Originally Posted by
g94127302
திரு கலைவேந்தன் - உங்கள் இந்த பதிவு எல்லா பதிவுகளையும் போல இனிமையாகவும் , அழுத்தமாகவும் இருந்தது . இந்த பதிவை படிக்கும் போது , ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரர்க்குள் நுழைத்து அதன் மூலம் , அத்வைதியத்தை வெளிக்கொண்டுவந்து அதை பரமாத்மாவுடன் இணைத்து , இரண்டும் வேறு அல்ல என்பதை எவ்வளவு ஆழமாக , சுருக்கமாக எடுத்து சொன்னீர்கள் - hats off - உங்கள் இந்த பதிவு ஒரு அலசலுடன் முடிந்து விடக்கூடாது . இன்னும் தொடர வேண்டும் என்பதனால் என்னுடைய கருத்துக்களையும் உங்கள் பதிவுடன் இணைக்க விரும்புகிறேன் - உங்கள் அனுமதியுடன் ..
"நீ உன்னை அறிந்தால் " மிகவும் நெஞ்சை தொடும் பாடல் - இப்படி பட்ட பாடல்களை நாம் சுவைக்கும் போது , அந்த அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து , பிறகு மறந்து விடுகிறோம் - நமக்காக அவர்கள் பாடிய பாடல்கள் - 1000 புத்தகங்கள் சொல்ல முடியாத தத்துவங்களை கண்ணதாசனும் , வாலியும் சில வரிகளில் சுலபமாக சொல்லிவிட்டு சென்று விட்டனர் - ஒரு சின்ன உதாரணம் : " ஒருவரது துடிப்பினில் வருவது கவிதை ; இருவரது துடிப்பினில் வருவது மழலை " இதை விட ஒரு தாம்பத்தியத்தை அழகாக விளக்க முடியுமா அருவருப்பு இல்லாமல் ???
ஆதிசங்கரரை நினைவு கூறும் இந்த நாளில் உங்களுக்கு இன்னுமொரு சம்பவத்தை சொல்ல ( உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ) விரும்புகிறேன் .
ஒருமுறை அவர் , தன்னுடைய சீடர்களுடன் அடுத்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் - இடையே ஒரு காட்டுவாசி , கிழிந்த உடைகளுடன் , சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்பவனாக , தனது நான்கு நாய்களுடன் அவர் நடுக்கும் பாதையில் எதிராக வந்து கொண்டிருந்தான் - இவரின் சீடர்கள் அவனை ஓரம் போக சொன்னார்கள் - ஆதி சங்கரரும் தன் நிலையை மறந்து அவனை சற்று தள்ளி செல்லும்படி சொன்னார் - அந்த காட்டுவாசி வினவினான் " யாரை தள்ளி போக சொல்கிண்டீர்கள் , நானாகிய ஜீவாத்மாவையா அல்லது என்னுள் இரண்டற கலந்துள்ள பரமாத்மாவையா ? " பொறி தட்டியது ஆதிசங்கரருக்கு , ஒன்றும் சொல்லாமல் அவன் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தார் - என்னை மன்னித்து விடு , அறியாமை இன்றுடன் என்னை விட்டு அகன்றது " என்றார் - அந்த காட்டுவாசி சிரித்துவிட்டு மறைந்து விட்டான் - " நீ உன்னை அறிந்தால் " இதில் இந்த கதையும் அடக்கம் !!
