Half sleeve again. Another function :o
http://www.kalakkalcinema.com/tamil_...st.php?id=1706
Printable View
Half sleeve again. Another function :o
http://www.kalakkalcinema.com/tamil_...st.php?id=1706
jeez.. u guys remind me of moral science(funny how moral and science can be even combined in one sentence) lessons I had in 3rd standard...Quote:
Originally Posted by Miss Kavya
ரஜினி, கமலுக்கு வாலி பாராட்டு
November 14, 2010 19:46:00
தமிழ் சினிமாவின் தரத்தை ரஜினி, கமல் ஆகியோர் உயர்த்தி வருகிறார்கள் என்றார் பாடலாசிரியர் கவிஞர் வாலி.
கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான வாலி - 1000 என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80-வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் வாலி பேசியதாவது:
கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்... என்ற எனது பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன்தான் காரணம். என்னைப் பாராட்ட இங்கே பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.
எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. எல்லாம் வல்ல முருகன் அருளால் நீடூழி வாழ்க என்று அந்த மணமக்களை மனதால் வாழ்த்தினேன்.
கமல்ஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்.
டி.கே. சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர். மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது. அந்த அளவுக்கு வரம் - சக்தி அவருக்கு உண்டு.
இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். படகோட்டி படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். இங்குள்ளவர்கள் யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டவர்கள் இல்லை. அதே போல் தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.
ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான்.
எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்துக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட பிச்சையே காரணம்.
20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை.
கமல், ரஜினி ஆகியோர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகிறார்கள். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம் என்றார்
Then why did not he invite Rajini for this? :?
சில்லுண்டியின் சில்லறைகள்... 1
2010-Nov-16
திரு. வி. க தொழிற்பேட்டையில் வேகமெடுத்து கூவத்தைத் தொட்டு, சைதையின் புதிய பாலத்தில் மீதேறும்போது கண்ணில் தட்டுப்பட்டது அந்த பேனர். கன்னத்தில் கைவைத்தபடி ரஜினி! அதற்கு பக்கக்த்தில் தலைப்பாகையுடன் இடுப்பில் கைவைத்தபடி ரஜினியின் இன்னொரு போஸ். அதற்கு எதிரே இன்னொரு பேனர். முதல்வரோடு ரஜினி சிரித்துக்கொண்டிருந்தார். பாலத்தில் தொடங்கி கடும்பாடி அம்மன் கோயில் வரை ஒரே பேனர் தோரணம். ரஜினி இல்லாத பேனர்களும் உண்டு. அதில் முதல்வரும் துணை முதல்வரும் குளோசப்பில் இருந்தார்கள்.
சைதை பகுதியின் முக்கியமான ரஜினி மன்ற பிரமுகர் வீட்டு விசேஷம். அவரது ஒரே பெண்ணின் பூப்புனித நன்னீராட்டு விழா. ரஜினி மன்ற பிரமுகர், தற்போது சைதை பகுதியின் ஆளுங்கட்சி பிரமுகரும் கூட. பேனர் வைப்பதில் கில்லாடி. பத்து வருஷங்களுக்கு முன்னர் பேட்டையில் முதல்முதலாக காலடி வைத்தபோது அவரது பேனர்தான் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சைதாப்பேட்டை பாலத்தை ஒட்டிய அவரது பிரேமிங் ஒர்க்ஸ் கடையின் மேல் பிரம்மாண்டமான ரஜினி பேனர் எப்போதும் இருக்கும். பின்னாளில் அவரது அறிமுகம் கிடைத்து பேசிக்கொண்டிருந்தபோது திருமணமாகி கைக்குழந்தை இருப்பதாக அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
பத்து வருஷங்களில் நண்பரது வாழ்க்கை கிராப் எங்கேயோ எகிறிவிட்டது. கட்சி வாசனையின்றி இருந்தவரின் காரில் திமுக கொடி பறக்கிறது. வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அவரது நிரந்தர யூனிபார்ம். அரசியலால் அழிந்து போனவர்கள் லிஸ்ட் பெரியதுதான். அதைவிட பெரியது அரசியலை பிடித்துக்கொண்டு உச்சத்திற்கு வந்தவர்கள். நண்பரின் அரசியல் வாழ்க்கைக்கு வயது எட்டுதான் இருக்கும். பேச்சிலும், செயலிலும் ரஜினி வேகம். எதற்கும் கவலைப்படாத டெடிகேஷன். ஏதோ ஒன்றுதான் அவரை உயரத்தில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. ஒருமுறை ரஜினி பிறந்தநாளுக்காக ஜாபர்கான் பேட்டையில் அன்னதானம் நடத்தியபோது என்னையும் அழைத்திருந்தார்.
