-
பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர்
தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்
ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்
சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்
மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்
திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்
விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்
அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்
உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி.........
-
வணக்கம்!*
1967-ம் ஆண்டு ஒரு புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை வெளியிடுகின்றோம்.*
அதன் தலைப்பு*
"எம்.ஜி.ஆர். காட்டும் பாதை"*
என்பது ஆகும்.
புத்தகத்தில் பொன்மனச் செம்மலின் புகழாரம் சூட்டும் வார்த்தைகள்.
தனி ஒரு மனிதன் எல்லா சிறப்புகளையும் ஒருங்கே பெற்றிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். ஒருவர் கல்வியில் புலமை உடையவனாக இருப்பார். இன்னொருவர் செல்வத்தில் பிரபுவாக இருப்பார். வேறொருவர் சிறந்த வீரனாக இருப்பார்.
கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தன்னிடம் உடைய ஒரு மனிதன் இருந்தால் அவனிடம் வேறு ஏதாவது ஒரு சிறப்பில்லாத குணம் குடிகொண்டிருக்கும். ஒன்று இருந்தால் ஒன்று இல்லை என்பதற்கு இணங்க....
எல்லா சிறப்பையும் ஓர் அங்கே பெற்ற மனிதர்கள் அரசியலில் இருக்கிறார்கள்.....
*கலைஞர்களில் இருக்கிறார்களா?*
யாரை கேட்டாலும் உடனே கூறிவிடுவார்கள் .....
குணம், கலை, வீரம், அறிவு, செல்வம் எல்லாம் உடைய ஒருவர் என்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று கூறுவார்கள்.
காரணம் எம்.ஜி.ஆர் பிற கலைஞர்களை மதிக்கிறார். ஆதரிக்கிறார். போற்றுகிறார். ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கிறார்.
நாட்டின் பாதுகாப்புக்கு உதவுகிறார். பொது வாழ்வின் நலனுக்கு எப்போதும் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார்.
பத்திரிகையாளர்களை மதிக்கிறார்.*
இவரை யாரும் தங்குதடையின்றி சந்திக்கலாம். தங்கள் குறைகளை கூறலாம்.*
வீண் ஆடம்பரம், மமதை, கர்வம் இவற்றை இவரிடம் அறவே காணவே முடியாது.
யாராக இருந்தாலும் அவரிடம் பேசும் பொழுது அதை கூறும் பொழுது மிக கவனமாக கேட்பார். அரை மயக்க நிலையில் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கமாட்டார்.*
இவரிடம் பணியாற்றும் ஒவ்வொருவரும் குணம், செய்கை, பழக்கம் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள். மற்றும் பண்பு அன்பு கொண்ட இதயம் உடையவர்கள்.
மக்கள் திலகத்தின் வாழ்வில் இன்னும் பல நெறிமுறைகளை காணலாம்.
தொடரும் பதிவுகள்.........
-
1966ம் ஆண்டு வந்த ஒரு நாளிதழில் புரட்சித் தலைவரைப் பற்றிய ஒரு கவிதையும் அவரைப் பற்றிய சிறப்புகள் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
வெற்றிப்படிகள் எம்.ஜி.ஆர்.*
என்ற தலைப்பில் ஒரு கவிதை!*
அன்பு உள்ளம் படைத்தவர் எம்.ஜி.ஆர் !
ஆடி வரும் தென்றல் எம்.ஜி.ஆர்! இன்பக் கனவு தந்த எம்.ஜி.ஆர்! ஈகையில் நிகரற்ற எம்.ஜி.ஆர்!
உழைப்பால் உயர்ந்தவர் எம்.ஜி.ஆர்!*
ஊக்கம் உள்ள சிங்கம் எம்.ஜி.ஆர்! எதிரிகளை வென்றவர் எம்.ஜி.ஆர் ஏழைப்பங்காளர் எம்.ஜி.ஆர் !ஐவர்களையும் ஆதரிக்கும் எம்.ஜி.ஆர்!*
ஒழுக்கத்தின் உறைவிடம் எம்.ஜி.ஆர்!*
ஓங்கு புகழ் கொண்டவர் எம்.ஜி.ஆர்!*
ஔடதம் அருந்தாதவர் எம்.ஜி.ஆர்! எஃகு மனிதர் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆர். நடிக்கும் படத்தை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்றால் அதில் நவரசத்துடன் கூடிய நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான கருத்துள்ள வசனங்கள் நறுக்குத் தெரிவது போல் இருக்கும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து இருப்பதால் தான்.*
அவரது திரைப்படங்களை எல்லாம் மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்க்கிறார்கள். அவரது திரைப்படங்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்து நிற்பவர்கள் லட்சோப லட்சம், கோடான கோடிக்கணக்கான தமிழ் மக்கள்கள்.
எம்.ஜி.ஆரை ஏன் மக்கள் சுற்றிக்கொண்டே.....
புகழ் பாடித் திரிந்து கொண்டே வருகிறார்கள் என்றால்....*
அவர் மக்களுக்காக வாழ்கின்றார்.*
தான் நடிக்கும் திரைத்துறையில் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் நாட்டு மக்களுக்கு நன்கொடையாக கொடுகின்றார் என்பதால்தான் அவரது புகழ் திரையைத் தாண்டி அரசியலைத் தாண்டி எங்கும் அவர் பெயர் நிலைத்துக் கொண்டு வருகிறது.
தமிழகத்தில் எந்த நிகழ்ச்சி*
ஆனாலும்.....எங்கு நடந்தாலும் சரி பள்ளியிலும், கல்லூரியிலும், அரசியல் வானிலும், திரையுலகிலும் இப்படி எல்லா துறையிலுமே தினமும் பேசப்படுகின்ற ஒரு வார்த்தை தான் எம்.ஜி.ஆர்.*
அவரது பெயரை சொல்லும் பொழுதே மக்களுக்கெல்லாம் உள்ளமெல்லாம் ஒரு சிலிர்ப்பை உண்டாக்குகிறது.
புகழ் படைத்த எம்ஜிஆர் அவர்களை விரும்புபவர்களை விட அதிகமாக எதிரிகளே அவரது பெயரை உச்சரிக்கிறார்கள். அப்படியிருந்தும் அவரது பெயர் மேலும் மேலும் புகழுடன் வளர்ந்து வருகிறது அவரது பெயர் தமிழ்* நாட்டில்....
நாடும் ஏடும் மக்களும் மன்றங்களும் குறிப்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் போற்றிப் புகழும் ஒரு அற்புத மனிதர் இன்றைய தினத்தில் எம்.ஜி.ஆர் ஒருவர் மட்டுமே நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
நித்தம் பத்திரிக்கைகளிலும், போஸ்டர்களிலும், யார் வாயிலில் இருந்து வரும் சொல் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் என்றே பிரதி பலித்துக் கொண்டிருக்கின்றது.*
பொழுது விடிந்தால் ஒரு புது செய்தியும் பல புகழ் மாலையும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன எம்ஜிஆர் அவர்களுக்கு.
வீதிகளில் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆர் அவர்களின் திரை பாடல்களையே முணுமுணுத்து பாடி செல்கின்றார்கள்.*
ஹலோ ஹலோ சுகமா*
தாய் மேல் ஆணை*
தமிழ் மேல் ஆணை*
புதிய வானம் புதிய பூமி*
இப்படி எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆரின் பாடல்களே மக்கள் முணுமுணுத்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் புதிய திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் என்றதும் அத்திரைப்படத்தைப் பற்றிய நான்கு பக்கமும் பேசப்பட்டு வருகிறது.*
எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் எந்த ஒரு செய்தி ஆனாலும் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் இன்று பேசப்படுகிறது.*
நாடகம் ஆனாலும் சரி, திரைப்படம் ஆனாலும் சரி, நன்கொடை ஆனாலும் சரி, எங்கும் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்து புகழ்பாடி வருகின்றார்கள் பொதுமக்கள்.
தன் உழைப்பால் உயர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதன் மூலம் கிடைக்கின்ற செல்வங்களை பல்வேறான நல்ல காரியங்களுக்கு இன்று நாட்டில் கொடுத்துக் கொண்டு வருகின்றார்.*
இப்பேர்ப்பட்ட ஒரு எம்.ஜி.ஆர் என்ற பெயரை, புகழ் பெற்ற ஒரு மனிதரை தமிழகம் இதற்கு முன்னாலும் இதற்குப் பின்னாலும் காண முடியாது என்பது தான் மக்களின் கருத்தாகும்.
புகழுக்கு மேல் புகழ் சேர்த்த பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களைப்பற்றி 1966 ஆம் ஆண்டு ஆண்டில் வெளியான ஒரு பத்திரிகையில் இருந்து கிடைத்த செய்திகள் தான்* மேலே குறிப்பிட்ட புகழ் மாலைகள் ஆகும்.*
மேலும் இன்னும் பல புத்தகங்களில் புரட்சித் தலைவருக்கு புகழ் பாடி உள்ளார்கள் அன்றைய தினம்.* மேலும் பதிவிடுகிறோம்... நன்றி! வணக்கம் !.........
-
வணக்கம்*...
1965 ஆம் ஆண்டு வெளியான "ஆயிரத்தில் ஒருவன் " காவிய திரைப்படம் பற்றி அன்றைய ஒரு சிறப்புக் கட்டுரையில் வெளியான நிகழ்ச்சியை இப்பொழுது முன் வைக்கின்றோம்....
ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் என்ற தலைப்பில் வெளியான இந்த தகவலை இப்பொழுது மேற்கோள் காட்டுகிறேன்-. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றியடைய சாதனையாக நிற்கின்றது என்பது எது காரணம் என்பதை விளக்குகிறோம்.
எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களை பார்க்கும் போது முழு மனநிறைவு உண்டாகிறது. வீர உணர்வு மனதில் வளருகிறது.* அன்பு ,பண்பு இனிமை போன்ற நல்ல எண்ணங்களை வளர்க்கக்கூடிய படங்களாக எம்.ஜி.ஆர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் இருக்கின்றன.
சமீபத்தில் வந்தபடங்களில் ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய குணங்களை பிரதிபலித்து காண்பிக்க கூடியதாக இருக்கிறது*
இந்த படத்தில் கடைசி வரையிலும் நியாயத்திற்கும், நேர்மைக்கும் போராடுகிறார். இடையில் துன்பங்கள் ஏற்பட்டாலும் கடைசியில் வெற்றி பெறுகிறார்.*
சத்தியமே வெல்லும் என்பதை ஆயிரத்தில் ஒருவன் பட கதை மட்டும் விளக்கவில்லை....*
மக்கள் திலகத்தின் வாழ்க்கையே காண்பிக்கிறது. சத்தியசீலர் ஆக நல்ல எண்ணங்களுக்கும் தூய்மையான செயல்களுக்கும் மதிப்பு கொடுத்து எம்.ஜி.ஆர் நடந்து கொண்டு வரும் காரணத்தால் தான் இன்று அவர் புகழ் ஏணியின் உச்சியில் இருக்கிறார்.
திரைப்படங்களில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையிலும் கூட சிறப்பான கொள்கையுடைய வேற எந்த நடிகரையும் இன்றைய சினிமா உலகில் பார்க்க முடியாது.
வீர சாகசங்களும், சண்டைகளும் நிறைந்த படம் ஒன்றை தயாரிக்க பத்மினி பிக்சர்சார் திட்டமிட்டனர் திரு. கே. ஜே. மகாதேவன் அவர்கள் எழுதிய கதையான ஆயிரத்தில் ஒருவனை படமாக்க தேர்ந்தெடுத்தனர்..........
-
"நவரத்தினம்" 1977 மார்ச் மாதம் 5 ம் தேதி வெளிவந்து வெற்றியை பெற்ற படம். சென்னையில் சாதாரண திரையரங்குகளில் வெளியாகி வியத்தகு வெற்றியை பெற்ற படம்.
சென்னையில் மொத்தம் 198 நாட்களிலே மொத்த வசூலாக ரூ 9,07,260.20. பெற்ற வெற்றிப் படம்.
சென்னை வெலிங்டன், மகாராணி, அபிராமி, ராம் தியேட்டர்களில் வெளியாகி அதிக பட்சமாக 56 நாட்களும், மொத்தம் 198 நாட்களும், தமிழகத்தில் மதுரை தங்கத்தில் 62 நாட்களும் ஓடி குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது. சென்னையில் பெரிய ஏசி திரையரங்கில் வெளியாகி இருந்தால் சென்னை வசூல் மட்டுமே 12 லட்சத்தை தொட்டிருக்கும்.
ஆனாலும் a p நாகராஜன் தயாரித்த படங்களிலே அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது.
சங்கம் வளர்த்த மதுரையில் திராவிட சிங்கத்தின் கர்ஜனை தங்கம் திரையரங்கில் ஒலிக்கிறது என்றால் சிவாஜி ரசிகர்களுக்கு அங்கம் பதறி நம்ம வசூலுக்கு இனி பங்கம் வருமே நாம் இனி எங்கும் தலைகாட்ட முடியாதே! என தலைவரின் வெற்றி சங்கொலி கேட்டு துவண்டு விடுவார்கள். அதிலும் முதல் வார வசூல் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தலைவரின் படங்களின் முதல் வார வசூலையே. சிவாஜியின் பல படங்கள் மொத்த வசூலில்
நெருங்க முடிவதில்லை.
"தலைவன்" படத்தின் முதல் வார வசூலையே அநேக சிவாஜியின் வெள்ளி விழா படங்கள் கூட நெருங்க முடியவில்லை. தங்கத்தில் ஜீலை 24 ல் வெளியாகி ஆக 28 வரை ஓடிய "தலைவன்" வசூல் லட்சத்தை எளிதில் கடந்தது. ஆக 29 ல் "தேடிவந்த மாப்பிள்ளை" வரவில்லையென்றால் 50 நாட்களை கடந்து கணேசனின் "கர்ணன்" வசூலை ஏப்பமிட்டிருக்கும்.
"தேடி வந்த மாப்பிள்ளை" தங்கத்தில் வெளியாகி 69 நாட்கள் ஓடி ரூ 2,27,000 வசூலாக பெற்று "கர்ணன்"
100 நாட்கள் வசூலை பந்தாடியது.
இதே அரங்கில் வெளியான "எதிரொலி" முதல் நாள்
6 மணிக்காட்சிக்கு பார்ப்பதற்கு ஆளின்றி சுமார் 30 சதமான ஆட்கள் தியேட்டருக்குள் வேடிக்கை பார்க்க சென்றதாக எங்களுக்கு மதுரையில் இருந்து தகவல் வந்தவுடன் இங்குள்ள தலைவர் ரசிகர்கள் குஷியாக இருந்தது என் ஞாபகத்திற்கு வருகிறது. "தலைவன்" ரிலீஸ் தேதி தள்ளி வைத்ததால், மொத்தம் 4 வாரம் சிரமப்பட்டு ஓட்டி ரூ 60000 வசூலை கூட எட்ட முடியாமல் தவித்த கதை சுவாரஸ்யமானது.
உதாரணமாக, "நவரத்தினம்" மதுரை தங்கத்தில் 62 நாட்களில் பெற்ற வசூலை சிவாஜியின் எந்த படமுமே நெருங்கவில்லை.
மதுரை தங்கத்தில் 62 நாள் வசூல்
ரூ. 3,34,497.86 . "உத்தமன்" 100 நாள் வசூல் நியூசினிமாவில் ரூ327000 தான். "நவரத்தினம்" 62 நாளில் பெற்ற வசூலை 100 நாட்களில் கூட பெற முடியாத "உத்தமன்" வெற்றி படம், அப்படித்தானே. ஏபிஎன்னின் "திருவிளையாடல்" 100 நாள் வசூல்
ரூ 2,86,000 தான். "தில்லானா மோகனாம்பாள்" 50 நாளில்
ரூ2,04,000 தான் பெற்றது. 132 நாளில்தான் ரூ 3,47,000 வசூலாக பெற்றது.
ஆக a p நாகராஜன் தயாரித்த அத்தனை படங்களிலும் குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படம் ஜொலிக்கும் "நவரத்தினம்" தான் என்பது உறுதியாகிறது. "பட்டிக்காடா பட்டணமா" 42 நாளில் சென்ட்ரலில்
பெற்றதோ ரூ 2,14,000 தான்.
சிவாஜியின் அத்தனை வெள்ளி விழா, வெற்றி விழா படங்களின் 62 நாட்கள் வசூல் அத்தனையும் "நவரத்தினம்" படத்தின் 62 நாள் வசூலுக்குள் அடக்கமாகி விட்டது.
அது மட்டுமா? தமிழகத்தையே கலக்கிய "ஆட்டுக்கார அலமேலு" படத்தின் 70 நாள் வசூலும் நவரத்தினத்தை விட குறைவுதான்.
"அண்ணன் ஒரு கோயில்" கேட்கவே வேண்டாம். வசந்த மாளிகை 55 நாட்களில் பெற்ற வசூல் ரூ2,40,.229.10. நெருங்க முடியுமா நவரத்தினத்தை. வாய்கூசாமல் தோல்வி படம் என்கிறீர்களே?, அப்படியானால் சிவாஜி நடித்த அத்தனையுமே தோல்வி படங்கள்தான்.
சும்மாவா தலைவருக்கு சிவாஜியைப் போல் பல மடங்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யானை அமர்ந்தால் கூட அதன் மீது உங்களால் ஏறி அமர முடியாது. இனி உங்கள் வசூல் விபரங்களை ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களோடு ஒப்பீடு செய்து திருப்தி பட்டுக் கொள்ளுங்கள். அதிலும் 'c' சென்ட்டரில் அவர்கள் வசூலை நெருங்குவது கடினம்தான். தலைவர் படத்தின் வசூல் அகில இந்திய அளவுக்கு பேசப்படும் போது நீங்கள் இனி வீண் முயற்சி செய்து பலனில்லை..........
-
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்
'விசாரணை' படத்தின் மூலக்கதை வடிவமான 'லாக்கப்' நாவல் மூலம் கவனத்தை ஈர்த்த மு.சந்திரகுமார் எழுதியுள்ள நூல் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சார்பில் வேடியப்பன் பதிப்பித்துள்ளார்.
புரூஸ்லி, ஜாக்கிசான், ஜெட்லி, டோனிஜா போன்ற கலைஞர்கள் குங்ஃபூ கலைக்கும் சீனத் திரைப்படக் கலைக்கும் செய்திருக்கும் பங்களிப்புக்குச் சமமாக தமிழ் சினிமாவில் பங்களிப்பு செய்த கலைஞர் யார்? தமிழர்களின் போர்க்கலைகளை தமிழ்த் திரைப்படம் எந்த அளவு பதிவு செய்துள்ளது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் எம்.ஜி.ஆர். என்பது மட்டுமே பதிலாக உள்ளது.
நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் சண்டைக்கலை குறித்து ஆய்வு செய்தால் மரபார்ந்த போர்க்கலையை ஆகச் சிறப்பாகப் பயன்படுத்திய ஒப்பற்ற கலைஞராக எம்.ஜி.ஆர்.திகழ்கிறார் என்பதை மு.சந்திரகுமார் சான்றுகளுடன் நிறுவும் விதம் மலைக்க வைக்கிறது. எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிகம் பார்த்து ரசித்த படங்களில் பயன்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளின் நுட்பம் வியக்க வைக்கிறது. அதனால்தான் 'மலைக்கள்ளன்' படத்தின் கலை கலாச்சாரத்துக்காக குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது.
உண்மையில் எம்.ஜி.ஆர் நடிப்புலகில் ஒரு மேடை நாடகத்தில் அழும் சிறுவனாகத்தான் அறிமுகம் ஆனார். அடித்ததால் அழுது நடிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். நடனமே வராது போய்விடு என்று விரட்டியடிக்கப்பட்ட பிறகு, நடிப்பு, வசனம், போர்க்கலையில் கவனம் செலுத்தி தனித்த ஆளுமையாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார். நடித்த நேரங்கள் போக மீதமுள்ள நேரங்களில் ஆயுதக் கலைகளைப் பயின்றதன் மூலம் போர்க் கலைஞராக எம்.ஜி.ஆர் ஜொலித்த ரகசியத்தையும் இந்நூல் விவரிக்கிறது.
சாகச நாயகனாக எம்.ஜி.ஆர் தன்னை முன்னிறுத்தும் தருணங்களில் கூட நம்பமுடியாத சண்டைக்காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டதே இல்லை என்பதையும், என்னால் செய்ய முடியாத காட்சிக்கு டூப் போடலாம். செய்ய முடிந்த காட்சிக்கு ஏன் டூப் போட வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர் எம்.ஜி.ஆர் என்பதையும் இந்த நூலைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.
120க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் கூட ஆயுதமற்ற எதிரியை ஆயுதத்துடன் எதிர்கொண்டதில்லை, எந்த எதிரியையும் பின்புறம் இருந்து அவர் தாக்கியதில்லை, பெண்களை வாடி போடி என்று விளித்தது இல்லை என்று படிக்கிற போது அவர் பிம்பத்தின் மீதான மரியாதை கூடுகிறது. எதிரி ஆயுதத்தை இழந்துவிட்டால் தன் ஆயுதத்தை விட்டெறிந்துவிட்டும் அல்லது எதிரிக்கு ஒரு ஆயுதத்தைக் கொடுத்தும் சண்டை செய்யும் தமிழ் மரபுப் போர் புரிந்த வீரன் எம்.ஜி.ஆர் என்பதை திரைப்படங்களின் காட்சி ரீதியாக விளக்கும் விதம் நெகிழ வைக்கிறது.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இருக்கும் சண்டைக்காட்சிகள் தனித்துவமானவை. சிலம்பு, மாடி, இரட்டைக் கம்பு, அலுமினியப் பைப்பில் சண்டை என தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை சினிமாவில் பயன்படுத்திய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.
பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் இரட்டைக் கம்பு (ஆஃப் ஸ்டிக்) சண்டைக் காட்சி, தாய்க்குப் பின் தாரம் படத்தில் உழவுக்காட்டில் எம்.ஜி.ஆர் போடும் நீள் அடிக்கம்பு சண்டைக் காட்சி, மாட்டுக்கார வேலன் படத்தில் மாட்டுக்குக் கட்டும் பித்தளை சலங்கைகள் கோர்த்திருக்கும் எடை மிக்க பெல்ட்டை லாவகமாகச் சுழற்றும் சண்டைக் காட்சி, அதே படத்தின் இறுதிக் காட்சியில் இரும்புக் குழாய்களைப் பயன்படுத்திப் போடும் சண்டைக் காட்சி, விவசாயி திரைப்படத்தில் மூங்கில் கழிகொண்டு எம்.ஜி.ஆரும்- நம்பியாரும் போடும் சண்டைக் காட்சி, உரிமைக்குரல் படத்தில் ஏர் கலப்பையைக் கொண்டு எதிரிகளைப் பந்தாடும் சண்டைக் காட்சி, உழைக்கும் கரங்கள் படத்தில் கம்பு சுழற்றும் காட்சி, சக்கரவர்த்தி திருமகள் மல்யுத்தக் காட்சி, ஆயிரத்தில் ஒருவன், மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நாடோடி மன்னன் என்று ஏராளமான படங்களில் நீள் கத்தி சண்டைக் காட்சி என 20க்கும் மேற்பட்ட படங்களில் எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகளை ஆய்வுப்பூர்வமாகவும் நுட்பமாகவும் அணுகி அலசி இருக்கிறார் மு.சந்திரகுமார்.
தமிழ் திரைப்படங்களில் சண்டைக் கலையின் மகத்துவம் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள், சண்டைக் கலைஞர்களின் உன்னதத்தை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், வாசகர்கள் என யாவரும் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள் நூலை விரும்பி வாசிக்கலாம்.
நூல்: எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்
ஆசிரியர்: மு.சந்திரகுமார்.........
-
அவர் ஒரு புதிர்
திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர் தனது பாணி என்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்.
சினிமாவை எடுத்துக் கொண்டால், அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும் சோதனைகளுக்கம் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.
அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே. தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்த போது நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலேயே தி.மு.கவைத் தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராகிவிட்டார்.
பிறகு இந்திரா காந்தி அவருடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்யாயம் முடிந்துவிட்டது என்று தப்புக் கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதலமைச்சரானார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக் கொண்டு வாகை சூடியவர் அவர்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னும் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் வெடித்ததையும் எதிர்கோண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும் கட்சித் தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து, அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள் முன் வெறும் செல்லாக்காசாக்கிக் காட்டினார்.
அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்ட போதும் தமது அரசியல் வாரிசு யார் என்பதை சொல்ல மறுத்தார். தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசை நியமிக்க என்பதைச் சொல்லாமல் சொன்னார்.
இதையெல்லாம் பார்க்கும் போது அவர் ஒரு புதிர். அவர் ஒரு தனி சாதனையார். அவர் ஒர் அதிசயம் என்று தான் எடைபோட முடிகிறது.
எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் என்ன? உண்மையில் யுகப் புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப் போல அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.
உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர் தோன்ற முடியாது.
ஆனந்த விகடன் தலையங்கத்திலிருந்து.........
-
#கேள்வி : புது வழி காணும் புரட்சித் தலைவரே ! மார்க்ஸின் சித்தாந்தங்கள் இன்றைய உலக நடைமுறைக்கு ஒத்துவராது என்கிறார்களே சிலர். உங்கள் கணிப்பு ?
#புரட்சித்தலைவரின் #பதில் : எந்த மேதையினுடைய சித்தாந்தங்களும் அடிப்படையை மாற்றாமல் , அதே சமயத்தில் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் நடைமுறைகளை அவ்வப்போது ஒரு சிறிதாவது மாற்றவேண்டிய அவசியம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும் !
எந்தவொரு கொள்கையின் அடிப்படையும் நிலையானது ! வழிமுறைகள் மாறுபாடுகள் அடையலாம். சில சித்தாந்தங்கள் ( தத்துவங்கள் ) காலத்தின் வற்புறுத்தலால் மக்கள் மீது திணிக்கப்படுமாயின் அவை நிலைத்து நிற்பது சந்தேகத்துக்குரியதாகும் !
ஆனால் , மக்கள் சமூகத்தின் மறுமலர்ச்சியை மனித வாழ்வின் தனித்தன்மையை உள்ளடக்கி உருவாகும் உயிர் கொள்கைகள் சாகாவரம் பெற்றவையாகும் !
மார்க்ஸியம் என்று சொல்லப்படுகிற மனித உரிமைகளின் விளக்கக் கொள்கைகளின் மறுமலர்ச்சியே இன்றைய தினம் பேசப்படுகிற சோஷலிஸம் ஆகும் !
ஆனால், திருக்குறளை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் அதிலே சொல்லப்படுகின்ற மனித பண்புகள் எல்லைக்கோடுகள் அபேதவாதத்தினுடைய பகுத்தறிவு சித்தாந்தங்களை விளக்கம் கருத்துக் கருவூலமாக இருக்கும் !
