இதோ பரிசாக உமக்கு ஒரு அருமையான தெலுங்கு பாடல்
ஜாவளி ....
பொப்பிலி யுத்தம் திரையில் அழகான எல்.விஜயலெட்சுமி என்ன அருமையாக ஆடுகிறார்
இசையரசி என்ன அழகாக பாடுகிறார்
https://www.youtube.com/watch?v=XDmwW583_3o
Printable View
இதோ பரிசாக உமக்கு ஒரு அருமையான தெலுங்கு பாடல்
ஜாவளி ....
பொப்பிலி யுத்தம் திரையில் அழகான எல்.விஜயலெட்சுமி என்ன அருமையாக ஆடுகிறார்
இசையரசி என்ன அழகாக பாடுகிறார்
https://www.youtube.com/watch?v=XDmwW583_3o
ஜானியின் என் வானிலே தெலுங்கில் இதோ
https://www.youtube.com/watch?v=Jv1P_PzRcFQ
hi good morning all..
மத்த ரெண்டாயிரம் பொற்காசுகள் எதற்கு..
அப்புறம் புலி பாயாம இருக்கப் போகுதா..ஒருவேளை ரம்தான் மாதம் நாளைக்கு ஆரம்பிக்குது..அதனால இருக்கலாம் :)
பட் கோபல்ல புலி அடக்க ஒடுக்கமா எழுத்து வேலை பார்த்தாலே போதும்..( நவீன கவிதையைச் சொல்லவில்லை..ஸாரி அந்த சமாச்சாரம் எனக்குப் புரியாது) இந்த ஆடு அவரிடம் தானாகவே சரண்டர் ஆகிவிடும்..ஆடுன்னா ரொம்ப தன்னடக்கமா இருக்கோ..சரி..குட்டிப் புலின்னு வெச்சுக்கலாம் :) ( நான் என்னைச் சொன்னேன்!)
அன்புள்ள ராஜேஷ் சார்,
நீங்களும் நேற்றைய நிகழ்வை புரிந்துகொள்ளாமல் பதிவிட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
கோபால் அவர்கள் 'எனக்கு' சொன்ன பதிவுக்கு நான் 'அவருக்கு' (கோபாலுக்கு) சொன்ன பதில் அது. (விளக்குவதற்காக அவருடைய பதிவையும் கோட் பண்ணியிருக்கிறேன். அவருக்கு நான் இட்ட பதிலை திரு வாசுதேவன் அவர்களும் கோட் பண்ணியிருக்கிறார்)
கோபால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே பதிவில், ஆளுக்கு ஒன்றிரண்டு வரியாக பாராட்டு சொல்லும்போது (பதிவு என்: 1120) என்னையும் ஒரே வரியில் "ஆதிராம், உங்கள் பதிவுகள் திருக்குறள் போல சுருக்கம்" என்று சொல்லியிருந்தார். அதற்கு நான் "நன்றி,.. ஆனால் திருக்குறள் என்ற பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள். பயமாக இருக்கிறது. அதே சமயம் உங்கள் நம்பிக்கைக்கு உரிய வகையில் பதிவிடனும் என்ற எச்சரிக்கை மணியும் எனக்குள் ஒலிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தேன்.
இந்த பதிலில் வாசு அவர்கள் எங்கு இடம்பெறுகிறார் என்று நீங்களே சொல்லுங்கள். அவராக ஒன்றை கற்பனை செய்துகொண்டு என்னைத்தாக்கி அவ்வளவு நீண்ட பதிவு போட்டிருக்கிறார்.
அவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடலைப் போட்டால் என்ன, அல்லது வேறு யாருடைய பாடலைப் போட்டால் என்ன, அதை தடுக்கவோ, குறைசொல்லவோ, முட்டுக்கட்டை போடவோ, நான் யார்?. எனக்கு என்ன உரிமை அல்லது அருகதை இருக்கிறது?. இதுகூட தெரியாத முட்டாளா நான்?.
அவர் (வாசு) இந்த திரியைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருபவர். நான் வெறுமனே எட்டிப் பார்த்து இரண்டு மூன்று வரிகளில் பாராட்டு கமெண்ட் எழுதுபவன் மட்டுமே. என்னுடைய லிமிட் என்னவென்று எனக்கு தெரியாதா?. அப்படியிருக்க என்னைத்தாக்கி, நான் சொல்லாதவற்றை எல்லாம் குறிப்பிட்டு அவ்வளவு பெரிய தாக்குதல் பதிவு என்மீது போட்டிருக்கிறார்.
நீங்களும் என் விளக்கங்களை மேம்போக்காக படித்துவிட்டு என்னையே குறை சொல்லியிருக்கிறீர்கள்.
வருத்தம்தான் நண்பர் ராஜேஷ் அவர்களே.
(பாடல்கள் பற்றிய பொதுத்திரியில் என்னுடைய விளக்கங்களையே பதிவிட்டுக் கொண்டு இருப்பது பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சலிப்பை ஊட்ட வாய்ப்பிருப்பதால் நிறுத்திக் கொள்கிறேன்)
'மாடி வீட்டுப் பொண்ணு மீனா'
படம்: புகுந்த வீடு
சிறப்பு அம்சங்கள் நிறைந்த சிந்தை மயக்கிய பாடல்.
எனதருமை கோபால் சாருக்கு இப்பாடலை பரிசாக அளிக்கிறேன்.
பாடகர் திலகத்தின் ஆளுமை. இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசை இராஜ்ஜியம். இசைக்குழுவினர் ஒவ்வொருவரின் ஒற்றுமைப் பங்களிப்பு, ரவியின் ஸ்டைல், அழகு, ஆட்டம், ரவி இதுவரை செய்யாத சில புது முகபாவங்கள், லஷ்மியின் நடிப்பு
என்று பல சிறப்புகள் நிறைந்த பாடல்.
சந்தர்ப்ப வசத்தால் பிரிந்த தம்பதியர். கணவன் மேடைப் பாடகனாக இன்னிசைக் கச்சேரி மேடையில். அவன்தான் பாடப் போகிறான் என்று தெரியாமல் அரங்கின் உள்ளே வரும் மனைவி. அவனைக் கண்டதும் அதிர்ச்சி. அவனுக்கும் இன்ப, துன்ப அதிர்ச்சி. மைக்கை கையில் எடுத்து மனதில் உள்ளதை (அவள் மட்டுமே) புரியும்படி வார்த்தைகளில் இன்னிசையோடு கொட்டித் தீர்க்கிறான். அவள் தர்மசங்கடத்தில் ஆழ்கிறாள். அழுகிறாள்.
இது பாடலுக்கான காட்சி.
http://i1087.photobucket.com/albums/...110641.664.jpg
இன்னிசைக் கச்சேரி ஒன்றில் ரசிகர்களிடம் சங்கர்-கணேஷ் இரட்டையர்களை ரவி நிஜமாகவே அறிமுகப்படுத்துவதுடன் இந்தப் பாடல் தொடங்கும். மேடையில் இன்னிசை வேந்தர்கள். இருவரும் இளமையாக. சுறுசுறுப்பாக.
பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக டிரம்பெட் எடுத்து கூலிங் கிளாஸ் அணிந்த இசைக் கலைஞர் ஒருவர் வாசிக்க ஆரம்பிக்க, அப்படியே நாம் நம்மை நம் வசம் இழக்க ஆரம்பிப்போம். காதுகளில் ரீங்காரமிட்டு ஆர்ப்பாட்ட இசை நம்மை இன்ப சித்ரவதைகள் செய்ய ஆரம்பிக்கும்.
இசைக்கலைஞர்கள் கள்ளமில்லா புன்னகையோடு கிடார் கருவிகளை தீண்ட, மற்ற சிலர் 'பாங்கோஸ்' பரவசமாய் வாசிக்க, மற்ற கலைஞர்களும் அவரவர்கள் இசை வேலையைச் செவ்வனே செய்ய, பாடகர்கள் அணியும் வெண் கோட் சூட் அணிந்து ரவி உற்சாகக் கரை புரள பாடத் துவங்குவார்.
மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா
கால்கள் தள்ளாடினா
கண்கள் போராடினா
நெஞ்சம் திண்டாடினா
நாணம் கொண்டோடினா
ஒரே பயம் பாவம்
ஒரே பயம்
மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா
நேர் ஆங்கிளிலும் சைட் ஆங்கிளிலும் ரவி அழகு. சற்று முகம் முற்றியதும் தெரியும். ஆனாலும் அதவும் ஒரு தனி அழகு.
லஷ்மி இப்போது அரங்கத்தினுள் என்ட்டர். ரவியைப் பார்த்ததும் கண்களை உயர்த்தி அதிர்ச்சி அடைந்து நிற்பார்.
இப்போது இடையிசை. சங்கர்-கணேஷ் பின்னி எடுப்பார்கள். சங்கர் அக்கார்டின் எடுத்து அக்கிரமம் புரிகையில் கணேஷ் தன் கைகளால் இசைக் குழுவினரை வழி நடத்துவார். கண்ணாடி வாலிபர் கருமமே கண்ணாக டிரம்பெட் வாசித்து கலக்கிக் கொண்டிருப்பார். பின் ஐந்தாறு வயலின் விற்பன்னர்கள் புகுந்து புறப்படுவார்கள்.
