யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு பற்றி உதயன் பத்திரிகை செய்தி
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...23&oe=5FA4158D
Printable View
யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு பற்றி உதயன் பத்திரிகை செய்தி
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...23&oe=5FA4158D
யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு பற்றி தினக்குரல் பத்திரிகை செய்தி
https://scontent.fymy1-1.fna.fbcdn.n...24&oe=5FA31E89
https://scontent-ort2-2.xx.fbcdn.net...26&oe=5FA11417
Thanks Vcg Thiruppathi
அவர்கள் அபிமான நடிகரை ஓட்டுக்காக வள்ளல் என்றும் வசூல் சக்கரவர்த்தி என்றும் வார்த்தை ஜாலத்தால் வளர்ந்து மக்களை போலி வாக்குறுதி மூலம் நம்பவைத்து மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்து விளம்பரமே இல்லாமல் உதவி செய்த நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும் வெற்றி படங்களை தோல்வி என்றும் முழங்கினர் அது அன்று சில பத்திரிக்கைகள் துணையுடன் பரப்பப்பட்டு அரசியலில் மட்டும் செல்லுபடியானது சினிமாவில் ஒன்றும் செய்யமுடியவில்லை ஆனால் இன்று அவர்களின் படம் டிஜிட்டலில் எடுத்தாலும் ஒரு படம் கூட சாதா தியேட்டரில் ஒரு வாரம் தாண்டவில்லை ஏ.சி.தியேட்டரில் பேருக்கு ஓட்டுகின்றனர் சினிமாவில் மோகம் குறைந்துவிட்டது அரசியலைப் பொறுத்தவரை அவர் படத்தை கூட போடுவதில்லை ஆனால் நடிகர்திலகத்துக்கோ சினிமாவில் டிஜிட்டலில் சாதா @ ஏ.சி.தியேட்டர்களிலும் ஓடி இன்றைய இளம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் வருடம் வருடம் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் போது செய்கின்ற அன்னதானம் பள்ளிமாணவர்களுக்கு நோட்புக் முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் மறைந்த தீவிர வறுமையில் உள்ள ரசிகர்களின் குடும்பங்களுக்கு பண உதவிகள் கூடிக்கொண்டே போகிறது கொராணா லாக்டவுன் காலத்தில் செய்த உதவிகளை பலதரப்பினரும் பாராட்டினர் இதையெல்லாம் செய்வதால் நடிகர்திலகத்துக்கு புகழ் கூடுகிறது என்ற சந்தோஷத்தை தவிர எதுவுமில்லை இந்த வருடம் பிறந்தநாள் உலகில் உள்ள தமிழ் ரசிகர்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதையெல்லாம் பொறுக்கமுடியாமல் சிலர் பொய்யை பரப்புகின்றனர் அது இன்று செல்லுபடியாகாது யாரும் நம்பமாட்டார்கள் நடிகர்திலகம் விளம்பரம் தேடா வள்ளல் அவரின் புகழ் வான் கடல் பூமி நீர் நெருப்பு உள்ளவரை பேசப்படும் நடிகர்திலகம் ரசிகனாக இருப்பதற்கு பெருமைப்படுவோம்
Thanks Durai Pandi
எனது பால்ய நண்பரும் எம்ஜிஆர் ரசிகருமான "ஸ்நேக் பாஸு' மீண்டும் மொபைல் போன் வழியாக அழைத்தார்,
என்ன விவாதத்திற்கு அழைக்கிறாரோ என்ற தயக்கத்துடன் நலமா என்றேன்,
ஹூம் ஹூம் நலம் தான் " என்ன உங்கள் தலைவருக்கு இன்னமும் பாரத ரத்னா கோரிக்கையை வெச்சுக்கிட்டே இருக்கீங்க" என்றார்,
"அது எங்களது கோரிக்கை இந்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் கோரிக்கையை வைத்து வருகிறோம்" என்றேன்,
"பார்த்தாயா நண்பரே எங்கள் தலைவர் மறைந்த அடுத்த வருஷமே பாரத ரத்னா கொடுத்தாங்க,
ஆனா உங்க தலைவர் மறைந்து 19 வருஷமா கண்டுக்காம இருக்காங்க"
என நம்மை கடுப்பாக்கும் கேள்வியை எழுப்பினார்,
சரி சரி உங்க எம்ஜிஆரும் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியும் அரசியலில் கூட்டணி வைத்திருந்த காரணத்தால் உடனடியாக கொடுத்திருக்கலாம் இதெல்லாம் ஒரு கேள்வியா என்றேன்,
இல்லை இல்லை எங்க தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் என புகழ்பெற்றவர் என்று தெனாவட்டு காட்டினார் பாஸு,
(அவனையெல்லாம் நண்பர் என்று சொல்லாதீர்கள் என்ற மைண்ட்வாய்ஸ் கேட்கிறது)
அடிக்கடி நண்பனுக்கு குழப்பம் வருவதுண்டு அதை நான் நீக்குவது தொடர்கதையான ஒன்று,
நான்:- பாஸு எம்ஜிஆர் எப்படி முதல்வர் ஆனார்?
பாஸு:- ஏழை எளிய மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்ததால் முதல்வராக ஜெயித்தார்,
நான்:- எந்த ஏழை எளிய மக்கள்??
பாஸு:- தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக எம்ஜிஆர்க்குத் தான் வாக்களித்து ஜெயிக்க வைத்தனர்,
நான்:- கரெக்ட் சரியாக சொன்னாய் பாஸு,
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, அரசியல் உரிமை பெற்றிட என சட்டம் இயற்றியவர் யார்?போராடிய தலைவர் யார்??
பாஸு:- இதெலென்ன சந்தேகம் " சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் " தான்
நான்:- அப்படியென்றால் பாரத ரத்னா விருது யாருக்கு முதலில் வழங்கி இருக்க வேண்டும்?
டாக்டர் அம்பேத்கருக்கா? எம்ஜிஆர் க்கா?