மன்னர்களே இல்லாது போன இந்த நேரத்தில் மன்னர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறளிலே சொல்லியிருக்கிறதே, அது இந்தக் காலத்திற்கு எப்படி பொருந்தும் என்று கேட்பதற்கு பதிலாக மன்னர்களுக்குச் சொல்லப்பட்ட. மக்களின் பிரதிநிதிகளாக அமைச்சர் பதவியில் அவருகின்றவர்கள் விஞ்ஞான ரீதியிலே பயன்படுத்திக் கொள்வார்களானால் இந்தக் காலத்திற்குப் பொருந்தும். இதுபோல் பயன்படுத்தினால் அது எந்தக் காலத்திற்கும் பொருந்தும்
- நாடோடி மன்னன், மே 1975
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
எங்கள் வாத்தியார் :
🌺🌺🌺🌺🌺🌺🌺
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் தான் நடித்த
திரைப்படங்களின் மூலம் நல்ல கருத்துகளை
மட்டுமே எடுத்துரைத்து நடிப்பார். அவசகுணமான வார்த்தைகளையோ அல்லது
அவ நம்பிக்கை வார்த்தைகளையோ பேச
மாட்டார்.தன்னம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகளையே பயன்படுத்துவார்.
எதிரிகளுக்கும் திருந்த வாய்ப்பு தரும் காட்சிகளையே வைப்பார்.எதிரிகளையும் மரரியாதை குறைவான வார்த்தைகளால்
திட்ட மாட்டார்.ஆனால் அவருடைய சமகால
நடிகர்களின் படங்களை பார்த்தால் அவர்கள்
பயன்படுத்தும் வார்த்தைகள் டேய்" கம்மநாட்டி, நாதாரி,சோம்பேரிநாயே,தண்டம்"
இந்தமாதிரி பல வார்த்தைகள் கூறி திரைப்படங்களில் அழைப்பதை பார்த்திருக்கிறோம்.ஆனால் புரட்சித் தலைவர் படங்களில் அவர் பேசும் மரியாதையான வார்த்தைகள் எதிரிகளும் மதித்துபேசும் பாங்கு போன்ற தன்னிகரற்ற மனிதநேயசெயல்களை திரைப்படங்களில்
மட்டுமல்ல நேரடியான வாழ்க்கை முறையிலும் சிறியவர்களைக்கூட வணங்கியே பேசுவார்.இப்பேர்ப்பட்ட
எங்கள் மனிதநேய திலகத்தை இந்த
மனிதநேய தினத்தில் வணங்குகிறோம்...
அன்புடன் பாரதரத்னா எம்.ஜி.ஆர் பக்தர்கள் ..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺.........
-
"நாடோடி மன்னன்" காவியத்தை நாட்டுக்கு தந்த புரட்சி நடிகர்*...
எம்.ஜி. ஆர் அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள்*
110 சவரன் கொண்ட தங்க வாளை 5 லட்சம் மக்கள் முன்னிலையில் கரகோஷமும் , வாழ்த்தொலியும் முழங்க வழங்கினார்.
இது போன்ற ஒரு மகத்தான விழா
நாடோடி மன்னன் காவியத்திற்கு
மட்டுமே பெருமையை பெற்று தந்துள்ளது.
நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பல ஊர்களில் விழா கொண்டாடப்பட்டது. பல ஊர்களிலும் இத்திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழாவிற்கு புரட்சி நடிகர் அவர்களும் அத்திரைப்படத்தில் பங்குகொண்ட திரைப்பட கலைஞர்கள் மற்றும் திரைப்பட டெக்னீஷியன்கள் பலர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியும் நாடோடி மன்னனுக்கு அரங்கேறியது.
சென்னை நகரில் புரட்சி நடிகரின் நாடோடி மன்னன் வெற்றி விழா பிரம்மாண்டமாக எம்.ஜி.யார் பிக்சர்ஸ் சார்பாக* அரங்கேறியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை ஏற்று திரைப்படத்தில் பங்கு கொண்ட 150 பேர்களுக்கு ஒரு பவுன் மோதிரம் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கினார்கள்.
ஒரு திரைப்படத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்ட முதல் திரைப்படமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.*
சென்னையில் நடைபெற்ற நாடோடிமன்னன் வெற்றி விழாவிற்கு சுமார் இரண்டு லட்சம் மக்கள் பங்கெடுத்தனர்.*
பொதுமக்கள் பார்வையில் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற முதல் வெற்றி விழா நாடோடி மன்னன் திரைப்படம் ஆகும்.
நாடோடி மன்னன் திரைப்படம் முதல் வெளியீட்டில்*
46 அரங்குகளில் திரையிடப்பட்டது .
13 திரையரங்குகளில் 100 வது* நாள் வெற்றி விழா முதன் முறையாக கொண்டாடப்பட்ட செய்தி விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டது.*
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றி காவியங்கள் 100 வது நாள் வெற்றி விழா!*
வெற்றி விழா...
கொண்டாடிய காவியங்களில்*
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிய திரைப்படங்கள் பற்றிய செய்திகள்.....
1958 ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை பிரதி பலித்த காவியமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.**
பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகரில் மிகப்பிரமாண்டமான ஊர்வலமும் நாடோடிமன்னன் திரைப்படத்தை தயாரித்து, நடித்து, இயக்கிய புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழாவும்...
மதுரை தமுக்கம் மைதானத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரை பிரம்மாண்டமான ஊர்வலம். யானை மீது புரட்சித் தலைவர் அவர்கள் அமர்ந்து வர 110 சவரன் கொண்ட தங்க வாள் மேடையிலேயே சுற்றிவர ஊர்வலமாக சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்ட இந்த மாபெரும் நிகழ்ச்சி கலைத்துறையில் வரலாற்று சிறப்பு மிகு நிகழ்ச்சியாகும்.
இரண்டாம் வெளியீட்டில் திருவண்ணாமலை நகரிலும்*
100 நாட்களை கடந்து வெற்றி கண்ட காவியமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.
நாடோடி மன்னன் வெற்றிவிழா* நடைபெற்ற ஊர்கள் விபரம்.... மதுரை தங்கம் திரையரங்கம் சேலம் நியூ சினிமா திரையரங்கம் கோவை ராஜா திரையரங்கம் திருச்சி* ராக்ஸி திரையரங்கம்*
நெல்லை பாப்புலர் திரையரங்கம்* ஈரோடு கிருஷ்ணா திரையரங்கம்
திண்டுக்கல் சென்ட்ரல் திபேட்டர்
தஞ்சாவூர் யாகப்பா தியேட்டர்
வேலூர் தாஜ் தியேட்டர்
சென்னை*
பாரகன் ,கிருஷ்ணா , உமா
மூன்று திரையரங்குகளிலும் திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழா சிறப்புடன் 1958 ஆம் ஆண்டு நடைபெற்றது.
75 ஊர்களில் 75 நாட்களையும்
மொத்தம் 125 அரங்குகளுக்கு மேல் 50 நாட்களையும் கடந்தது.
இந்திய திரையுலகில்*
நாடோடி மன்னன் வெற்றியே
இன்று வரை முதன்மை பெறுகிறது. மறுவெளியீட்டில் அதிகமான ஊர்களில் அதிக நாட்களை கடந்த திரைப்படமாகவும் இன்று வரை திகழ்கிறது.
தொடரும் பதிவுகள்.........
-
மக்கள் திலகம் அவர்களுக்கு
உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவன் ..........
அன்பு தெய்வமே
உண்மையான உங்களது அன்பு உள்ளங்கள் எந்த பிரதிபலன் பாராமல் உங்களது பிறந்த நாளை தங்களின் குடும்பத்தில் ஒருவராக எண்ணி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .
உங்களால் பயன் அடைந்தவர்கள் , உங்கள் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் , உங்கள் திருமுகத்தை
stamp அளவில் போடவும் மனமில்லாமல் ,அரசியல் சுய லாபத்துக்கு ,உங்கள் பெயரை - திருமுகத்தை மறைத்து , மறந்து ,வாழும் உள்ளங்களை ...
நீங்கள் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றது
பொன் பொருளை கண்டவுடன் .. வந்த வழி மறந்துவிட்டு கண் மூடி போகிறவர்கள் போகட்டுமே .
என் மனதை நானறிவேன் . என் உறவை நானறிவேன்
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் .
எங்கள் இல்லங்களில் என்றென்றும் நீங்கள் விருந்தாளி .
நித்தமும் உங்கள் படங்கள் , உங்கள் பாடல்கள் எல்லா ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பி கொண்டு வரு கின்றனர் .
எங்கள் அலை பேசியில் உங்கள் .. பாடல் -- திருமுகம்
எங்கள் மடி கணினியில் DESKTOP
உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .
COMPUTER - DESKTOP -உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .
அன்பு தலைவா
உங்களது புன்சிரிப்பு
உங்களது அழகு முகம்
உங்களது கம்பீர அலங்காரம்
உங்களது கண் அசைவுகள்
உங்களது காதல் பார்வை
உங்களது வாள் வீச்சு
உங்களது சிலம்பாட்டம்
உங்களது ராஜ நடை
உங்களது வெண் கலகுரல் வசனம்
உங்களது கனிவான பார்வை
உங்களது பொன்மனம்
உங்களது வீரமான நடிப்பு
உங்களது SHORT & SWEET பட காட்சிகள்
உங்களது லட்சிய வேடங்கள்
உங்களது நேர் மறையான சிந்தனைகள்
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .
எங்களது நிரந்தர சொத்து - நீங்கள்தான் .
உங்களை வழி படும் எல்லோருமே எங்கள் சொந்தம்தான் ..........
-
உலகில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகம் m.g.r என்ற மாமனிதருக்கு கிடைத்திருப்பது ஒரு வரலாற்று சாதனை ..
பசி என்ற கொடுமை யான ஏழ்மையின் தாக்கம் அவரது இளம் வயதில் பாதிக்க பட்டதின் விளைவுதான் 1982 ஆண்டில் சத்துணவு திட்டமாக தமிழ் நாட்டில் அறிமுகபடுத்தபட்டது .
இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்த பல லட்சகணக்கான மாணவர்கள் இன்று சமுதயாத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர் .
ஒரு தனி மனிதன் தனது வாழ் நாளில் தினமும் சந்திக்கும்
ஏமாற்றம் - கவலை - வறுமை - துரோகம் - நம்பிக்கை -ஆனந்தம் - என்று பல கோணங்களில் வெளிப்படும் செய்லகளுக்கு மருந்தாய் இருப்பது மக்கள் திலகத்தின் பட பாடல்கள் .
அந்த பாடல்களை கேட்பதின் மூலம் நமது மனதுக்கு புத்துணர்வும் ,நேர்மறை எண்ணங்களும் அலை மோதும் .
மக்கள் திலகம் மறைந்து 32 ஆண்டுகள் ஆன பின்னரும்
உலகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் வீட்டிலும் , தெருவிலும் அவரது படத்தை வைத்து மாலை இட்டு பூஜை செய்வது நமது இதய தெய்வம் எங்க வீட்டு பிள்ளை
ஒருவருக்குதான் என்பது உலக சாதனை .
மக்கள் திலகம் [1947-1977.] முப்பது வருடங்களில் நமக்கு தந்த காவியங்கள் 115.
சரித்திர படங்கள் - சமுதாய படங்கள் என்று பலவேறு பாத்திர படைப்புக்கள் . இனிமையான பாடல்கள் இயல்பான நடிப்பு .சமுதாய சீர் திருத்த கொள்கை பாடல்கள் -வீரமான சண்டை காட்சிகள் . இதுதான் நம்முடைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அழியா சொத்து .
நமக்கு மட்டுமல்ல . இந்த சொத்து அவர் பெயர் மட்டும் கூறி அனுபவிக்கும் கட்சிக்காரர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - ஊடகங்கள் உரிமையாளர்கள் -குறுந்தகடு விற்பனையாளர்கள் - தயாரிப்பாளர்கள் - என்று இன்றும் அவர்கள் வாழ்க்கையில் வருமானத்தை அள்ளி தரும் அமுத சுரபியாக நமது மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
இந்த சாதனை படைக்கும் உலகில் ஒரே தனி மனிதர்
எங்கள் அமுத சுரபி மக்கள் திலகம் .
அவர் புகழ் வளர்க...வாழ்க... என்றும்...
-
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?
இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.
கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.
மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.
திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.
திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)
திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.
எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.
அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.
அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.
இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி. .........
-
" வெற்றியையும் தோல்வியையும் எப்படி
எடுத்துக்கொள்ள வேண்டும்? "
" எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார்.
இந்த வாத்தியார் பாடம் போதுமே! "
- விகடன் ..........
-
திருடாதே முதலிடத்தையும்,*
தாய் சொல்லை தட்டாதே இரண்டாம் இடத்தையும்,*
நல்லவன் வாழ்வான் திரைப்படம் மூன்றாவது இடத்தையும், அரசிளங்குமரி திரைப்படம் நான்காவது இடத்தையும்,*
சபாஷ் மாப்பிள்ளை திரைக்காவியம் ஐந்தாவது இடத்தையும் பெற்று வசூலில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தது.
1961 ஆம் ஆண்டு வெளியான மற்ற படங்களை விட மிகப் பெரிய ஒரு வெற்றியையும் பல இடங்களில் அதாவது ஏ.பி.சி. என சொல்லப்படும் அத்தனை சென்டர்களிலும் திருடாதே*
தாய் சொல்லை தட்டாதே*
நல்லவன் வாழ்வான் அரசிளங்குமரி* உட்பட அத்தனை படங்களுமே பல இடங்களில்*
50 நாட்களையும், 75 நாட்களையும் கடந்து ஒரு வெற்றி புரட்சியை பல ஊர் அரங்குகளில் படைத்தது.