இப்படிப்பட்ட பொன்னான வரிகள் நடிகர் திலகம் பாட்டுக்களிலும் உண்டு - " தூங்கும் கண்களில் ஒளி இல்லை ; துள்ளி நடந்தால் வலி இல்லை " ; " உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை மதிக்கும் !. இந்த வரிகளுக்கான ஒரு குட்டி கதை இராமாயணத்தில் இருந்து ( இதுவும் உங்களுக்கு தெரிந்திருக்கும் )
ஒரு முறை மகாவிஷ்ணு வைகுண்டத்தில் தனது பள்ளியறையில் கால்களில் அணித்துள்ள காலணிகளை கழட்டாமல் உறங்க சென்று விட்டார் - இத பார்த்து கொண்டிருந்த சங்கும் , சக்கரமும் , அந்த காலணிகளை பார்த்து கேலி செய்ததாம் " என்ன திமிரு உனக்கு - நீ இருக்க வேண்டிய இடம் அறைக்கு வெளியே - அவர் மறந்து உன்னை கழட்டாமல் வந்து விட்டார் - உனக்கு எங்கே போனது புத்தி - எப்படி எங்களுக்கு சமமாக படுக்கை அறைக்குள் வருவாய் ? " இப்படி மனதை நோக வைக்கும் வார்த்தைகளால் அந்த காலனிகளை வசை மாறி திட்டினவாம் .. காலணிகள் அழுவதை தவிர ஒன்றும் தெரியாமல் முழித்தன . இறைவன் எல்லாம் அறிந்தும் அறியாதவனைப்போல எழுந்தவுடன் , சங்கையும், சக்கரத்தையும் பார்த்து சொன்னான் " நான் இன்னும் சில நாட்களில் இராம அவதாரம் எடுக்க போகிறேன் - நீங்கள் இருவரும் எனக்கு தம்பிகளாக வருவீர்கள் , ஆதிசேஷனும் எனக்கு ஒரு தம்பியாக வருவான் "
இதைக்கேட்டு விட்டு சங்கிர்க்கும் சக்கரத்திற்கும் தலை கால் புரியவில்லை , காலணிகளை இன்னும் எப்படி நோக வைக்கலாம் என்று திட்டம் போட்டன . காலணிகள் இறைவன் பாதத்தை இன்னும் அழுத்தமாக பற்றி கொண்டு அழுதன .. இறைவன் சிரித்தான் --
சங்கு பரதனாகவும் , சக்கரம் சத்ருகரனாகவும் வளர்ந்தன - இராமன் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றான் - பரதன் அங்கு சென்று அவனை மீண்டும் அயோத்திக்கு வரும்படி கெஞ்சினான் - கடைசியில் அண்ணன் தந்த பாதுகைகளை தன் தலையில் சுமந்துகொண்டு அயோத்திக்கு எடுத்து வந்து அவைகளை இராமன் அமரும் சிம்மாசனத்தில் வைத்து 14 வருடங்கள் பூஜித்து வந்தான் . ஒருமுறை காலணிகளை கேவலமாக பேசினதிர்க்காக 14 வருடங்கள் அவைகளை பூஜிக்கும் நிலைக்கு இரண்டு சகோதர்களும் ஆளானார்கள் - இந்த பெரிய தத்துவத்தை ஒரே வரியில் கண்ணதாசன் நடிகர் திலகம் மூலம் சொல்வார் - உயரும் போது பணிவும் வர வேண்டும் என்பதை - இல்லையென்றால் இந்த உலகம் உன்னை திரும்பி கூட பார்க்காது .
இராவணனை பார்க்கும் போது நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் , மாற்றான் மனைவி மீது மோகம் கொண்டவன் என்பதே - அதனால் அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான் என்று சொல்பவர்கள் பலர் -அவன் செய்தது மாபெரும் தவறு தான் - இருந்தாலும் அவனிடம் இருந்த ஒழுக்கங்கள் , பண்புகள் , உண்மையான பக்தி , பிறருக்கும் உதவும் குணம் இவைகள் அவன் உயிரை வேலி போட்டு காத்து நின்றன - கடவுளே , நேரில் மனிதனாக வந்த பின் தான் அவனை கொல்ல முடிந்தது - தூங்கும் அவன் கண்களிலிருந்து ஒளியை எடுத்தவனும் இறைவனே - அந்த ஒளியை முதலில் அவனுக்கு தந்தவனும் அந்த இறைவனே .
ஒவ்வொரு தத்துவ பாடல்களையும் உங்களை போல ஆராய முயன்றால் எவ்வளவு புதைந்து கிடக்கும் உண்மைகள் , பிறருக்கு உதவியாக இருக்கும் தத்துவங்கள் வெளியே கொண்டு வர முடியும் ! - இந்த இரு திலகங்களின் பாடல்கள் மூலமே 100க்கும் மேலாக திரிகளை நாம் வெற்றிகரமாக உருவாக்கலாம் - சாரி சார் - என் பகுதி என்னையும் அறியாமல் சற்றே நீண்டு விட்டது . பொறுமையுடன் படித்த எல்லோருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் .
" Where there is righteousness in the heart , there is beauty in character "
அன்புடன்
ரவி