-
மதுண்ணா…கோவிலிலே வீடுகட்டி ..பாட்டு வெகு நாள்முன்னால் கேட்டது..பார்த்ததில்லை..இன்று உங்கள் புண்ணியத்தால்பார்த்தேன்..
நீயோ நானோ யார் நிலவேயில் அஞ்சலி இருப்பது சுத்தமாக மறந்து விட்டது . எம்.ஜி.ஆருக்கு பி.பி.எஸ்பாட்டு ஆச்சரியமாக இருக்கிறது (சின்னவயதில் படம்பார்த்தது..பாட்டு ஓரிரு தடவை தான் கேட்டிருக்கிறேன்..) வெகு அழகு..
-
கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, வாசு ஜி , மதுண்ணா தூள் .. ஒவ்வொருவரும் பட்டய கிளப்புகிறார்கள்
-
நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் – ஸ்ரீப்ரியா வடிவாம்பாளா.. வடிவ அடையாளமே தெரிலை ஒல்லியா இருக்கறதுனால.. ஸ்ரீப்ரியா கடோசிலதான் க்ளோஸப்ல ஸ்ரீப்ரியான்னு தெரியறாங்க..
க்ருஷ்ணா ஜி.. கொஞ்சம் கல்யாண சமையல் சாதத்தின் காப்பியோ என வியக்க வைத்தது ப்ரெஞ்ச் பாட்டு.. நல்லாவும் இருந்தது..
சிங்காரத்தேருக்கு சேலை கட்டியும் பார்த்தேன்..ஆஹா.. நடுல சந்த்ர்காந்தா எழுந்தவுடன் நானும் நிறுத்திட்டேன்.. இதுசத்தியம் பத்தி ஒரு தெரிந்த/தெரியாத நியூஸான்னு தெரியாது..அந்த நியூஸ் இதான்.. கதையை சட்டுனு கதானாயகன் வீட்டில ஆரம்பிக்காம கதானாயகன் நண்பன் வீட்டில் இருந்து தான் ஆரம்பித்தாராம் ரா.கி.ரங்கராஜன்..அப்புறம் தான் மூணாவது அத்தியாயத்திலிருந்து செளரி ராஜன் என்ற அசோகன் வருவார்..
அந்த எஸ்.வி சாரோட 1117 போஸ்ட்ல இருக்கற நடிகை கே.ஆர்.விஜயாதானா..வேற மாதிரி இருக்காரே..(கண்ணா வயசாய்டுச்சுடா.. ஞாபக மறதி ஜாஸ்தியாடுத்து நோக்கு)
ப்ரிய ஸ்ரீ யோட படத்தைப் போட்ட வாசு சார், க்ருஷ்ணா சாருக்கு கனவில ப்ரியமானவங்க அடிக்கடி வந்து போகக் கடவது.. (ஹைய்யா..வாசு சார்கிட்டக்க இவங்க வயசான ஃபோட்டா இல்லை…)
ராஜேஷ்..ஜலஜலக்காம் ஜட்டாம் ஜெலரி (அப்டின்னா) பாட்டுக்கு தாங்க்ஸ் சிரிக்க சிலங்கையெல்ல சிலும்புது பூவனம்..துலங்குது யெளவனம்.. தமிழ்ப்பாட்டு மாதிரி இருக்கேங்காணும்..
சுசீலாம்மாவின் இந்திப் பாட்டு நம்ம வீட்டு லஷ்மியின் யாரிடம் யாரிட்ம்பாடம் கேட்கலாம் பாட்டு.. நைஸ் தாங்க்ஸ் வாசுசார்..
