-
அன்புள்ள சந்திரசேகர் சார்,
மலைக்கோட்டை மாநகரில் நடைபெற இருக்கும் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவை உள்ளடக்கிய முப்பெரும் விழா பற்றிய அழைப்பு இதழ் பக்கங்களும், அதையொட்டி திருச்சி மாநகரின் சுவர்களில் வரையப்பட்டு நகரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் கண்கவர் வண்ண சுவர் விளம்ரங்களும் அருமையோ அருமை. நண்பர்கள் இங்கே குறிபிட்டதுபோல, டிஜிட்டல் பேனர் யுகமாகிவிட்ட இந்நாளில் சுவரில் வண்ண விளம்பரங்களைக் காணுவதே அரிதான வேளையில், இவை மனதுக்கு இதமளித்து, கடந்த காலங்களுக்கு இட்டுச்செல்கின்றன.
நடிகர்திலகத்தின் மீது நடிகர் சாய்குமார் கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாடாக அமைந்த கட்டுரைப்பக்கம் கணஜோர். அவர் 2010-ல் வெளியான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் ஒரு பிரதான ரோலில் (வில்லன் நாஸரின் வலது கை) நடித்திருந்தார். அவர் குறித்த ராணி இதழின் ஏட்டை அனைவரின் பார்வைக்கும் அளித்த தங்களுக்கு நன்றி.
-
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களின் அபூர்வ ஆவணப்பதிவுகள் வழக்கம்போல மிகவும் அருமை.
பாரதி நினைவு நாளையொட்டி பாரதி வேடத்தில் நம் தலைவரின் ஸ்டில், சிந்துநதியின்மிசை பாடலின் காணொளி மற்றும் நடிகர்திலகம் நடத்திய பாரதி நினைவுநாள் விழாவின் ஆனந்தவிடன் ஆவணம் அனைத்தையும் ஒரே பதிவில் தந்து அசத்தி விட்டீர்கள்.
இயக்குனர் சிகரம், நமது நடிகர்திலகத்தைப்பற்றி ஆகஸ்ட் 2001-ல் (தலைவர் மறைந்த சில தினங்களில்) அளித்திருந்த விவரங்கள் அடங்கிய 'ராணி' வார இதழ் பக்கங்கள் வெகுஜோர். இருவருக்குமிடையே கலகம் மூட்டிவிட சிலர் முயன்ற போதிலும் அவற்றை முறியடித்து இறுதிவரை சிறந்த நட்புடன் வாழ்ந்ததன் மூலம், இருவருமே நல்ல திறமையாளர்கள் மற்றும் தேர்ந்த அனுபவசாலிகள் என்பதை நிரூபித்தனர்.
செவாலியே விழா ஆவணங்களின் தொடர்ச்சியாக இன்று 'தினத்தந்தி' குடும்ப மலர் பக்க இதழ்களையும், 'பிலிமாலயா' இதழின் புகழுரையுடன் கூடிய பக்கங்களையும் ஒருசேர அளித்து மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்துள்ளீர்கள்.
இவைபோக, இதுவரை கேள்விப்பட்டிராத 'பூ முகம்' என்ற பத்திரிகையில் இருந்துகூட ஒரு பதிவைத்தந்து ஆச்சரியப்பட வைத்துள்ளீர்கள். (தங்கள் கண்ணில் படாத பத்திரிகைகள் எதுவும் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கின்றனவா?).
நாட்டில் பருவ மழை பொய்த்தாலும், நமது திரியில் ஆவண மழை பொய்க்காது என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வரும் தங்களுக்கு பாராட்டுக்கள் நன்றிகள்..
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
தாங்கள் புதுப்பொலிவுடன் மீண்டும் வந்து கலக்கப்போகிறீர்கள் என்பதை பம்மலார் அவர்களின் பதிவின்மூலம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி. 'சரஸ்வதி சபதம்' மெகா பதிவுக்குப்பின் தங்களின் பதிவைக்காண முடியவில்லையென்று ஏங்கியிருந்தோம். சூப்பர் பதிவுகளோடு மறுபடியும் தங்கள் அதிரடியைத் தொடருங்கள்.
-
அன்புள்ள ராகவேந்தர் சார்,
இந்த ஆண்டு நடிகர்திலகம் பிறந்த நாள் விழாவில் விருது வழங்கப்படவிருக்கும் கலைஞர்களின் பட்டியலை அளித்ததற்கு நன்றி. நமது திரியைப் பார்த்து, படித்து, பரவசப்பட்டு வரும் எண்ணற்றோரின் வேண்டுகோளான, 'இந்த விழாவில் நமது பம்மலார் அவர்கள் மேடையேற்றப்பட்டு, விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா என்பதனை அறிய விரும்புகிறோம். காரணம் நடிகர்திலகத்தின் கடந்த கால சாதனைகள் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துச்சொல்லப்பட்டிருப்பதன் மிக முக்கிய காரணம் நமது பம்மலார் அவர்களின் தொண்டு என்பது மிகையல்ல. அவர் உரிய முறையில் கௌரவிக்கப்பட இவ்விழாவே சரியான ஒன்று என்பது பலரது கருத்தாகும்.
இதைத்தங்களிடம் சொல்லக்காரணம், இங்கிருக்கும் எல்லோரையும் விட தாங்களே திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களிடமும், நடிகர்திலகத்தின் குடும்பத்தாரிடமும் நெருக்கமானவர். எனவேதான் இதில் தங்கள் பங்கு அதிகமாக இருக்க வேண்டுமென்பது அனைவரின் விருப்பம். நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறோம்.