பாஸு:- இதிலென்ன சந்தேகம் டாக்டர் அம்பேத்கருக்குத் தானே வழங்கி இருக்க வேண்டும்,
நான்:- இல்லையே பாஸு எம்ஜிஆர் 1987 ல் மறைந்தார், அவருக்கு அடுத்த ஆண்டே 1988 ல் பாரத ரத்னா வழங்கி கௌரவித்தது மத்திய அரசு,
ஆனால் 1956 ல் மறைந்த டாக்டர் அம்பேத்கருக்கு 34 ஆண்டுகள் கடந்து வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த 1990 ஆம் ஆண்டின் போது தான் வழங்கி கௌரவித்தது மத்திய அரசு,
எனவே எங்கள் தலைவர் நடிகர் திலகத்தின் பெருமையையும் தேசபக்தியையும் உணர்ந்து கொள்ளும் பிரதமர் எதிர்காலத்தில் வருவார் நிச்சயமாக பாரத ரத்னா அலங்கரிக்கும் அதற்கான கௌரவத்தை பெறும்,
பாஸு:- புரிந்து கொண்டேன், மீண்டும் அடுத்த சந்தேகம் வராது என நம்புகிறேன்,
குட் பை,
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...ea&oe=5FA3F531
Thanks Sekar
பொதுவாக சிவாஜி சினிமாக்களை ஏழு வகையாக வகைப்படுத்தலாம்.. 1.புராண இதிகாசப்படங்கள்.. அதாவது திருவிளையாடல் - வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள்.. 2. நகைச்சுவை சித்திரங்கள்.. உதாரணமாக சபாஷ் மீனா - ஊட்டி வரை உறவு போன்ற படங்கள்.. 3. அடுக்குமொழி வசனங்கள் தெறிக்க விடும் படங்கள்.. பராசக்தி - மனோகரா போன்ற படங்கள்.. 4. மென்மையான பாசம் இழையோடும் குடும்பக் காவியங்கள் பாசமலர் - படிக்காத மேதை போன்ற படங்கள்.. 5. வித்தியாசமான முயற்சிகள் .. அந்த நாள் - புதிய பறவை படங்களைப்போல.. 6. சென்ட்டிமென்ட் கலந்த ஆக்ஷன் மூவிகள்.. சிவந்த மண் - ராஜா போன்ற படங்கள்.. 7. இந்த Category யில் எதிலும் இணையாத தில்லானா மோகனாம்பாள் - பாவை விளக்கு போன்ற புதினங்கள் மூலம் மலர்ந்த படங்கள்... 1952 முதல் 1978 வரையான படங்களை மட்டுமே வகைப்படுத்தி இருக்கிறேன்.. அதற்கு காரணம் உண்டு.. 1978ஆம் ஆண்டு முதல் இவருடைய சக போட்டியாளர் திரைத்துறையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.. இந்த ஏழு பிரிவுகளில் அந்த போட்டியாளர் சிவாஜியுடன் போட்டியிட்டது ஆறாவது Category யில் மட்டுமே.. அப்படி அந்த ஒரு பிரிவில் மட்டுமே போட்டியிட்ட நமது போட்டியாளரை எப்படி சக போட்டியாளர் என்று சொல்ல முடியும்? இருந்தாலும் நாம் சொல்லிக் கொள்வோம்.. அந்த ஆறாவது பிரிவில்தான் அவர் சில படங்களில் சாதித்து இருக்கிறார்.. அங்கேதான் பிரச்னையே.. அந்த பிரிவில் அவரது படங்களைப்போலவே நம்மவருடைய படங்களும் நல்ல வசூலுடன் ஓடும்போது அவர்களது கண்களை உறுத்துகிறது.. அப்போது அவர்கள் இரண்டு காரியங்களை செய்கிறார்கள்.. நமது படங்களை மட்டம் தட்டி பதிவது.. அவரது படங்களின் தவறான புள்ளி விபரங்களை அள்ளி வழங்குவது.. அவர்கள் படங்களில் ஏழெட்டு படங்களில்தான் சரியான விபரங்கள் இருக்கிறது.. நமக்கு அப்படியில்லை.. எல்லாம் வெட்ட வெளிச்சமாக உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.. இந்த ஒரே ஒரு Category யில் மட்டுமே நாம் "டஃப் ஃபைட்" கொடுக்கும் போது.. பாவம் என்ன செய்வார்கள்.. நம்மை கடித்துக் குதறத்தான் செய்வார்கள்.. ஆகவே நாம் அவர்களை புறந்தள்ளி விட்டு அனைத்து பிரிவுகளிலும் வென்ற ஒரு மனிதரை "எல்லோரும் கொண்டாடுவோம்"
Thanks Jahir Hussain
"ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணல்" என்று தமிழிலே ஒரு பழமொழி உண்டு.
அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நடிகர்திலகத்தின் எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் பொருந்தும்.
நடிகர்திலகத்தின் நடிப்புத் திறனுடன் இம்மியளவேனும் ஒத்துப்போகும் அளவுக்குக்கூட சுயதிறமை இல்லாதவர்கள் இவரின் திறமையான நடிப்பை மிகை நடிப்பு என்றும், இவரின் இடக்கரம் அறியாமல் ஈந்த வள்ளல் தன்மையை அந்நாளைய ஏடுகள் வெளிச்சம்போட்டுக் காட்டியதை சகிக்க முடியாததால், பின்னாளில் தங்கள் துதிபாடும் பத்திரிகைகள் மூலம் நடிகர்திலகத்தை கருமியென்றும், சிக்கனக்காரரென்றும் பழித்தும், இழித்தும் தினம் ஒரு தகவலாய் பதிவிட்டும் அவரின் புகழை ஒழித்திட முனைந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
அதைப்போல அவரின் திரைப்பட சாதனைகளைக் கண்டு பொறுக்க இயலாமல் வெற்றிபெற்ற இவரின் திரைப்படங்களையெல்லாம் தோல்வியென்றும், அவருக்கு நஷ்டம் இவருக்கு நஷ்டம் என்றும் இவர்கள் அங்கலாய்த்துக் கொண்டனர்.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா என்ன?!
எனக்குத் தெரிந்தவரை பராசக்தி, மனோகராவைத் தவிர ஏனைய படங்கள் அனைத்தையும் தோல்வியென்று பெரும்பாலும் கட்டுரை வடித்துவிட்டனர்.
அதற்கும் ஒரு படி மேலே போய் சென்னை சாந்தியில் ஓடிய வெற்றிப் படங்களையெல்லாம் அவர்களின் அரங்கில் ஓட்டிக் கொண்டார்கள் என்றும் புரளி பேச ஆரம்பித்தனர்.
உண்மையில் சாந்தி திரையரங்கம் நடிகர்திலகத்துக்குச் சொந்தமான அரங்கமாக இருந்தாலும் வெற்றிபெறும் படங்கள் மட்டுமே அங்கு ஓடியிருக்கும். தோல்விப் படங்கள் மூன்று நான்கு வாரங்களில் கழற்றப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக, பல படங்கள் அரங்கு நிறைந்த ஓட்டத்துடனே எடுக்கப்பட்டதை நினைத்து வருத்தப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்கள் ஏராளம்... ஏராளம்... உதாரணம், திரிசூலம். அத்திரைப்படம் ஓடிய 175 நாள்களில் 400 காட்சிகள்வரை அரங்கு நிறைந்து ஓடியும் அந்தப் படத்தை 200 நாள்கூட ஓடவிடாமல் அனாயசமாக எடுத்துவிட்டதை நினைத்து அன்றைக்கு வருந்தாத ரசிகர்களே இல்லை.
அது மட்டுமா... பட்டிக்காடா பட்டணமா, தங்க சுரங்கம், உத்தமன், தியாகம், தீபம் போன்றவை நல்ல கூட்டத்தோடு அனாயசமாக கழற்றிவிடப்பட்ட படங்கள்தான். இவற்றையெல்லாம் அதன்போக்கில் அப்படியே ஓடவிட்டிருந்தால் வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடியிருக்கும். இந்தப் பட்டியலில் கடைசி உதாரணம் முதல்மரியாதை... 200 நாட்களைக் கடந்திருக்க வேண்டிய படம்.
இந்நிலையெல்லாம் சிறிதும் உணராமல் எதிரிகள் பேசிய வசனங்கள் இரண்டே இரண்டுதான். 1.சொந்தத் தியேட்டரில் ஓட்டினார்கள் என்று ஓடிய படங்களையும், 2.அவர்கள் தியேட்டரிலேயே ஓட்டவில்லை... அப்படியானால் தோல்விப் படம்தானே! என்றும் இருவேறு கருத்துக்களை உமிழ்ந்துவிட்டு எளிதாக கடந்து போயினர்.
இதற்குத்தான் சொன்னேன். இக்கட்டுரையின் முதல் வாக்கியப் பழமொழியினை... " ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்று சொன்னாளாம்" என்று!
