http://i45.tinypic.com/5xkdwk.jpg
Printable View
courtesy -net-
ஆலடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் புகழ் பெற்ற மலைக் கோவில் என சொல்லி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள் .போன நேரம் மதியம் பன்னிரண்டு .கடும் வெயில் .மலைக்கு மேல் ஏறி முருகனை பார்ப்பது பற்றி நினைக்கக் கூட முடியவில்லை .கீழிருந்த ஒரு ராமர் கோவிலில் வழிபட்டு திரும்பினோம் .
அந்த ராமர் கோவிலில் அந்த நேரத்திலும் நல்ல கூட்டம் .வெளியில் முறுக்கு ,ஐஸ் ,அண்ணாச்சி பழம் (இதை தோல் சீவி அழகாய் தந்தார்கள் ,அத்தனை சுவை )இவற்றுடன் சுண்டலும் விற்றுக் கொண்டிருந்தார்கள் .உள்ளே சாமிக்கான அலங்காரத்தில் இளநீர் ,ஈந்தங் குலை போன்றவையும் இடம்பெற்றிருந்தன .
ஒரு பக்கம் ராமர் கதையும் காதில் விழுந்துக் கொண்டிருந்தது .குரலையும் சொல்லும் பாங்கையும் வைத்துப் பார்க்கும் போது திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றியது .ஆனால் ஒரு பெரியவர் ,(அவரை ஒட்டிய சாயல் கூட )ஒரு நாற்காலியில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார் .
அதில் ராமர் ஆட்சியின் பெருமைகளைப் பற்றி சொல்லி விட்டு ,".நீங்கள் ஏதோ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியைப் பற்றி சொல்வதாக எண்ணிக் கொள்ளக் கூடாது . நான் சொல்வது அந்த ஸ்ரீ ராமச்சந்திரனின் ஆட்சியை பற்றி .ஆனால் இந்த ராமச்சந்திரன் ஆட்சியும் அந்த ராமச்சந்திரன் ஆட்சியைப் போல் தான் இருந்தது .அவர் இருந்தப்ப விலை ஏறியதா ,மக்கள் இப்படி கஷ்டப்பட்டார்களா ?
அந்த ஸ்ரீ ராமச்சந்திரனைப் போலவே இந்த ராமச்சந்திரனும் மக்களுக்கு நன்மையே செய்தார் ,"என்று முடித்தார் .
"மலைக்கள்ளன்" - தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நாடகத்தை சுவை குன்றாமல் வேகமும், விறுவிறுப்பும் சற்றும் குறையாமல் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் ஸ்ரீராமுலு நாயுடு.
ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால் - எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் " மலைக்கள்ளன்" ஒன்றுதான்.
ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் ஸ்ரீராமுலு நாயுடுவால் தயாரித்து பெருவெற்றி அடைந்த படம்.
அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
தமிழ்த் திரைப்பட உலகில் எம்.ஜி.ஆர் அவர்கள் அடைந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமிட்ட படம் மலைக்கள்ளன் தான்.
அதனால் தான் "மலைக்கள்ளன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தால், எனது சினிமா வாழ்க்கையென்னும் கப்பல் தரை தட்டியோ, பாறைகளில் மோதியோ விபத்துக்குள்ளாகிய நிலையை அடைந்திருக்கும்" என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு கதாநாயகனாக யாரைப்போடுவது என்ற பேச்சு எழுந்தபொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை பலமாகச் சிபாரிசு செய்ததே இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் தான் என்றும் கூட ஒரு தகவல் உண்டு. சுப்பையா நாயுடுவிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், பாசத்தையும் பார்க்கும் பொழுது இந்தக் கருத்தில் உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி"க்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவே "மலைக்கள்ளன்" படத்திற்கும் இசை அமைத்தார்.
"கர்நாடக இசையா, ஜனரஞ்சகமான மெட்டா - எதுவானாலும் தன்னால் சிறப்பாகக் கொடுக்கமுடியும் என்று இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் சுப்பையா நாயுடு.