திருடாதே காவியம் ஒரு புதுமையான காவியம். சமூக திரைப்படத்திலேயே ஒரு கிளைமாக்ஸ் காட்சி அதிக நேரம் மக்கள் விறுவிறுப்புடன் அரை மணி நேரத்திற்கு மேல் ரசித்த காட்சி முதல் முறையாக தமிழ் சினிமாவில் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களால் திருடாதே காவியத்தில் காட்சி அமைக்கப்பட்டு...... அக்காட்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.
நல்லவன் வாழ்வான் திரைக்காவியம் பேரறிஞர் அண்ணா அவர்களின் கதை அமைப்பில் உருவாகி வெற்றிகண்டது. இத் திரைப்படமும் 1961ம் ஆண்டு பல இடங்களில்*
12 வாரங்களையும், 50 நாட்களையும் கடந்து பல ஊர்களில் சாதனையாகும். நல்லவன் வாழ்வான் காவியம் மக்கள் திலகத்தின் மூன்றாவது வெற்றி காவியமாக வசூலில் அனைத்து ஊர்களிலும்* நின்று விளையாடியது.........
-
என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க , ஹீரோன்னு சொல்றீங்க , மாஸ்னு சொல்றீங்க .... அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் இருந்தார் என்பதையே தெரியாம ஆடறீங்க ....
ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம் . அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் . சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி , ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....
" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ... மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....
வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,
" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வித்தை களுவரேன் . அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்
எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...
" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க , எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .
" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்
" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே , தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...
சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....
அவர் தானைய்யா எவர்க்ரீன் ஹீரோ...............
-
1972......
மலரும் நினைவுகள் .
மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு , நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் முற்பகுதியில் வெளிவந்தது .-[ பிப் -ஜூன்]
மக்கள் திலகம் எம்ஜிஆர் சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடகத்தில் நடித்தார் .
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ''பாரத் '' பட்டம் .... மே
எம்ஜிஆருக்கு பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடந்தது . மே - ஆகஸ்ட்
எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி திமுக - மதுரை மாநாடு - ஆகஸ்ட்
எம்ஜிஆர் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு தொடங்கியது . செப்டம்பர்
எம்ஜிஆரின் அன்னமிட்ட கை - செப்டம்பர் .
எம்ஜிஆர் நீக்கம் - அக்டோபர்
அதிமுக உதயம் - அக்டோபர்
எம்ஜிஆரின் இதய வீணை - அக்டோபர்
மக்கள் வெள்ளத்தில் ரயில் பயணம் சென்னை - மதுரை நவம்பர்
சென்னை நகரில் மாபெரும் பேரணி - டிசம்பர்.
சினிமா சாதனைகள் - 1972
சென்னை நகரில் 4 திரை அரங்கில் வெளிவந்து 4 அரங்கிலும் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம் ..
நல்ல நேரம் , இதயவீணை 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது .
இலங்கையில் நல்ல நேரம் மற்றும் ராமன் தேடிய சீதை 100 நாட்கள் ஓடியது .
சங்கே முழங்கு , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் தமிழகத்தில் 12 வாரங்கள் ஓடியது .
அன்னமிட்ட கை சுமாராக ஓடியது .
1972ல் மக்கள் திலகம் 10 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் .
அனைத்து எம்ஜிஆர் மன்றங்களும் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டு வந்தது .
ரசிகர்களுக்கு எம்ஜிஆர் தந்த விருந்து .
சங்கே முழங்கு
எம்ஜிஆரின் ஸ்டைல் ரசிகர்களுக்கு விருந்து . குறிப்பாக கிருபால் சிங் வேடம் கச்சிதமாக அமைந்து விட்டது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . மெல்லிசை மன்னரையும் , கண்ணதாசன் - டிஎம் எஸ் - சுசீலா - ஈஸ்வரி பாராட்ட வேண்டும் . நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை காட்சியில் எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம் . சிலர் குடிப்பது போலே நடிப்பார் ,,,பாடல் காட்சியில் அருமையான நடனமும் முக பாவங்களும் , உடை அலங்காரமும் கண்களுக்கு விருந்து .
நல்ல நேரம்
தேவரின் முதல் வண்ண படைப்பு . எம்ஜிஆர் அறிமுகமாகி யானையுடன் கால் பந்து விளையாடும் காட்சியில் டைட்டில் இசை ஒன்றே போதும் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு . படம் முழுவதும் எம்ஜிஆரின் இளமை , சுறுசுறுப்பு அட்டகாசம் . நல்ல கருத்துடன் பொழுது போக்கு அம்சங்களுடன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விருந்து படைத்த காவியம் .
ராமன் தேடிய சீதை
.
நல்ல நேரம் வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டிருந்த நேரத்தில் 33 நாட்கள் இடை வெளியில் இப்படம் வெளிவந்தது .எம்ஜிஆரின் ஜாலியான படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . சண்டைகாட்சிகள் அனைத்தும் அருமை . சிறந்த ஒளிப்பதிவு .மெல்லிசை மன்னரின் இனிய இசை. .காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்து .இந்த இடத்தில் 43 வகையான டிரஸில் எம்ஜிஆர் இளமையுடன் தோன்றும் காட்சிகள் சூப்பர்,
மொத்தத்தில் ரசிகர்களின் படம் .
நான் ஏன் பிறந்தேன்
குடும்ப பாங்கான கதையில் குடும்ப தலைவராக எம்ஜிஆர் இயல்பாக நடித்து அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை அடித்த காவியம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின் வசனங்கள் ....மிகவும் யதார்த்தம் . மறக்க முடியாத காவியம் .
அன்னமிட்ட கை
டைட்டில் காட்சியில் '' முதல் முறையாக பாரத் எம்ஜிஆர்'' என்று திரையில் காணும்போது ரசிகர்களின் கைதட்டலும் விசில் சத்தமும் இன்னமும் காதில் எதிரொலிக்கிறது .1966ல் எடுக்கப்பட்ட காட்சிகளில் எம்ஜிஆரின் கணீர் குரல்; காட்சிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது
எம்ஜிஆரின் பாசமிகு நடிப்பு . இனிமையான பாடல்கள் , பிரமிக்க வைக்கும் கம்பு சண்டை காட்சிகள் . நம் கண்களுக்கு விருந்து .
இதய வீணை
ராமன் தேடிய சீதை படத்திற்கு பின்னர் மீண்டும் காஷ்மீர் காட்சிகளுடன் வந்த மணியனின் காவியம்
இனிமையான பாடல்கள் , எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு , குடும்ப கதை . சூப்பர் காவியம் .
எழுத்தாளர் மணியன் மூலம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்
ஆனந்தவிகடனில் ''நான் ஏன் பிறந்தேன் '' - எம்ஜிஆரின் தொடர் கட்டுரை
உலகம் சுற்றும் வாலிபன் - படப்பிடிப்பிற்கு உதவி
இதயவீணை
சிரித்து வாழவேண்டும்
பல்லாண்டு வாழ்க
மூன்று மெகா ஹிட் மூவிஸ்
மணியனை மறக்க முடியுமா ?.
குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா இரண்டு துறையிலும் எம்ஜிஆரின் இமாலய வெற்றிகள் துவங்கப்பட்ட ஆண்டு 1972 என்றால் அது மிகையல்ல .எம்ஜிஆரின் வெற்றிகளும் எம்ஜிஆர் ரசிகர்களின் உண்மையான பேராதரவும் மக்கள் மன்றமும் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற நடிகருக்கும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற அரசியல் தலைவருக்கும் கிடைத்த வெற்றிகள் .
எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாமும் இந்த 1972 முதல் தொடர் வெற்றிகளை 48 ஆண்டுகளாக நினைவு கூறும் நாம் கொடுத்து வைத்தவர்கள் ..........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேட்டைக்காரன் படத்தில், வெள்ளிநிலா முற்றத்திலே* என்ற பாடலில்* ஒரு குழந்தைக்கு என்னென்ன அறிவுரைகள் சொல்ல வேண்டுமோ அவற்றை அழகாக, தெளிவாக,சொல்லியிருப்பார் . இதே போல பல படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரையுடன் கூடிய பாடல்கள் பாடியுள்ளார் .* இந்த காலத்தில் இளைஞர்கள் வருங்காலத்தை எப்படி பார்க்க வேண்டும் . எப்படி நடந்துகொள்ள வேண்டும் . எப்படியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் பொது வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்னைகளை நாம் சந்திக்க உள்ளோம் என்பதை மகாதேவி படத்தில் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, தினம் கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா, தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா என்ற பாடலில் எப்படி கட்சியில் அண்ணா தம்பிக்கு* கடிதங்கள்**எழுதியதில் பிரபலம் ஆகியதோ , அதுபோல எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்களில் தன்* பாடல்கள் மூலம் மக்களுக்கு , இளைய தலைமுறைக்கு போதனைகள் அறிவுறுத்தி வந்தார் . அதனால்தான் அன்றைக்கு* இருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இன்றைக்கு அவர் மறைந்த பின்னர் பக்தர்களாக உருமாறியிருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள் தன் பாடல்களில் சொன்ன பாடங்களை ,கற்று , படிக்காத மேதைகளாக மக்கள் மத்தியில் இன்று நற்பணி ஆற்றிக்கொண்டு இருக்கிறார்கள் .என்பதை பல நகரங்களில், ஊர்களில் கண்கூடாக பார்க்கலாம் .தமிழ்நாட்டில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். மாதிரி வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது ,திருமணங்களில் தாலி எடுத்து கொடுப்பது, பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆசி கூறுவது , குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது , சமூக நல திட்டங்களில் ஈடுபடுவது, அன்ன தானம் செய்வது பொது ஜன சேவை செய்வது*என்று பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் .*
நான் ஏன் பிறந்தேன் படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு, அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு, வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதைப்பாட்டு*என்று இளைய தலைமுறைக்கும் , குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் நம்பிக்கை ஒளி தரும் ஒரு மகா சக்தியாக இருந்துள்ளார் . அதே போல நாளை நமதே படத்தில் அன்பு மலர்களே, நம்பி இருங்களேன் , நாளை நமதே என்று* நம்பிக்கை*தரும் பாடலில்* மிக அழகாக கருத்துக்களை சொல்லியிருப்பார் .நவரத்தினம் படத்தில் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் , நல்ல* உத்தமர் காந்தியையும் பார்க்கிறேன் என்று சிறுவர்கள், இளையதலைமுறையினர் எப்படி*வளர வேண்டும், வாழ வேண்டும் என்று கனவு கண்டாரோ, அதை நனவாக்க*படங்களிலே பாடல்கள் பாடி அவர்களை உருவாக்குவதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார் .அதில் வெற்றியும் கண்டார் . ஆனந்த ஜோதி படத்தில்*ஒரு தாய் மக்கள் நாமென்போம் என்ற பாடலிலும் தேசபக்தி, நாட்டுப்பற்று கொண்ட கருத்துக்கள் இருந்தன என்பதை அறியலாம் .நீரும் நெருப்பும் படத்தில் கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேர காற்று ,என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனை பார்த்து என்ற பாடலில் கூட குழந்தைகளுக்கு ,*அன்பு,பண்பு, ஈகை , வீரம் , உழைப்பு ஆகியன பற்றிய போதனைகள் இருக்கும் .ஏனென்றால் குழந்தைகள் நாளை மலரப்போகும்* மிக பெரிய**நிழல் தரும் மரங்களின் நாற்றங்கால்கள் . அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய பார்ப்பதில் ஒரு கலைஞனுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை எம்.ஜி.ஆர். மிக நன்றாக உணர்ந்திருந்தார் . அதனால் தான் திரைப்படத்துறையில் தனது பாணியில் அதை திறம்பட செய்து காட்டினார் .*
ஒரு கலைஞன் என்பவன் சமூகத்திலிருந்து ,தனக்குரிய சன்மானம்*புகழ் ஆகியவற்றை பெறுகிறான் .அவன் இந்த சமூகத்திற்கு அளிக்கக்கூடிய பங்களிப்பு மிக பெரியது .அவன் தனக்கு கிடைத்த சன்மானத்திற்கும், புகழுக்கும், கிடைத்த வாழ்க்கைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறான்* இந்த மனிதகுலத்திற்கு என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின்*தலைப்பு தேர்வு செய்வதில் இருந்து ,ஒவ்வொரு காட்சியிலும் மக்களுக்கு*உகந்த பல நல்ல செய்திகள் அறிவிக்க வேண்டும் , தன்னுடைய*உழைப்பிலே வருகிற*வியர்வை சிந்தி*சம்பாதிக்கிற பணத்திற்கு பயனுள்ளதாக அந்த 3 மணி நேர திரைப்படத்தில்*ஏதாவது நல்ல விஷயங்கள்*தெரிவிக்க வேண்டும் என்பதில்*முனைப்புடன் இருந்தார் .எந்த விஷயத்திலும் நேர்மையை*காட்ட வேண்டும் ,அநியாயத்தை தட்டிக் கேட்கவேண்டும்*,பெண்களிடத்தில் மரியாதை உள்ளவராக இருக்க வேண்டும் , குடும்பத்தில் முதியவர்களை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் . குழந்தைகளிடத்தில் அன்பு செலுத்த*வேண்டும் சக*மனிதர்களிடம் இரக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் , ஆபத்து காலத்தில் உதவிக்கரம்*நீட்ட* ஒவ்வொரு தனிமனிதனும்*தயாராக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தன்னுடைய*படங்களில் ,பாடல்கள், காட்சிகள் மூலம் அறிவுறுத்தி வந்தார் .