அலங்கார் மற்றும் சத்தியம் தியேட்டர்கள் சென்னையில் உருவாகும்வரை சென்னையில் அதிக இருக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய அரங்கம் சாந்தி மட்டுமே. மொத்தம் 1224 + இருக்கைகள். அதிலும் பால்கனியில் மட்டும் 433 இருக்கைகள். 2005 வரை, அதாவது சாந்தி திரையரங்கம் இரண்டாக மாற்றப்படும் வரை சென்னையில் சாந்திதான் பால்கனியில் அதிக இருக்கைகள் கொண்ட அரங்காகும்.
1961க்குப் பிறகு நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் அதனைப் பெரும்பாலும் சாந்தியில் திரையிடவே விரும்பினார்கள். காரணம், தினசரி வசூல் அதிகம் என்பதால் தங்களின் முதலீட்டை குறைந்த நாட்களிலேயே இத்திரையரங்கின் மூலம் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான். அதனால்தான் பெரும்பாலான படங்கள் அங்கு திரையிடப்பட்டன. ஓடின... வசூல் ஈட்டின... ரசிகர்களும் இந்த அரங்கில் படம் பார்ப்பதை ஒரு கௌரவமாகக் கருதினர்.
மேலும், இங்கு திரையிடப்பட்ட படங்களில் ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான படங்கள் பிற விநியோகஸ்தர்கள் திரையிட்டவைதான். நடிகர்திலகம் சார்பில் எந்த விநியோகஸ்தரை மிரட்டியும் தமது அரங்கில் படங்களைத் திரையிடச் சொன்னதுமில்லை. மற்றவர்களைப்போல என் படத்தை இத்தனை நாட்கள் இங்கு ஓட்டியே ஆகவேண்டும் என்று கட்டளை இட்டதுமில்லை. திரையிடுவதும் ஓட்டுவதும் விநியோகஸ்தர்கள் விருப்பமே. இலாபமும் நஷ்டமும் அவர்களின் பொறுப்பே.
சென்னையில் எல்லா நடிர்களுக்குமென்று சில ஆஸ்தான அரங்குகள் எப்போதும் உண்டு. அவற்றில்கூட எவருக்கும் 20, 25 படங்கள்கூட அவர்களின் ஆயுளில் நூறுநாள் ஓடியதில்லை. சென்னை மாநகரில் ஒரு தனியரங்கில் 41 படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனைபுரிந்தது என்பது நடிகர்திலத்துக்கு மட்டும்தான். அது ரசிகர்களின் ஆஸ்தான அரங்மான சாந்தி அரங்குதான்.
இதையெல்லாம் மறைத்து விட்டுத்தான் சாதனை சாதனை என்று எல்லோரும் தங்களைத் தாங்களே போற்றிக் கொண்டும், உண்மையான சாதனையாளரை ஓட்டினர்... தேய்த்தனர் என்றும் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள்! என்னதான் பொய்களால் தோரணம்கட்டி புலம்பினாலும் உண்மையை மறைக்க இயலாதே!
ஆம்., சூரியனை மூடி வைக்க மேகங்களால் ஆகாதே..!
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...12&oe=5FA2B5A0
Thanks Nilaa
......................................
பின்னூட்டம்
தயாரிப்பாளர் காசில் ஊருக்கு செய்து பேர் வாங்கிய நபரின் ஊதுகுழல்கள் என்ன செய்யும்.T R
................................................
முதன் முதலாக தான் தயாரித்த சொந்தப் படமான புதிய பறவையையே தன் சொந்த தியேட்டரில் வெளியிடாமல் பாரகன் தியேட்டரில் வெளியிட்டவர் நடிகர் திலகம். M T
பெங்களூரில் நடிகர் திலகம் பிறந்த நாள் விழா!!
பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கும் காட்சி,
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...bd&oe=5FA38BA9
https://scontent-ort2-2.xx.fbcdn.net...c3&oe=5FA53B61
Thanks Sekar.P
09-10-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
மிருதங்க சக்கரவர்த்தி-...................... 1:30 pm ராஜ் டிவி,
விடிவெள்ளி-.......................................... 1:30 pm வசந்த் தொலைக்காட்சி,
பணம் -.................................................. .. 3:30. pm முரசு தொலைக்காட்சி,
பந்தம் -.................................................. .. 7:30 pm வசந்த் தொலைக்காட்சி,
பாலும் பழமும் -.................................... 10 pm - ஜெயா மூவியில்,
Thanks Sekar.P
நடிகர் திலகம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!!
புதுவை
கிழக்கு கடற்கரை சாலை,
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...fd&oe=5FA57CA0
Thanks Sekar.P
நடிக சிற்றரசர் எம்ஜிஆர் என்ற குழுவில் உத்தம புத்திரன் திரைப்படத்தை விட நாடோடி மன்னன் பெரிய வெற்றி பெற்றதாக அளந்து விட்டிருந்தனர், உத்தம புத்திரன் சிறிய வெற்றி பெற்றதாக உளரிக் கொட்டியும் இருந்தனர்,
நாங்கள் நாடோடி மன்னன் திரைப்பட வெற்றியை பற்றி குறைத்து சொல்லுவதுமில்லை, நடிகர் திலகம் ரசிகர்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் இல்லை,
அவர்களது தகவல் என்பது அறியாமையின் வெளிப்பாடு,
உத்தம புத்திரன் 07 பிப்ரவரி 1958
நாடோடி மன்னன்- 22 ஆகஸ்ட் 1958
ஏறக்குறைய ஆறு மாத கால உத்தம புத்திரன் இரட்டை வேட வெற்றி விளம்பர பிரபலத்தை பயன்படுத்திக் கொண்டு தான் நாடோடி மன்னன் வந்தது,
குறிப்பாக உத்தம புத்திரன் திரைப்படத்தை மக்கள் எவ்வாறு ரசிக்கின்றனர் என்பதை காண சென்னை காஸினோ திரையரங்கிற்கு எம்ஜிஆர் நேரிடையாக சென்றார் என்பது நடந்த வரலாறு,
நாடோ மன்னன் வெற்றியை உறுதி செய்ய உத்தம புத்திரன் படத்தை போலவே காட்சிகள் மீண்டும் உருவாக்கப்பட்டது,
உத்தம புத்திரன் திரைப்படத்தைக் காட்டிலும் நாடோடி மன்னன் பெரிய வெற்றி பெற்றது என சொல்வது என்பது எதுபோல என்றால்
ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தை அஜித் நடிக்க "ரீ மேக் பில்லா" வெற்றி பெற்றது போலத் தான்,
அச்சாரம், ஆணி வேர், பென்ச் மார்க் என்பது தான் முக்கியம்,
புரிந்து கொள்ளவும் நடிக சிற்றரசர் குழுக்காரரே,
Thanks Sekar .P
(மேற்படி பதிவிற்கான சில பின்னூட்டங்கள்)
இதற்க்கு நான் ஒரு உதாரணம் காட்ட வேண்டும் உத்தம புத்திரன் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதை விட்டு தள்ளுங்கள் அண்டை மாநிலமான கர்நாடகவில் பெங்களூரு மற்றும் மைசூர் ராஜ் கமல் திரையரங்கில் 102 நாட்கள் ஓடியது அவர்கள் படமோ வெறும் 6 வாரங்கள் மட்டும் என்ன வித்தியாசம் இப்பொழுது கூறட்டும் எது வெற்றி பெற்ற படம் எது தோல்வி படம் என்று(n r )
அது மட்டுமல்ல. அடுத்து வந்த சொந்தப் படம் July ஆகஸ்ட் 15 தீபாவளி கிறிஸ்மஸ் பொங்கல் தமிழ் வருட பிறப்பு என்று ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் காத்திருக்க இறுதியில் மே 1 அன்று தான் ரிலீஸாகிறது. அதற்குப்பின் ஆறு மாதத்திற்கு மேல் தான் நடித்த எந்தப் படத்தையும் release ஆகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. ரிலீசுக்கு முன்னும் அப்படியே. அப்படியும் படத்தை ஓட்டு ஓட்டு ஒட்டப்பட்டது தான். இருந்தும் மொத்தத்தில் தோல்வி படம்தான் என்பது தன் சுய தொடரில் சொல்லப்பட்ட செய்தி வந்ததுண்டு. இது போன்ற படங்களை போட்டி படங்களாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படியும் எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூல் சாதனை யில போட்டியில் தோல்வி தான். குழந்தைகள் பிடிக்கும் அம்புலிமாமா பத்திரிக்கை வரை அதிக அளவில் விளம்பரம் கொடுத்து ரசிகர்களின் காக்க வைத்து போன்ற உத்திகளால் நம்ம வரை வெல்ல முடியு வில்லை. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை சாக்கடைக்குதான் விளம்பரம் என்று சிவந்த மண் படம் வெளிவருவதற்கு முன் கொடுக்கப்பட்ட செய்தி நினைவிருக்கா லாம்.(S R)
அடிமைப்பெண் 1969. ஆறு மாதங்கள் கழித்து நம்நாடு.
