நீதானே என் பொன்வசந்தம்!
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் - கார்த்திக் குரலில் அழகான மெலடி. :notworthy: "சற்று முன்பு பார்த்த மேகம்.." - ரம்யா - சரணம் பல்லவியோடு இணையும் அழகு! ராஜாவின் முத்திரை.:notworthy: "வானம் மெல்ல.." பல்லவியை முடிக்கும் விதம் புதுமை. ராஜாவின் உருவாக்கங்களில் நான் இதுவரை காணாத ஒன்று. அந்த துரிதப் போக்கு புருவங்களை உயர்த்தியது. முதல்முறை பார்த்த ஞாபகம் - சுனிதி குரலில் காணப்படும் உயிர்ப்பு பிரமாதம். முதல்(ஒரே) இடையிசை முதல் முறை கேட்டவுடனையே பதிந்து விட்டது.:notworthy:
ஒரே வரியில் சொல்லனும்னா அதகளம். யானை ஒன்று மலையுச்சியில் நிற்கும் பாறையில் மீதேறி முன்னிரு கால்களையும் தூக்கி வானை நோக்கி பிளிறுவதுபோல ஒரு இசை ஆளுமை! இவ்வளவு நாள் தேக்கி வைச்சிருந்த இசை வாசனையை இந்தப் பாடல்களின் மூலம் அருவி நீரில் கலந்து விட்டு நம்மையெல்லாம் நனைத்து விட்டுவிட்டார் ராஜா. பாடல்கள் எல்லாவற்றையும் கேட்டு முடித்து ஹெட் ஃபோனை கழட்டிய பிறகும் பின்னணி இசை காதில் ரீங்கார மிட்டுக்கொண்டே இருக்கிறது.
:clap: முழுக்க முழுக்க மேற்கத்திய இசை. ஒரு இசை நூலகமாக வைத்து போற்றப்பட வேண்டிய ஒன்று.