https://www.youtube.com/watch?featur...Y&noredirect=1
ENJOY !
Printable View
Nam Nanbar Thiru Anand Avargal has compiled multiple clippings from our Kalai Avadhaaram Nadigar Thilagam Films....
https://www.youtube.com/watch?featur...Y&noredirect=1
இருவர் உள்ளம்-1963 - பகுதி-2
முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?
அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.
ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.
(தொடரும்)
இருவர் உள்ளம்-1963 -பகுதி-3
சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)
பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.
கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.
பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
(முற்றும்)
என்னை அவளிடத்தில் தருகிறேன் - அவள்
இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள்
என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள் - அந்த
இனிய மகள்
எனது தாய்க்கு மருகளானாள் - இன்று..
கண்ணெதிரே தோன்றினாள்
http://youtu.be/FjNQ462oCec
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் பாடல்களில் உள்ள சிறப்பம்சம், பல்லவி good என்றால் சரணம் பெஸ்ட். அது அவருக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. பல்லவியை விட சரணம் சிறப்பாக அமைக்க, இசையமைப்பாளர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்தப் பாடல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கவியரசரின் வரிகள் ... அந்த பாத்திரத்தை இலக்கியமாய் அமைக்க, நடிகர் திலகம் அதை கவிதையாக்கி விடுவார்.
நாயகி முகத்தைக் காட்டத் தயங்கி திரும்பி நின்று கொண்டிருக்க, இவருடைய கற்பனையில் அவள் திரும்பிப் பார்ப்பதாக காட்டி அந்த வர்ணனைக்கு உயிர் கொடுப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று - இதே போன்ற காட்சியமைப்பு இதய கமலம் படத்தில் உன்னைக் காணாத பாடலிலும் வருவதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மற்றவர்களின் படப் பாடல்கள் கேட்கக் கேட்க அலுக்காது என்றால் நடிகர் திலகத்தின் படப் பாடல்கள் ..
பார்க்கப் பார்க்கவும் அலுக்காது ...
http://youtu.be/7guKJYxRwPc
என்ன உண்மை தானே ...
பள்ளியறைப் பெண் மனதில் ஏக்கம் ஏக்கம் என்ற வரிகளின் போது கால்கள் நேராகவும் ஏக்கத்துடன் இருக்கும் ஒரு பெண்ணின் கால்களைப் போன்று தரையில் பாவாமல் தவிப்பது போன்றும், பக்கத்தில் துணையிருந்தால் வரியின் போது நாயகன் கால்கள் அருகில் வருவதும் உடனே நாயகியின் கால்கள் திரும்புவதும் பின் கேமிரா சற்றே மேற்சென்று இருவரின் முகத்தையும் காட்டும் போது இருவரின் முகத்திலும் அந்த வரிகள் உயிருடன் பிரதிபலிப்பதையும் பார்க்கும் போது ..
கோபால் சொன்ன வரிகள் 100க்கு 1000 சதவீதம் சரி ..
இவரிடம் வரும் போது தான் நடிகைகள் தாங்கள் நடிக்கவும் வேண்டும் என்பதையே உணர்ந்து நடிப்பார்கள் போல...
ராகவேந்தர் சார்,
நான் நல்லாவே பாடுவேன். கண்ணெதிரே தோன்றினாள் பாடி ,கிண்டி கல்லூரியில் முதல் பரிசு பெற்றிருக்கிறேன். பொன்னொன்று கண்டேன்,இரண்டு பேர் வாய்ஸ் இலும் நானே பாடி எம்.ஐ.டி யில் முதல் பரிசு.
இந்தப் பாடலைப் பற்றி கோபால் சார் விரிவாகக் கூறிவிட்டார் ... வேறென்ன வேண்டும் ..
பார்ப்போமே..
http://youtu.be/TwMSXh-HxMA
ஐயோ சார்,
இப்படி சுட சுட போட்டு தாக்கறீங்களே. ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.
டியர் கோபால் அவர்களே,
ஏனய்யா இப்படி இம்சை பண்ணுகிறீர்?
அடுத்தடுத்து, இரு மாபெரும் வெற்றிப் படங்களின் ஆய்வா? ஒன்று நீண்ட ஆய்வு; மற்றது சற்றே சிறிய ஆய்வு. வழக்கம் போல், மிக நன்றாக வந்திருக்கிறது.
இருவர் உள்ளம்:- நடிகர் திலகத்தின் படங்களில், இதுவும் "தெய்வ மகனும்" தான் நான் அதிக முறை தியேட்டரில் பார்த்த படங்கள். இரண்டும் 30 முறை. நடிகர் திலகத்தின் படங்களில், எனக்குத் தெரிந்து, மறு வெளியீடுகளில், "கர்ணன்" தவிர்த்து, விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும், (ஏன் ரசிகர்களுக்கும் தான்), பெரு மகிழ்ச்சியைக் கொடுத்த முதல் இரண்டு படங்கள், "வசந்த மாளிகையும்", "இருவர் உள்ளமும்" தான் (சென்னையில்). ஒற்றுமையை கவனித்தால், இரண்டுமே, சற்றேரக்குறைய ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்ட படங்கள்; திரை இசைத் திலகத்தின் "சூப்பர் ஹிட்" பாடல்களைத் தாங்கிய படங்கள். பார்க்கும் மக்கள் அனைவரையும், "அடடா! இரண்டும் பேரும் சேர்ந்து விட மாட்டார்களா" என்று ஏங்க வைத்த படங்கள். இரண்டு படங்களிலும், நடிகர் திலகத்தின் நடிப்பு, கதா பாத்திரத்தை ஒட்டி, subtle-ஆக இருக்கும். ரசிப்புத் தன்மையே இல்லாதவரையும் ரசிக்க வைக்கும்.
சிவந்த மண்:- நடிகர் திலகத்தின் அணுகு முறை எப்போதும் நூறு சதவிகிதம் சின்சியராக இருக்கும். எந்தக் கதா பாத்திரமாயிருந்தாலும். அதற்கு, இந்தப் படம் மிகச் சிறந்த உதாரணம். ஒரு அட்வென்ச்சர் படத்தை அவருக்கேயுரிய சின்சியாரிடியுடன் அணுகியிருப்பார். ஒரு மேம்போக்கான, ஆக்க்ஷன் படத்தில் நடிப்பது போல் தான் எந்த நடிகரும் இந்தப் படத்தில் நடித்திருப்பார். ஆனால், இவர் மட்டும் வேறு மாதிரி, மிக மிக சின்சியராக அணுகியிருப்பார்.
பிய்த்து உதறிக்கொண்டிருக்கிறீர்கள். நடக்கட்டும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி