-
வேட்டைகாரன்புதூர் முத்துமாணிக்கம் அவர்கள் எழுதிய வேட்டைக்கு வந்த சிங்கம் புத்தகத்தின் முதல் இரண்டு அத்தியாயங்கள் படித்தேன். நடிகர் திலகத்தின் வேட்டை அனுபவங்கள் என்று சொன்னாலும் கூட முதல் அத்தியாயத்தில் அவரைப் பற்றி மட்டும் எழுதாமல் திரு.முத்துமாணிக்கம் அவர்களின் குடும்ப சூழல், அவரின் கிராமத்து பின்புலம், அவர் கல்லூரியில் படித்த போது ஈடுபட்ட தொழில் என பலவற்றையும் சொல்கிறது.
இரண்டாவது அத்தியாயம் இன்னும் சுவாரசியம். வேட்டையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் என்னென்ன? Double Barrel Gun-ற்கும் Rifle-கும் என்ன வேற்றுமை, தோட்டாக்கள் எத்தனை வகைப்பட்டவை, ரவைகளில் எத்தனை விதங்கள், எந்தெந்த மிருங்களுக்கு எந்தெந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட வேண்டும், வேட்டைக்கு செல்லும் போது எப்படிப்பட்ட Torch Lights தேவை, வேட்டையின் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்று பல அரிய தகவல்களை அள்ளி தருகிறது. மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் நடை சுவை.
அன்புடன்
-
ஆனந்த விகடன் 4.11.2009 இதழில் , விக்ரம் 25 என்கின்ற கட்டுரையில் , நடிகர் விக்ரம் அவர்களைப் பற்றி 25 தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல் தகவல் :
"விக்ரமுக்கு மிகவும் உயிரான பாடல் 'பொன்னொன்று கண்டேன் , பெண் அங்கு இல்லை'. தினமும் ஒரு தடவையாவது டி.எம்.எஸ். , பி.பி.எஸ். குரலில் கேட்டு விட்டுத் தான் தூங்குவார் !"
பொன்னான ரசனை !
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 6.11.2009 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக , இரட்டை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் , காலத்தை வென்ற காவியமாம் , நமது நடிகர் திலகத்தின் உத்தமபுத்திரன் திரைப்படம் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றது. முதல் நாளான 6.11.2009 வெள்ளியன்றே , கன மழையையும் பெரு வெள்ளத்தையும் பொருட்படுததாமல், பெருங்கூட்டம் அலை மோதியுள்ளது. 6.11.2009 , முதல் நாள் மொத்த வசூல் மட்டும் ரூ. 9890 /- (ஒன்பதாயிரத்து எண்ணூற்றி தொண்ணூறு). பழைய படங்களின் , முதல் நாள் வசூலில் , இது அசுர சாதனை.
இன்று 8.11.2009 ஞாயிறு மாலைக் காட்சிக்கு , மழையையும் மீறி , பெரும் ஜனத்திரள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விக்ரமனையும் , பார்த்திபனையும் , வெள்ளித்திரையில் என்றென்றும் தரிசித்தே தீர வேண்டும் , என மக்கள் நினைக்கும் போது மழையாவது , வெயிலாவது !!!
அன்புடன்,
பம்மலார்.
-
9.11.2009 , நமது நடிகர் திலகத்தின் நடிப்பில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையில், சித்ராலயாவின் தயாரிப்பில் , ஷ்ரீதரின் கதை , வசனம் , இயக்கத்தில் 9.11.1969 , தீபாவளியன்று வெளியான , பிரம்மாண்ட படைப்பான சிவந்த மண் திரைக்காவியத்தின் 40வது ஆண்டு நிறைவு. நடிகர் திலகத்தின் இமாலய வெற்றிப்படங்களுள் ஒன்றான சிவந்த மண் திரைப்படம் நிகழ்த்திய சாதனைகளில் சில :
சிவந்த மண் , நடிகர் திலகத்தின் 134வது திரைக்காவியம் , 13வது வண்ணப்படம். அயல் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படமான இக்காவியம் , 9.11.1969 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று , சென்னை மற்றும் தென்னாடெங்கும் வெளியானது.