ஓரிடம் உன்னிடம்..என் தேவையை நான் கேட்பது வேறுயாரிடம்..ஹையாங்க் லத்து பாட்டா நான்பாத்ததில்லையே..தாங்க்ஸ் மதுண்ணா..(கட்டவா ஒட்டவா கிள்ளவா வரிக்கு ஸ்விம்மிங்க் பூல் தான் சிறந்ததுன்னு யார் சொல்லியிருப்பாங்க..:) )
ஹப்பாடி..இன்னிக்கு வீட்டுக்கு வந்து ஓரளவுக்கு பெண்டிங் ஒர்க்ஸ் முடிச்சுட்டேன்..
-
மூவர் பாடிய தேவாரத்தைப் போன்று மூவர் பாடிய பாடல்களும் தனிப் பதிகம் போடும் அளவிற்கு ஏராளமானவை இங்கே பட்டியலில் இடம் பெறும் போலுள்ளதே... ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.
-
இரவின் மடியில்
மஹாராணி உனைத் தேடி வரும் நேரமே..
தாமரை மணாளன் எழுதிய ஆயிரம் வாசல் இதயம் அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்த போது இப்பாடல் அப்படத்தை இன்றும் நினைவூட்டும் அளவிற்கு பிரபலமானது. படம்.. அதைப் பற்றி சொல்வதற்கு நம்ம கோபால் சார் இருக்கிறாரே..
அதுவரை அந்தப் பாட்டைக் கேட்டு இரவைக் கழிப்போமே..
http://www.inbaminge.com/t/a/Aayiram...sal%20Idhayam/
-
இரவின் மடியில்
இரவை சுகமாக்க இன்னோர் இனிய பாடல்... எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி குரலில் கே.ஜே.ஜாய் இசையில் அந்தரங்கம் ஊமையானது படத்திலிருந்து காதல் ரதியே...
http://www.inbaminge.com/t/a/Anthara...0Oomaiyanadhu/
-
இரவின் மடியில்
இரவில் இந்தப் பாட்டைக் கேட்டால் நிச்சயம் நீங்கள் தூங்க மாட்டீர்கள்... நினைவுகளைத் தட்டி எழுப்பி விடும்... தங்களுடைய இளமைக் காலங்கள்... தாங்கள் விளையாடிய இடங்கள்.. தங்கள் இளமைப் பருவ பசுமையான நினைவுகள்... இவையெல்லாம் ஒன்று திரண்டு தங்கள் நினைவுகளை ஆக்கிரமித்து விடும்... அதில் அப்படியே லயித்து கண்ணை மூடுவீர்கள்.. கண்ணை மெல்ல மூடுவீர்கள்... மெல்ல மூடுவீர்கள்... மூடுவீர்கள்... .........
கண்ணைத் திறந்து பார்த்தால்...
அட இது உதயகாலமே... பூவே இது பூஜைக் காலமே...
http://www.inbaminge.com/t/g/Gramathu%20Athayayam/
கிராமத்து அத்தியாயம்... இளைய ராஜாவின் இசையில் ஒரு புதிய அத்தியாயம்...
-
பொங்கும் பூம்புனல்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உன் பார்வை தந்த மயக்கம்... சங்கர் கணேஷ் இசையில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் குரல்களில் காடு படத்திலிருந்து..
http://www.inbaminge.com/t/k/Kadu/
-
என்னமோ இன்பமிங்கே இங்கே பாட மாட்டேங்குது ராகவேந்தர் சார்.. எனினும் நன்றி..ஆ.வா.இ நினைவு படுத்தியதற்கு நல்ல நாவல்..பைண்ட் தொடராய்ப் படித்தது..இரு ஹீரோயின்கள் ராதிகா வடிவு ஹீரோ சுதாகர்..படம் பார்த்ததில்லை..இப்போ ஆயிரம் எண்ணங்கள் உதயம் படித்துக் கொண்டிருக்கிறேன்!.
-
இரவின் மடியில்
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது எழில் கொண்டு...
ஆஹா.. மனதை வருடிச் செல்லும் இனிய பாடல்..
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே படத்திலிருந்து எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் (?) குரலில்..
http://www.inbaminge.com/t/k/Kumari%...n%20Ullathile/