:thumbsup:
what a response... immediate sobering effect :lol:
Printable View
They both weigh about the same so the comparision is valid. However there's no comparision with respect to their talent.
// Ajay and Cedy, Are you guys not in India ?? //
I am not. Not sure abt Cedy. :)
I have not moved outside Chennai for the last 10 months :).
I think Vinod was reacting to the 'early reviews' part. I read Ajay's review and posted my comment.
October 10 press meet
மாலை 7.30 மணிக்கு அவசர பிரஸ்மீட் என்றுதான் தகவல் கொடுத்திருந்தார்கள் நஸ்ரியா சார்பில். ஆனால் அவர் வந்ததோ கிட்டத்தட்ட 9 மணிக்கு. கேட்டால் விமானம் தாமதம் என்றார்கள். ஒரு நிருபர் விமான நிலையத்துக்கு போன் செய்து பயணிகள் லிஸ்ட்டையே செக் பண்ணிவிட்டார். நஸ்ரியா பெயர் அதில் இல்லையாம்!
அப்படின்னா படமே பாக்கலயா..
அப்படியே அவர் விமானத்தில் வந்ததாக வைத்துக் கொண்டாலும், காலை 7 மணிக்கே சென்னையில் படம் பார்த்துவிட்டேன். நல்ல படம், எனக்கு பிரச்சினையில்லை என்று நஸ்ரியா சொன்னது எவ்வளவு பெரிய பொய். காலை 7 மணிக்கு சென்னையில் படம் பார்த்துவிட்டு, கேரளாவுக்குப் போய், திரும்ப பிரஸ் மீட்டுக்காக சென்னை வந்தாரா என்ன?
மதம் பற்றி பேசவே இல்லையாம்...
தனது புகாரில் மூன்று இடங்களில் இஸ்லாம் மதத்தை தேவையில்லாமல் இழுத்திருந்தார் நஸ்ரியா. சற்குணம் தன் மதத்தைச் சொல்லி மிரட்டியதாகக் கூறியிருந்தார். தன் மதத்தின் பெருமை காக்க உதவுமாறு கமிஷனரிடம் கோரியிருந்தார்.
ஆனால் தான் அப்படிச் சொல்லவே இல்லை என்று அடாவடியாக மறுத்தார் நஸ்ரியா. அட ஒரு நிருபர் கையில் நஸ்ரியாவின் புகார் கடித நகலைக் காட்டியும்கூட சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
படம் பார்த்தீங்களா இல்லையா...
நான் படம் பார்த்தேன்.. ஹேப்பி.. நல்லா வந்திருக்கு.. சப்போர்ட் பண்ணுங்க என்று பல முறை சொன்ன நஸ்ரியாவை டக்கென்று மடக்கினார் ஒரு நிருபர். சரி நீங்க படம் பார்த்ததாகவே வச்சிக்குவோம்.. எந்த தியேட்டர்ல பாத்தீங்க.. எப்போ பார்த்தீங்க? என்றார்.
ஒரு நிடமிடம் ஆடிப் போய்விட்ட நஸ்ரியா, திருதிருவென விழித்தார். பின்னர் பக்கத்திலிருந்த தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் வக்கீலிடம் குசுகுசுத்தார். அப்புறம் சொன்னார் இதே தியேட்டர்லதான் என்று. அவர் படம் பார்த்த லட்சணம் புரிந்து போய்விட்டது.
படத்தைக் காட்டச் சொல்லித்தான் புகார் கொடுத்தேன்...
'நான் படம் பார்க்கல. ட்ரைலர்தான் பாத்தேன். அந்த சீன் பாத்து ஷாக்காயிட்டேன். அதான் எனக்கு படத்தைக் காட்டணும்னு கேட்டுத்தான் அந்த புகாரை கொடுத்தேன்', என்றார்.
கம்யூனிகேஷன் கேப்பாம்...
அப்படின்னா அதை தயாரிப்பாளர்கிட்ட ஏன் கேட்கல, இயக்குநரிடம் பேசியிருக்கலாமே என்று கேட்டனர். உடனே கம்யூனிகேஷன் கேப் என்று சிரிக்க முயன்றார் நஸ்ரியா.
ஏங்க உங்க கம்யூனிகேஷன் கேப்பை இப்படி பொதுப்பிரச்சினையாக்கி பப்ளிசிட்டி தேடுவது சரியா என்ற கேள்வியைக் கேட்காதவர் மாதிரி நடித்தார் நஸ்ரியா.
டைரக்டர் கிட்டதான் கேக்கணும்...
உடன் வந்திருந்த தயாரிப்பாளர் கதிரேசனும் சளைக்காமல் பொய் சொன்னார். ஏங்க, நஸ்ரியா உங்க டைரக்டர் சீட்டிங் பண்ணதா சொல்றார். நீங்க தயாரிப்பாளர் கேட்டுக்கிட்டிருக்கீங்க.. அவர் ஏமாத்தினது உண்மைதானா என்று கேட்டபோது, 'அதை எங்க டைரக்டர்கிட்ட கேட்டுதான் சொல்ல முடியும்,' என்றார்.
தினமும் உங்களைப் பத்தி எழுதறதுதான் வேலையா?
சற்குணம் எப்போ வந்து விளக்கம் சொல்வார் என்று கேட்டதற்கு, நாளைக்கு பிரஸ்ஸை மீட் பண்ணுவார் என கதிரேசன் சொல்ல, 'நாங்க வேற வேலையே பார்க்கக் கூடாதா.. தினமும் உங்களைப் பத்தி நியூஸ் எழுதிக் கிட்டே இருக்கணுமா?' என்று கோபமாக திருப்பிக் கேட்டார் இன்னொரு நிருபர்.
சீப் பப்ளிசிட்டி
பப்ளிசிட்டிக்காகத்தான் நீங்க இதை பண்ணியிருக்கீங்க என்று செய்தியாளர்கள் குற்றம்சாட்டியபோது, இல்ல, நான் சீப் பப்ளிசிட்டி தேடலை என்றார்கள் நஸ்ரியாவும் தயாரிப்பாளரும்.
சற்குணத்தோட சண்டையில்லை
இயக்குநர் சற்குணத்துடன் சமாதானமாயிட்டீங்களா என்று கேட்டபோது, எங்களுக்குள்ள சண்டையே இல்லையே. சண்டை போட்டாதானே சமாதானம் ஆக.. என்றாரே பார்க்கலாம்.
அடேங்கப்பா!
Ada pongada gongango... Enna sarikkiradhuku indha meeting