பிளாசா தியேட்டர் பேனர் பற்றிய தங்கள் பதிவைப்படித்ததும், தங்களுக்காகவே பிளாசா தியேட்டர் பற்றிய பதிவை எழுதியிருந்தேன். ஏனென்றால், நாம் இருவரும் அங்கு சற்று அதிகமாகவே உருண்டு புரண்டவர்கள். அந்த இடங்களை இப்போது அதிகமாகவே மிஸ் பண்ணுகிறேன்.
'ஜெய்-ஜாய் நைட்ஸ்' பற்றிய தங்களின் விவரமான பதிவை மக்கள் கலைஞர் ஜெய் திரியில் எதிர்பார்க்கிறேன். நண்பர் hattori_hanzo தந்துள்ள புகைப்பட இணைப்பில் பார்த்தபோது, ஜெய்யுடன் பணியாற்றிய பழைய கலைஞர்கள் நிறையப்பேர் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது தெரிகிறது.
தங்கள் அனைத்து பதிவுகளுக்கும் நன்றி.
-
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவில் உள்ள உணர்வு நம் அனைவருடைய ஒருமித்த கருத்தே என்பதில் ஐயமில்லை. பம்மலார் உரிய முறையில் கௌரவிக்கப் படுவார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அது எங்கே எப்போது எவ்வாறு என்பதெல்லாம் காலம் நிச்சயம் ஏற்கெனவே நிச்சயம் செய்திருக்கும். அத்தருணம் வரும்போது யார் தடுத்தும் அது நிற்காது. எனவே பொறுத்திருப்போம் என்பதே தற்போதைக்கு என்னுடைய நிலைப்பாடு.
ஜெய் ஜாய் நிகழ்ச்சியைப் பொறுத்த மட்டில் அது மிகச் சிறப்பாக நிறைவேறியது உள்ளபடியே மன நிறைவைத் தரும் விஷயமாகும். முடிந்த வரை அத்திரியில் விரிவாக எழுத முயல்கிறேன்.
பிளாசா திரையரங்கு ... என்ன சொல்ல .... மறக்கவொண்ணா நாட்கள்... எத்தனை படங்கள்.... எத்தனை நாட்கள் .... இதற்கெனத் தனித் திரியே துவங்கலாம். அந்த அளவிற்கு நினைவுகள் அலை மோதும் பசுமையான நிகழ்வுகள்...
தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
-
நேற்றிரவு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள், தனது 'திரும்பிப்பார்க்கிறேன்' நிக்ழச்சியில் தனது அனுபவி ராஜா அனுபவி மற்றும் பூவா தலையா படங்களைப்பற்றிக் குறிப்பிட்டபின், நாம் எதிர்பார்த்திருந்த, நடிகர்திலகத்தை அவர் இயக்கிய ஒரே படம் "எதிரொலி" பற்றிக் குறிப்பிட்டார். (அவரது பேச்சுக்கு நடுவே, எதிரொலி படத்திலிருந்து இரண்டு கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டன).
"இப்படம் துவங்கிய முதல் நாளே நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் என்னைத் தனியே அழைத்துச்சென்று, 'இதோபார் பாலு, இந்தப்படத்துக்கு நீதான் டைரக்டர், நான் நடிகன் மட்டுமே. என்னிடம் எப்படி நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அதைத் தயங்காமல் கேள். நீ சொல்கிறபடி நடிக்க நான் தயார். சிவாஜியிடம் எப்படிக் கேட்பது என்று தயங்காதே. நீ படத்தை எப்படி வேண்டுமானாலும் எடு. அதில் நான் தலையிடவே மாட்டேன்' என்று உறுதியளித்தார். அவரது இந்த வார்த்தை எனக்கு பெரிய எனர்ஜியைக்கொடுத்தது.
நான் விருப்பப் பட்டபடியெல்லாம் தயங்காமல் நடித்துக்கொடுத்தார். ஆனால் கதைக்குத்தேவையான அளவு மட்டுமே அவரைப் பயன்படுத்திக்கொண்டு, அவரது முழுத்திறமையையும் உபயோகப் படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன் என்பது பின்னர் தெரிந்தது. படம் முழுவதும் அவரை குற்ற உணர்வுள்ள ஒருவராக மட்டுமே காண்பித்தது நான் செய்த குறைபாடு. இருந்தாலும் நான் எதிர்பார்த்தபடியே மிக நன்றாக நடித்திருந்தார் என்பதில் எனக்கு பூரண திருப்தி.
நான் இயக்கிய மிகச்சிறந்த படங்களில் எதிரொலியும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை".
(இயக்குனர் சிகரம் கே.பி.அவர்களே...., இந்த ஒரு வார்த்தை போதும் எங்களுக்கு).
-
Dear Karthik Sir,
Thank you for your appreciation regarding Trichy function.
-
14-1-1969 pongal day - daily thandhi paper
nadigar thilagam in uyarndha manidhan - advt;
pic forwaded by tirupur ravichandran
http://i49.tinypic.com/4kfa60.jpg
-
Dear EsVee Sir,
உயர்ந்த மனிதன் விளம்பரத்தின் நிழற்படத்தை உயர்ந்த உள்ளத்தோடு வழங்கிய திருப்பூர் ரவிச்சந்திரன் சாருக்கும் அதனை இங்கே பதிவிட்ட தங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
-