உலகம் சுற்றும் வாலிபன் 1973. ஆறு மாதங்கள் கழித்து பட்டிக்காட்டுப் பொன்னையா.( j j)
இதில வேற ஜம்பம் பேசுவார்கள்
திரை உலக முடிசூடா மன்னன் சிவாஜியை(ஏதேனும் ஒரு பாத்திரத்தில்) பின்பற்றி நடிக்காத நடிகர் எவருமில்லை. இதில் எம்ஜிஆர் மட்டும் என்ன விதிவிலக்கு?
(l-u k )
நடித்ததெல்லாம் தமிழக அரச கதைகள் , ஆனால் உடையெல்லாம் ரோமானிய , கிரேக்க அரசருக்குள்ளான ஆடைகள்.
எந்த பாண்டியனும் சோழனும் இப்படி மினிஸ்கர்ட் அணிந்து நின்றான்? எந்த தமிழ் மன்னன் குட்டை பாவாடையினை அணிந்திருந்தான்?
தமிழ் அரசர்கள் வேட்டி அணிந்து நெற்றியில் நீறு பூசி , கொண்டையிட்டு தலையிலும் கழுத்திலும் மாலை சூடி, மார்பெல்லாம் சந்தணம் பூசி வலம் வந்தனர்
அந்த காட்சிகளை அப்படியே வைத்தால் தமிழன் ஒரு இந்து என்பதை மக்களிடம் ஒப்புகொண்டதாகிவிடும் என அஞ்சிய திராவிட கும்பல் ஏதோ கான்வென்ட் குழந்தையின் ஸ்கர்ட்டை மாட்டி கொண்டு நடிக்க வந்துவிட்டது
முதுகில் தொங்க வண்ணாந்துறையில் எடுத்து வந்த ஒரு ஜமுக்காளம் வேறு
அதை கைதட்டியும் ரசித்தான் தமிழன், அவனின் அறிவும் தன் இனமான வரலாறும் அப்படி இருந்திருக்கின்றது
Thanks S.Rajan
தமிழ் சினிமாவில் சின்னப்பதேவருக்கு இருந்தது போலவே ஒரு வரலாறு பி.ஆர் பந்தலு என்பவருக்கும் உண்டு
இருவரும் ஒன்றுமே இல்லாமல் வந்து தயாரிப்பாளராக உயர்ந்து அழியா படங்களை கொடுத்தவர்கள்
இன்று அந்த பந்தலுவின் நினைவு நாள்
வீரபாண்டிய கட்டம்பொம்மன் போன்ற மிக சிறந்த படங்களை அவர்தான் அன்றே பெரும் பொருட்செலவில் தயாரித்து தந்தார், அதை மறக்க முடியாது
அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார்
ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது
கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை
சிவாஜி மேல் மிக பிரியமும் உரிமையும் கொண்டிருந்தவர் பந்தலு
அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் போன்ற காவிய படங்கள் எல்லாம் வந்தன, இயக்கி தயாரித்தவர் பந்துலு
பராசக்திக்கு பின் சிவாஜி கடும் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார் அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கணேசன் தான் எல்லா தயாரிப்பாளர் படத்திலும் நடிக்குது என புலம்பிகொண்டிருந்தார் ராமசந்திரன் எனும் நடிகர்
சிவாஜிக்கு நடிக்க தெரியுமே தவிர அரசியல் தெரியாது, ஆனால் ராமசந்திரனுக்கு நடிக்க தெரியாதே தவிர யாரை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் , எப்பொழுது விரட்ட வேண்டும் , எதை எப்படி பிரிக்க வேண்டும் என்ற அரசியல் அத்துபடி
ஒருவரை கணித்துவிடுவதில் ராமசந்திரன் கெட்டிக்காரர்
அப்படித்தான் சின்னப்பா தேவரை கடைசி வரை சிவாஜியினை நெருங்கமுடியாமல் கட்டுபடுத்தி வைத்திருந்தார் ராமசந்திரன், இருவரும் ஒரே சாதி என்றாலும் சிவாஜி பக்கம் தேவரால் செல்ல முடியவில்லை
அப்படிபட்ட ராமசந்திரன் பந்துலுவிற்கும் ஸ்கெட்ச் போட்டார், எப்படி?
ஏதோ வருத்ததில் பந்துலுவும் சிவாஜியும் இருந்தபொழுது ராமசந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது
அது முரடன் முத்து தொடர்பான சர்ச்சை, சிவாஜிக்கு 100ம் படம் என அவர் சொல்லிகொண்டிருக்க, சிவாஜிக்கு முரடன் முத்துதான் 100ம் படம் , நடிகனுக்கு தன் பட கணக்கு தெரியாதா என பந்துலு சொல்லிவிட இருவரும் பிரிந்தனர்
கிட்டதட்ட இளையராஜா வைரமுத்து பிரிந்தது போன்ற நிலை அது
அந்த கட்டத்தில் ராமசந்திரன் புகுந்தார், யாரிடமும் வலிய செல்லாத ராமசந்திரன் பந்துலுவினை கட்டி பிடித்து அண்ணா என அலறினார்
இதில் சிவாஜி பந்துலு நட்பு முறிந்தது
ராமசந்திரனின் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் வர ஆரம்பித்தன, ராமசந்திரனின் கணக்கு தப்பவில்லை, ராமசந்திரன் வெற்றிபடிகளில் வேகமாக ஏறினார்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை பந்துலு இயக்கிகொண்டிருந்த பொழுது மரணம் அடைந்தார், அதற்கு ராமசந்திரனின் மேக் அப் காரணமாக இருக்கலாம்
அந்த படத்தை பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும், அதைவிட கொடுமை ராம்சந்தரின் வசனம்
அந்த முகத்தை படம்பிடித்த அதிர்ச்சியில் பந்துலு உயிர் துறந்திருக்கலாம்
காரணம் இல்லாமல் இல்லை,
சிவாஜியினை கட்டபொம்மனாக, வஉசியாக அச்சு அசலாக காட்டிய பந்துலு, ராமசந்திரனை சுந்தரபாண்டியனாக காட்ட முடியாமல் உயிர்விட்டிருக்கலாம்
"அடேய் ராமசந்திரா இது உனக்கு சரிவராத வேடம், சிவாஜிக்கு பொருந்த கூடிய வேடம் சண்டாளா.." என சொல்லமுடியா நிலையில் அவர் இதயம் மாரடைப்பால் நின்றிருக்கலாம்
எதை எல்லாமோ கெடுத்த ராமசந்திரன் பந்துலுவினையும் கெடுக்க தவறவில்லை
Thanks S.Rajan
நாம சிவந்த மண் வசூல் விவரத்தை வெளியிட்டால்
எதிர்கோஷ்டியான உலக சிற்றரசு எம்ஜியார் குழு வசதியா அடிமைப்பெண் வசூலை எடுத்து வருகிறது
போட்டியாக வந்த நம் நாடு போனியாகவில்லைப் போல??