தன்னுடைய*படங்களில் ,பாடங்கள் இல்லாமல், பரீட்சை இல்லாமல், நுழைவு தேர்வு இல்லாமல், ஆசிரியர் இல்லாமல், யாருமே இல்லாமல் அந்த ஆசான்*பாடல்கள், காட்சிகள் ,பதியவைத்து*கருத்துக்கள்*மூலமாக*பட்டங்கள் பெற்றவர்கள் கோடி*பேர் .* அந்த கோடி*பேரும்*அவர் தோளில்*தாங்கிய*மாலைகள் ஆனார்கள் .அதனால்தான் அவரது தோள்களை*கோடி*மாலைகள்*தாங்கியவை*என்று* சொல்லப்பட்டது . அப்படிப்பட்ட மன்னாதிமன்னன், ராஜராஜனின் சரித்திரம், வரலாறு, சாதனை*பட்டியல் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*.
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா - என் அண்ணன்*
2.வெள்ளிநிலா முற்றத்திலே விளக்கெரிய -வேட்டைக்காரன்*
3.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்*குருட்டு*உலகமடா*- மகாதேவி*
4.உங்களில்*நம் அண்ணாவை பார்க்கிறேன் - நவரத்தினம்*
5.அன்பு மலர்களே,நம்பி இருங்களேன்,நாளை நமதே*- நாளை நமதே*
6.ஒரு தாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*
7.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*
8.ஓடி*ஓடி*உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும் -நல்ல நேரம்*
9.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா*-லட்சுமி உரையாடல் -இதயவீணை*
-
22.8.1958
Historical Day
19,830 அடி நீளமுள்ள “நாடோடி மன்னன்” திரைப்படம் 22-8-1958-ல் வெளியானது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட `கியூ’ வரிசையில் நின்றனர்.
படம் “மெகா ஹிட்” என்பது, திரையிடப்பட்ட முதல் நாள் -முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது. இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இரட்டை வேடக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜி.கே.ராமு அருமையாகப் படமாக்கியிருந்தார்.
பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா உள்பட பலர் எழுதியிருந்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். “தூங்காதே தம்பி தூங்காதே”, “சம்மதமா, நான் உங்கள் கூடவர சம்மதமா?” உள்ளிட்ட பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.
ஏற்கனவே “வசூல் சக்ரவர்த்தி” என்று பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இப்படத்தின் மூலம் “தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்” என்று புகழ் பெற்றார்.
“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவை, மதுரை முத்து ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.
4 குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது, 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது.
ஊர்வலம் முடிந்தபின், தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் அந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கினார் ..........
-
நடிப்புக்கு #மட்டுத்தான் #சம்பளம்
#அன்பே #வா படப்பிடிப்பிற்காக மக்கள்திலகம் கோவை செல்வதற்காக, சென்னை விமானநிலையத்திற்கு வருகிறார். அங்குள்ள விமானநிலைய அதிகாரி ஜெயக்குமார் என்பவர் எம்ஜிஆர் அவர்களின் நண்பர்...
அவர் எம்ஜிஆர் வைத்திருந்த சூட்கேஸை எடைபோட்டு அதற்கு ரூ.7000/- பணம் கட்டச்சொன்னார்...
அதற்கு எம்ஜிஆர் ..."பெட்டிக்குத் தான் மதிப்பா ? அதிலிருக்கும் 40000/- ரூபாய்க்கு மதிப்பில்லையா ? எனக்கேட்டார்...
அதற்கு ஜெயக்குமார்..."நீங்கள் பணத்தை சூட்கேஸில் வைக்கவேண்டாம். கையிலுள்ள "பேக்" ல் வைத்துக்கொள்ளுங்கள்...என்று பணத்தை எடுத்துக்கொடுத்து ... அது சரி, "ஷூட்டிங்கிற்குத் தானே போகிறீங்க.? அதுக்கு இவ்வளவு பணம் எதுக்குக் கொண்டு போகணும் ? " என்று கேட்டார்.
அதற்கு எம்ஜிஆர் ... "நான் ஊட்டி, கொடைக்கானல் போனால் அங்கு உடன் வரக்கூடிய அலுவலர்களுக்கும், நான் தங்குகிற இடத்தில் வேலை செய்யறவங்களுக்கும் மப்ளர், ஸ்வெட்டர் வாங்கித் தருவேன். அப்புறம் கொஞ்சம் பணம் என் சொந்த தேவைகளுக்காகவும் " என்று சொன்னார்...
அதற்கு ஜெயக்குமார்..."#அதெல்லாம் #புரொட்யூஸர் #தானே #பாத்துக்குவாங்க..#நீங்க #ஏன் #கொடுக்கணும் ? "
எனக்கேட்டார்.
"#அவங்க #என் #நடிப்புக்கு #மட்டும்தான் #கொடுப்பாங்க...#என் #சௌகர்யத்துக்கெல்லாமா #கொடுக்கச்சொல்லணும்...? #நான் #கொடுப்பதற்காகத்தான் #சம்பாதிக்கிறேன், #சேர்த்துவைக்க #அல்ல..."
என்றார் நம் வள்ளல்பெருந்தகை
ஆனால் இன்றைக்கு... ............
-
*தலைவர் ஒரு தனிப்பிறவி*
0
ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார்.
0
சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை
எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது
0
"வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்
0
ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
0
எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்
0
எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது. ஆனால் இந்த ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம்.
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
0
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.
0
சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார்.
தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
0
கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்
0
நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !
0
சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.
0
சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை
0
மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.
0
சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .
0
மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !
0
புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.
0
மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார்.உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்..........
-
பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களில் தலைமை யேற்று நடத்திய விழாக்கள்*
பட்டியல்....
1965 ஆம் ஆண்டு புரட்சி நடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் பவனி வந்த மகத்தான வெள்ளிவிழா சித்திரம்*
சென்னை மாநகரில் முதன் முறையாக மூன்று திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி வெற்றி கண்ட எங்க விட்டுப்பிள்ளை திரைப்படத்தின் 25 வது வார வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி எம்.ஜி.யார் பிச்சர்ஸ் சார்பாக சென்னையில்*
கேஸினோ, பிராட்வே, மேகலா திரையரங்குகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி.... திரைப் படத்தில் பங்குகொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் பரிசாக வழங்கி எங்க விட்டுப்
பிள்ளை திரைப் படத்தின் கதாநாயகரான மக்கள் திலகத்திற்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.
1967 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரான பிறகு முதன் முறையாக நடந்த நூறாவது வெற்றி விழா. மக்கள் திலகத்தின் ஒப்பற்ற இயற்கை நடிப்பின் மூலம் வெளியான பெற்றால் தான் பிள்ளையா திரைக்காவியத்தின் நூறாவது நாள் நிகழ்ச்சி ஆகும்.* சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெற்றால் தான் பிள்ளையா திரைப்படத்தின் 100 வது நாள் விழாவுக்கு* தலைமை ஏற்று திரைப்பட கலைஞர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் கேடயங்களை வழங்கினார்கள்.
1967 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காவல்காரன் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் குளோப் திரையரங்கில் சிறப்பாக செந்தில் பிக்சர்ஸ் சார்பாக நடைபெற்றது.* இவ்விழாவிற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையேற்று திரைப்படத்தில் பங்கு கொண்ட மக்கள் திலகத்திற்கும் மற்ற பிற கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை ஏற்ற திரைப்பட விழாக்கள்.*
1958 ல் நாடோடி மன்னன்*
100 வது வெற்றி விழா.*
1965 ல் எங்க விட்டுப்பிள்ளை திரைப்படத்தின் வெள்ளிவிழா !*
1967ம் ஆண்டு நடைபெற்ற பெற்றால் தான் பிள்ளையா*
100 வது நாள் திரைப்பட விழா.*
1967 ல் காவல்காரன் திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழா!*
ஆகிய திரைப்பட விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டார்கள்.........
-
மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் சில....
நகரில் 2 திரையரங்கில் திரையிடப்பட்டு வெற்றிக்கொடி நாட்டிய காவியம் தாய்க்குப்பின் தாரம் சந்திரா திரையரங்கில் 98 நாட்களும், மீனாட்சி அரங்கில்*
66 நாட்களும் ஓடிய முதல் காவியம் தாய்க்குப்பின் தாரம் ஆகும்.
நகரில் மக்கள் திலகத்தின் முதல் வெள்ளி விழா திரைப்படமாக மதுரைவீரன் திகழ்ந்தது. இக்காவியம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 180 நாட்கள் ஓடியது. திரையரங்கிற்கு...... மதுரைவீரன்* வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் வருகை புரிந்தார்.*
நகரில் சிந்தாமணி திரையரங்கில் புரட்சித் தலைவர் அவர்கள் கதாநாயகனாக பவனி வந்த வெற்றி திரைப்படமான ராஜகுமாரி 112 நாட்கள் ஓடியது.
மதுரை மாநகரில் ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்றான தங்கம் திரையரங்கில் நாடோடி மன்னன் திரைக்காவியம் 19 வாரங்கள் ஓடி 3 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று மதுரை வீரன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மதுரையில் வெற்றிவாகை சூடிய காவியம் ஆகும்-
மதுரை மாநகரில் 1947 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பல.......
நூறு நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்துள்ளது..........
-
ராஜகுமாரி*
மந்திரிகுமாரி*
மர்மயோகி*
சர்வாதிகாரி*
மலைக்கள்ளன்*
குலேபகாவலி*
அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரைவீரன்*
தாய்க்குப்பின் தாரம்*
சக்கரவர்த்தி திருமகள்*
நாடோடி மன்னன்*
பாக்தாத் திருடன்*
ஆகிய திரைப்படங்கள்*
100 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு..... அதிகப்படியான காவியங்கள்* குறிப்பிட்ட ஆண்டுகளில் ஓடியது மக்கள் திலகத்திற்கு மட்டுமே!
மதுரை மாநகரில் தொடர்ந்து வெளியான மக்கள் திலகத்தின் திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து சாதனை புரிந்தது போல் வேறு எந்த நடிகருக்கும் சாதனை கிடையாது.*
தொடர்ந்து வெளியான மலைக்கள்ளன்*
குலேபகாவலி*
அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரைவீரன்*
தாய்க்குப்பின் தாரம்*
சக்கரவர்த்தி திருமகள்.
மக்கள்ததிலகத்தின்*
6 திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை ஆகும்.
மதுரை மாநகரில் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர்*
எம் ஜி ஆர் ஒருவருக்கு மட்டுமே உகந்த சாதனையாகும்.
1961 ஆம் ஆண்டு வெளியான மக்கள் திலகத்தின் 5 திரைப்படங்களில்*
திருடாதே,*
தாய் சொல்லை தட்டாதே திரைக்காவியங்கள் 100 நாட்களை கடந்தும்.... நல்லவன் வாழ்வான் அரசிளங்குமரி திரைப்படங்கள்*
84 நாட்கள் ஓடியது.*
சபாஷ் மாப்பிள்ளை*
திரைப்படம் 60 நாட்கள் ஓடி சாதனை பெற்றது..............
-
1962 ல் மதுரை மாநகரில் ஒரே திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடிய மகத்தான காவியம் தாயை காத்த தனயன் மட்டுமே ஆகும்.
மதுரை சிந்தாமணி திரையரங்கில் குடும்பத் தலைவன்*
திரைப்படம் 86 நாட்கள் ஓடியது.
1963 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நூறு நாட்கள் ஓடிய மக்கள் திலகத்தின் காவியமே சாதனையாகும்.*
நியூ சினிமா திரையரங்கில் நீதிக்கு பின் பாசம்*
திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
1964 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் வெற்றி காவியமான பணக்கார குடும்பம் திரைப்படம் 126 நாட்கள் ஓடி முரசு கொட்டி முதலிடம் கண்டது.
1965 ஆம் ஆண்டு வெளியான நடிகப் பேரரசு எம்ஜிஆர் அவர்கள் பவனி வந்த மாபெரும் காவியம்*
எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் மதுரை வீரன் திரைப்படத்திற்கு பின்* சென்ட்ரல் சினிமா திரையரங்கில் வெள்ளி விழாவை கொண்டாடி 2 வது திரைப்படமாக சிறப்பு செய்தது.
சென்ட்ரல் சினிமா அரங்கில்*
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம்*
25 வாரம் ஓடி பின் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் காவியம் திரையிடப்பட்டு 85 நாட்கள் திரையரங்கில் ஓடி மகத்தான வசூலை படைத்தது..........
-
1966 ஆம் ஆண்டு மதுரை சிந்தாமணி திரையரங்கில்*
புரட்சி நடிகரின் வண்ணக் காவியமான அன்பே வா திரைப்படம் 21 வாரங்கள்,*
147 நாட்கள் ஒடி வெற்றி முரசு கொட்டி அதிக வசூலை உருவாக்கித் தந்தது.
1967 ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரின் மறுபிறவி திரைக்காவியமான காவல்காரன் திரைப்படம்* சிந்தாமணி திரையரங்கில்*
126 நாட்கள் ஓடி மூன்று லட்சத்தை கடந்து...... அதிக வசூலை தந்து மிகப்பெரிய வெற்றியை பதித்தது.
1968 ஆம் ஆண்டு மக்கள் திலகத்திற்கு புகழ் குவித்த*
மதுரை மாநகரில்**
ஒளிவிளக்கு திரைப்படம் முதன் முறையாக 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
மதுரை மீனாட்சி அரங்கில்*
147 நாட்கள் ஓடி புதிய சாதனையை படைத்த நூறாவது வெற்றிக் காவியம் ஒளிவிளக்கு ஆகும்.
