நினைப்போம் மகிழ்வோம்-111.
"பாலும் பழமும்."
"என்னை யாரென்று" பாடல்.
கண்பார்வையற்றவனாய்க்
காட்டிக் கொள்ள, ஒப்பனையை
மீறி அவர் செய்யும் பொருத்தமான கண் சிமிட்டல்.
Printable View
நினைப்போம் மகிழ்வோம்-111.
"பாலும் பழமும்."
"என்னை யாரென்று" பாடல்.
கண்பார்வையற்றவனாய்க்
காட்டிக் கொள்ள, ஒப்பனையை
மீறி அவர் செய்யும் பொருத்தமான கண் சிமிட்டல்.
நினைப்போம்.மகிழ்வோம்-112
"பாரத விலாஸ்."
'இந்திய நாடு' பாடல்.
'மேஜர்' பாடுவதாக வரும்
பஞ்சாபிப் பாடல், "யாஹூ,யாஹூ" என முடிந்த பிறகு
வரும் தாளத்தில் ஆழ்ந்து
லயித்து செய்யும் தோள் குலுக்கல்.
நினைப்போம்.மகிழ்வோம்-113
"வியட்நாம் வீடு."
"பாலக்காட்டுப் பக்கத்திலே"
பாடல்.
அந்தக் கதாபாத்திரத்தின் ஒழுங்கைக் குறிக்கும் விதமாய்
கழுத்திறுக்கும் சட்டையின்
முதல் பொத்தானைக் கூட
போட்டிருப்பதும்,
கொஞ்சம் கூச்சம் தெளிந்ததைக் குறிக்கவும், புழுக்கம் தவிர்க்கவும் அந்த முதல் பொத்தானைக் கழற்றுவதும்.
நினைப்போம்.மகிழ்வோம்-114
"திருவிளையாடல்."
'பாத்தா பசுமரம்' பாடல் முடிந்தவுடன், உடன் ஆடும்
ஆடல் அழகி காதலுடன் கைபிடித்திழுக்க, "ஏற்கனவே
ரெண்டு மனைவி. உன்னோடு
வர முடியாது" என்று சைகையிலேயே பதில் சொல்வது.
நினைப்போம்.மகிழ்வோம்-115
"பொன்னூஞ்சல்".
'ஆகாயப் பந்தலிலே' பாடல்.
"பால் வண்ணம்" என்கிற வரியை இரண்டாம் முறை
பாடுகையில் வாய் கொள்ளாச்
சிரிப்போடு பாடும் அழகு.
Due to an emergency, கடந்த ஒரு வாரமாக திரியை பார்வையிட முடியவில்லை. இதற்கிடையில் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக திரு விகேஆர் அவர்கள் தன் சுய சரிதையில் எழுதிய ஒரு சில விஷயங்களை மேற்கோள் காட்டி மற்றொரு இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையை நண்பர் சிவா இங்கே பதிவு செய்ய அது நமது நண்பர்கள் சிலர் மனதை புண்படுத்தியிருப்பதாக அறிந்தேன். திரியின் அனைத்து பக்கங்களையும் படிக்கவில்லையென்றாலும் அந்த குறிப்பிட்ட பதிவை படித்தேன். அது நண்பர்களின் மனதை காயப்படுத்தியிருக்கும் பட்சத்தில் அதை நீக்கி விடலாம் என முடிவு செய்து நீக்கி விட்டேன்.
அதே நேரத்தில் இந்த பதிவு வருவதற்கு முன்பே மாற்று திரியில் வந்த ஒரு பதிவில் பிராப்தம் படம் பற்றியும் சாவித்திரி பற்றியும் அதன் தொடர்பாக நடிகர் திலகம் பற்றியும் தேவையற்ற சில வரிகள் இடம் பெற்றதாக நண்பர் ஆர்கேஎஸ் அவர்களின் பதிவின் மூலமாக அறிந்தேன் அதே போன்று விகேஆர் பதிவு வந்த பிறகு தனிப்பட்ட முறையில் நடிகர் திலகத்தை தாக்கியும் தரம் தாழ்த்தியும் ஒரு சில பதிவுகள் அங்கே இடம் பெற்றதாகவும் அறிகிறேன்.
அவற்றை பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது அவரவர்களின் மனசாட்சியை பொறுத்த விஷயம்.
