-
நேற்றைய தினம் நடிகர் திலகத்தின் 12-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை சார்பில் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. சாதாரண அன்னதானம் போல் இல்லாமல் லட்டு வடை பல்வேறு கலந்த சாதங்கள் என்று சிறப்பான முறையில் வழங்கப்பட்டது. பகதர்கள் அனைவரும் வயிறார உண்டு வாயார வாழ்த்தி சென்றனர். அன்னதான விழா நிகழ்சிகளை திரு ஸ்ரீநிவாசன் அவர்களும் ராமஜெயம் அவர்களும் மற்றும் பல்வேறு நண்பர்களும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரையில் பல்வேறு இடங்களில் நடிகர் திலகத்தின் 12-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முந்தைய வருடங்களை விட இவ்வருடம் மிக அதிக அளவில் நடிகர் திலகத்தை நினைவு கூறும் சுவரொட்டிகள் நகரெங்கும் பதிக்கப்பட்டிருந்தது.
மதுரையில் நேற்று மாலை அலங்கார் தியேட்டர் அமைந்துள்ள காமராஜர் சாலை விழாக் கோலம் பூண்டது. அண்மைக் காலத்தில் இது போன்ற ஆட்கூட்டதை கண்டதில்லை எனும் வண்ணம் ரசிகர்கள் நேற்று மாளிகையின் மாலைக்காட்சி தொடங்கும் முன் அந்த சுற்று வட்டாரத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். போக்குவரத்தே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து போனது. மாலை அலங்காரங்கள், வான வேடிக்கைகள், சரவெடிகள், வாலாக்கள், தேங்காய் உடைப்புகள் என அமர்களமான அலப்பரை நடந்திருக்கிறது. தியேட்டருக்கு உள்ளேயும் மிக பெரிய அலப்பரை என்று கேள்வி.
அது மட்டுமல்ல, நேற்று அதே நாளில் அதே தியேட்டருக்கு அருகாமையில் காந்தி பொட்டல் என்று அழைக்கப்படும் இடத்தில, அதே மாலை நேரத்தில் நினைவு நாள் கூட்டம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது.அந்தக் கூட்டத்திற்கும் பெருந்திரளான மக்கள் வந்திருந்து சிறப்பித்தனராம்.
நேற்று காலை மதுரை நீதிமன்றத்திற்கு எதிராக அமைந்துள்ள நடிகர் திலகத்தின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்நேரம் மிகப் பெரிய கூட்டம் அங்கே கூடியது. அமைச்சரே கூடிய கூட்டத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ந்து போனாராம்.
ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகர் திலகத்தின் சிலைக்கு எந்த வேறுபாடுமின்றி கமல் ரஜினி மற்றும் பல நடிகர்களின் மன்றங்கள் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டதுதான்.
இம்முறை திருச்சி மாநகரில் பல் முக்கியமான தெரு முனைகளில் மெயின் ரோட்களில் நடிகர் திலகத்தின் புகைப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டதாம். திருச்சி புத்தூர் ரோட்டில் நான்கு முனை சந்திப்பில் நடிகர் திலகத்தின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் கொண்டு அதற்கு முறைப்படி அனுமதி பெற அந்த சரகத்தின் காவல்துறை ஆய்வாளரை அனுகியிருக்கின்றனர். மனுவோடு சென்ற அவர்களிடமிருந்து அதை பெற்றுக் கொண்ட அந்த இன்ஸ்பெக்டர் [வயது ஒரு 35 இருக்கலாம்] வேறு எந்த கேள்வியும் கேட்காமல் நடிகர் திலகத்தைப் பற்றி அப்படியே உணர்ச்சிவசப்பட்டு பேசினாராம். நான் போலீஸ்காரன். பல்வேறு கொடூரமான குற்றங்களை அவை நிகழ்ந்த சம்பவ ஸ்தலங்களிளியே பார்த்திருக்கிறேன். அதை எல்லாம் பார்த்து பார்த்து என் மனது இறுகி போய் விட்டது, ஈரமே வற்றிவிட்டது. அப்படிப்பட்ட நான் சிவாஜி அவர்களின் படங்களைப் பார்க்கும்போது அவர்தம் நடிப்பை பார்த்து என்னையறிமால் கண்ணீர் விடுகிறேன். எப்பேர்பட்ட கலைஞன் என்றாராம். ஒரு இளைஞன் அதுவும் ