Originally Posted by
gopal,s.
பாவ மன்னிப்பு 16.03.1961
தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.
பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளுவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!
எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் பாடல் காட்சிகள்.
சிவாஜியும்- beemsingh உம் சிலர் சிரிப்பார் பாட்டில் உச்சம் தொட்டனர். நமக்கு இடப்புறத்தில் பழுதாகாத முக பகுதியுடன் சிரிக்கும் சிவாஜி. வலப்புறத்தில் பழுதான முக பகுதியுடன் அழும் சிவாஜி. நடுவில் சிரித்து கொண்டே அழும் சிவாஜி.
அன்னையுடன் அவர் அன்னை என்று தெரிந்து வீட்டில் சந்திக்கும் காட்சி ,பின்னால் வர போகும் தெய்வ மகனுக்கு அடிக்கல் நாட்டி விடுகிறது.
Acid வீச்சு பட்டு அவர் புழுவென துடிப்பது.
அட்டகாசமாக antics செய்யும் m .r .ராதாவை மிக மிக பொறுமை, பொறுமை, சிறிது நிதானம் தவறி, பதில் கடுமை என்ற வெவ்வேறு நிலைகளில் அவர் deal செய்யும் காட்சிகள்.
படம் துவக்கத்திலிருந்தே method acting முறையில் அந்த மேதை, ரஹீம் பாத்திரத்தை கையாளும் முறை . Subbudu , நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்காக, பதின்மூன்று முறை தொடர்ந்து பார்த்தேன் என்ற விமர்சனம் எழுதினர்..உயர்ந்த எண்ணங்கள்,நோக்கம் கொண்ட இறை முறையில் வாழும் ரஹீம் எப்படி நடந்து கொள்ள , பேச வேண்டுமோ ,அப்படி நடித்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தார்.