இத்திரைக்காவியம் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள் :
(28.12.1969 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த 50வது நாள் விளம்பரத்தின் அடிப்படையில்)
1. சென்னை - குளோப் (1282 இருக்கைகள்) - 145 நாட்கள்
2. சென்னை - அகஸ்தியா (1005 இருக்கைகள்) - 117 நாட்கள்
3. சென்னை - மேகலா (984 இருக்கைகள்) - 103 நாட்கள்
4. சென்னை - நூர்ஜஹான் (919 இருக்கைகள்)- 103 நாட்கள்
5. மதுரை - சென்ட்ரல் (1108 இருக்கைகள்) - 117 நாட்கள்
6. கோவை - ராயல் (1680 இருக்கைகள்) - 103 நாட்கள்
7. திருச்சி - ராஜா (728 இருக்கைகள்) - 100 நாட்கள்
8. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 100 நாட்கள்
9. தூத்துக்குடி - பாலகிருஷ்ணா (1102 இருக்கைகள்) - 101 நாட்கள்
10. தாம்பரம் - நேஷனல் (1057 இருக்கைகள்) - 50 நாட்கள்
11. காஞ்சீபுரம் - கிருஷ்ணா (1200 இருக்கைகள்) - 50 நாட்கள்
12. கடலூர் - ரமேஷ் (917 இருக்கைகள்) - 50 நாட்கள்
13. திருவண்ணாமலை - பாலசுப்ரமண்யா (992 இருக்கைகள்) - 50 நாட்கள்
14. வேலூர் - அப்ஸரா (901 இருக்கைகள்) - 54 நாட்கள்
15. பாண்டிச்சேரி - ராமன் (1040 இருக்கைகள்) - 50 நாட்கள்
16. திண்டுக்கல் - என்.வி.ஜி.பி. (1284 இருக்கைகள்) - 66 நாட்கள்
17. காரைக்குடி - அருணாசலா (1017 இருக்கைகள்) - 50 நாட்கள்
18. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 50 நாட்கள்
19. பழநி - சந்தானகிருஷ்ணா (1087 இருக்கைகள்) - 50 நாட்கள்
20. ஈரோடு - முத்துக்குமார் (1220 இருக்கைகள்) - 66 நாட்கள்
21. பொள்ளாச்சி - நல்லப்பா (1130 இருக்கைகள்) - 50 நாட்கள்
22. ஊட்டி - ஏ.டி.சி. (638 இருக்கைகள்) - 66 நாட்கள்
23. ஆத்தூர் - ஷ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 50 நாட்கள்
24. நாமக்கல் - ஜோதி (741 இருக்கைகள்) - 50 நாட்கள்
25. தர்மபுரி - கணேஷ் (866 இருக்கைகள்) - 50 நாட்கள்
26. பரமத்திவேலூர் - கணேசா (903 இருக்கைகள்) - 50 நாட்கள்
27. தஞ்சாவூர் - ஜூபிடர் (1009 இருக்கைகள்) - 50 நாட்கள்
28. மாயவரம் - கெளரி (1460 இருக்கைகள்) - 50 நாட்கள்
29. கும்பகோணம் - ஜூபிடர் (1137 இருக்கைகள்) - 50 நாட்கள்
30. பட்டுக்கோடை - நீலா (935 இருக்கைகள்) - 50 நாட்கள்
31. நெல்லை - சென்ட்ரல் (1405 இருக்கைகள்) - 76 நாட்கள்
32. நாகர்கோவில் - பயனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 76 நாட்கள்
33. பெங்களூர் - ஸ்டேட்பிக்சர்ஹவுஸ் - 50 நாட்கள்
34. பெங்களூர் - அஜந்தா - 50 நாட்கள்
35. கொச்சி - ஸ்டார் - 50 நாட்கள்
36. கோட்டயம் - ஆனந்த் - 50 நாட்கள்
37. திருச்சூர் - மாதா - 50 நாட்கள்
38. தெள்ளச்சேரி - பிரபா - 50 நாட்கள்
39. ஆலப்புழை - சாந்தி - 50 நாட்கள்
நமது நடிகர் திலகத்தின் சிவந்த மண் திரைக்காவியம்,
20 வாரங்களுக்கு மேல் ஓடிய அரங்கு : 1
100 நாட்களிலிருந்து 19 வாரங்கள் வரை ஓடிய அரங்குகள் : 8
50 நாட்களிலிருந்து 99 நாட்கள் வரை ஓடிய அரங்குகள் : 30
ஆக, நமது நடிகர் திலகத்தின் சிவந்த மண் , இமாலய வெற்றி பெற்ற மெகா ஹிட் காவியம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு , நிரந்தர சக்கரவர்த்தி , சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
அன்புடன்,
பம்மலார்.
