:clap::2thumbsup:
Printable View
:clap::2thumbsup:
துணிவாய் பணிவாய் கனிவாய் இனிவாய்
உயர்வாய் திறவாய் திருவாய்.
உழையாதும் உயர்த்தும் உயிர் பிரிவதால்
உயிர் பெறும் உயில்.
பினி மறந்து பணி செய்யும்
பாச பட்டறை கருவறை.
மதி மறைத்து பிதற்ற வைக்கும்
மனிதனின் கிறுக்கும் செருக்கும்.
வலி மறந்து வாழ்வில் ஒளி
தேடும் திருநாள் தீபாவளி.
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!!!!
ஹாய் கிறுக்கரே ஹாப்பி தீபாவளி..
ஆமா..மேலே ஏதோ எழுத்தெல்லாம் சைனீஸாத் தெரியறது
Thanks and wish u the same....I beleive its corrected now......
vanakam nga K....:-)
methuva ovoru muthaa padichikitu varen......superbbbbb ellaamey.....;-)
மனவீட்டில் பணம் குடியேர மறுகணமே
மனங்குன்றி குடிபெயரும் குணம்.
தகரமாய் இருப்பினும் குறைவில்லை துருவற்று
தரமாய் இருக்கும் வரை.
k....#450 superbbbbbbb.....well said!!!
பெரும்படை முன் வீழா மன்னனும்
மெல்லிடை முன் வீழ்வதுண்டு.
:noteeth: #453....
எந்நிலை மாறினும் தன்னிலை மாறா
மனிதரை காண்பது அரிது.
ரொம்பச் சரி!
engey namma kirukar avarai kaanomey romba naala!!
hope all is well nga k
"பண(ணி) சுமை ஏறியதால் மன சுமை இறக்க மறந்து போனேன்."
நகைச்சுவை நோய் தீர்க்க நகையின்
சுவை நிதி தீர்க்கும்.
-
கிறுக்கன்
:thumbsup:
k....:-) .mudiyumbothu....inga ...........onga arthamulla kirakalgalai kiruka marakaatheenga kirukan avargaley...:noteeth:
பணத்துடன் பாவத்தை சேர்த்து வைத்தால்
பாவமே பணத்தை பறித்திடும்.
-
கிறுக்கன்.
romba sariyaa sonneenga!
சாபமும் சாதகமாய் மாறும் சாதுர்யமாய்
சாதிக்கும் சாமர்த்தியசாலி இடத்து.
-
கிறுக்கன்.
Exactly!
உடலை உருவாக்கும் உடலுக்கு உருவாக்கத்
தெரியும் நோயின் மருந்து.
-
கிறுக்கன்.
நிச்சயமாய்! அது தெரியாமல் மருத்துவர்களையும் மருந்துக்கடைகளையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம்!!!
hello nga pp...& hello nga k
correct ah soneenga...
why no more kirukals here nga K?
விடியா இரவென்றும் விலகா பிணியென்றும்
வாழ்வில் என்றும் இல்லை.
-
கிறுக்கன்
இருந்தார் இறந்தா ராயினும் இருந்த
இருப்பால் இறந்தும் இருப்பர்.
-
கிறுக்கன்
well said nga K.....;-)
முடியாதென முடிவெடுத்த பின் முயலும்
முயற்சி முடிவை தரா.
-
கிறுக்கன்
Yes!Yes!
எழில்கண்டு செய்யும் தொழில்கண்டு பிறரை
மதித்தலும் மிதித்தலும் மடமை.
-
கிறுக்கன்
வாங்க! வாங்க!
vaanga seekiram vaanga..:noteeth:
நித்தம் நித்தம் நோக வைத்து
என்ன சுகம் கண்டாயோ
எந்தன் மூச்சு நின்று போனால்
நீயும் அமைதி ஆவாயோ
குத்தி குத்தி நொந்த நெஞ்சில்
குருதி வருவதை அறிவாயோ
காயம் பட்டு கல்லறை சென்றால்
உள்ளம் நீயும் குளிர்வாயோ.
-
கிறுக்கன்
இறைவா
வெட்டுபட்ட உள்ளத்தில்
ரத்தம் ரொம்ப கொட்டுதடா
மருந்தை நானும் தேடுகிறேன்
மரணவலி என்னை கொல்லுதடா
உள்ளம் நொந்து போனதனால்
உன்னை ரொம்ப தேடுதடா
ஆறுதல் சொல்லி தேற்றிட
அருகில் நீயும் வாராயோ
முடியாதென தெரிந்திருந்தும்
முட்டாள் மனம் ஏங்குதடா
மனம் கொஞ்சம் தேறிட
கனவிலேனும் வருவாயோ
சோர்ந்து போய் இருப்பதனால்
சோகம் ரொம்ப தூக்கலடா
பாரம் உன்மேல் ஏற்றிடேன்
என்னை நீயும் சகிபாயோ
-
கிறுக்கன்
இறைவா, தீர்த்துவிடு வலிகளை!
என்ன கேட்டேன் உன்னிடம்
என்ன தந்தாய் என்னிடம்
வெட்டுபட்ட நெஞ்சின்
வலி நீக்க உனைகேட்டால்
வெட்டும் கைமட்டும் மாறியது
ரத்தம் இன்னும் கொட்டியது
ஆள் மாறி மாறி வெட்டுவதை
பார்த்து பார்த்து ரசித்தாயோ
என் தாங்கும் சக்திகாண
கைகட்டி நின்றாயோ
தாங்கும் வரை தாங்கிடுவேன்
கைமீறி போயின் பொசிங்கிடுவேன்
-
கிறுக்கன்
ஏனிந்த சோதனை?