குடியிருந்த கோயில் திரைக்காவியம் நியூ சினிமா திரையரங்கில் 133 நாட்கள் ஓடி மகத்தான வசூலை தந்து வெற்றி நடை போட்டது.
மதுரை சிந்தாமணி திரையரங்கில் ரகசியபோலிஸ்115 காவியம்*
92 நாட்கள் ஓடி இரண்டு லட்சத்தி*
50 ஆயிரத்திற்கு மேல் வசூலை குவித்தது. தொடர்ந்து கருப்பு வெள்ளை திரைப்படமான கண்ணன் என் காதலன் திரைப்படமும் சிந்தாமணி திரையரங்கில் 93 நாட்கள் ஓடி வெற்றிக்காண வசூலை தந்தது..........
-
1969 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் இரண்டு வண்ண காவியங்கள் படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த வெற்றியாகும்.*
எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அடிமைப்பெண் திரைக்காவியம் சிந்தாமணி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி 100 காட்சிகள் அரங்கு நிறைந்து அதிகமான வசூலை 4 லட்சத்திற்கு மேல் கொடுத்த முதல் காவியமாக* திகழ்ந்தது.
1969ஆம் ஆண்டு புரட்சித்தலைவரின் நம்நாடு திரைக்காவியம் நூறு காட்சி
களுக்கு மேல் மீனாட்சி அரங்கில் அரங்கு நிறைந்து 133 நாட்கள்
*ஓடி மகத்தான வசூலை தந்தது.
1970 ஆம் ஆண்டு வெளியான மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படைப்பு மாட்டுக்கார வேலன் திரைப்படம் ஆகும். இக்காவியம் சிந்தாமணி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி அதிகபட்சமான வசூலை ஈட்டி தந்தது.*
அரங்கில் 1969 ல் அடிமைப்பெண் 1970 ல் மாட்டுக்கார வேலன் தொடர்ந்து இரண்டு காவியங்கள் வெள்ளிவிழாவை கடந்து சாதனை ஆகும்.
1954 ல் இருந்து 1957 வரை மக்கள் திலகத்தின் காவியங்கள் எப்படி ஆரம்பத்தில் சாதனை புரிந்ததோ....அதே போல தொடர்ந்து வெளியான பல காவியங்கள் மதுரை*
மாநகரில் 100 நாட்களை கடந்து வெள்ளிவிழாவை கடந்து சாதனையை அரங்கேற்றியது.
அடிமைப்பெண், நம்நாடு மாட்டுக்காரவேலன், என் அண்ணன் ஆகிய நான்கு திரைப்படங்களும் தொடர்ந்து மதுரை மாநகரில் ஓடிய சாதனையில் முதலிடம் பெறுகிறது மகத்தான வசூலையும் ஓடிய நாட்களையும் வெற்றி கொள்கிறது..........
-
1970 ல் மாட்டுக்கார வேலன் சிந்தாமணி அரங்கில் வெள்ளிவிழா....**
என் அண்ணன் சென்ட்ரல் திரையரங்கில் வெற்றி விழா.....*
சிந்தாமணி திரையரங்கில் எங்கள்தங்கம் நூறாவது நாள்* சாதனை......
இப்படி தனிப்பெரும் நாயகனின் வெற்றியை பதித்த ஆண்டு*
1970 ஆம் ஆண்டு ஆகும்.
1971ம் ஆண்டில் மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்களான குமரிக்கோட்டம் திரைப்படம் சிந்தாமணி திரையரங்கில் 100 நாட்களை கடந்து வெற்றி கண்டது.*
அதன்பின் மதுரை நியூ சினிமா திரையரங்கில் புரட்சித் தலைவரின் வெற்றி திரை காவியமான ரிக்க்ஷாக்காரன்*
163 நாட்கள் ஓடி வெள்ளி விழா நாட்களை நெருங்கியது.*
4 லட்சத்திற்கு மேல் வசூலை* கொடுத்த முதல் காவியமாக ரிக்க்ஷாக்காரன் திகழ்ந்தது..
அதே ஆண்டில் புரட்சி நடிகரின் இரு வேட நடிப்பில் வெளியான நீரும் நெருப்பும் திரைக்காவியம் சென்ட்ரல் சினிமா திரையரங்கில் 12 வாரங்கள் ஓடி அதிகபட்சமான வசூலை திரையரங்கில் தந்தது.
1972 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் புரட்சித்தலைவரின் காவியங்கள் படைத்த வெற்றி மிகு சாதனைகள்*..........
-
நகரில் இரண்டு திரையரங்கில் திரையிடப்பட்டு 100 நாட்களை கடந்த காவியம் நல்ல நேரம் ஆகும் அலங்கார் ..... மூவிலேண்ட்* திரையரங்குகளில் மொத்தம் 142 நாட்கள் ஓடி நாலு லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்தது.*
அதன்பின் இதயவீணை திரைப்படம் தேவி திரையரங்கில் 110 நாட்கள் ஓடி மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை தந்தது.
சங்கே முழங்கு திரைப்படம் மீனாட்சி திரையரங்கிலும்
ராமன் தேடிய சீதை திரைப்படம் சிந்தாமணி திரையரங்கில்*
12 வாரங்களும், அன்னமிட்டகை திரைப்படம் 9 வாரங்கள் ஓடி வெற்றியை தந்தது*
நான் ஏன் பிறந்தேன் திரைக்காவியம் தங்கம் திரையரங்கில் 10 வாரங்களைக் கடந்து இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி தந்த காவியமாக திகழ்கின்றது.
மேலும் மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் சாதனைகள் 1973-ஆம் ஆண்டில் இருந்து 1978 ஆம் ஆண்டு வரை மீண்டும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்...
-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் புனிதமான ஆட்சியை அமைக்க வேண்டும்.... அவரது திருப்பெயரை மாநிலம் முழுவதும் சொல்ல வேண்டும்.....*
புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த பின் தலைவரின் பெயரில் பல திட்டங்கள் உருவாகவேண்டும்* என்றெல்லாம் நாம் ஆரம்ப காலத்தில் நினைத்தோம்.* ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.
1972 ஆம் ஆண்டு இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது.*
புரட்சித் தலைவர்* நம்மிடம் இருந்த* (1987ம் ஆண்டு) வரை அந்த கழகம் எப்படியெல்லாம் புரட்சித் தலைவரால் வளர்க்கப்பட்டது. ஆட்சியில் மக்களுக்காக பல திட்டங்களை செயல் வடிவம் தந்தார் என்பதை நாம்* தலைவர்* வாழ்ந்த காலத்தில் பார்த்தோம். அந்த மாபெரும் தலைவரின்* புகழ் பாடி மகிழ்ந்தோம்.பொற்கால ஆட்சியில் சிறப்புடன் வாழ்ந்தோம்.
*
புரட்சித் தலைவர் மறைந்த பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிலரின் கையில் போனது. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்கள்.*
மீண்டும் கழகம் ஒன்றிணைந்தது
1991 ல் புரட்சித்தலைவரின் ஆட்சி என்று சொல்லி அனைத்து புரட்சித்தலைவரின் அன்பு உள்ளங்களும் வாக்களித்தார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை.....
1991 ,2001 ,2011 ,2016,
ஆகிய ஆண்டுகளில் பார்த்ததோம்.*
ஆனால் இன்று ஒரு அரசு விளம்பரத்தில் கூட. அண்ணாவும் புரட்சித்தலைவரின் திருவுருவ படங்களை கண்பதில்லை.*
தலைவரின்* ஆட்சி என்று ஆட்சியாளர்கள் சொல்லுவதும் கிடையாது.*
எங்கும் வேறு புராணம் பாடுகிறார்கள்.*
ஜெ....ஆட்சி என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் கருணாநிதியை எதிர்ப்பதற்காக அவர் வரக்கூடாது என்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கடந்த காலதேர்தலில் வாக்களித்தோம். ஆதரித்தோம்.*
ஆனால் புரட்சித்தலைவரின் புகழ் கடந்த காலத்தில் மறைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு 4 முறை வந்தும் புரட்சித் தலைவரின் பெயரை சொல்லாது அவர் பெயரை இருட்டடிப்பு செய்த நிகழ்ச்சிகள் நாம் கண் கூடாக பார்த்ததோம்.
புரட்சித்தலைவரின் ஆட்சியை புனிதமான ஆட்சியை இனிமேல் யார் கொண்டு வருவார் என்பது தான் நமக்கு கவலையாக இருக்கிறது.
கட்சி மேடையிலும், அரசியல் கூட்டங்களிலும்,* தமிழக அரசு சார்பாக நடைபெறும் விழாக்களிலும் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தை மேடையில் வைப்பதே கிடையாது.*
அதற்கு பதிலாக*
ஜெ.... போட்டோவை தான் வைத்துக் கொண்டு.....*
ஜெ.... ஆட்சி என்று சொல்லி
கொண்டு.....
ஜெ..... என்ற பெயரிலேயே பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.*
நமது புரட்சித்தலைவரின் பக்தர்கள் எதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்கிறார்கள்.....
திமுக வை எதிர்ப்பதற்காக சிலர் வாக்களிக்கிறார்கள்.*
சிலர் புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சி இருக்க வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள்.*
சிலர்* கட்சியின் மூலம் ஏதாவது பலன் கிடைக்குமா என்று வாக்களிக்கிறார்கள்.*
இன்னும் சிலர் கட்சி எப்படி இருந்தால் என்ன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை இருக்கிறது அது மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள்.
லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் தொண்டர்கள்.... பக்தர்கள்* இருக்கின்ற இந்த தமிழகத்திலேயே நம்மை வைத்து பகடைக்காய் ஆடிய வருடங்கள் பல.......*
மேலும் நம்மைப் போன்ற உண்மையான புரட்சித்தலைவர் மேல் பற்றுக் கொண்ட. நாம் ..... தலைவரை* தெய்வமாக நினைக்கின்ற.....
கோடிக்கணக்கான புரட்சித்தலைவரின் பக்தர்கள்**...
ஒன்று கூடி தலைவரின் ......* நல்ல முடிவை எடுத்து புரட்சித் தலைவருக்கு எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளில் அவரது பெயரும் புகழும் காப்பாற்றப்பட வேண்டும்.*
இன்றைய அரசிடம் அனைத்து எம்.ஜி.ஆர் பக்தர்கள் சார்பாக தலைவரின் புகழை பாட*
அறிக்கை ஒன்றை தயார் செய்து* கொடுத்தால் தான் நல்லது என்று நினைக்கின்றேன்.*
இன்றைய அரசு செய்கிறார்களோ இல்லையோ அது நமக்கு தெரியாது..... ஆனால் புரட்சித் தலைவரின் பெயரை நம்மைப் போன்றவர்கள் எதிர்காலத்தில் புகழ் பாட வேண்டும்....... வரும் தலைமுறைக்கு கொண்டு*
செல்ல...... எம்.ஜி.ஆர். பக்தர்கள் வலுவாக ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் இருந்தால் தான்* எதையும் சாதித்து காண்பிக்க முடியும்... தலைவரின் புனித புகழை பாடமுடியும்.*
புரட்சித் தலைவரை உண்மையாக நேசிப்பவர்கள் மட்டுமே..... புரட்சித்தலைவரின் புகழைப் பாட முடியும்....
புரட்சித்தலைவர் புகழையும் அவரது பெருமைகளையும் அவரது சாதனைகளையும் அவரது மனிதநேயத்தையும் பரப்ப உண்மையான புரட்சித் தலைவரின் பக்தர்கள் தமிழகமெங்கும் தென்னக மெங்கும் உலகமெங்கும் ஒன்று கூடினால் தான் இனி வருங்காலத்தில் புரட்சித்தலைவரின் புனித பெயர் தமிழகத்திலும் தமிழக மக்களின் உள்ளத்திலும் வாழும் என்பதை இந்த நேரம் திட்டவட்டமாக சொல்லிக் கொள்ள கடமைபட்டுள்ளேன். சமுதாயத்தில் எம்.ஜி.ஆர். பக்தருக்கும்*
சம உரிமை கிடைக்க பாடுபட...
ஒத்துழைப்பு நிலைக்க...
ஒன்றிணைந்தால்* நன்று என நினைக்கும்...........
-
கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார் மக்கள் திலகம் "எம்.ஜி.ஆர்" அவர்கள்.
சிவாஜிகணேசன்
அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்.. என்ற அரைப்பக்க விளம்பரம் பிரசுரமான அதே நாளில்,
"எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்ற அரைப்பக்க விளம்பரம் வேறு பக்கத்தில் பிரசுரமாகியது! இந்தப் படத்தை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" தயாரிக்கப் போவதாகவும் அந்த விளம்பரம் கூறியது. அதாவது எம்.ஜி.ஆரின் சொந்தப்படம்!
இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சிவாஜி, எம்.ஜி.ஆர். இடையே பெரும் மோதல் உருவாகி விட்டது" என்று எல்லோரும் நினைத்தனர். ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்த நேரம் அது.
இந்த விவகாரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டார். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, "நீங்கள் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து வருகிறீர்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிவாஜி கணேசன் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளை. உத்தமபுத்திரனை சிவாஜிக்கு விட்டுக்கொடுங்கள்" என்று கூறினார்.
கலைவாணரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் எம்.ஜி.ஆர். கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். எனவே, போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
[நன்றி :மாலைமலர்]
Thank you Anna .........
Nallathambi Nsk
-
#எம்ஜிஆர்.பெயர் தமிழில் இல்லையா ?
"சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பில் தமிழ் எழுத்துக்களைக் காணோம். இந்தி எழுத்துக்கள் மட்டுமே உள்ளன" என்று சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருந்தன. அது தவறான தகவல் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
"#புரட்சி_தலைவர்_டாக்டர்
#எம்_ஜி_ராமச்சந்திரன்_மத்திய_ரயில் #நிலையம்' பெயர் பலகையில் ஏதும் மாற்றம் செய்யப்படவில்லை.
நிலையத்தின் முகப்பில் முதலில்
தமிழிலும், அடுத்து இந்தியிலும்,
கடைசியில் ஆங்கிலத்திலும் பெயர்
பலகைகள் முன்பே வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் பெயர் பலகை நீக்கப்படவில்லை.
நிலைய கட்டிடத்தின் பாதி படத்தை
மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில்
பதிவிட்டு தவறான செய்தி பரப்புவது
கண்டனத்திற்குரியது" என்று தெரிவித்துள்ளது ரயில் நிலைய செய்திக்குறிப்பு. நாமும் உண்மை
என்னவென்பதை நேரில் தெரிந்து
கொண்டோம்.
"ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு - இனி
அவசரக்காரனுக்கு முகநூல் மட்டும்"
என்று புதுமொழி படைத்திடலாமோ ?
செய்தியை முந்தித்தருவது தவறில்லை.
ஆனால் உண்மை பிந்திப் போய்விடக்கூடாது.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan & Sakthi Flowers Decorations.........
-
மக்கள் திலகம் என்ற அந்த மகா நடிகன் கண்ட " ஹீரோயிசம்" என்பது காலவரையறுகளுக்கு உட்பட்டது.
பள்ளியில் சென்று ஆத்திச்சூடி பயிலும் பாலகனாக இருக்கும்போதே வறுமையை நீக்க, வயிற்றுப்பசியைப்போக்க நாடக கொட்டாய்களில் திரை இழுக்கும் வேலைக்கு வந்து விட்டார்...
அந்தக்காலம் மிகக்கொடியது... சின்னக்குழந்தை அல்லவா??? சமயத்தில் திரையை ஏற்றவும், இறக்கவும் மறந்து தூங்கிப்போய் விடும். அதற்கு அந்தக்கால "பாய்ஸ்" நாடகக்கம்பெனியில் இந்த பாய்சுகளுக்கு தண்டனை கிடைக்கும்...
ஐந்து வயதில் வயிற்றுப்பசியை போக்க அரும்பாடு படுவது என்பது அந்தக்காலத்தில் future என்னும் எதிர்காலத்தை ஏற்படுத்தி பின்னர் நல்வாழ்வு பெறவே...
1917 ல் பிறந்தவர் 1937 ல் திரையில் முதலில் தோன்றி, 1947 ல் நாயகனாக மாறி, 1957 ல் கதாநாயகனாக கோலோச்சி, 1967 ல் தென்னிந்திய திரையின் ஏகபோக அரசனாக, அதிக ஊதியம் பெறும் பெரும் நடிகனாக வலம் வந்து அந்தப்பதவியை மீண்டும் பத்தாண்டு காலம் தன்னில் தக்க வைத்து , 1977 ல் தமிழகத்தையே ஆளும் மன்னாதி மன்னனாய் 1987 ல் தன் இறுதி மூச்சு வரை அந்த முதல்வர் பதவியை அலங்கரித்தார்...
அன்றெல்லாம் இன்றைய ஒப்பனை மற்றும் ஒளிப்பதிவு சாகசங்கள் இல்லை, இருந்திருந்தால் இவரின் பெரும்பாலான படங்கள் தொழில்நுட்பத்தின் உச்சத்தையே தொட்டிருக்கும் உலக ஆச்சர்யங்களாக வீற்றிருக்கும்...
விருப்பு, வெறுப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, எம்ஜியார் என்ற அந்த பிம்பம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு எட்டாவது அதிசயம்...
ஆனந்த் ...........
-
தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு mgr தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.
1952-ம் ஆண்டு mgr தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது mgr குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.
தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான். Mgr படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை mgr தகர்த்து எறிந்தார்.
60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் mgr கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். Mgr ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.
1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர்.அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
பேரறிஞர் அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் mgr தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக mgr இருந்தார்.
பேரறிஞர் அண்ணா தான் mgr ரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். Mgr ரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக mgr நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, அண்ணாவிடம், mgr கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு mgr மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.
படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி mgr என்று அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் mgr என்றும் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று பேரறிஞர் அண்ணா மிகத்தெளிவாக பதிவு செய்தார்.
1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு mgr வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.
அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை mgr ரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் mgr உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் mgr தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் mgr தான்.
பேரறிஞர் அண்ணாவை நாட்டின் முதலமைச்சராக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் அமருவதற்கு காரணம் mgr தான். இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக
எடப்பாடி.k.பழனிச்சாமி இருப்பதற்கும் mgr தான் காரணம். Mgr இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.........
-
இளம் வயதில் காந்தீய கொள்கைகள் மீது புரட்சிதலைவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு இருந்துள்ளது...
கதர் சட்டை கழுத்தில் உத்திராட்சம் அணிந்து எப்போதும் வெளியில் சென்ற காலங்கள் உண்டு...
ஒரு முறை வால்டாக்ஸ் சாலைக்கு அருகில் மாலையில் நாடகம் நடிக்க போகணும்.....
மதிய வேளைக்கு முன் இப்போ பக்கத்தில் போய் விட்டு வருகிறேன் என்று பெரியவரிடம் சொல்லி விட்டு போன தலைவரை ரொம்ப நேரம் காணவில்லை.
பதறி போன பெரியவர் அவரை தேடி கொண்டு போக.....ஒருவர் மட்டும் யானைகவுனி காவல் நிலையத்தில் அவரை போல பார்த்தேன் என்று சொல்ல அங்கே ஓடுகிறார் பெரியவர்.
பார்த்தால் அங்கே ஒரு பெரிய கூட்டத்தின் நடுவில் நம்ம நாயகன்.
காவல் அதிகாரியிடம் பெரியவர் விசாரிக்க இன்று மதியம் காங்கிரஸ் கட்சி சார்பில் கள்ளு கடை மறியல்...அதில் கலந்து கொண்டவர்களை இங்கே வைத்து இருக்கிறோம்..
மாலையில் விட்டு விடுவோம்...என்று சொல்ல ஐயா மாலை எங்களுக்கு நாடகம் இருக்கு உடனே தம்பியை மட்டும் விடுங்க என்று சொல்ல.
சரி நல்ல நோக்கத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்...சரி அவர் தொழில் பாதிக்க கூடாது என்று வெளியில் விட..வெளியில் வந்த பெரியவர் என்னப்பா இப்படி அண்ணா வரும் வழியில் இந்த அறப்போர் எனக்கு மிகவும் பிடிக்க நானும் உள்ளே போய் கோஷம் போட்டேன்...என்று வெகுளியாக சொன்னார் நம் இதய தெய்வம்...
நல்ல கொள்கைகள் அவர் ரத்தத்தில் ஊரியவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.
காரைகுடிக்கு அண்ணல் மகாத்மா அவர்கள் வரும் போது அங்கே அப்போது இருந்த பெரும் பணம் படைத்தவர்கள் தங்கம் வெள்ளி பணம் என்று அண்ணல் அவர்களிடம் அள்ளி கொடுக்க.
அப்போது வறுமை தலைவர் இடம் அண்ணன் அவர்களுடன் எட்டனா வாங்கி ஆளுக்கு நாலு அனா என மஹாத்மா அவர்கள் கையில் கொடுத்து அவரை ஒரே முறை சந்தித்து உள்ளார் நம் காவிய நாயகன்...
அடுத்து வந்த நாட்களில் அவரை நேரில் பார்த்ததை பற்றியே பலரிடம் சொல்லி மகிழ்ந்து இருக்கிறார் நம் பொன்மனம்..
அவர் படங்களில் காந்தியின் படங்களை காட்டி மகிழ்வார் தலைவர்.
வாழ்க அவர் புகழ்.
நன்றி...தொடரும்.
உங்களில் ஒருவன் .........
-
ஏவி.எம். நிறுவனத்துக்காக "அன்பே வா' படத்தை இயக்கியது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கென்று ஒரு பார்முலா உண்டு. அவர் ஏழையாக இருப்பார். ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்வார். நிறைய சண்டைக் காட்சிகளும் படத்தில் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பார்முலாவுக்குள் அடங்காத படம் "அன்பே வா'. அப்படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் கூறிய போது, இந்தப் படத்தில் நடிக்கும் எல்லோருமே பொம்மைகள், நீங்கள்தான் அவர்களை ஆட்டுவிக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். "அன்பே வா' வெற்றிவிழாவின் போது ரசிகர்களின் முன்னிலையிலேயே இந்த விஷயத்தைச் சொன்னார்.
"அன்பே வா' படப்பிடிப்பு நடக்கும் போது சென்னையில் கிங்காங், தாராசிங் போன்ற புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு பெற்ற போட்டிகள் நடந்து வந்தன. அதில் பங்கு பெற வந்திருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவரை எம்.ஜி.ஆருடன் மோத வைத்து படமாக்கிய சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை விட முக்கியமான விஷயம் "அன்பே வா' படம் முடிந்த பிறகு ஒரு முழுப் பாடலும் நடனக் காட்சியும் வரும். அதையும் முழுமையாக பார்த்து ரசித்தார்கள். "அன்பே வா' படத்துக்கு முன்பும், பின்பும் இப்படி படம் முடிவடைந்து ஒரு பாடல் மற்றும் நடன காட்சி எந்த படத்திலும் இடம் பெற்றதேயில்லை !
- இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர்.........
-
நாம் அடுத்து "நேற்று இன்று நாளை" திரைப்படத்தின் வெற்றியை பற்றி பார்க்கலாம். சிவாஜி ரசிகர்கள் தோல்விப்படம் என்று சொன்ன "நவரத்தினம்" மற்றும் "ஊருக்கு உழைப்பவன்" வசூல் விபரங்களை பார்த்தோம். அவைகளும் வெற்றி படங்கள்தான் என்பதை வசூல் விபரங்கள் மூலம் நிரூபித்தோம். அவர்கள் "நேற்று இன்று நாளை"யை தோல்விப் படம் என்றும் அசோகன் ஐயோ பாவம் என்றும் சொல்கிறார்கள். அது சிவாஜியின் வெள்ளிவிழா படங்களை எப்படி புரட்டி எடுத்தது என்பதை பார்க்கலாம்.
முதலில் "நேற்று இன்று நாளை" படத்தை தயாரிக்க அசோகன் எவ்வளவு தன் சொந்தப்பணத்தை போட்டார் என்று தெரியுமா?. தம்பிடி காசு கூட போடவில்லை. அத்தனையும் பைனான்சியர் கொடுத்த பணம். "ஆயிரத்தில் ஒருவன்" படமெடுக்க பந்துலுவுக்கு கொடுத்தது எல்லாமே பைனான்சியர் காசுதான். எம்ஜிஆர் நடிக்கிறேன் என்று கடிதம் கொடுத்தால் போதும். பணம்தர பைனான்சியர்கள் தயாராக இருக்கிறார்கள்.
சிலர் பைனான்சியர் கொடுக்கும் பணத்தில் தங்கள் சொந்த செலவுக்கும் எடுத்துக் கொள்வார்கள். அப்புறம் படம் அவர்கள் எதிர்பார்த்தபடி முடியாமல் கோஞ்சம் லேட் ஆனாலும் வட்டி அதிகம் வந்து விடுமே என்று தலைவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி விடுவார்கள். தலைவருக்கு உடனே தெரிந்து விடும் எங்கே தவறு நடந்திருக்கிறது என்று. அதனால் கோபத்துடன் சென்று விடுவார்.
இவர்கள் ஏதோ இவர்கள் முதலில் வட்டி போகிறதே என்று கவலை கொண்டு பிதற்றி திரிவார்கள். லாபத்தில் ஒரு பங்கை வட்டிக்கு செலவழிக்க போகிறார்கள் அவ்வளவுதான். இதுதான் "நேற்று இன்று நாளை" படத்துக்கும் நடந்தது.
படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பது எம்ஜிஆர் நடிப்பதனால்தான். ஆனால் பைனான்சியர் ஏதோ தனக்கு கடன் கொடுத்ததை போலவும் தான் அந்த கடனிலிருந்து வெளியே வர எம்ஜிஆர் சீக்கிரம் நடித்து கொடுக்க வேண்டும் என்று பிறரிடம் புலம்பித் திரிவதுதான்.
சில தயாரிப்பாளர்கள் தலைவருக்கே ஆலோசனை வழங்குவது, தான் ஒரு தயாரிப்பாளர் போல நடந்து கொள்வது போன்ற ஆணவம்தான் படம் லேட் ஆக காரணம். அப்படி ஆணவம் பிடித்து அழிந்து போனவர்தான் சந்திரபாபு. உனக்கு திறமையிருந்தால் நீ வேறு நடிகர்களை போட்டு அடுத்த படத்தை எடுத்து உன் திறமையை காட்டலாமே? ஒரே படத்தில் பல சொத்துக்களை இழந்து சொந்த ஊருக்காவது போகலாம்.
இனாமாக கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்த கதையாக ஆக்கி விடுகிறார்கள். சரி, "நேற்று இன்று நாளை" படத்தின் வசூலை பார்க்கலாம். சென்னையில் பிளாசா மகாராணி யில் 105 நாட்களும் கிருஷ்ணவேணியில் 72 நாட்களும் சயானியில் 66 நாட்களும் சேர்த்து
மொத்தம் 348 நாட்கள் ஓடி வசூலாக ரூ 10,65,105.45 ம் பெற்றது. சாதாரண திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதித்து காட்டியது.