தெருவோரமாய் ஒரு சின்ன மேடை. அதில் அரதப்பழசாகிப்போன ஒரு ரஜினி பேனர். இருபது சொச்சம் பேர் வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். உச்சிவெயில் கொளுத்தும் நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க பிரியாணி பொட்டலத்தை பெரிய குண்டானில் வைத்து எல்லோருக்கும் கூப்பிட்டுக் கொடுத்தது வேடிக்கையாக இருந்தது. வருடாவருடம் அதே சடங்கு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மன்றத்து நண்பர், சைதையின் முக்கியமான புள்ளி. பொறுப்பான அப்பா. அவருக்கென்று ஒரு குடுப்பம், அவரை நம்பி ஒரு கூட்டம். எல்லாம் வந்திருக்கிறது. அசுர வளர்ச்சிதான். ஆளைக் கவிழ்க்கும் அவசரமான போட்டி உலகம் இது. சைதை நண்பர் செய்து காட்டியிருக்கிறார். ரஜினியோடு ஸ்டாலினுக்கும் சேர்த்து பேனர் வைப்பதில் எந்தத் தவறுமில்லை. அதில் யாருக்கும் எந்தப் பிரச்னையுமில்லை. எண்பதுகளில் ரஜினி மன்றங்களில் தீவிரமாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
ரஜினிக்கு ரசிகர்களாக இருப்பவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது சராசரி வயது நாற்பது பிளஸ். நிச்சயம் திருமணமாகி, தனக்கென்று ஒரு குடும்பத்தைக் கொண்டிருப்பவர்கள். பலரது பிள்ளைகள் காலேஜ் செல்லும் வயதில் இருப்பவர்கள். 1995க்கு பின்னர் ரஜினி மன்றங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்பது இங்கே முக்கியமான விஷயம். செய்யும் தொழிலில் தவறோ, சரியோ அதில் முன்னுக்கு வந்திருப்பவர்கள். ரஜினி பட ரிலீஸ் அன்று மட்டும் தங்களுடைய முகத்தை காட்டிவிட்டு மறுநாள் தங்களுடைய வேலைகளை கவனிக்க சென்றுவிடும் நிஜமான யதார்த்தவாதிகள்.
பிழைக்க அரசியல்; ரசிக்க ரஜினி. சைதை நண்பரும் யதார்த்தவாதிதான். கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை. எதிர்காலம் பற்றிய பயமுமில்லை. ஏற்றி வைத்த ஏணியை மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. இவரைப்போல் ஏராளமானவர்கள் இன்னும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.
'அடுத்த வாரம் ரஜினி படம் ரீலிஸாம்; அடகு கடைகளில் அடைக்கலமாவது எத்தனை தாலியோ? ' நான்கு சிகரெட்டுகளை நசுக்கி, அரை மணி நேரம் சிந்தித்து உருவேற்றிய கிறுக்கலை கொட்டை எழுத்தில் போஸ்ட் கார்டில் எழுதி புதிய ஜனநாயகத்திற்கு அனுப்பத் தயாராகிவிட்டார் அந்த இளம் படைப்பாளி. கவிதையைப் படித்தபின்னர் தமிழ்நாட்டில் புரட்சி வரும என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழ்நாட்டில்தான் எத்தனை கோயிஞ்சாமிகள்?!
- ஜெ. ராம்கி
கட்டுரையாளர் ஜெ. ராம்கி, மயிலாடுதுறைக்காரர். தீவிர ரஜினி ரசிகர். ரஜினி தொடங்கி தமிழ் சமூகத்தின் முக்கியமான ஆளுகைகள் குறித்து நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இணையத்திலும், அச்சிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அவரது சொந்தக்கருத்துகளே.
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1545
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1543Quote:
Originally Posted by Nerd
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1544Quote:
Originally Posted by Nerd
Whats the point of this? What is he trying to say? I don't get it :oops:Quote:
Originally Posted by m_23_bayarea
அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த முன்வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
2010-Nov-16
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த முன்வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கார்த்திகை தீபத்துக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் பெற வசதியாக இந்த விளக்குகள் பெரும் பொருட்செலவில் பொருத்தப்படுவதாகவும், இச்செலவு முழுவதையும் ரஜினியே ஏற்க முன்வந்துள்ளதாகவும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணாமலையாரின் தீவிர பக்தர் நம் தலைவர் என்பது நாடறிந்த செய்தி. இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து ஏராளமான திருப்பணிகளை, பக்தர்கள் வசதிக்காக செய்து வருகிறார் தலைவர்.
