5) இந்திய மட்டும் அல்ல..ஆசியா ஆப்ரிக்க ஐரோப்பா அமெரிக்க ஆகிய நான்கு கண்டங்களை கொண்ட உலகத்தில் அனைத்திலும் விருதுகளும் பட்டங்களும் பாராட்டுக்களும் எந்த நடிகரும் பெறாத அளவுக்கு இவர் பெறுவார் என்று எவருமே கனவில் கூட நினைத்து பார்க்காத தருணம் !
6) உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் இரண்டு மாகாணங்களின் ஒரு நாள் கௌரவ மேயர் பதவி கெளரவம் கொடுக்கப்பட்ட ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையை பெறுவார் என்றோ...எள்ளளவும் எவரும் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை !
7) தமிழகத்திலும் இவ்வளவு ஏன்..இந்தியாவிலும் இத்துனை நடிகர்கள் இருக்க, அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு ....அமெரிக்க அதிபராம் JOHN F KENNEDY அவர்களே நேரிடையாக திரு சிவாஜி கணேசன் அவர்களை இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக பாரத பிரதமர் ஆசியாவின் ஜோதி என்று அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு இணையாக அழைக்கப்படுவார் என்று எவருமே நினைத்து பார்க்காத தருணம் !
8) அதுமட்டுமா ? இவர் நடிக்க வந்த
a) 3 வருடங்களில் 25 படங்கள்,
b) 6 வருடங்களில் 50 படங்கள்,
c) 9 வருடங்களில் 75 படங்கள்,
d) 12 வருடங்களில் 100 படங்கள்,
e) 15 வருடங்களில் 125 படங்கள்,
f) 18 வருடங்களில் 150 படங்கள்,
g) 22 வருடங்களில் 175 படங்கள்,
h) 25 வருடத்தில் 200க்கு மேற்பட்ட படங்கள் (அதாவது 1952 முதல் 1979 முடிய )
இப்படி ...இவர் நடிக்க வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே திரை உலகில் வலம் வர தொடங்கிய நடிகர்கள் கூட சிவாஜி அவர்கள் தொட்ட எல்லையில் பாதிகூட திரைத்துறையில் தொடமுடியாமல் திணறுவார்கள் என்று யாரும் அப்போது நினைத்து பார்க்க கூட முடியாத தருணம் !
ஒரே போல கதையம்சம் உள்ள படங்கள் அல்லாமல் பலவிதமான கதையம்சங்கள், கதாபாத்திரங்கள், சமூக, இதிகாச, வரலாறு, விஞ்ஞான, மெய்ஞான திரைக்காவியங்கள் இந்த ஒரு நடிகரே அத்துணை பாத்திரங்கள் ஏற்று தமிழ் திரை உலகில் "புரட்சி " என்ற வார்த்தையை முதன் முதலில் புரளவிட்டு, திரை உலக வரலாற்றில் புழக்கத்தில் நடைமுறைபடுத்துவார் கணேசன் என்ற இந்த இளம் நடிகர் என்று எவரும் எதிர்பார்க்காத தருணம்...!
இந்த தருணத்தில்தான் இவருடைய பராசக்தி படத்தில் இவருடைய நடை, உடை, பாவனை, நடிப்பு, வசனம் பேசும் யுக்தி, மற்றும் பல திறைமைகள் ஒரே சேர பளிச்சிட ...அதுவரை இவை அனைத்தையும் மருந்துக்கு கூட காணாத அதே சமயம் காழ்புணர்ச்சி மட்டுமே கொண்ட, எதிலும் குற்றம் மட்டுமே கண்டு மற்றவர்களை உருப்பட விடாமல் தடுக்கும் ஒரு சில ஸ்டுடியோ ஆசாமிகள், தமிழ்நாட்டில் தமிழன் ஒருவன் முனேருகிறான் என்றவுடன் முதலில் அதை தடுப்பவன் ஒரு தமிழனாகவே இருப்பான் என்ற நடைமுறை பழமொழிபோல ,...லைட் மேன் வடிவில், துணை இயக்குனர்கள் வடிவில், ஸ்டுடியோ வேலையாட்கள் வடிவில் முதலாளியிடம் மிகுந்த விஸ்வாசம் கொண்டவர்களை போல பொய் தகவல்களை படம் எடுத்துகொண்டிருக்கும்போதே திரு A V மெய்யப்பனிடம் கூறலானார்கள்...
அவை.....!