Originally Posted by
RAGHAVENDRA
டியர் பம்மலார்,
காவல் தெய்வம் நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் இடம் பிடித்ததாகும். அதை எனக்கு அர்ப்பித்தமைக்கு உளமார்ந்த நன்றி. ராம் திரையரங்கு வழியாக ம.பொ.சிவஞானம் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த பேனரில் நடிகர் திலகத்தின் தோற்றத்தைக் கண்டு வண்டியை நிறுத்தி விட்டு நின்று நிதானமாக சிலாகித்து விட்டு சென்றா-ராம். தன் அருகில் இருந்த நண்பரிடம் சொன்னா-ராம். நடிப்பிற்கென்றே பிறந்தவர் இவர். ஒரு மரமேறியின் தோற்றத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கிறாரே- என்று வியந்தா-ராம். காரணம் . அவருடைய குடும்பத்தாரின் தொழிலும் மரமேறி கள்ளிறக்குவது தான் என்றா-ராம். ஏற்கெனவே காவல் தெய்வம் படத்தைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்தா-ராம். இருந்தாலும் பேனரில் அந்தத் தோற்றம் ம.பொ.சிக்குள் ஓர் இனம் புரியாத உணர்வை நடிகர் திலகம் ஏற்படுத்தி விட்டா-ராம்.
நம் அனைவருக்காகவும் அத்திரைப்படத்தின் காட்சிகள் இணைப்பு.
அன்புடன்