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா விழா, பௌர்ணமி கிரிவலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கிரிவலப் பாதையில் இருள் சூழ்ந்திருந்ததால் பக்தர்கள் இரவு நேரங்களில் வலம் வர சிரமப்பட்டனர்.
இந்த விஷயம் தலைவரிடம் சொல்லப்பட்டதும், பக்தர்கள் நடந்து சென்று மலையைச் சுற்றி வரப் பயன்படும் 14 கிமீ கிரிவலப் பாதைக்கும் தனது சொந்த செலவில் சோடியம் விளக்குகள் பொருத்தினார். மொத்தம் 148 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கான மொத்த செலவான ரூ 10 லட்சத்தையும் ரஜினியே ஏற்றார். இது நடந்தது 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம். பின்னர் பக்தர்களுக்கு தண்ணீர் வசதியும் செய்து தந்தார்.
இதன்பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகியது. இரவு நேரங்களிலும் தயக்கமின்றி ஏராளமானோர் கிரிவலம் சென்று மலை வடிவில் குடிகொண்டுள்ள அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.
தற்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒரு திருப்பணியைச் செய்ய முன்வந்துள்ளார் தலைவர். அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களுக்கும் தனது செலவில் ஒளிரும் விளக்குகள் பொருத்துகிறார் தலைவர்.
அதன்படி ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் 4 சக்தி வாய்ந்த ஒளிரும் போக்கஸ் லைட்டுகள் பொருத்தப்பட உள்ளன.
தொடர்க தலைவரின் ஆன்மீக தொண்டு !!
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1546
Superstar Rajinikanth at Dhayanidhi Alagiri Marriage Function
2010-Nov-18
மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி – சென்னை வழக்கறிஞர் சீதாராமன் மகள் அனுஷ்கா திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நேரில் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
துரை தயாநிதி – அனுஷா திருமணம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்தத் திருமணத்துக்கு மத்திய மாநில அமைச்சர்கள், கலையுலகப் பிரமுகர்கள் ஏராளமாக வந்து வாழ்த்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம மதுரை சென்று மணமக்களை வாழ்த்தினார்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மதுரைக்கு வந்த ரஜினிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அவர் தனது பேச்சிலும் குறிப்பிட்டார்.
மணமக்களை வாழ்த்தி அவர் பேசுகையில், “மதுரையில் நடைபெறும் இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி வைத்த நிதியமைச்சர் அன்பழகன், விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு இடையே மதுரை வந்துள்ள மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி மற்றும் இந்திய திருநாட்டின் மூத்த அரசியல் தலைவர் முதல்வர் கருணாநிதி மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கும் எனது முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கும் இரண்டு பேரன்கள் உள்ளனர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இப்படியொரு சந்தோஷம் இருப்பதை பேரன்கள் பிறந்த பிறகுதான் உணர முடிஞ்சது.
பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து பேரக் குழந்தைகளைப் பார்ப்பது பெரிய சந்தோஷம்னா, பேரக் குழந்தைகளுக்கு திருமணம் நடத்திவைப்பது அதைவிடப் பெரிய சந்தோஷம்.
முதல்வர் கலைஞர் அந்த வகையில் பேரன்களின் திருமணத்தை நடத்தி வைத்து நிறைந்த வாழ்க்கை வாழ்கிறார்.
எப்பவுமே அமைச்சர் அழகிரி கூட 10, 15 பேர் பேசிக்கிட்டு இருப்பார்கள். நான் துணை முதல்வர் ஸ்டாலின் கூட நிறைய பழகியிருக்கிறேன். அமைச்சர் அழகிரி கூட அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை. இருந்தாலும் அவர் காட்டிய அன்பு என்னை கவர்ந்தது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு…
இந்த திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு வருகிறேன்… எனக்கு மிகுந்த உற்சாக வரவேற்பை அளித்தனர். நன்றி.
பொருத்தம், லட்சணம், அழகு மூன்றும் நிறைந்த இந்த தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டும், விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும்”, என்று வாழ்த்தினார் ரஜினி.
- www.Envazhi.com
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1548
http://www.youtube.com/watch?v=2P_7UZsdEGg&feature=player_embedded#!