இன்னும் சில நாட்களுக்கு திரியை ரெகுலராக பார்வையிடவோ பங்களிக்கவோ முடியாத சூழல். எனவே நண்பர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்த்து நடிகர் திலகம் பற்றிய தகவல்களை மட்டும் பதிவ்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அனைவரின் ஒத்துழைப்பிற்கும் முன்கூட்டியே நன்றி சொல்கிறேன்.
அலைபேசியில் அழைத்து தகவல்களை சொன்ன நண்பர் ஆர்கேஎஸ் அவர்களுக்கு நன்றி!
அன்புடன்
Dear Selvakumar Sir,
Just now noticed your post. Since you people said that the particular post hurt you, I have removed the same. So hope you will also remove yours because I don't want to edit your posts as I have always allowed MGR fans to post here even when they were harsh, unless and otherwise it bordered on individual attack.
Thanks for your understanding
Regards
நடிகர் திலகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தனம் கழுத்தறுப்பு என்பன மற்றவர்கள் தெரிந்து
கொள்ளவே vkr எழுதியஅப்பதிவை இங்கே பதிவிட்டேன்.
vkr எழுதிய விடயம் வெளிவந்த இணைய சுட்டிஉட்பட பதிவிட்டிருந்தேன்
பதிவிலுள்ள விடயத்திற்கு பதிலளிக்காமல் எம் ஜீ ஆர் ரசிக நண்பர்கள்
தனிமனித தாக்குதல் செய்கிறார்கள் தனிமனித தாக்குதல் கொண்ட
தாங்களே வெளியிட்ட மொட்டை கடிதத்தை பிரசுரிக்கிறார்கள். எனவே vkr சொன்னவிடயங்கள்
அனைத்தும் உண்மை என்பது புலனாகிறது.
பச்சையாக புழுகினாரா சிவப்பாக புழுகினாரா என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள்Quote:
கல்லுக்கும் கருணை காட்டும் தங்கமனம் கொண்ட நம் தலைவர் மீது வி(வரம் தெரியாத). கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி என்ற நன்றி கெட்ட, பொறாமை கொண்ட பொய்யன், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, புரட்சித் தலைவர் நட்சத்திர இரவு நடத்தச் சொன்னதாக பச்சையாக புளுகியிருக்கிறார்.
சுமார் 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் உருவானவுடன் எம்.ஜி.ஆரே. அதனை திறந்து வைத்தார். பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்பிக்கையுமான நாட்கள் அவை. எப்படியும் நடிகர் சங்கம் இனி ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்துவிடும் என்று தீவிரமாக நம்பினோம்.கட்டிடம் உருவாகி இயங்க ஆரம்பித்தவுடன் எங்கள் முன் இருந்த முதல் பிரச்சினை அந்த 22 லட்சம் ரூபாய்க் கடன்தான். அதனை அடைத்தால் ஒழிய பிற வளர்ச்சிப் பணிகள் சாத்தியமில்லை என்கிற நிலையில் நாங்கள் மறுபடியும் எம்.ஜி.ஆரை சந்தித்து ‘என்ன செய்யலாம்..?’ என்று யோசனை கேட்டோம்.
எம்.ஜி.ஆர். சற்று யோசித்த பின், ‘ஒன்று செய்யுங்கள்.. தமிழ்நாட்டின் நான்கு பெரிய நகரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு நட்சத்திர இரவு நடத்துங்கள்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அந்த நிகழ்ச்சிகள் நடப்பதாக இருக்கட்டும்.
அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து நான் உங்கள் கடனை அடைத்துவிடுகிறேன்..’ என்றார்
நடுநிலையானபொது மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்
வெறும் கேலிக்கூத்தான நட்சத்திர நிகழ்ச்சிகளாக இல்லாமல் அற்புதமான நாடகங்கள்.. இசை நிகழ்ச்சிகள்.. நகைச்சுவை காட்சிகள், நடனங்கள் என்று கண்டவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு போனது அந்த நிகழ்ச்சிகள்.அன்றைக்குத் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த பல நட்சத்திரங்கள் பங்கு பெற்று சிறப்பித்த அந்த நிகழ்ச்சிகளின் மூலம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் வசூலானதாகக் கேள்வி.நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட கலைஞர்களுக்கான போக்குவரத்து, உணவு, பிற வசதிகளைத் தாமே செய்து தந்து அரசாங்கம் நிதியையும் தாமே நேரடியாக வசூலித்த்து.