பழம்பெரும் பாடகி பி.ஏ. பெரியநாயகியும், படத்தின் கதாநாயகி பி. பானுமதியும் பெண் குரலுக்கான பாடல்களைப் பாடினார்கள்.
"நீலி மகன் நீ அல்லவோ"- பி.ஏ. பெரியநாயகியின் கணீரென்ற குரலில் ஒலிக்கும் ஒரு நடனப் பாடல். சாய்-சுப்புலட்சுமி இருவரின் நடனத்துக்கான இந்தப் பாடலை கரஹரப்ரியா" ராகத்தில் வெகு அற்புதமாக அமைத்திருந்தார் சுப்பையா நாயுடு.
"உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ" - பி. பானுமதி பாடி ஆடுவதாக அமைந்த இந்தப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்தது. நடனத்தில் பானுமதிக்கு அவ்வளவாக பெயர் கிடையாது என்றாலும் இலகுவான அசைவுகளில் பாடலுக்கே ஒரு அழகை அவர் ஏற்படுத்தியிருந்தார்.
"பெண்களாலே உலகிலே" "நல்ல சகுனம் நோக்கி செல்லடி" ஆகியவையும் பானுமதி பாடியவை.
ஆனால் இவை அனைத்தையும் ஓரம்கட்டி விட்டு இன்றளவும் காலத்தை வென்று நிலைத்திருக்கும் பாடல் ஒன்றே ஒன்று தான்.
எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த பாடல் அது. பாடலுக்கான பல்லவியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். அதன்பிறகு தயாரிப்பாளருடன் எழுந்த மனஸ்தாபம் காரணமாக அவர் விலகிக்கொள்ள சரணங்களை கோவை அய்யாமுத்து என்ற திராவிட இயக்க கவிஞர் எழுதினார்.
அதுவரை எம்.ஜி.ஆருக்கு எம்.எம். மாரியப்பா பாடிக்கொண்டிருந்தார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் தயாரிப்பில் இருந்த நேரமோ அல்லது வெளிவந்த சமயமோ ஏதோ ஒன்று.
அந்தப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்காக பாடிய பாடகரின் குரல்வளம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த இளம் பாடகரை தனக்கு பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அபிப்ப்ராயப்பட்டு இசை அமைப்பாளரிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க அந்த இளைஞரை எம்.ஜி.ஆருக்கு பாடவைத்தார் சுப்பையா நாயுடு.
பின்னாளில் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலாகவே பரிமளித்த திரு. டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்..
டி.எம். எஸ். அவர்கள் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடிய அந்தப் பாடல் - அதுவும் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்தான் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - நம் நாட்டிலே - சொந்த நாட்டிலே ".
மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக - எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது
"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி - இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே."
- கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!. பாடலை காட்சியுடன் கண்டு கேட்க இணைப்பு :
http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss. ஆபேரி ராகத்தில் (பீம்ப்ளாஸ்) ஜனரஞ்சகமாக இசை அமைத்து இந்தக் கருத்தாழம் மிக்க பாடலை அற்புதமாக கொடுத்திருக்கிறார் சுப்பையா நாயுடு.
மலைக்கள்ளன் படமும் பாடல்களும் பெற்ற மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆர் அவர்களை வெற்றிப்பாதையில் மிடுக்கோடு நடைபோட வைத்தது. தன்னை ஒரு மக்கள் திலகமாக அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு சொந்தப் படத் தயாரிப்பில் அவர் இறங்கினார். "எம்ஜியார் பிக்சர்ஸ்" - பானரில் அவரது கனவுப் ப்ராஜெக்ட் ஒன்று படமாக தயாராகத் தொடங்கியது. நடிகர் நடிகையர் தேர்வுக்காக அவர் சற்று யோசித்தே செயல்பட்டிருக்கலாம். எந்த வேடத்துக்கு யாரை ஒப்பந்தம் செய்வது, இவரைப் போட்டால் சரியாக வருமா - இரண்டாவது கதாநாயகியாக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்யலாமா என்றெல்லாம் கூட அவர் யோசித்திருக்க கூடும். ஆனால் இசை அமைப்புக்கு - அப்படியெல்லாம் செய்யவே இல்லை.
