http://i65.tinypic.com/34oplk9.jpg
Printable View
PENATHUR
http://i63.tinypic.com/jzxuva.jpg
CHITTERI
இந்த ஊரில் வாரம் ஒருமுறை நமது தலைவரின் படம் இலவசமாக மிக பெரிய திரை அமைத்து அதில் காண்பிக்கப்படுகிறது.நமது தலைவரின் தீவிர பக்தர் திரு வாசுதேவன் அந்த வேலையை செய்கிறார்.இவர் RPFஇல் பணிபுரிகிறார்.தலைவரின் நினைவு நாளை முன்னிட்டு இரண்டு படங்கள் மன்னாதிமன்னன் ,பாசம் .
http://i67.tinypic.com/2czrh1u.jpg
CHITTERI
http://i66.tinypic.com/2qtilib.jpg
லுங்கி அணிந்து வழுக்கை தலையுடன் இருப்பவர் திரு வாசுதேவன்
http://i64.tinypic.com/2mwfa06.jpg
சித்தேரி
http://i65.tinypic.com/5d8mtg.jpg
http://i64.tinypic.com/2ed1h69.jpg
http://i65.tinypic.com/34hv32c.jpgதொடரும் ,,,,,,,,,,,,,,,,,,,,,
The 28th death anniversary of former Chief Minister M.G. Ramachandran was observed across the district on Thursday. Cadres of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) took out a silent procession here to mark the occasion.
The cadres wearing black badges took out the procession carrying a portrait of the late leader.
The procession began near Rajaji Park here on Palayamkottai Road and the cadres proceeded through WGC road and paid floral tributes to MGR’s statue on the Tuticorin old Corporation office premises. Partymen had organised programmes across the district that recalled his contributions in the political and social arena through public address systems. Yesadurai, former town secretary of the party, U.S. Sekar, Government Pleader and others took part.
http://i63.tinypic.com/292o1sn.jpg
Nagercoil
Leaders of various political parties paid floral tributes to former Chief Minister and All India Anna Dravida Munnetra Kazhagam founder M.G. Ramachandran on his death anniversary here on Thursday.
AIADMK leaders, led by former Minister and district secretary N. Thalavai Sundaram, garlanded MGR statue in Vadaseri and paid floral tributes.
Nagercoil MLA Nanjil A. Murugesan, district presidium president Siva Kutralam and leaders of various wings of the AIADMK, and local body leaders were present.
Leaders of Desiya Murpokku Dravida Kazhagam and other political parties also garlanded the statue.
Political leaders garlanded the statues of MGR and Dravidar Kazhagam founder Periyar in other parts of the district.
The leaders of Dravidar Kazhagam, led by its district president Murugapathy and district secretary Krishnaswamy, garlanded the statue of Periyar in Ozhiginasery and paid floral tributes.
Floral tributes paid to both the leaders in Tirunelveli and Kanyakumari districts
எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
By திருவண்ணாமலை/ ஆரணி/ செங்கம்/ கலசப்பாக்கம்/ தண்டராம்பட்டு/ போளூர்,
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 28-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்ஜிஆர் படத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் வி.பவன்குமார், மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, நகராட்சி கவுன்சிலர் போர்மன்னன் ராஜா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
செய்யாறு
செய்யாறு-ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே அலங்கரிக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் படத்துக்கும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செய்தார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன், நகரச் செயலர் ஏ.ஜனார்த்தனம், ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணன், மாணவரணி மகேந்திரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் சி.துரை, அண்ணா தொழிற்சங்கச் செயலர் அ.அருணகிரி, இணைச் செயலர் பி.லோகநாதன், நிர்வாகிகள் தசரதன், ரவி, சி.டி.குணசேகரன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆரணி:
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன் மாலை அணிவித்தார். உடன், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், வழக்குரைஞர் க.சங்கர், பாரிபாபு, பாசறை பி.ஜி.பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆரணியை அடுத்த சேவூரில் பேரவை மாவட்டச் செயலர் எஸ்.ராமச்சந்திரன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். உடன் மாவட்ட கவுன்சிலர் ஜெ.சம்பத், குமரவேல், ஊராட்சிமன்றத் தலைவர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேமுதிக
தேமுதிக சார்பில் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஆரணி எம்எல்ஏ பாபுமுருகவேல் மாலை அணிவித்தார். உடன், மாவட்டச் செயலர் கார்த்திகேயன், நகரச் செயலர் சுந்தர்ராஜன், பூக்கடை ராஜா, சூரி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதிய நீதிக்கட்சி
புதிய நீதிக்கட்சி சார்பில் மண்டலத் தலைவர் ஏ.சி.பாபு தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். உடன், மாவட்டச் செயலர் ஜெயக்குமார், நகரச் செயலர் ஜி.ஏ.கணேசன், மாவட்ட இளைஞரணிச் செயலர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செங்கம்
செங்கம் ஒன்றிய அதிமுக சார்பில் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றியச் செயலர் ஆர்.மதியழகன் தலைமையில் திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட அதிமுக செயலர் பெருமாள்நகர் ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் செங்கம் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கணேசன், பேரவை ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.வெங்கடாசலபதி, மகரிஷி கல்விக்குழும தலைவர் மனோகாரன், மாவட்டக் கவுன்சிலர் வெங்கட்ராமன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் வெங்கட்ராமன், குமார், சங்கர், அவைத்தலைவர் தசரதன், நகரச் செயலர் ஆனந்தன் உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட சிறுவள்ளூரில் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலர் எம்.திருநாவுக்கரசு தலைமையில், நவாப்பாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் தனபால், ஊராட்சிச் செயலர்கள் ராஜா, ராஜேந்திரன், காந்தப்பாளையம் கார்த்திக் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் மாலை அணிவித்தனர்.
கலசப்பாக்கத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.கருணாமூர்த்தி, எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு பேருந்து நிலையத்திலுள்ள எம்ஜிஆரின் சிலைக்கு ஒன்றியக்குழுத் தலைவர் டி.ஜானகிராமன் மாலை அணிவித்தார். இதில், கூட்டுறவு சங்கத் தலைவரும், நகரச் செயலருமான ஆர்.தேவேந்திரன், ஒன்றியப் பொருளாளர் ஜி.கஜேந்திரன், கட்சிப் பிரதிநிதிகள் மணி, ரங்கநாதன், மாயவன், கருணாகரன் உள்ளிட் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
போளூர்
போளூரை அடுத்த களம்பூர் பேருராட்சியில் எம்ஜிஆர் சிலைக்கு நகரச் செயலர் பஞ்சாட்சரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவராஜ், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி மற்றும் அதிமுகவினர் உடனிருந்தனர். இதேபோல், சேத்துப்பட்டை அடுத்த மன்சுராபாத் ஊராட்சியில் எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றியச் செயலர் ராகவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் அபிராமி வெங்கடேசன், கவுன்சிலர் பூவாத்தா ராகவன் மற்றும் அதிமுகவினர் உடனிருந்தனர்.