[QUOTE=Vankv;975860]Thank you very much Mr. Sasidharan.
Regards,
R. Parthasarathy
Printable View
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்களுடைய "ஆலய மணி" ஆய்வு மிகவும் சிறப்பாக இருந்தது.
இருப்பினும் திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டது போல், சில முக்கிய, புகழ் பெற்ற காட்சிகளையும் குறிப்பிட்டிருக்கலாம். ("எங்க எஜமான் நடையழகப் பாத்தியாடா?").
இந்தப் படத்தைப் பற்றிய ஆய்வை நான் ஏற்கனவே "நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த பத்து படங்கள் - பிற மொழியிலும் எடுக்கப் பட்டவை" என்கிற தலைப்பில் எழுதியிருந்தேன்.
பல காட்சிகள் - தற்கொலை முயற்சிக்குப் பிறகு, எஸ்.எஸ்.ஆரும், தான் மணக்கவிருந்த சரோஜா தேவியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்து, பரவாயில்லை அவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று நினைத்து, அந்தத் திருமணத்திற்கு மற்றவருக்குத் தெரியாமல் வந்து, திருமணம் எஸ்.எஸ்.ஆருக்கும் விஜய குமாரிக்கும் என்று தெரிந்து சரோஜா தேவி, அவரை மறக்காமல் இருப்பதை அவர் பேசுவதன் மூலம் கேட்கும் போது, அவர் காட்டும் முக பாவனைகள்.. அப்பப்பா! கதவருகே காது கொடுத்துக் கேட்க ஆரம்பிக்கும் போது, சரோஜா தேவி அவரைப் பற்றிப் பேசத் துவங்கும் போது, அடுத்த வார்த்தை அவருடைய வாயிலிருந்து என்ன வரப் போகிறது என்பதை இவர் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துடிப்பையும், அந்த ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தும் அழகும், அவரைப் பற்றிய நல்ல வார்த்தை வர, வர, இவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியும்....
கடைசியில், சரோஜா தேவி தற்கொலைக்குத் துணிந்து தற்கொலைப் பாறை மேல் நிற்கும் போது, கத்து கத்தென்று கத்தி கடைசியில் சரோஜா தேவி அவரை அடையாளம் கண்டு கொண்டு, ஓடி வர வர, இவர் ஓடும் ஓட்டம். கீழே விழுந்து எழுந்து ஓடும் ஓட்டம். அந்த ஓட்டத்தில் அவர் காட்டும், ஆனந்தம், அவசரம், துடிப்பு, குதூகலம், இவை எல்லாமும், அந்த நடக்க முடியாத முடவனின் நடையுடன்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், மனிதனின் மன வலிமையையும், இதை நிர்ணயிக்கிறது. இதை ஒரு அகழ்வாராய்ச்சி போல், 50 வருடங்களுக்கு முன்னரே, கதாசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குனரும், நடிகர் திலகம் என்கிற அட்சய பாத்திரத்தை வைத்து செய்து காட்டினார்கள்.
When it comes to intensity, none can even think of Nadigar Thilagam.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
இன்று பிறந்த நாள் கொண்டாடும்
எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகம் நடித்த
நீதிக்கு பின் பாசம் - குமரிகோட்டம் -உரிமைக்குரல்
படங்களின் கதா பாத்திரத்தின் பெயரை கொண்டவரும்
நடிகர் திலகத்தின்
புதியபறவை -படித்தால் மட்டும் போதுமா -பாரதவிலாஸ்
படங்களின் கதா பாத்திரத்தின் பெயரை கொண்டவரும்
பத்மநாபன் - புகழ் நாட்டில் குடியிருக்கும்
அன்பு நண்பர் திரு கோபால் அவர்களுக்கு எங்களது இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
http://i50.tinypic.com/14vs28x.gif
ஒரே முறைதான் உன்னோடு [உங்களோடு ] பேசி பார்த்தேன்
நீ [நீங்கள் ]ஒரு தனி பிறவி
என்றும் அன்புடன்
esvee
இனிய அதிர்ச்சி இதுதானோ? உன்னோடு என்றே சொல்லலாம்.உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் அரிய குண நலன்களை பற்றி கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் பேசும் போது ,இன்னும் அருமையாய் உணர்ந்தேன். முழு முதற்கடவுள் கணேசனின் ஆசி உங்களுக்கு முழுவதும் பூரணமாய் கிட்ட வேண்டுகிறேன்.
மிக்க நன்றி.
ராஜ ராஜ ராஜ ராஜ நடை
வால்மீகி ராமாயணத்தில் ராமனின் நடையை விளக்கும் போது நாலு வகை நடையை சிறப்பாக குறிப்பிடுவார். சிங்க நடை,புலி நடை,யானை நடை,எருது நடை என்று.