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்" - பாடல் மூலம் தனக்கு ஒரு தனியான அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த எஸ்.எம். சுப்பையா நாயுடுவையே இசை அமைப்பாளராக தேர்வு செய்து தனது "கனவு ப்ரொஜெக்ட்" படத்தை ஆரம்பித்தார்.
ஆம். "நாடோடி மன்னன்" படம் தயாராகத் தொடங்கியது.
courtesy' sigaram thoduvom
அறுபதுகளின் பிற்பகுதி முதல் எழுபதுகளின் முற்பகுதி வரை எஸ்.எம். சுப்பையா நாயுடு
அவர்களின் இசையில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் அதுவரை அவரது இசை அமைப்பில் வெளிவந்த படங்களிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன.
"கொஞ்சும் சலங்கை" வரை அவரது இசையில் கர்நாடக இசையின் தாக்கம் சற்றே மேலோங்கி நின்றாலும், அதன் பிறகு வந்த படங்களில் மெல்லிசையின் தாக்கம் பரவலாக இருந்து வந்தது.
வாத்தியக் கருவிகளை - குறிப்பாக வயலின்களை அவர் பயன்படுத்திய விதம் பாடலைக்
கேட்டவுடனேயே இது சுப்பையா நாயுடுவின் பாடல் என்று "பளிச்" சென்று கண்ணை
மூடிக்கொண்டு சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்தது.
"ஆசை முகம்" தொடங்கி "குல கெளரவம்" வரை வந்த படங்களின் பாடல்களைக் கேட்டோமானால் இதனை நன்றாக உணர முடியும்.
"ஆசை முகம்" படத்தில் இடம் பெற்ற ஒரு டூயட் பாடல் " நீயா இல்லை நானா. நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா" - கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் பாடிய ஒரு இனிமையான பாடல் இது. இந்தப் பாடலின் சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் இடையில் வயலின்களை இணைப்பிசையாக சுப்பையா நாயுடு பயன்படுத்தி இருக்கும் விதம் ஒரு தனித்துவத்தை அவருக்கு கொடுத்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற டி.எம். சௌந்தரராஜன் தனித்து பாடிய பாடல் "இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை" என்று தொகையறாவாக துவங்கி.. “எத்தனை பெரிய மனிதருக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு. எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு" - என்ற பல்லவியோடு ஆரம்பமாகும்.
courtesy- sigaram thoduvom
இந்தப் பாடலின் சரணத்திலும், குறிப்பாக இரண்டாவது சரணத்தில் "கோழியைப் பாரு காலையில் விழிக்கும். குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்" என்ற முதலடியை அடுத்து வயலின்களின் இணைப்பிசை - ஒரு நிமிடத்துக்கும் குறைவான கால அளவில் கொடுத்திருப்பார். பாடல் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துக்கு இந்த இணைப்பிசை ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. பாடல் பெருவெற்றி பெற்றுவிடவே இந்த உத்தியை மெல்லிசையில் தனது தனிப்பாணியாக அடுத்து வந்த படங்கள் ஒவ்வொன்றிலும் கையாள ஆரம்பித்தார் சுப்பையா நாயுடு. ஆசை முகம் படத்தில் "நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு" என்ற டி.எம். எஸ். சின் பாடலும் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.
தாயின் மடியில்" படத்தில் சுப்பையா நாயுடு அவர்கள் இசையில்
அமைந்த மறக்க முடியாத பாடல்களைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டதாக கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் படத்தை நான் மறந்துவிடவில்லை. ஆனாலும் வேகமாக எழுதிக்கொண்டு வந்தபோது விடுபட்டுப் போய்விட்டது. என்றாலும் தவறைச் சுட்டிக்காட்டிய நண்பர் திரு. ரவி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்த இடுகையை தாயின் மடியில் பாடல்களில் இருந்தே தொடங்குகிறேன்.
