ஆசிரியர் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் ஏற்புரை.
http://i61.tinypic.com/w1y8w5.jpg
Printable View
ஆசிரியர் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் ஏற்புரை.
http://i61.tinypic.com/w1y8w5.jpg
சும்மாடு பதிப்பக ஆடிட்டருக்கு, திரு. தாண்டவன் பொன்னாடை அணிவித்தல்.
http://i57.tinypic.com/oua8ao.jpg
திரு. துரைராசு நன்றியுரை.
http://i60.tinypic.com/w7ioe9.jpg
மேடையில் திருவாளர்கள்:பாலு மணிவண்ணன், ரங்கசாமி, திருப்பூர் கிருஷ்ணன்,
மு.ராசாராம், தாண்டவன்,முத்துலிங்கம், மணிகண்டன் ஆகியோர்.
http://i57.tinypic.com/r0bec2.jpg
நிகழ்ச்சியின் முடிவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
திருவாளர்கள்: மின்னல் பிரியன், ஒம்பொடி பிரசாத், ஆசிரியர் பாலு மணிவண்ணன், பேராசிரியர் செல்வகுமார், பாண்டியராஜன், கணேஷ், பொறியாளர் மனோகரன் ஆகியோர்.
http://i60.tinypic.com/zmi3aw.jpg
திருவாளர்கள்: மின்னல் பிரியன், தாம்பரம் முரளி, ரகு, பாண்டியன், ஒம்பொடி பிரசாத், ஆர். லோகநாதன் , ஆசிரியர் பாலு மணிவண்ணன், செல்வகுமார்,
பாண்டியராஜன், கணேஷ் ஆகியோர்.
http://i57.tinypic.com/r1lpaq.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர்
பி.டி.தியாகராயர் அரங்கில் கடந்த சனியன்று (14/02/2015) சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தலைமையுரை நிகழ்த்திய திரு.திருப்பூர் கிருஷ்ணன் , புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர் அவர்கள் இப்பூவுலகை விட்டு மறைந்தபோது, 27 பேர் தற்கொலை
செய்து கொண்டனர். 10,000 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.
புரட்சி தலைவரின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 30 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் இறந்தனர். என்கிற புள்ளி விவரங்கள் அளித்தார்.
நடிகர் எம்.ஆர். ராதா சுட்டபின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மயக்கம் தெளிந்ததும் கேட்ட முதல் கேள்வி,
ராதா அண்ணன் எப்படி இருக்கிறார். தான் எந்த நிலையில் இருந்தாலும், தன்னால்
எவருக்கும் எந்த தீங்கும் நேரக்கூடாது என்கிற கவலைதான் அந்த நேரத்தில் அவருக்கு இருந்தது. இவ்வுலகில் எத்தனை பேருக்கு அப்படிப்பட்ட சூழ்நிலையில்
இந்த மாதிரியான மனநிலை இருக்கும். அதனால்தான் புரட்சி தலைவர் நமக்கு
கலியுக கடவுளாகவும், இதய தெய்வமாகவும் காட்சி அளிக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்ததும், சில முக்கிய காட்சிகளையும், குறிப்பாக சண்டை காட்சிகளையும், இரவு நேரங்களில் தானே அமர்ந்து படத்தொகுப்பு வேலைகள்
கவனிப்பார். அதனால் தான் அன்றும், இன்றும், என்றும் புரட்சி தலைவரின்
படங்கள் சுறுசுறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் திகழ்ந்தன /திகழ்கின்றன.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்பட துறையில் படுவேகமாக முன்னேறிவரும் காலத்தில் , திரு. பாரதிதாசன் அவர்கள் அட்டைக்கத்தி வீரர்
எம்.ஜி.ஆர். என கேலி பேசுவாராம்.
ஆனால் அதை ஒரு பொருட்டாக மக்கள் திலகம் கருதாமல், தன் படங்களில்
சங்கே முழங்கு (கலங்கரை விளக்கம் ), புதியதோர் உலகம் செய்வோம் (சந்திரோதயம், பல்லாண்டு வாழ்க ), சித்திர சோலைகளே (நான் ஏன் பிறந்தேன் )
என்கிற பாடல்களை , திரு. பாரதிதாசனுக்கு மரியாதை செலுத்தும் வகையில்
புகுத்தினார்.
தொடரும் ........!!!!!!!!
லோகநாதன் சார்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் அரங்கில் கடந்த சனியன்று (14/02/2015) சிறப்பாக நடைபெற்றது.
தங்கள் பதிவிகளுக்கு நன்றி.
பாரதிதாசன் நம் புரட்சித்தலைவர் அவர்களை "அட்டைக்கத்தி வீரர்" என்று கேலி. "மரகத்தி" என்று ஆங்கில படத்தில் பயன்பட்டது என்று படித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. "அட்டைக்கத்தி" அப்படி ஒன்று இருந்ததா!? அப்படி இருதிரிந்தால் "அட்டைக்கத்தி" கண்டிப்பாக புரட்சி தலைவருக்கு அவசியம் இல்லை/பயன்படுத்தவும் இல்லை.
Sir, please post what Prof. Thandavan talked about Thalaivar.
நண்பர் திரு.சைலேஷ் பாபு அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
திரு.மு. தாண்டவன் உள்பட மற்ற பேச்சாளர்களின் பேச்சு விவரங்கள் விரைவில்
பதிவிடுகிறேன் .
ஆர்.லோகநாதன்.