Thanks Sekar .P
..........................
பின்னூட்டம்
அது போல சென்னை தேவி பாரடைஸில் ராஜா, நீதி படங்களின் வசூலை ஒப்பிட ரிக்ஷாக்காரன் வசூல் விளம்பரத்தை தான் தூக்கி வருகிறார்களே தவிர, ரிக்ஷா வுக்கும் ராஜா வுக்கும் இடையே வந்த அவர்களது பிரம்மாண்ட, இரட்டை வேட , வண்ணப் படமான 'நீரும் நெருப்பும்' படத்தைப் பற்றி மூச்சு விட மாட்டேங்கிறார்கள். ஏனென்றால் அது டப்பாவாகி போன படம் என்பது தெரிந்ததே. (M.T)
9
பின்னூட்டம்
நீங்கள் குறிப்பிட்டது போல எதற்கெடுத்தாலும் உ.சு.வா, உ.குரல், அ.பெண், மா.வேலன், எ.வீ.பிள்ளை மட்டுமே
மற்ற படங்கள் எல்லாம் வசூலில் போனியாகாதவை என்று உறுதிப் படுத்திக் கொள்கின்றனர்(s.p)
மேற்படி பதிவில் வாத்தி சீடர் ஒருவர் ரிக்*ஷாகாரன் வசூல் முறியடிக்கவில்லை என
எழுதியதற்கான ஒருபின்னூட்டம்
அதெல்லாம் நீங்களாக பரப்பி விட்ட வெறும் மாயை,
உண்மையில் ரிக்ஷாக்காரன் வசூலை பட்டிக்காடா பட்டணமா படம் முறியடித்து விட்டது. அதை விட வசந்த மாளிகை வசூல் அதிகம். வசந்த மாளிகையை விட தங்கப் பதக்கம் வசூல் அதிகம். எனவே எம்.ஜி.ஆர். பட உலகில் இருக்கும் போதே ரிக்ஷாக்காரன் மூன்று படங்களால் முறியடிக்கப்பட்டு விட்டது.(m. T)
முதலில் ரிக்ஷாக்காரன் என்றீர்கள். அது முறியடிக்கப்பட்டு விட்ட விவரம் சொன்னதும் உடனே உலகம் சுற்றும் வாலிபனுக்கு தாவி விட்டீர்கள்.
விக்கிபீடியா ஒன்றும் வேத புத்தகம் அல்ல. அதிலும் பல தப்பும் தவறுகளும் உள்ளன.(M T )
உ சு வாலிபன் வசூலை தங்கப்பதக்கம் பந்தாடிவிட்டது
நடிகர் திலகம் தனது முதல் படத்திலேயே இமயம் தொட்டவர்.
எம்.ஜி.ஆர் 1936 ல் நடிக்க வந்தார்.விலாசமின்றி இருந்தார்.
திமுக என்ற கட்சியின் மூலம் புகழ் பெற்றார்.இல்லாவிட்டால் விலாசமின்றி போயிருப்பார். (sub..)
அங்கே நம்நாடு 52 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதாக கதை விட்டிருந்தார் ஒருவர். நான் சிவந்த மண் 37 இடங்களில் 50 நாட்கள் ஓடிய விளம்பர ஆதாரத்தை பதிவிட்டு, அதே போல் நம் நாடு 52 இடங்களில் 50 நாட்கள் ஓடிய விளம்பரத்தை பதிவிடச் சொன்னேன். கோழைகள் என் கமெண்ட்டையே நீக்கி விட்டனர். அப்படீன்னா நம்நாடு 20 இடங்களில் கூட 50 நாட்கள் ஓடவில்லை.
அத்தனையும் பொய், பொய் , பொய்.( m .t )
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...78&oe=5FA5381B
Thanks Subbiah
தமிழகத்தில் ஒன்றல்ல, நான்கு திரையரங்குகளில் 100 நாட்களில் நடை பெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல். இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை. அரங்குகளின் விவரம்
சென்னை - சாந்தி - 315 காட்சிகள் - 105 நாட்கள் அனைத்து காட்சிகளும் புல்
சென்னை - கிரவுன் - 313 காட்சிகள் - 105 நாட்கள் அனைத்து காட்சிகளும் புல்
சென்னை - புவனேஸ்வரி - 318 காட்சிகள் - 106 நாட்கள் அனைத்து காட்சிகளும் புல்
மதுரை - சிந்தாமணி - 401 காட்சிகள் - 120 நாட்கள் அனைத்து காட்சிகளும் புல்
12. திரிசூலம் சென்னை நூறாவது நாள் போஸ்டரில் 100 நாட்களில் 900 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்தது என்ற விளம்பர வரிகள் தமிழ் சினிமாவிற்கு ஒரு முதல் அனுபவம். இந்த மூன்று அரங்குகளுமே 1000 இருக்கைகளுக்கு மேல் இட வசதி உள்ள பெரிய அரங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயத்தில் சென்னையையும் விஞ்சியது மதுரை.
13. திரிசூலம் மதுரை சிந்தாமணியில் முதல் 120 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. இன்று வரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனை.
Thanks Subbiah
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...88&oe=5FA6C212
Thanks Vcg Thiruppathi
https://scontent.fymy1-1.fna.fbcdn.n...ee&oe=5FA5CBEC
Thanks Vcg Thiruppathi
ரசிகர்களின் உள்ளங்களைத் திருடியவன். கோட்டை மதில் மேலே - ஸ்டைலின் இன்னொரு பரிமாணம். சசிகுமார் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம். மன்னரின் பின்னணி இசையில் மிரட்டிய படம்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...82&oe=5FA7DF2D
Thanks Vee Yaar
உலகம் சுற்றும் வாலிபன் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்று தான் நினைத்து வந்தேன்,
ஆனால் நம்ம உலக சிற்றரசர் எம்ஜிஆர் குழு அட்மின் கொடுத்து வரும் புள்ளி விவரங்களோ உலகம் சுற்றும் வாலிபன் கூட நஷ்டத்தை பெற்றது என்பதை நாசூக்காக சொல்லி வருகிறார்,
சிவந்த மண் நஷ்டம் என பொய்ப் பிரச்சாரம் செய்ய முயன்று அது உலகம் சுற்றும் வாலிபன் வரை வந்து நிற்கிறது,
எப்படி?