மதுரை சிந்தாமணி யில் வெளியாகி
119 நாட்கள் ஓடி வசூல் ரூ 405964.78
ஐ எட்டியது.
நெல்லை பார்வதியில்
வெளியாகி 119 நாட்கள் ஓடி ரூ
238097.25 வசூல் பிரளயம் செய்தது.
வெள்ளி விழா ஓட்டிய "பட்டிக்காடா பட்டணமா" நெல்லையில் அதே பார்வதி தியேட்டரில் பெற்ற வசூல்
எவ்வளவு தெரியுமா?. 100 நாட்களில்
ரூ 1,59,982.65 வசூலாக பெற்று "நேற்று இன்று நாளை" யிடம் படுதோல்வி கண்டது.
நாகர்கோவிலில் "நேற்று இன்று நாளை" 50 நாள் வசூலுடன் மோதி படுதோல்வி கண்ட கணேசனின் வெள்ளி விழா படங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
நாகர்கோவிலில் நே.இ.நா.
50 நாள் வசூல் ரூ 1,16,709.75.
"தங்கப்பதக்கம்" "எங்கள் தங்க ராஜா" "ராஜராஜசோழன்" "வசந்த மாளிகை" ஆகிய கணேசனின் படங்கள் கதறுவதை காணலாம்.
தமிழகத்தில் 44 அரங்கில் வெளியாகி 38 அரங்குகளில் 50 நாட்களை கடந்த அற்புதம். முதலில் திரையிட்ட 44 அரங்குகளில் 75 லட்ச ரூபாய் வசூலாக பெற்று, முதல் ரவுண்டில் 85 லட்சம் பெற்று மிகப் பெரிய சாதனை செய்தது.. எல்லா மாநிலங்களிலும் ஓடியதை சேர்த்தால் கோடியை தாண்டி ஜெயக்கொடியை ஓங்கி உயர்த்தி காட்டிய படம். சிவாஜிக்கு எம்ஜிஆர் சினிமாவில் இருக்கும் வரை அவர் நடித்த வேறு எந்த படமும் இந்த சாதனையை நினைத்து கூட பார்க்க
முடியவில்லை.
அசோகனுக்கு புது வாழ்வு தந்ததோடு அவருடைய குடும்பம் இன்று வரை வசதியாக வாழ வழிவகை செய்து கொடுத்ததை அவரது மகன் வின்சென்ட் அசோகன் பேட்டி கொடுத்திருக்கிறாரே?. அதை சிவாஜி ரசிகர்கள் பார்த்து விட்டு மெளனமாக இருப்பது ஏன்?. நீங்கள் தயாரிப்பாளர்களை தெருவில் விட்டதை போல் எங்களையும் நினைக்க வேண்டாம். தலைவரை நம்பி கெட்டவர்கள் இன்று வரை யாரும் கிடையாது.
நெல்லை பார்வதியில் வாழ்நாள் சாதனை.
-----------------------------------'----------'-----------
திருநெல்வேலி பார்வதி தியேட்டர் தொடங்கி தியேட்டர் பணி நிறைவடையும் (மூடும்)காலம் வரை
அந்த தியேட்டரில் ரூ 2 லட்சம் வசூல் பெற்ற ஒரே படம் தலைவரின் "நேற்று இன்று நாளை" தான். சிவாஜி படங்கள் அதிகமாக திரையிட்ட தியேட்டர் பார்வதிதான். அந்த குகைக்குள்ளே நுழைந்த சிங்கத்தை கண்டவுடன் ஆட்டுக்குட்டிகள் அலறிப்புடைத்து
ஓடி விட்டன.
நெல்லையை பொறுத்தவரை மிகப்பெரிய தியேட்டர் என்றால் அது சென்ட்ரலும்
பூர்ணகலாவும் தான். அங்கு சிவாஜி படங்கள் சொற்பமாகத்தான் வெளியாகும். அங்கு சிவாஜி படம் திரையிட்டால் அலிபாபாவின் குகைக்குள் ஆட்டுக்குட்டி நுழைந்தது
போலிருக்கும்.
அங்கெல்லாம் தலைவர் படங்கள்தான் சாதனை செய்யும். சிவாஜி படங்கள் வேதனையை தான் தரும். மற்ற இடங்களில் வெள்ளி விழா ஓட்டிய "வசந்த மாளிகை" இங்கு சென்ட்ரலில் 69 நாட்கள் ஓட்டுவதற்குள் நெல்லையப்பர் கோவில் தேரின் வடக்கயிறு கொண்டு வர வேண்டியதாயிற்று. ஊர் ஊருக்கு ஒரு சின்ன தியேட்டர் வைத்துக் கொண்டு அதில் 100 நாட்கள் ஓட்டுவதுதான் அவர்கள் வாடிக்கை.
இந்த ஒரே படம் அசோகனின் இழந்த சோகத்தை மீட்டுத் தந்ததோடு கடனையும் அடைத்து கையில் ஒரு பெருந்தொகையையும் கொடுத்தது.
எஞ்சிய காலங்களில் நிம்மதியாக கழிக்க "நேற்று இன்று நாளை" அசோகனுக்கு பேருதவி செய்தது..........
-
கே.சுந்தரராஜனின் பதிவு.
1.எம்ஜிஆர் அவர்கள்
ஜாதி மதம் இனம்
மொழிகளுக்கெல்லாம்
அப்பாற்பட்ட மனிதர்
2.மனித நேயத்தின்
உச்சக்கட்டம்
3.வள்ளல் தன்மை
4.தாயை வணங்குதல்.
5.உடற்கட்டுக்கோப்பாக
வைப்பதில் கவனம்.
6.எந்த நிலையிலும்
தன் கொள்கையை
விட்டுக் கொடுக்காதிருத்தல்.
7.நல்லது மட்டுமே
குறிக்கோள்.
8.தமிழ்மீதும் தமிழக மக்கள் மீதும் மிகுந்த
அன்பு.
9.பெண்களை தெய்வமாக நினைப்பவர்.
10.எந்த கெட்ட பழக்கத்துக்கும் அடி
பணியாதவர்.
11.கெட்ட வார்த்தைகள்
வாழ்நாளில் பேசியதும்
கிடையாது.
12.குழந்தைகளிடம் அன்பு நேருவைப் போல
13.தொண்டு செய்வதில்
அப்துல்கலாம் போல
14.ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
என உரைப்பதில்
அண்ணாவைப்போல
15.இலவச கல்வி
இலவச உணவு
தருவதில் காமராஜரைப்போல
16.தமிழ் மொழி
எழுத்துவடிவம்
சிலைகள் அமைத்தல்
வழிபடுதல்
பெண்களின் வாழ்விற்கு அரும்பாடுபட்ட பெரியாரைப் போல
17.சுதந்தரமாக வாழவேண்டும் மக்கள்
எனப் பாடுபட்ட காந்தியைப் போல
18. அரசியலில் வெற்றி
ஒன்றே குறிக்கோள்
என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
போல
19.சமூக தொண்டு பரிவதில் அன்னை தெரசா போல
20.நல்வழிப்படுத்த நம்நாடு காக்க
கம்னியூஸ்டு தலைவர்
ஜூவானந்தம் போல
21.தேவைப்பட்டால்
நம் நாட்டைக் காப்பாற்ற
எதிரிகளிடம் அகப்படமால் எமர்ஜென்சி கொண்டு
வந்த இந்திராவைப்போல
மொத்தத்தில்
இன்று நம் எம்ஜி ஆர்
இதய தெய்வமாக.........
காட்சி அளிக்கிறார்.
-
அதற்கொரு நேரம்!
----------------------------------
கவிஞர் உடுமலை நாராயணகவி!
தமிழன்னையின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர்!
தஞ்சை ராமையா தாஸ்,,உடுமலைப் போன்றவர்கள் தாம் கவியரசருக்கும் முன்னர் திரையுலகின் தமிழ் ஜாம்பவாங்கள்!
மனிதர் மகா வம்பு பிடித்தவர்!
இவரிடம் எவரேனும் வாய் கொடுத்தால் போச்சு-அவரை-
வலிக்காமலேயே வானகம் அனுப்பி விடுவார்!!
தர்க்கம்--குதர்க்கம்-இரண்டுமே நிரம்பிய வர்க்கம்!
மெல்லிசை மன்னரும் வாலியும் ஒரு பாடல் கம்போஸிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலைப் பொழுது!
மெல்லிசை மன்னரின் முகம் திடீரென்று-
மின்சாரத்தை சாப்பிட்டது போல் ஆகிறது?
அவசரமாக வாலியிடம் சொல்கிறார்--
வாலி,,உடுமலை வருகிறார்,நீங்க அவர்க்கிட்ட வாய்க் கொடுத்து மாட்டிக்காதீங்க. மனுஷர் மகா வம்பு பிடிச்சவர்--
இதற்குள் அவர்கள் அருகே வந்துவிட்ட உடுமலையார் வாலியிடம் கேட்கிறார்--
என்ன வாலி,,சமீபத்துல நீங்க எழுதின பாட்டு ஒண்ணுல இலக்கணப் பிழை இருக்கே?
வாலியின் புருவங்கள் கேள்விக் குறியாக--
உடுமலையாரே தொடர்கிறார்--
எம்.ஜி.ஆருக்கு ஒரு பாட்டு எழுதியிருந்தீங்களே அதைக் கேக்கறேன்--
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்னு எழுதியிருக்கீங்களே? எம்.ஜி.ஆர் எப்படி அதை ஒத்துண்டார்?
நான் ஆணையிட்டால் அது நடக்கும்ன்னு தானே ஒரு ஹீரோ அழுத்தமாகச் சொல்லணும்?
நடந்துவிட்டால் என்று சந்தேகமா அர்த்தம் வரும்படி எழுதினது தப்பில்லையா??
உடுமலையாரின் அஸ்திரத்தால் சலனமடைந்த வாலி வஸ்திரத்தால் முகத்தைத் துடைத்தபடி சொல்கிறார்-ஏதோ எழுதிட்டேன். அதை விடுங்க. உங்கப் பையன் சந்தானகிருஷ்ணன் எப்படி இருக்கார்?
உடுமலையார் உதட்டில் சலிப்பைக் காட்டுகிறார்-
என்னமோ இருக்கான். சரியான வேலைக் கிடைக்கலே. நான் சொல்லற அட்வைஸ்களையும் கேக்காமல் ஊர் சுத்திண்டிருக்கான்-
இந்த பதிலுக்காகவேக் காத்திருந்தாற் போல் வாலி உடுமலையாரை மடக்குகிறார்--
தந்தை சொன்னால் மகன் கேட்டே ஆகணும் அல்லவா? நீங்க சொன்னதை அவர் கேக்கறதில்லேன்னு சொல்றீங்க. அதே மாதிரி தான்--ஒரு தலைவன் ஆணையிட மட்டும் தான் முடியும். அது நடக்கக் கூடியக் காலச் சூழல் அவன் கையில் இல்லையே??
நீங்க சொல்றதும் சரி தான் வாலி!--பலகீனமாக ஒப்புக் கொண்டு வாயடைக்கிறார் உடுமலையார்!
இல்லான் இரப்பதும்-
நல்லான் தவிப்பதும்
வல்லான் விதித்த வேடிக்கைச் சூழல் தானே!
வாலியின் பதிலை ஆமோதிப்பது உடுமலையார் மட்டுமல்ல நாமும் தானே???!!!.........
-
எனக்கு ஏன் எம்ஜியாரின் நடிப்பு பிடிக்கும்
சினிமா என்ற ஒரு கற்பனை உலகில் நான் பலதரப்பட்ட நடிகர்களின் அற்புதமான பல்வேறு நடிப்பு திறன்களை பார்த்து வியந்து இருக்கிறேன் .
என்னுடைய பார்வையில் தமிழ் நடிகர் திரு எம்ஜியார் அவர்களின்
30 வயதில் கதாநாயகன் - ராஜகுமாரி
37 வயதில் மலைக்கள்ளன் படத்தில் சிறப்பான நடிப்பு
41 வயதில் நாடே போற்றிய நாடோடி மன்னன் - இமாலய புகழ்
47 வயதில் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் சூப்பர் ஹிட்
50 வயதில் மரணத்தை வென்று - குரல் பாதிக்க பட்டு காவல்காரன் - மாபெரும் வெற்றி
50 வயதுக்கு பிறகு
ஒளிவிளக்கு
குடியிருந்த கோயில்
ரகசிய போலீஸ் 115
அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - இதயக்கனி
நீதிக்குதலை வணங்கு - மீனவநண்பன் - மதுரையை மீட்டசுந்தரபாண்டியன் வந்த படங்கள் ஒரு சரித்திர சாதனை படைத்தது .
இனி நடிப்புக்கு வருகிறேன்
நாடகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நடிப்பு துறையில் ஒருவகையில் உதவியது .
அவரது நடிப்பில் மிளிரும்
இயற்கையான முக பாவங்கள்
குரலில் சம சீரான வெண் குரல்
பல மாறுபட்ட வித்தியாசமான நடிப்பு .
எல்லாவற்றிகும் மேலாக
ரசிகனை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட
அவரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்
short & sweet காதல் - வீரம் - - காட்சிகள்
ரசிகனை 3 மணி நேரம் மகிழ்ச்ச்சியில் திளைக்க வைத்து மீண்டும் மீண்டும் அவரின் படத்தை பார்க்க வாய்த்த சாதுரியம் .
இந்த நிலையான புகழ் பெற்ற முதல் நடிகர் எம்ஜியார்
.
Uncomparabale Hero in the World Films History.........