லஷ்மி சீட்டு இருக்கை நம்பரை செக் செய்தபடி இருக்கை இருக்கும் வரிசையைத் தேடிச் செல்வார். இப்போது அனைத்து இசைக் கலைஞர்களும் சேர்ந்து காட்டப்படுவார்கள்.
இருபது வயது இளைஞன் ஒருவன்
வருவதைக் கண்டாள் பின்னாடி
இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு
(ரவி குனிந்தபடி தத்தித் தத்தி நடந்து ஆடுவது செம அழகு)
அன்னம் நடந்தாள் தள்ளாடி
அங்கொரு பார்வை இங்கொரு பார்வை
(இந்த இடத்தில் ரவி, லஷ்மி ரகசிய முகபாவங்கள் ரசிக்க வைக்கும்)
அங்கொரு பார்வை இங்கொரு பார்வை
அச்சம் கொண்டாள் நெஞ்சோடு
காதல் என்னும் பாடல் கேட்டு
பின்னால் சென்றாள் அவனோடு
காதல் என்னும் பாடல் கேட்டு
பின்னால் சென்றாள் அவனோடு
மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா
http://i.ytimg.com/vi/1nFZ5o4kKAo/hqdefault.jpg
பாங்கோஸ் உருட்டல், மிரட்டல்களுக்கு மத்தியில் (வாசிக்கும் அந்த அழகு இளைஞரிடம்தான் என்ன ஒரு உற்சாகம்!) அந்த ஓசைக்கேற்றவாறு லஷ்மியின் கண்கள் மிரட்சியில் மிரண்டு கவிதைகளாய் உருளும். உருக்கும். ரவி ஆர்வ எகத்தாளமாய் அவரைப் பார்ப்பது இன்னும் சுவை. லஷ்மி செய்வதறியாமல் கீழுதட்டை மெல்லக் கடிப்பார். டிரம்ஸ் புகுந்து விளையாடும்.
கிடார்கள் முழங்க, தொடர்ந்து புல்லாங்குழல் வாசிப்பாளர் குழல் வாசித்து புளகாங்கித புல்லரிக்க வைப்பார். சாக்ஸோபோன் பிடித்து சர்க்கஸ் வித்தைகள் நடத்திக் காட்டுவார் இன்னொரு வாசிப்பு ஜாம்பவான்.
(இந்த ஜாம்பவானுக்கு, அவர் வாசிக்கும் அழகிற்கு, அற்புதத்திற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். மனுஷன் பின்னுவார் சாக்ஸில் மெய்மறந்து.)
மலரும் நினைவுகளில் மூழ்கிய லஷ்மியின் மௌன அழுகை அவரிடம் நம்முள் இரக்கம் பிறக்க வைக்கும்.
உறவினில் தொடங்கி ஊடலில் முடிய
இருவரும் பிரிந்தார் தனியாக
சென்றவன் தானே வந்திடக் கூடும்
என்றவள் நினைத்தாள் முடிவாக
என்று ரவி இதழ் மூடாமல் முகத்தில் சோகம் காட்டி தொடருவார். (அருமையாக பாவங்கள் காட்டுவார் ரவி இந்த இடத்தில் பழைய நினைவுகளை நினைத்தபடியே)
காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்
காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்
(லஷ்மியின் புருவங்கள் கோபத்தில் ஏறி இறங்கும் விதம் வித்தை)
http://i1087.photobucket.com/albums/...0957.473_1.jpg
இரண்டாம் முறை 'காதலில் நெஞ்சம்' எனும் போது ரவி வாயசைப்பது அப்படியே நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்தும். 'ம்' இழுக்கும் போது கவனியுங்கள்.
தானே வந்தாள் துணை தேடி
காலம் ஒருநாள் மாறும் என்று
மன்னன் நின்றான் இசை பாடி
காலம் ஒருநாள் மாறும் என்று
மன்னன் நின்றான் இசை பாடி
மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா
'பாங்கோஸ்' இசையுடன் பாடல் முடியும். ஆனால் அப்போதுதான் மீண்டும் நம் மனதில் இசைக்கத் துவங்கும்.
நான் பார்த்து பார்த்து, அனுபவித்து அனுபவித்து, ரசித்து ரசித்து, மகிழ்ந்த பாடல். பாடகர் திலகத்தின் பாடல் வரிசைகளில் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்ட பாடல். பாடல் கொஞ்சமும் அழகு கெடாமல் சுவை குன்றாமல் நாம் நினைத்ததற்கு மேலும் அற்புதமாக படமாக்கப் பட்டிருக்கும்.
