இவ்வளவு காலத்திற்கு பிறகும் இரட்டை இலை - வெற்றியின் சின்னமானது எவ்வளவு பேருடைய தூக்கத்தை கேள்வி குறியாக மாற்றியுள்ளது? என்பதை தேர்தல் நேரம் உணர்த்துகிறது...அவரின் திரைப்படங்களுக்கு பதில் சொல்லி விட்டல்லவா அவரிடம் வர வேண்டும்...
Printable View
இவ்வளவு காலத்திற்கு பிறகும் இரட்டை இலை - வெற்றியின் சின்னமானது எவ்வளவு பேருடைய தூக்கத்தை கேள்வி குறியாக மாற்றியுள்ளது? என்பதை தேர்தல் நேரம் உணர்த்துகிறது...அவரின் திரைப்படங்களுக்கு பதில் சொல்லி விட்டல்லவா அவரிடம் வர வேண்டும்...
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' மார்ச் 14ந் தேதி திரைக்கு வருவது மகிழ்ச்சியான தகவல் .
1965ல் வெளிவந்து 2012 வரை 47 ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பலமுறை வெளியீடுகள்
செய்யப்பட படம் . ஊடகங்களில் கணக்கில்லாமல் ஒளிபரப்ப பட்ட படம் .
திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களின் முயற்சியால் தற்போது புதுமை யான , கண்ணுக்கு விருந்தான
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவனை காண உள்ளோம் . இந்த நேரத்தில் திரு சொக்கலிங்கத்திற்கு வாழ்த்துக்களை
தெர்வித்து கொள்வோம் . ஆயிரத்தில் ஒருவனை வரவேற்போம் .
1965 பெங்களுர் நகரில் முதல் வெளியீட்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மூன்று அரங்கில் 8 வாரங்கள் ஓடியது .
விளம்பர ஆவணங்கள் இங்கே மீண்டும் பதிவிடுகிறேன் .
http://i60.tinypic.com/10y3ozn.jpg
http://i62.tinypic.com/2hptw0y.jpg
இரட்டை இலை - வெற்றியின் சின்னம் .எம்ஜிஆரின் சின்னம்
1973 இடை தேர்தல் முதல் பின்னர் நடந்த எல்லா தேர்தல்களிலும் பிரதான சின்னம் இரட்டை இலை . நாயகன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் .
2014 நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் பற்றிய பயம் எதிர்
அணிக்கு வந்துவிட்டது .
நினைத்தை முடிப்பவன் - இதயக்கனி இரண்டு படங்களை அவர்கள் தொலைக்காட்சியில் ஒளி பரப்பும் போது
டைட்டில் காட்சி [இரட்டை இலை ] மற்றும் எம்ஜிஆர் இரட்டை இலை சின்னத்துடன் தோன்றும் பாடல் காட்சி
நீக்கிய அவலம் அறிந்ததே .
இதை அறிந்ததுதான் நம் மக்கள் திலகம் அன்றே பாடிவிட்டார் .
http://youtu.be/p1Bf7d2EFwE
ஆயிரத்தில் ஒருவன் படம் - 1965ல் வந்த நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் நிலவிய நினைவலைகள் .
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை படம் வெள்ளிவிழா தொடர்ந்து பல இடங்களில் ஓடிக்கொண்டிருந்தது . பணம் படைத்தவன் 11 வாரங்கள் வரை ஓடிய நேரம் .
9.7.1965 அன்று ஆயிரத்தில் ஒருவன் தென்னகமெங்கும் வெளியானது .முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் வெற்றி என்பதை அறிய முடிந்தது .
மக்கள் திலகத்தின் புதுமையான பாத்திரத்தில் ஆங்கில படங்களுக்கு நிகரான காட்சிகள் - வெளிப்புற கடல் மத்தியில்
படமாக்கப்பட்ட பிரமாண்ட காட்சிகள் - இனிய பாடல்கள் - அருமையான வசனங்கள் - மக்கள் திலகத்தின் உடைகள்
மெல்லிசை மன்னர்களின் இசை ராஜ்ஜியம் - எம்ஜிஆரின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் - அறிமுக நாயகி
ஜெயாவின் - மக்கள் திலகத்திற்கு பொருத்தமான ஜோடி என்று ரசிகர்கள் ஏற்று கொண்ட படம் .
திரை உலகை சேர்ந்த பலரும் ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியினை பாராட்டினார்கள் .பத்திரிகைகள் மனம் திறந்து
பாராட்டினார்கள் .படத்தின் வெற்றியை தொடர்ந்து எம்ஜிஆர் - ஜெயா ஜோடியை தேவர் பிலிம்ஸ் - சரவணா பிலிம்ஸ்
மற்றும் பல முன்னனி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு ஒப்பந்தம் செய்தார்கள் .
மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பில் ...நெஞ்சை அள்ளும் காட்சி .
http://youtu.be/LoM8q61v6kQ#aid=P-Ytwydbg88