-
நமது இதய தெய்வம் எம்.ஜி. ஆர். அவர்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகி, அரசியல் உலகில் வெற்றி உலா வந்து தமிழக முதல்வராக ஆன
காரணத்தினால் நின்று போன திரைப்படங்களின் பட்டியலில் விடுபட்டவை :
1. மண்ணில் தெரியுது வானம் ..... உதயம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு
2. புரட்சிப் பித்தன் ...... டி ஆர். ராமண்ணாவின் ரங்கநாயகி பிக்சர்ஸ் தயாரிப்பு
3. அமைதி ......
4. தியாகத்தின் வெற்றி ...... எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பு
5. மர்மப் பெண்களிடம் சி.ஐ.டி 117 ..... தாமஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு
6. தங்கத்திலே வைரம் ..... கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கே.எஸ்.ஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பு
7. அண்ணா பிறந்த நாடு .... ஒப்பனை கலைஞர் நாராயண சாமீ அவர்களின் தயாரிப்பு
8. நானும் ஒரு தொழிலாளி .... புரட்சி இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் சித்ரயுகா தயாரிப்பு
9. மக்கள் என் பக்கம் ..... எம்.எம். மூவிஸ் சார்பில் முசிறிப்புத்தன் மற்றும் என்.எஸ். மணியம் இணைந்த தயாரிப்பு
இது தவிர பிரபல ஆஸ்திரேலிய இயக்குனர் ஜான் மெக்காலம் அவர்களுடன் இனைந்து தயாரிக்க விருந்த ஆங்கிலப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
ஒரு நடிகர் தனது 60 வயதில் கதாநாயகனாக நடித்ததும், கைவசம் சுமார் 18 படங்களை கொண்டிருந்ததும் உலக சாதனையே.
உலக சாதனையை படைக்க உத்தம தலைவன் எம்.ஜி. ஆர். அவர்களால் மட்டுமே முடியும் .
நன்றி.
அன்புடன்
சௌ. செல்வகுமார்
-
courtesy -MGR FAN GOODWIN
What is that makes every human, think he is waking up on the wrong side of the ‘luck’ couch. Well as Woody allen says ‘Life is full of misery loneliness and sorrow, and its allover quite too soon’ . That holds true . We need sorrow to cherish the happiness.
Blue is the color my friends,the yellow sunshine should last for a glimpsing moment and so it does. And if you do have that moment, relish in it, for it lasts then and then only .
http://i46.tinypic.com/2qaiozp.jpg
Very few personalities can give us those moments to relish,makkal thilagam M.G.Ramachandran former chief minsiter of Tamil Nadu ( most urbanised state in India) being one such personality.
No kidding, but whenever i used to be hearing classic tamil songs on TV my mom used to make me hear to his songs. I developed a taste to his songs from her. Today i do realize why his songs transcend generations, its bcoz it quenches the thirst amongst all of us to have the moment of hope and fullfillment .His songs do give us those moments to relish. I call the songs MGR acted in as his songs, because its a well know factor that MGR took extra care in the lyrics department which is out of bounds for the actor. However MGR understood the importance .
-
http://i46.tinypic.com/2nkjvgm.jpg
தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம்பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.
டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராமகிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார், அவர்களுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசினார் என அத்தனை செய்திகளையும் விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் சரித்திரத்தைச் சொல்லும் இந்த அரிய பொக்கிஷத்தை நூலாகத் தருவதில் பெரும் உழைப்பை நல்கி பங்காற்றியவர் எஸ்.ரஜத். கே.பி.ராமகிருஷ்ணன் மனதில் கிடந்த புதையலை, எம்.ஜி.ஆர் இறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு, பேட்டி கண்டு சுவைபட விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார்.
‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ எனும் இந்த நூல் எம்.ஜி.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும் அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்குகிறது.
-
-
-
-
Jaafna news
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே' என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரம் பெரியபுலோ என்ற இடத்திலுள்ள ஆலயமொன்றில் கடந்தஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுகுமார்குழுவினரின் இன்னிசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இரவு 11 மணியளவில் ஆரம்பமாகிநடைபெற்றது. இந்த நிகழ்வு இடம்பெற்ற ஆலயச் சுற்றாடலில் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இங்கு ஆரம்பத்தில் பல பக்தி கானங்களைப் பாடிய சுகுமார் பின்னர் சினிமாப் பாடல்களையும்
பாடினார். இதில் எம்.ஜி.ஆர் இன் திரைப்படமொன்றில் இடம்பெற்ற என்னதான் நடக்கும்
நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.
இதன்போது திடீரென மேடைக்குள் பாய்ந்த சிறிலங்கா காவல்துறையினர் சுகுமாரிடமிருந்த ஒலிவாங்கியைப் பறித்தனர். அத்துடன் பால் திரட்டுக்கள் அடங்கிய கொப்பியையும் பறித்தெடுத்தனர். இந்தப் பாடல்புலிகளின் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. இளைஞர்களை தூண்டுகிறது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகஉள்ளது. எனவே இந்தப் பாடலைப் பாட முடியாது என்று கூறி சுகுமாரிடன் முரண்பட்டனர்.இது இவ்வாறு நடந்துகொண்டிருந்த போது அங்கிருந்த பார்வையாளர்கள் பெரும் கடுப்பாகினர். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடுவதற்கு ஏன் சிறிலங்கா காவல்துறையினர் தடைவிதிக்கின்றனர் என்று கூறி கொதித்தெழுந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்துகொண்டிருந்த வயதானவர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் செயல் தொடர்பாக கடும்விரக்தியடைந்தனர்.
இதனிடையே சுகுமாரிடம் வாக்குவாதப்பட்ட காவல்துறையினர் மேடையை விட்டு இறங்கிச் சென்ற பின்னர்அங்கிருந்த மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த சுகுமார், இந்தப் பாடல் மிக நீண்ட காலத்திற்கு முன்னர்வெளிவந்தது. அன்று தொடக்கம் இன்று வரை நான் பல மேடைகளில் இந்தப் பாடலைப் பாடி வருகின்றேன்.ஆனால், இன்று ஏன் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை என்றுதெரிவித்தார்.
மேலும், அரங்கை விட்டு இறங்கிய காவல்துறையினர் இந்த இசை நிகழ்வை ஒழுங்கு செய்த ஆலய அறங்காவலர்சபையிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களில் சிலரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
இதேவேளை மேற்படி பாடகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடகராக இருந்து பல எழுச்சிப்பாடல்களைப் பாடியிருந்தார். சாந்தன் உட்பட ஏனைய எழுச்சிப் பாடகர்களுடன் இணைந்து பல மேடைகளில் எழுச்சிப்பாடல்களைப் பாடி மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தியவர் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தைத் தொடர்ந்துவவுனியா நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்த சாந்தன், சுகுமார் உள்ளிட்ட பாடகர்கள் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் சேர்ந்தும் தனியாகவும் இன்னிசை நிகழ்வுகளைஅரங்கேற்றி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
-
UNRELEASED MAKKAL THILAGAM MOVIES ADVERTISEMENT .
http://i50.tinypic.com/2dmcyys.jpg
-
-