இசைக் கலைஞர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் ரவி,லஷ்மி நடிப்பையும் சேர்த்து அவர்களோடு கலந்து இப்பாடலை சுவைத்து மகிழலாம்.
என்ன ஒற்றுமையான ஒருங்கிணைப்பு! பாடகர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர் என்று ஒருவரை ஒருவர் மிஞ்சும் திறமையான காலகட்டம். என்ஹி போயிற்று அந்த சொர்க்கபுரி நாட்கள்? திரும்ப வரவே வராதா? ஒவ்வொருவருக்கும் டைம் மெஷின் இருக்கக் கூடாதா? அதில் ஏறி அந்தக் காலத்திற்கு நாம் பறக்கக் கூடாதா?
இறந்தும் இசையால், நடிப்பால், கலையால் நம்மை வாழ வைக்கும் சாகசக் கலைஞர்களுக்கு இப்பாடல் அர்ப்பணம்.
அப்பாடி! ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறி விட்டது.
ரசித்த, ஏற்கனவே ரசித்த, இப்போது ரசிக்கப் போகும் அனைத்து ரசிக உள்ளங்களுக்கும் நன்றி!
https://youtu.be/9Zg31-cOuhA
'மாடி வீட்டுப் பொண்ணு மீனா' பாடலில் பங்கு பெற்ற இசைக் கலைஞர்கள்.
ராகவேந்திரன் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
இந்தப் பாடலில் வரும் இசைக் கலைஞர்களின் பெயர்களை தாங்கள் அறிந்திருந்தால் இங்கு கூற முடியுமா?
ராகவேந்திரன் சார்,
'மாடி வீட்டுப் பொண்ணு மீனா' பாடலில் மேடையில் பங்களிக்கும் இசைக் கலைஞர்களின் நிழற் படங்களை இங்கே தனித்தனியாக பதிவிடுகிறேன்.
ஒவ்வொருவரையும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது.
http://i1087.photobucket.com/albums/...110646.591.jpg
http://i1087.photobucket.com/albums/...110846.708.jpg
http://i1087.photobucket.com/albums/...110829.175.jpg
http://i1087.photobucket.com/albums/...110818.575.jpg
http://i1087.photobucket.com/albums/...110817.358.jpg
http://i1087.photobucket.com/albums/...110727.646.jpg
http://i1087.photobucket.com/albums/...110659.366.jpg
http://i1087.photobucket.com/albums/...125136.036.jpg
http://i1087.photobucket.com/albums/...125131.892.jpg
http://i1087.photobucket.com/albums/...125055.765.jpg
வாசு சார்
தங்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒரு பாட்டினைப் பற்றி எழுத இவ்வளவெல்லாம் சிரமப்பட வேண்டியிருக்குமா என்கிற வியப்பைத் தருகிறது தங்கள் உழைப்பு. மிகவும் நுணுக்கமாய் ஆய்ந்து எழுதியுள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
மேற்காணும் இசைக்கலைஞர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது எனினும், ஒரு சிலர் அக்காலத்தில் அனைத்து இசைக்குழுவிலும் பங்காற்றியவர்கள் எனத் தெரிகிறது. காரணம் மெல்லிசை மன்னரின் இசைக்குழுவின் அங்கத்தினர்கள் - சங்கர் கணேஷ் உள்பட - இதில் இடம் பெற்றிருப்பதே.
இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கண்ணன் லதா என்ற இசைக்குழுவிலும் மேடையில் வாசித்து வந்தார்கள் என ஞாபகம்.
மெல்லிசை மன்னர் இணைய தள நண்பர்கள் மூலமாக இவற்றை நாம் அறிந்து தர முயற்சிக்கிறேன்.
புகுந்த வீடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. நவநீதா ஃபிலிம்ஸ் சுப்ரமணிய செட்டியார் அவர்கள் தொடர்ந்து பல படங்களை எடுக்க இது தூண்டுகோலாக இருந்தது. புகுந்தவீடு படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டியவர் நடிகர் திலகம் என்பது குறிப்பிடத்தக்கது.
//மெல்லிசை மன்னர் இணைய தள நண்பர்கள் மூலமாக இவற்றை நாம் அறிந்து தர முயற்சிக்கிறேன்.//
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். அருமையான யோசனை. தங்கள் முயற்சியால் நிச்சயம் பலன் கிட்டும். கிடைத்தவுடன் பகிருங்கள். இசைக் கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே!
வாசு,
எப்படி என் மனதை படித்தாய்?அடுத்தது Scorsese தான்.Taxi Driver தான்.