-
சுவாமி,
நல்ல செய்தியை, மனம் மகிழும் செய்தியை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று மாலைக்காட்சியில் விக்ரமன் யாரடி நீ மோகினி என்று நடக்கும் போது அலப்பரையால் டவுன்ஹால் ரோடே அதிர்ந்திருக்கும். நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி இதே சென்ட்ரலில் வெளியிடப்பட்ட தங்கப்பதக்கம் பெற்ற ரிகார்ட் வசூலை இது முறியடிக்கும் என்றே தோன்றுகிறது. என்றுமே எங்கள் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதற்கு மீண்டும் ஒரு ஆதாரம்.
இதை எழுதும்போது வேறு ஒன்று நினைவுக்கு வருகிறது. இதே சென்ட்ரல். இதே நவம்பர் 9ந் தேதி. அதுவரை இந்தி படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலை மாறி முதன் முதலாக ஒரு தமிழ் படம் வெளி நாடுகளில் படமாக்கப்பட்டு வெளியான நாள். ஆம். கலையுலகில் ஒரு புதிய சரித்திரம் எழுதிய சிவந்த மண் வெளியாகி நாற்பது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது [1969 - 2009]. பாரத மண்ணின் காவிய நாயகன் பாரத் என்ற பாத்திரம் நடிகர் திலகத்தால் உயிர் பெற்ற நாள். முன்பே இங்கே பதிவு செய்தது போல் அந்த சென்ட்ரல் சினிமா சுற்று வட்டாரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்த நாள். படம் பார்க்க காத்திருந்த அந்த ஒரு வாரமும் எதிர்பார்ப்புகளும் இன்றும் பசுமரத்தாணி.
இனிமையான அந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாட அந்த நாட்களும் வந்திடாதோ என ஏக்கத்தை தூண்டுகிறது. நல்ல நினைவுகளுக்கு மீண்டும் அழைத்து சென்றதற்கு மீண்டும் நன்றி சுவாமி.
அன்புடன்
-
" I will sing for you, I will dance for you ...". I don't know the film's name, but this is how the song goes, which was recently played in mega tv. The song featured NT alongwith Manorama & another girl whom i doubt to be Pramila. Or is it Vanishree ?? Not sure :confused2:
I should really than Mega TV because i thoroughly enjoyed this song. NT was so very hilarious and funny. He was sporting a french beard, wearing a banian and a pant which was rolled up. Though the opening words were in English, it was sung in typical classical style by TMS who has done a great job.
-
I think it was manidharul manickam where NT played a guest role while AVM rajan was the hero.
-
yes, it indeed is in manidharul maanikkam, set to the raaga for sore throats by MSV - Karaharapriya. :lol:
I think a mad pramila will hold a knife and force sivaji to sing, thus I will sing for you I will dance for you :rotfl:
-
Manidharul Manickam...NT not only in guest role, but that of a side comedian as well. Film watchable only for NT. Those b*tching about NT and his over-performance should see this movie, look at AVM Rajan and repent.
-
'மனிதரில் மாணிக்கம்' படத்தில் கெஸ்ட் ரோல் என்று பெயரே தவிர படம் முழுதும் நடிகர்திலகம் வருவார். முக்கியமான கட்டங்களில் வந்து, படத்தின் கதையோட்டத்துக்கு காரணமாக இருப்பார். ஏ.வி.எம்.ராஜன் ரொம்ப எமோஷனலாக நடித்திருப்பதால், படம் பார்ப்பவர்களுக்கு பெரிய ரிலீஃப் தருவதே நடிகர்திலகம் ஏற்றிருந்த அந்த டாக்டர் பாத்திரம்தான். அவர் வரும் காட்சிகளனைத்தும் நமக்கு விருந்து படைக்கும். குறிப்பாக ' I will sing for you... I will dance for you...' பாடல் காட்சி. ராகேஷ் சொன்னதுபோல, படத்தின் காமெடி பகுதியை நடிகர்திலகம்தான் பூர்த்தி செய்வார். கடைசியில் 'Love is God' என்று சொல்லி குளோசப்பில் சல்யூட் அடித்து படத்தை முடித்து வைப்பதும் அவர்தான்.
(கின்னஸ் சாதனைக்காக, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு, பெரும்பாலான நடிக, நடிகையர் பங்குபெற்ற "சுயம்வரம்" படத்தில் கார்த்திக் ஏற்றிருந்த அந்த ஞாபகமறதி டாக்டர் ரோல், கிட்டத்தட்ட மனிதரில் மாணிக்கம் படத்தில் நடிகர்திலகம் ஏற்றிருந்த ரோலை நினைவுபடுத்தும். ஆனால் கார்த்திக் கொஞ்சம் ஓவராக போனதால் அது கோமாளித்தனமாகப் போய்விட்டது).
மோகன்.... பிரமீளாவும் வாணிஸ்ரீயும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கா அப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள்..?.