இந்த எம்ஜிஆர் குழு ஆடிட்டர்கள் கொடுக்கும் கணக்கு சிவந்த மண் தயாரிப்பு செலவு 80 லட்சமாம்??
( சித்ராலயா நிறுவனம் கொடுத்த தோராய தயாரிப்பு என வெளியான அறிவிப்பு 18 லட்சம் ரூபாய் அது 10% கூடவோ குறையவோ செய்யலாம் அப்படி பார்த்தால் சிவந்த மண் தயாரிப்பு செலவு 20 லட்சங்கள், படம் முதல் ரவுண்டிலேயே செய்த வசூல் தொகை 50 லட்சங்கள் அதற்கான வசூல் முழு விவரங்கள் ஏற்கனவே காட்டியிருந்தோம்)
சிவந்த மண் நஷ்டமடைந்திருக்குமா?
சரி
1969 ல் வெளியான சிவந்த மண் திரைப்படம் ஒரு பகுதி மட்டுமே அயல்நாடுகளில் படம் பிடிக்கப்பட்டது, பெரும்பகுதி சென்னை மற்றும் அதை சுற்றியே படமாக்கப்பட்டது
அதற்கே உங்கள் கணக்குப்படி ரூ 80 லட்சங்கள் என்றால்,
1973 ல் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படம் முழுவதுமே பல நாடுகளில் படமாக்கப்பட்டது, ஜப்பானில் எக்ஸ்போ 70 ஐ பல சிரமங்களுக்கிடையே பல மடங்கு பண விரயத்திற்கிடையே பல கேமராக்கள் கொண்டு படம் பிடிக்கப்பட்டது என இந்த ஆடிட்டர்கள் பெருமை பேசுவதும் உண்டு,
அத்தனை மெனக்கெடுதல் இருந்த உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு செலவு நிச்சயமாக சிவந்த மண் தயாரிப்பு செலவை காட்டிலும் பத்து மடங்கு அதிகம் இருக்கும், அதாவது 8 கோடியை தாண்டி இருக்கும்??
அப்படி கணக்கு பார்க்கும்போது
சிவந்த மண் தயாரிப்பு செலவு - ரூ 80 லட்சம்
வசூலான தொகை- ரூ50 லட்சம்
எம்ஜிஆர் குழு ஆடிட்டர்கள்
கணக்குப்படி நஷ்டம்- ரூ 30 லட்சம்,
உலகம் சுற்றும் வாலிபன்
தயாரிப்பு செலவு - ரூ 800 லட்சம்
வசூலான தொகை - ரூ 132 லட்சம்
எம்ஜிஆர் குழு ஆடிட்டர்கள்
கணக்குப்படி நஷ்டம். ரூ 668 லட்சங்கள்
அடேங்கப்பா உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை எத்தனை வடக்கயிறு போட்டு இழுத்தாலும் சரி
ஸ்ட்ரெச்சரில் ஏற்றி தள்ளிச் சென்றாலும் போட்ட காசு வந்திருக்க எந்த விதத்திலும் வாய்ப்பே இல்லையே,
எதுக்கு இப்படி நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களை மட்டம் தட்டும் வேலையை ஆரம்பித்து உங்களது பெரிய வெற்றிப் படம் என நினைத்து வரும் உலகம் சுற்றும் வாலிபனில் மாட்டிக் கொள்ளலாமா?
உங்களுக்கு ஒரே வழி தான் இருக்கிறது
சிவந்த மண் தயாரிப்பு செலவு 20 லட்சம் என ஏற்கும் பட்சத்தில் உலகம் சுற்றும் வாலிபன் குறைந்த பட்சம் 2 கோடி என்ற தயாரிப்பு செலவில் நின்று ஓரளவு மறு வெளியீட்டில் போட்ட முதல் கிடைத்தது என சமாதானம் கொள்ளலாம்,
இல்லை இல்லை சிவந்த மண் நஷ்டம் என சொல்ல ஆசைப் பட்டால் உலகம் சுற்றும் வாலிபன் 6 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது என்ற யதார்த்தமான உண்மையை ஏற்கத் தான் வேண்டும்,
(சிவந்த மண் தயாரிப்பு செலவு,
சிவந்த மண் முதல் வார வசூல், முதல் சுற்று வசூல் விபரங்கள்,
உலகம் சுற்றும் வாலிபன் ஒட்டுமொத்த வசூல்
சிவந்த மண் தயாரிப்பு செலவு 80 லட்சம் என்ற எம்ஜிஆர் ஆடிட்டர் பதிவு செய்தது என இணைப்புகள் உள்ளன,)
எனக்கும் கூட இந்த உலக சிற்றரசர் எம்ஜிஆர் குழுக்காரர் மூலம் சில விவரங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதை மறுப்பதற்கில்லை,
Thanks Sekar Parasuram
............................
பின்னூட்டங்கள் சில
அவரின் கைத்தடிகளும்
இந்த படத்திற்கு
இலவச விளம்பர உதவி செய்து
டோப்பாவின்
டப்பா படத்தை
டாப்பாக்கி விட்டார்கள்(RK)
............................
சரியான பதிவு. உங்கள் பதிவு அந்த மூடர் கூட்டத்திற்கு தெரியனும். நாமெல்லாம் தினந்தோறும் வசூல் விசாரிக்கவே படத்திற்கு செல்வோம். நினைவூட்டுங்கள்.( G R )
..............................................
Raja Vel
உலகம் சுற்றும் வாலிபன் தோல்விப் படம் என்று நாங்கள் சொல்லவில்லை
எம்ஜிஆர் ரசிகர்கள் குழு ஒன்று மறைமுகமாக சொல்கிறது
பதிவை நன்றாக உள்வாங்கி யோசியுங்கள்
சிவந்த மண் 80 லட்சம் என்றால்
உலகம் சுற்றும் வாலிபன் எவ்வளவு செலவாகி இருக்கும்?
ஒரு வேளை எம்ஜிஆர் இந்தியன் ரூபாயிலேயே ஜப்பானில் செலவு செய்து இருப்பாரா? (S P
பின்னூட்டங்கள் சில
narasimhanRaam naalai innum oru periya list eduthu vaaren(Rai vel)
................
Raja Vel OK My dear friend I am waiting for that now we are gathering your actor complete running and collection reports very soon it will be proved with evidence (Narasimhan)
1969 ல் நடந்த ஒரு விடயத்தை இன்றையகாலகட்டத்தில்(1969ற்கு பின்னர் சீர்திருத்த எழுத்து வந்தபின் ) எழுதும்பொழுது
புதிய சீர்திருத்த எழுத்தில்தான் எழுதமுடியும்.அதிபுத்திசாலிக்கு ஏனோ மூளை வேலை செய்யவில்லைபோலும்
சிவந்த மண் டிக்கட் விபரம் எழுதியவர் இப்போது வெளிவரும் எந்த ஒரு படமும் 100 ரூபாய் டிக்கட்டை 3000 ரூபாய்க்கு விற்றால்தான்
சிவந்தமண் டிக்கட் விற்ற சாதனையை முறியடிக்கமுடியும் என்ற சாரப்பட எழுதியிருக்கிறார்.
