http://i66.tinypic.com/288tams.jpg
Printable View
சுபதினம் படத்தின் பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகிறது.. ஆண்டுக்கு ஆண்டு..என்ற பாடலில்..நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுபதினம்..என்றவரிகள்..ஒரு திரைபடத்தின் புகழை வேறொரு திரைபடத்தில் பாடல் வரிகளாக அமைந்தது குறிபிடதகுன்தது..
http://i65.tinypic.com/2dmb1xs.jpg
நினைப்போம்.மகிழ்வோம்-96
"மகாகவி காளிதாஸ்."
"யார் தருவார்" பாடல்.
"சிறுத்த உன் இடை ஆட இசை
வேண்டுமா?"
-என்று பாடும் போது ஒயிலாக
ஒரு கையால் மற்றொரு
கையில் தாளம் போடுவது.
முத்தையன் சார்,
ஒரே நாளில் சிவந்த மண், நிறைகுடம் என இரண்டு காவியங்களின் நிழற்படங்களையும் அற்புதமாக பதித்து திரிக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள்,
உங்கள் அபார உழைப்பை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு ஸ்டில்லும் அருமையிலும் அருமை.
வாழ்க உங்கள் தொண்டு.
நினைப்போம்.மகிழ்வோம்-97
"பழநி."
"ஆறோடும்" பாடல்.
நெற்கதிர்களைப் பார்த்து
அதை ஒரு பெண்ணாகப்
பாவித்து,
"அண்ணன் தம்பி
நால்வருண்டு..
என்ன வேணும் கேளம்மா?
-என்று பாடும் போது, செய்வதற்குக் கடமைப்பட்ட
ஒரு உயிரிடம் பேசுவது
போன்றே வெளிப்படுத்தும்
உயிர்ப்புள்ள பாவனைகள்.
நினைப்போம்.மகிழ்வோம்-98
"ராமன் எத்தனை ராமனடி."
தன் பொருட்டு மாடியிலிருந்து
குதித்து, அடிபட்டு மருத்துவ
மனையிலிருப்பவரைப்
பார்க்க வந்த கே.ஆர்.விஜயாவிடம் அப்பாவித்தனமாய்ச் சொல்லும் ...
"உசுருக்கு ஒன்னும்
ஆபத்தில்லேன்னு டாக்டர்
சொல்லிட்டாரு. இந்த ஒரு
காலுதான் ரெண்டு, ரெண்டா
ஒடஞ்சி போச்சு."
நினைப்போம்.மகிழ்வோம்-99
"சந்திப்பு."
"வார்த்தை நானடி" பாடல்.
"உன்னை மிஞ்சும் நடிகன்
இன்னும் உலகில்
தோன்றவில்லை.."
-என்று ஸ்ரீதேவி பாடினதும்,
அழகாகத் திரும்பி பெருமையாய்க் குலுங்கிச்
சிந்தும் அற்புதப் புன்னகை.
http://i1028.photobucket.com/albums/...psnaefyo0e.jpg
உயரே ஒரு கை தூக்கி,
ஒரு அரை வட்டமடித்துத்
திரும்பி, "அதில் நான் சக்ரவர்த்தியடா" என்று
கால் மாற்றி நிற்கும்...
இதயத்தில் நடிகர் திலகத்தை
நிரப்பியவனை எந்தக் காலத்திலும் இருக்கை கொள்ள
விடாத...
இனிய தோற்றம் தருவது.
http://www.sivajiganesan.in/Images/0811_2.jpg
ஸ்டில் உபயம் திரு.முத்தையன் அம்மு சார்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.