திரைவானிலே என்றென்றும் புதிய பறவையாக சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் புதிய பறவை திரைக்காவியம், மதுரை மாநகரின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி, பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. 12.2.2010(வெள்ளி) முதல் 14.2.2010(ஞாயிறு) வரையிலான 3 நாட்களில், புதிய பறவை அள்ளித் தந்த மொத்த வசூல் ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).
புதிய பறவை = பண மழை.
எந்தவொரு நடிகரின் எந்தவொரு புதிய படமும், சென்ட்ரல் தியேட்டர் மற்றும் இது போன்ற தியேட்டர்களில், ஷிஃப்டிங் முறையில் திரையிடப்படும் போது, ஒரு வாரத்தில் ரூ.35,000/- க்கும்(ரூபாய் முப்பத்து ஐந்தாயிரத்துக்கும்) குறைவாகவே மொத்த வசூல் கொடுக்கிறதாம்.
NADIGAR THILAGAM, THE KING OF ACTING IS ALWAYS THE KING AT BOX-OFFICE.
இத்தகவல்களை எமக்களித்த மதுரை ரசிக நல்லிதயம், எமது நெருங்கிய நண்பர், அரசமரம் செவாலியே சிவாஜி குரூப்ஸ் மன்றத்தைச் சேர்ந்த திரு.குப்புசாமி அவர்களுக்கு அன்பான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.