இதன்மூலம் சிவந்தமண் டிக்கற் விபரத்தை எழுதியவர் படங்களின் டிக்கற் விலை 100 ரூபாய் விற்ற காலத்தில் எழுதியுள்ளார்
என்பது தெரிகிறது. அதாவது அந்த காலகட்டத்தில் சீர்திருத்த எழுத்து நடைமுறைக்கு வந்துவிட்டது.
எனவே அதி புத்திசாலிகள் முழுவதையும் உள்வாங்காமல் எங்கே குற்றம் காணலாம் என அலைகிறார்கள்போலும்.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...43&oe=5FA60D42
# 469 ம் பதிவிற்கான பின்னூட்டங்கள் சில
.................................................. ........
Rai vel பெங்களூரு லட்சணம் தெரியுமா உங்களுக்கு உங்கள் ஆக்டர் படம் இரண்டு வாரங்கள் தான் ஆனால் சிவாஜியின் படங்கள் பல படங்கள் 100 நாட்களை கடந்துள்ளன பெங்களுரில் மட்டும் இல்லாமல் மைசூர்லும் பல படங்கள் 100 நாட்கள் சிவாஜியின் படங்கள் கடந்து வெற்றி வாகை சூடி உள்ளது (narasimhan)
................................................
கும்பகோணம் விஜயலட்சுமி தியேட்டரில் நம் நாடு படம் 70 நாட்களுக்குப் பின் ஒரு ஷோவுக்கு 15 பேர், 20 பேர் வைத்து ஓட்டப்பட்டது. பட்டுக்கோட்டை முருகையாவிலும் இதே நிலைதான். 100 நாட்கள் இழுக்க முடியாமல் தூக்கினர்.(M T)
.......................................
கும்பகோணம் வசூல் பற்றிய புள்ளி விவரங்களுடன் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம், ஆனால் அவர்கள் மொட்டையாக கும்பகோணத்தில் நம் படம் தான் அதிக வசூல் என போகிற போக்கில் சொல்லி விடுகின்றனர்,(S P )
..................................
கணக்குல படுவீக்கானவனக் கொண்டு கட்சியின் பொருளாளராப் போட்டு கட்சி மாநாட்டுக்கணக்க கேக்கப்போய் கட்சில இருந்தே தூக்கி வீசப்பட்டவனிடம் போய் நாம கணக்கக் கொடுத்தா அவன் மண்டைக்கு என்னிக்கு ஏறும்?( S N )
# 469 ம் பதிவிற்கான பின்னூட்டங்கள் சில
உலகம் சுற்றும் வாலிபன் சுமார் 6 மணி 30 நிமிடங்கள் ஓடககூடிய படமாக எடுக்க பட்டுள்ளது என்ற பெருமை சிறப்பை அவர்கள் பதிவாகிய படம் எடுக்கப் பட்டு கதையில் உள்ளது . மிகவும் பல இன்னல்களை சந்தித்து தான் தயாரித்து வெளியிட்ட படம் என்று அவர்கள் கதையில் உள்ளது. சுமார் 2பட தயாரிப்பு செலவு செய்யப்பட்ட படம். எங்கப்பன் குதிறுக்குள் இல்லை என்பது போல் உள்ளது. ஒரு பட முதல் வசூல் திணறும் போது 2 பட அளவில் எடுக்கப்பட்டு edit செய்பட்டு வெளியிடப்பட்ட படத்தின் நஷ்ட கணக்கை நினைத்து கூட பார்க்க முடியாது. அந்நிய செலாவணி பிரச்சனை கதை வேறு. அவர்கள் கதையே பல உண்மை சொல்லி உள்ளது .புதிய பதிவில் நீங்கள் சொல்வது போல் மறைமுக தோல்வி உறுதி ஆகிறது. நன்றி.(S Radhakrishnan)
டக்கென்று இப்படி கேட்டுட்டீங்களே சார்?
அவங்க ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் உதார் விட்டு வருபவர்கள்,
இத்தனைக்கும் அவர் உரிமைக்குரல் மாதழ் இதழ் வேறு நடத்தி வருபவர், அவரிடமே ஆதாரம் இல்லாத போது என்ன செய்ய முடியும்?
அப்போ எல்லாம் அவர்களால் எந்தப் பொய்த் தகவல்களையும் எளிமையாக பிரச்சாரம் செய்து கொள்ள வசதி இருந்தது,
ஆனால் இப்போது டிஜிட்டல் யுகம் ஆதாரங்கள் வேண்டுமே,
இப்படி எல்லாம் கேட்டா பதிவை நீக்குவது தானே ஒரே வழி,
https://scontent-ort2-2.xx.fbcdn.net...6d&oe=5FA776F3
Thanks Sekar P
..............................
பின்னூட்டங்கள் சில
சேகர் சார்.. வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க.. இவ்வளவு கிடுக்கிப்பிடி போடுவீங்கன்னு அவர் எதிர்பார்க்கவில்லை.. ஸோ.. Great Escape...( J H )
..........................
! உண்மை தான் சார்
வெச்சுகிட்டா வன்ஞனை செய்யப் போறாங்க?
(S P )
............................
டிஜிட்டல் யுகம் என்பதைவிட இது சத்தியயுகம். இனிமேல் இங்கு பொய்மைகளுக்கு வேலை இருக்காது! (V v)
...........................
நடிகர் திலகம் நடித்து 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் பல படங்களுக்கு விழா கொண்டாடப்பட்டு படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு ஷீல்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விட பல படங்களுக்கு (100 நாட்களுக்கு மேல் ஓடியும்) விழா கொண்டாடப்படவில்லை. பரிசுக் கேடயங்களும் வழங்கப்படவில்லை. இதை இங்கே பதியக் காரணம், 'அங்கே' சிற்றரசர்குழுவில் அவங்க ஆட்கள் சில விழாக்களை ரத்து செய்து விட்டதாகவும், நடிகர் திலகம் ஒன்றிரண்டு தியேட்டர்களில் படம் ஓடியிருந்தாலும் விழாவில் ஓடி ஓடி கலந்து கொள்வதாகவும் எழுதியுள்ளனர். நடிகர் திலகம் நடித்த பாதிக்கு மேற்பட்ட படங்களுக்கு விழாவே நடக்கவில்லை. இது ரசிகர்களுக்கும் , அதைவிட படக்கலைஞர்களுக்கும் ஏமாற்றமே.
பீம்சிங் இயக்கிய பாவமன்னிப்பு, பாசமலர் படங்களுக்கு விழா நடந்தது. ஆனால் பத்து அரங்குகளில் 100 நாட்கள் கண்ட பாலும் பழமும் படத்துக்கும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் விழா நடத்தவில்லை.
ஏ.பி.நாகராஜனின் நவராத்திரி, திருவிளையாடல் படங்களுக்கு விழா நடந்தது. ஆனால் சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள் படங்களுக்கு விழாவும் இல்லை, விருதுகளும் இல்லை.
பாலாஜி எங்கிருந்தோ வந்தாளுக்கு மட்டும் விழா எடுத்தார். ராஜா, தீபம், தியாகம் படங்களுக்கு விழா நடத்தவில்லை. இவரிடம் ஒரு நல்ல பழக்கம், விழா நடத்தாவிட்டாலும் 100 நாட்கள் ஓடிய தியேட்டர்களுக்கு ஷீல்டு செய்து கொடுத்து விடுவார்.(தியாகம் படத்துக்கு அதுவும் தரப்படவில்லை).
