.
27 செப்டம்பர் 2013இல் அதே போல மறு வெளியீடு கண்ட நடிகர் திலகத்தின் நான் வாழ வைப்பேன் திரைக்காவியம், அதன் பின்னர் நியூ ப்ரோட்வே, பாண்டிச்சேரி நியூ டோன் திரை அரங்கம் ஆகியவற்றில் திரையிடப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. நான் வாழ வைப்பேன் திரைப்படத்தில் என்ன உள்ளது, இந்த படம் போகுமா என்று வினா எழுப்பிய விநியோகஸ்தர்கள் சிலர் இன்று இதன் வசூலை கேட்டு வாயடைத்து போனார்கள் என்பது தான் உண்மை.
சென்னை மட்டும் அல்ல, கோவை, திருச்சி, மதுரை, நாகர்கோயில், தூத்துக்குடி, திருநெல்வேலியிலும் பல நடிகர் திலகத்தின் திரை காவியங்கள் திரையிடப்பட்டு திரையிட்ட இடம் எல்லாம் திருவிழா காட்சி போல கொண்டாட்டங்கள் என்பதை பல செய்தி வாயிலாக நான் அறிகிறோம்.
இதன் தொடர்ச்சியாக 2014ல்
வரும் வாரம் FEBRUARY 14th - நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட்ட உள்ளன :
1) கோவை ராயல் - ஜனவரி 31 முதல் பெப்ரவரி 6 வரை நடிகர் திலகத்தின் 175வது காவியம் அவர் தான் மனிதர் திரையிடப்பட்டு நல்லதொரு வசூலை வாரிகொடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க 1972இல் வெளிவந்து பெருவெற்றி பெற்ற சுஜாதா பில்ம்ஸ் நடிகர் திலகத்தின் "நீதி" பிப்ரவரி 14 முதல் திரையிடப்படஉள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
Kanchipuram balasubramaniya - FEBRUARY 17th to 21st
காஞ்சிபுரம் பாலசுப்ரமணிய திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக பிப்ரவரி 17 முதல் 21 வரை நடிக பேரரசரின் நான் வாழவைப்பேன் திரையிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்.
Chennai west mambalam Srinivasa - February 14th onwards
வரும் பிப்ரவரி 14 முதல் சென்னை ஸ்ரீனிவாச திரையரங்கில் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு இணங்க நடிகர் திலகத்தின் "நான் வாழ வைப்பேன் " திரைப்படம் பகல் காட்சியாக வெளிவர உள்ளது. கடந்த ஓரிரு வருடங்களாக பழைய படங்களை தவிர்த்து வந்த ஸ்ரீனிவாசா திரை அரங்கம், நான் வாழ வைப்பேன் திரைப்படம் திரையிட ஒத்துகொண்டது வரவேற்க வேண்டிய விஷயம். காரணம் அவர்கள் புதிய திரைப்படங்களை மட்டுமே நிர்வாகமே திரையிட தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டன !
அதுமட்டுமா !
1) விரைவில் நடிகர் திலகத்தின் மற்றும் ஒரு வெள்ளிவிழா திரைப்படம் சந்திப்பு வெளிவர உள்ளது !
2) இதனை தொடர்ந்து பிரம்மாண்டத்தின் உச்சமாய் நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பில் வெளிவந்த action thrill காட்சிகள் கொண்ட jamesbond மாடல் திரைப்படம் தங்க சுரங்கம் உங்கள் அபிமான திரை அரங்குகளில் வெளிவர உள்ளது.
3) இதே போல, இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் மற்றும் ஒரு jamesbond மாடல் காவியம் நடிகர் திலகத்தின் hero 72 என்று பெயர்சூட்டப்பட்ட பின்பு தமிழில் பெயர் சூட்டி வெளிவந்த " வைர நெஞ்சம் " MADURAI & CHENNAI
4) மற்றும், பாசமலர் திரைப்படத்திற்கு பிறகு அண்ணன் தங்கை கதையில் கொடிகட்டி பறந்து எட்டு திக்கும் பட்டொளி வீசி ஓடிய நடிகர் திலகம் அவர்கள் சர்வ சாதாரணமாக ஊதித்தள்ளிய நடிப்பை கொண்ட படம் மற்றும் குடந்தையில் 100 நாட்கள் ஓடிய முதல் திரைப்படமாம் "அண்ணன் ஒரு கோவில் " வெளிவர உள்ளது.
5) பழைய திரைப்படங்கள் என்பதில்லை 1985இல் வெளிவந்து பல வசூல் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்த ஒரு investigative த்ரில்லெர் " வெள்ளை ரோஜா " திரையிடபடுகிறது.
இப்படி இந்த வருடம் முழுதும் நம்மை நம்முடைய திரை உலகின் பிரம்மா நடிகர் திலகம் அவர்கள் அனைவரையும் மகிழ்சிகடலில் ஆழ்த்த உள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன் !
Thank u MURALI .MY DEAR HUB MEMBERS, PLEASE TRY TO READ SIVAJI KURAL NEWS WEEK IN OUR THALAIVAN SIVAJI.COM
http://i871.photobucket.com/albums/a...psb965236d.jpg
http://i871.photobucket.com/albums/a...ps8072bc43.jpg
http://i871.photobucket.com/albums/a...psb910d9ad.jpg
http://i871.photobucket.com/albums/a...ps3b9673c6.jpg
http://i871.photobucket.com/albums/a...ps9918524c.jpg
http://i871.photobucket.com/albums/a...ps01f45a12.jpg
Regards
Best wishes Madurai Chandrasekar
Thank you TFMLover for the rare cutting from Pesum Padam