நடிப்பின் கடவுள் ஒருவர்தான் ராமனுக்கு பிறகு இந்த நான்கு வித ராஜ நடைகளையும் வித்யாசம் காட்டி நடந்தார்.பொத்தாம் பொதுவாக ராஜ நடை என்று ஒரே வகையாக நடக்காமல்(ப்ரித்வி ராஜ் கபூர் போல்) சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடிப்பின் உச்சத்தை காட்டினார்.
சிங்க நடை-தலைமை மாண்பை கம்பீரத்துடன் குறியிடும் நடை.உத்தம புத்திரன் பார்த்திபன் கடைசி காட்சியில் நடப்பது,ஹரிச்சந்த்ராவில் நடப்பது,கர்ணன் படத்தில் ராஜாவாக பதவியேற்கும் போது நடப்பது.
புலி நடை-அதிக பட்ச கோபத்தில்,சீற்றத்தில் நடப்பது. உத்தம புத்திரன் விக்ரமன் ,பார்த்திபனை பிடிப்பதில் கோட்டை விட்ட கோபத்தில், திருவிளையாடலில் தன பாடலில் பிழை சொன்ன கோபத்தில்.
யானை நடை-பெருமித நடை.திருவருட்செல்வர் நடை,கந்தன் கருணை நடை,ராமன் எத்தனை ராமனடி சிவாஜி நடை-சாதித்த பெருமிதம்.
எருது நடை-அகந்தையை,அலட்சியத்தை குறிப்பது. உத்தம புத்திரன் விக்ரமனின் பதவியேற்பு விழா நடை,வீரபாண்டிய கட்டபொம்மன் உச்ச காட்சி நடை.
நான் மிக மிக ரசித்த எழுபத்தி ஆருக்கு(1976 )பிறகு வந்த நடிப்பு கடவுள் சில காட்சிகள்-----
---ரோஜாவின் ராஜா படத்தில் சினிமா தியேட்டர் காட்சி. படி படியாய் மனநோய்க்கு ஆட்படும் அருமையான காட்சிகள்.
---தீபம் படத்தில் சுஜாதா ,தன் தங்கையுடன் வீட்டுக்கு வரும் காட்சியில் அவரை கவர பேச்சு கொடுக்கும் காட்சி. அதே படத்தில் சத்யப்ரியாவை பீஸ் பீஸ் ஆக்கும் காட்சி.
---ஹிட்லர் உமாநாத்தில் தன் மனையிடம் அவள் superiority காம்ப்ளெக்ஸ் கொண்டிருப்பதை சுட்டி காட்டி பொருமும் காட்சி.
---நான் வாழ வைப்பேன் படத்தில் ,டிராவல் ஏஜென்சிக்கு விசாரணைக்கு வந்து போலீஸ் கேட்கும் கேள்விகளின் போது ,மறந்த விஷயங்களை நினைவு படுத்தி கொள்ள முயல்வது.
----வாழ்க்கை படத்தில் தனிமையில் இருக்கும் உச்ச காட்சி ,அம்பிகாவுடன் விரக்தியில் பேசும் காட்சி.
---ராஜரிஷியில் திரிசங்குவிடம் வசிட்டரை தாக்கி குத்தலாக பேசும் காட்சி.
---ஜல்லி கட்டு படத்தில் சத்யா ராஜ் இடம் சதாய்க்கும் இடங்களும் ,பிறகு தன் மனதை திறப்பதும்.
---ரிஷி மூலத்தில் மனைவியுடன் தன் பழைய வாழ்க்கையை குறிப்பிட்டு மன்னிக்க மன்றாடும் காட்சி.
---அண்ணன் ஒரு கோவிலில் தங்கையின் நிலை குறித்து புலம்பும் காட்சி.
---தியாகம் குடித்து விட்டு அறிமுகம் ஆகும் காட்சி,ஜஸ்டின் சண்டை.
---வெற்றிக்கு ஒருவன் ஆடல் பாடலில் காட்சி.
---என்னை போல் ஒருவனில் நண்பன் சுற்றத்தாரை பற்றி அறியாமல் நண்பனை போல் நடிக்கும் நயமான நகைச்சுவை காட்சி.
-----பந்தம் படத்தில் டிரைவருடன் கோபித்து நடக்க ஆரம்பிக்கும் காட்சி.
---துணை,முதல் மரியாதை ,தேவர் மகன் -முழு படமுமே . எந்த காட்சியன்று சொல்வது.
Gopal Sir
Shall try to do it.
There is also a DVD released by Mr Srinivasan of Tiruchy which contains about 2 to 3 minutes (or may be more) of different walks of NT in films which is noteworthy.
இருவர் உள்ளம்- 1963 -பகுதி-1
நடிகர்திலகத்தின் நடிப்பின் பாணி stylised method acting ஆக விளங்கிய 60 களில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.
இருவர் உள்ளத்தின் கதை-
மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.
ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.
மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.
(தொடரும்)