மக்கள் திலகம் எம்ஜிஆர் - 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு பதிவுகள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
இனிய நண்பர் வேலூர் திரு ராமமூர்த்தியின் வேலூர் மாவட்ட மக்கள் திலகத்தின் நினைவு நாள் பதிவுகள் அனைத்தும அருமை .நன்றி .
Printable View
My heartfelt condolences on the sad demise of Shri T.V. Chandrasekaran yesterday [ 24/12/2015], I understand that he was the founder of the 1st NT fans Club.
http://i160.photobucket.com/albums/t...psu1jmnvmr.jpg
May his Soul rest in peace.
GV to remix MGR’s famous song
GV has already begun working on it, as our source tells us, "The song is from MGR's film, Ninaithathai Mudippavan................
http://timesofindia.indiatimes.com/e...w/50310452.cms
http://i66.tinypic.com/11ltnw7.jpghttp://i63.tinypic.com/29dijkh.jpg
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் மெளன ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து மெளன அஞ்சலி ஊர்வலம் மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் தொடங்கியது. துணை மேயர் பி.சேவியர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
முன்னாள் எம்பி கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சிவபெருமாள், மண்டல செயலாளர்கள் பிஎன் ராமகிருஷ்ணன், எட்வின் பாண்டியன், முருகன், பொன்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏசாதுரை, வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.வி.ரவீந்திரன், மகளிர் அணிச் செயலாளர் குருத்தாய், அதிமுக நிர்வாகிகள் அமிர்த கணேசன், பெருமாள்சாமி, யு.எஸ்.சேகர், டாக்டர் ராஜசேகரன், ஜோதிமணி, மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி, மெஜிலா, இளைஞர் அணி ஏபிஆர் கவியரசு, ஆறுமுகநேரி சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று வட்டத்தெப்பம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். இதில், எம்ஜிஆர் மன்ற முன்னாள் மாவட்ட செயலளார் மணி, அதிமுக தெற்கு மண்டல செயலளார் பிஎன் ராமகிருஷ்ணன், விடி தங்கம், முருகானந்தம், அமிர்தகணேசன், ஆசைதம்பி, மோகன், ஆனந்தராஜ், நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்ஜிஆர் கழகம் சார்பில்
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எம்ஜிஆர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அழகிரி சாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தலைவர் பால்பாண்டி, பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்