ராஜேந்திர பிரசாத் தனது எங்கள் தங்கராஜா ஒன்பது அரங்குகளில் ஓடியும் விழா நடத்தவில்லை. (விழா நடத்தி விருது வழங்குவது கலைஞர்களுக்கு செய்யும் கெளரவம் என்பது ஏனோ சில தயாரிப்பாளர்களுக்கு புரிவது இல்லை). ஆங்...., கெளரவம், பாபு, இரு மலர்கள், தவப்புதல்வன், அவன்தான் மனிதன் படங்களுக்கும் 100வது நாள் விழா நடக்கவில்லை. இவை ஒருபானை சோத்துக்கு சில சோறுகள்.
நடிகர் திலகம் விரும்பியிருந்தால் இவற்றுக்கு விழா நடத்தச் சொல்லி ஓடிப்போய் கலந்து கொண்டிருக்க மாட்டாரா?.
(நான் மேற்சொன்ன அத்தனை படங்களின் 100-வது நாள் விளம்பரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஆதாரத்தோடுதானே பேசுவோம்)
Thanks M.Thameem
ஒரேயொரு படத்திற்காக சிங்கப்பூர் பாராளுமன்றம் ஒரு நடிகரைப் பாராட்டி தீர்மானமே நிறைவேற்றியது. அந்தப் படம் தில்லானா மோகனாம்பாள். அந்த நடிகர் சிவாஜி.
நயாகரா நகரத்தின் ஒரு நாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்டு, அந்த மாநகரத்தின் தங்கச்சாவி பெற்ற ஒரே நடிகர் சிவாஜி. கமல்ஹாசன், அமிதாப் எல்லோரும் கௌரவ குடிமகன் விருதை மட்டுமே பெற்றார்கள்.”கௌரவ மேயர்” அந்தஸ்து பெற்ற ஒரே நடிகர் சிவாஜி.
அவரது நாடக நடிப்பைப் பார்த்து விட்டு பெரியார் “சிவாஜி” பட்டம் கொடுத்தார் என்றால், பெரியாரின் அரசியல் எதிரியான ராஜாஜி, கணேசனின் நடிப்பைப் பார்த்து விட்டு உணர்ச்சி வசப்பட்டு மயங்கி விழுந்தார்.
எத்தனை கதாபாத்திரங்கள்!
எத்தனை உணர்ச்சிகள்!
எத்தனை கலைக் கோலங்கள்!
கை தட்டி மகிழவா –
கண்ணீர் சிந்திக் குலுங்கவா –
கட்டிப் பிடித்து பாராட்டவா –
கண்களில் ஒற்றிக் கொள்ளவா –
தமிழ் மக்கள் அந்த மகா கலைஞனின் கலைத் துடிப்பிலே மயங்கிப் போனார்கள்.
இன்று வரை எல்லா நடிகர்களுக்கும் ஒரே பாடப் புத்தகம் அவர்தான்.
வாயால் வசனம் பேசுவதிலா –
வயிற்றிலிருந்து கர்ஜிப்பதிலா-
விழியால் கதை சொல்வதிலா –
விரலசைவில் விளக்குவதிலா –
எதில் குறை வைத்தார் அந்த
இமயமலைக் கலைஞன்?
கண்ணீர் நடிப்பா –
காமெடி நடிப்பா –
கம்பீர நடிப்பா –
கன கச்சித நடிப்பா –
கிழவனா – குமரனா –
அப்பாவியா – அரசனா –
எந்த கேரக்டரை விட்டு வைத்தார் அந்த நடிப்பு வள்ளல்?
இந்தியாவிலிருந்து முதன் முதலில் ஆஸ்கர் அவார்டுக்கு அனுப்பப்பட்ட படம் அவரது “தெய்வமகன்”!
“என்னை அமெரிக்காவின் சிவாஜி கணேசன் என்று அழையுங்கள்” என்று கூறி மார்லன் பிராண்டோ அவர்களே
மதித்த நடிகர் சிவாஜி.
“தம்பி சிவாஜியை நடிப்பில் வெல்ல யாராலும் முடியாது. மார்லன் பிராண்டோ நினைத்தால் சிவாஜியைப் போல் நடிக்க முயற்சிக்கலாம்” என்று ஒரு முறை கூறிய அறிஞர் அண்ணா, தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்து விட்டு “மார்லன் பிராண்டோ என்ன, அவன் அப்பனே வந்தாலும் சிவாஜியின் கால் விரல் நகத்தைக் கூடப் பிடிக்க முடியாது” என்று முழங்கினார்.
“சிவாஜி என் வாழ்நாளில் நான் கண்ட அற்புதம்” என்றார் கலைஞர் கருணாநிதி.
“இந்த உலகத்தில் ஒரேயொரு நடிகன்தான் இருக்கிறான். என் அன்புத் தம்பி சிவாஜிதான் அந்த ஒரே நடிகன்” என்றார் எம்ஜிஆர்.
உலக வரலாற்றை கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் அதாவது கிமு, கிபி என்று பிரிப்பதைப் போல, திரையுலக வரலாற்றை சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின், அதாவது சி.மு., சி.பி. என்று பிரிக்க வேண்டும்.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...02&oe=5FA9900F
Thanks Ganesh Pandian
மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தபடம் பாபு.
18-10-1971 ஆம் ஆண்டு திரைக்கு வந்து 100 நாட்களுக்குமேல் ஓடி இதனுடன் போட்டிக்கு வந்த
மா கோ ராவின் ரசிகர்களால் பெரிதும் விதந்து பேசப்பட்ட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
வாத்தியின் இரட்டைவேட வண்ணப்படமான நீரும் நெருப்பு படத்தை மண்கவ்வ வைத்த படம் பாபு.
பாபு படத்தின் சென்னை வசூல் 10 11 523.40
இலங்கையில் 16-12-1972 ல் திரையிடப்பட்டது.
கொழும்பு.....................ஸெயின்ஸ்தான்......... ....................112 நாட்கள்
கொழும்பு.....................ஈரோஸ்................ ..............................042 நாட்கள்
யாழ்நகர்......................ராஜா................ ...................................105 நாட்கள்
திருமலை ....................சரஸ்வதி....................... ......................065 நாட்கள்
யாழ் ராஜாவில் .பாபு.............................வசூல்.....94.... .....நாளில் ..................2 36 000.00
யாழ் ராஜாவில்..நீரும் நெருப்பும்......வசூல்.......67.......நாள்(ஓடிமுடிய ).....1 36 337.00
(யாழ் ராஜா m g r ரசிகர்களின் கோட்டை ஆனால் அக்கோட்டையில் பறப்பது
எங்களது கொடி..) யாழ் ராஜா m g r அபிமானியின் தியேட்டர்
பாபு இந்தியாவிலும் சாதனை இலங்கையிலும் சாதனை
பாபுவுடன் போட்டிக்கு வந்த படம் இந்தியாவிலும் தோல்வி
இலங்கையிலும் தோல்வி. பாவம் சீடர்கள் கற்பனையில் சாதனை எழுதி
சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...4a&oe=5FA87B12
நடிப்பில் ஸ்டைல்... ஸ்டைலில் நடிப்பு;
ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள்.
‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள்.
சிவாஜி அப்படித்தான். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மனிதர். திரையில் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்த கலைஞன். நன்றியும் பண்பும் பாசமும் கொண்ட உன்னத மனிதக் கலைஞன்.
நன்றி : Hindu talkies
Thanks Raja Lakshmi