http://i1146.photobucket.com/albums/...psbqyrgyi8.jpg
Printable View
அனைவருக்கும் இனிய " பொங்கல்" நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக... நண்பர்கள் அளிக்கும் பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கிறது... நம் என்றும் சக்கரவர்த்தி ஆக திகழும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் எக்காலமும் காவிய படைப்புகளாக விளங்கும் 1956- ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியான சிரஞ்சீவித்துவ வார்ப்பான "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்", 60 - வருடங்களை கடந்து இன்றும் 2016 - ஆண்டு அதே தை திருநாளில் மதுரையில் வெளியீடு காண்பது வரலாறு... 1965 - வருடம் பொங்கல் தினத்தில் வெளியான "எங்க வீட்டு பிள்ளை", காவியம் இதே பொங்கலில் கோவையில் மறு வெளியீடு குறுகிய இடைவெளியில் திரையில் காணுவதும் சரித்திரம்...இது போன்ற மகத்தான பிரம்மாண்டமான சாதனைகளை வேறு யார் நிகழ்த்த இயலும்...இது இறைவன் அருளிய வரம் எனில் அது மிகையன்று...
பொங்கல் என்றதும் நினைவிற்கு வருபவர் நம் தலைவர்.
'சித்தப்பா, இன்னைக்கி என்ன நாள் தெரியுமா'
'பொங்கல் சித்தப்பா'
'இந்தா சித்தப்பா, ஒனக்காக பொங்கல் கொண்டாந்திருக்கோம்'
'ஆ...ஆ...மொதல்லெ ஒங்களுக்கு'
'நீ இல்லாம இன்னைக்கி பொங்கல் பொங்கலாவே இல்லை சித்தப்பா'
'அண்ணி கைபட்டதெல்லாம் அமிர்தம்தானே'
பொங்கல் நாளன்று தலைவரை நினைவு கூறும் வகையில், 'நம்நாடு' திரைப்படத்தின், மேல் குறிப்பிட்டுள்ள உரையாடல் நினைவிற்கு வருகிறதல்லவா?
நான் பொங்கல் பண்டிகையை விரும்பி கொண்டாடுவேன். ஏன் தெரியுமா? எனக்கு பொங்கல் பிடிக்கும் என்பதாலா என்றால் இல்லை. எனக்கு கரும்பு பிடிக்கும் என்பதாலா என்றால் இல்லை. பின் எதற்காக ? எனக்கு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்த என் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் விரும்பி கொண்டாடிய ஒரே பண்டிகை என்பதால். உலகமெங்கும் உள்ள எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
பொற்கால ஆட்சி தந்த நமது பொன்மனச்செம்மல் அவர்களின் 99வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, புரட்சித்தலைவரின் வெற்றிக்காவியம் "அன்பே வா " 50 வது ஆண்டு விழாவை, நினைவு கூர்ந்து, எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் மற்றும் மறைந்த தெய்வத்திரு ராஜ்குமார் அவர்கள் நிறுவிய "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு", புரட்சித்தலைவரின் புகழ் பாடும் இதர அமைப்புக்களுடன் இணைந்து வைக்கும் பதாகையின் வடிவம் மற்றும் ஒட்டப்படும் சுவரொட்டி -
http://i63.tinypic.com/14xo29f.jpg
http://i64.tinypic.com/120p2m9.jpg
http://i65.tinypic.com/2ql4p5i.jpg
ஆலயம் கண்ட ஆண்டவன், பொற்கால ஆட்சி பொன்மனச்செம்மல், நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களின் 99வது பிறந்த தினத்தையொட்டி 17-01-2016 அன்று தந்தி தொலைக்காட்சியில், சிறப்பு நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கும், இரவு 9 மணிக்கும் ஒளி-ஒலி பரப்பாகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல். நிகழ்ச்சிக்கு இன்னும் தலைப்பு வைத்தபின், உறுதி செய்வர்.
thanks for nice information about our god
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மைவிட்டு பிரிந்து இன்று 10,250 நாட்கள் நிறைவு பெறுகிறது,
மக்கள் திலகத்தின் கோடானுகோடி ரசிகர்களும் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் அவரை 10,250 நாட்களும் நினைக்காத நாட்களே இல்லை . அவருடைய திருமுகத்தை மறக்காத நாளே இல்லை . 28 ஆண்டுகளாக அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டு வருவது உலக சாதனையாகும் . தற்போது மதுரை - கோவை நகரங்களில் அலிபாபாவும் 40 திருடர்களும் எங்க வீட்டு பிள்ளை படங்கள் ஓடுவது மகிழ்ச்சியான செய்தி .