******
1964ஆம் ஆண்டு வெளிவந்த "தாயின் மடியில்" படத்தில் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இணையுடன் பண்டரிபாய், எம்.ஆர். ராதா, டி.எஸ். முத்தையா, எம்.என். நம்பியார், ஜி. சகுந்தலா, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி அடையத் துடிக்கும் ஒரு பந்தயக் குதிரையை ஓட்டும் "ஜாக்கி"யாக எம்.ஜி. ஆர். நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா இணைந்து பாடிய "என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்" என்ற டூயட் பாடல் எம்.ஜி. ஆர் அவர்களின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இடம்பிடித்து இன்றும் செவிகளை நிறைக்கும் பாடல்.
"ராஜாத்தி காத்திருந்தா ரோஜாப்போலே பூத்திருந்தா" - டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இந்தப் பாடல் ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடல். எஸ்.எம். சுப்பையா நாயுடு தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு அமைத்திருந்த இந்தப் பாடலும் செவிகளுக்கு இனிமையையும், கிராமிய மணத்தையும் கொண்டு வந்து சேர்க்கத் தவறவில்லை.
அடுத்து பி. சுசீலாவின் தேன்குரலில் "பார்வையிலே பந்தல் கட்டி" என்று ஒரு சோக கீதம். சோகப் பாடல் என்றாலும் கேட்பதற்கு சுகமான பாடல்.
இவற்றை எல்லாம் விட இன்று வரை நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் டி.எம்.எஸ். தனித்துப் பாடியிருக்கும் "தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை" என்ற பாடல் தான். பாடலின் இணைப்பிசையில் தனது முத்திரையைப் பதித்து காட்சியின் விறுவிறுப்பையும் சோகத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள்.
courtesy- sigaram thoduvom.
அடுத்து எழுபதுகளில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் இசையில் பாடிய முதல் பாடல் இடம் பெற்ற படம் என்ற பெருமையைத் தாங்கி வந்த படம் தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த "தலைவன்" என்ற படம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - வாணிஸ்ரீ இணைந்து நடித்த இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான டூயட் பாடல் தான் வாலி அவர்கள் எழுதிய -
"நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள்.
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்" என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல். இந்தப் பாடலைத்தான் இசை அரசி பி. சுசீலா அவர்களுடன் இணைந்து எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். ஆரம்ப எஸ்.பி.பி. யின் குரலில் தென்படும் இனிமை இந்தப் பாடலுக்கு மெருகேற்றுகிறது. கண்டிப்பாக அனைவரும் கேட்கவேண்டிய ஒரு அருமையான பாடல் இது. இந்தப் பாடலின் இணைப்பிசையில் வரும் வயலின்களின் துரிதகாலப் பிரயோகம் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களை அடையாளம் காட்டிவிடுகிறது.
இதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு டூயட் பாடலை டி.எம். சௌந்தரராஜனும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடியிருந்தனர்.
"ஓடையிலே ஒரு தாமரைப்பூ. நீராடையிலே அதைப் பார்த்தீங்களா. விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்தை என்னான்னு கேட்டீங்களா?" என்ற பாடல் டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரியின் வெற்றிப்பாடல்களில் ஒன்றாக அமைந்து விட்டிருக்கிறது.
"தலைவன்" படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு தத்துவப் பாடல் (எம்.ஜி.ஆர். படமல்லவா!) "அறிவுக்கு வேலை கொடு. பகுத்தறிவுக்கு வேலை கொடு" - டி.எம்.எஸ். பாடியிருக்கும் ஒரு அருமையான பாடல்.
courtedy- sigaram thoduvom
இன்று பகல் 12 மணிக்கு கோவை டிலைட் திரை அரங்குக்கு சென்று அங்கு ஒட்டப்பட்டிருந்த தாழம்பூ பட வண்ண சுவரொட்டிகளை படம் பிடித்தேன் அவைகளின் அணிவகுப்பு இதோ நமது திரி நண்பர்களுக்காக.
http://i49.tinypic.com/2ck4fr.jpg