சன் லைப் - முரசு - ராஜ் டிவி - வசந்த் டிவி - மெகா டிவி -ஜெயா டிவி - மற்றும் பல உள்ளூர் ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் , பாடல் காட்சிகள் தொடர்ந்து ஒளி பரப்பி வருகிறார்கள் .இணய தளத்திலும் , முகநூலிலும் , டுவிட்டரிலும் , பல தினசரி , வார , மாத இதழ்களிலும் மக்கள் திலகத்தின் கட்டுரைகள் வந்து கொண்டு இருக்கின்றன .
மக்கள் திலகத்தின் சிறப்பு விழாக்கள் பல் வேறுஅமைப்புகள் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக இடை வெளி இல்லாமல் இந்தியாவிலும் , அயல் நாட்டிலும் நடந்து வருகிறது .
இன்னும் இரண்டு நாட்களில் மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நிறைவு பெற்று நூற்றாண்டு துவங்க உள்ளது .மக்கள் திலகத்தின் இனிய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தயாராக இருப்போம் நண்பர்களே .
SIMPLE AND SUPERB ACTION .
https://youtu.be/k1vHImu1qbA
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் நெறியாளர், பதிவாளர்கள், பார்வையாளர்கள்
அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
ஹலோ எப். எம். 106.4ல் (பண்பலை வரிசை ) (15/01/2016) பொங்கல் திருநாளை முன்னிட்டு . நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "நாடோடி மன்னன் " திரைப்படம் பிற்பகல் 2 மணி முதல் 3.45 வரை , நிகழ்ச்சி தொகுப்பாளர் டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா வழங்கும் ஒலிச்சித்திரமாக ஒலிக்க உள்ளது . கேட்டு மகிழுங்கள்.
ஒலிசித்திரத்தின் இடையில் மக்கள் திலகம் பற்றிய செய்தி குறிப்புகள் ஒலிபரப்ப
கேட்கலாம் .
http://i66.tinypic.com/okra5h.jpg
(14/01/2016)வியாழனன்று ஒலிபரப்பான "அன்பே வா " திரைப்படத்தின் இடையே வெளியான செய்திகள்.
1961ல் வெளியான ஒரு அமெரிக்க படத்தின் தழுவல் தான் அன்பே வா.திரைப்படம்.
சங்கே முழங்கு படபிடிப்பின்போது , நடிகை லட்சுமி சோர்ந்து, அயர்ந்து இருக்கையில் அமர்ந்தபடி தூங்கிவிட்டார். அப்போது அங்கு வந்த மக்கள் திலகம்
இருக்கையை நடிகை லட்சுமியுடன் தூக்கி மூன்று சுற்றுகள் சுழற்றிவிட்டு
தரையில் அமர்த்தினார். நிலைகுலைந்த நடிகை லட்சுமி என்ன சார் இப்படி
செய்துவிட்டீர்கள் . என்றபோது , எப்போது, எங்கே உட்கார்ந்தாலும், நெஞ்சை
நிமிர்த்தி , நேரான கோணத்தில் உட்காருவது தான் உடலுக்கு ஆரோக்கியம்.
இல்லாவிடில் வயதான காலத்தில் கூன் விழுந்துவிடும் ஜாக்கிரதை என அறிவுரை சொன்னாராம். அதன்பிறகு , நடிகை லட்சுமி நேராக உட்காருவதை கடைபிடித்து
வருகிறாராம்.
நடிகை கே.ஆர். விஜயாவிடம் ஒரு படப்படிப்பில் காலையில் எழுந்ததும் என்ன
சாப்பிடுவீர்கள் என மக்கள் திலகம் கேட்டுள்ளார். நான் காலையில் எழுந்ததும்
பெட் காபி ,பல் துலக்காமல் சாப்பிடுவது வழக்கம் என்றாராம்.உடனே, மக்கள் திலகம் இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலையில் எழுந்ததும், பல் துலக்கிவிட்டு
எதுவேண்டுமானாலும் பருகலாம். பல் துலக்காமல் பருகுவதால், வாயில் உள்ள
உமிழ்நீர் கெட்டு துர்நாற்றம் வீசும் . அது நம் வயிற்றுக்கு செல்வது நல்லதல்ல .
அதனால்தான் பாரம்பரியமாக , முன்னோர்கள் ஏற்படுத்திய சில நல்ல பழக்க
வழக்கங்களை கடைப்பிடிக்கும் வகையில் பல் துலக்கிவிட்டுதான் பானங்கள்
பருகவேண்டும் என அறிவுரை சொன்னாராம். அதை அப்படியே அன்று முதல்
கடைப்பிடிப்பதாக ஒரு பேட்டியில் நடிகை கே. ஆர். விஜயா குறிப்பிட்டாராம்.
16/01/2016 - 7 வது மியூசிக் சானலில் - மாலை
6.30 மணி -தாய்க்கு பின் தாரம்
http://i67.tinypic.com/155nu2s.jpg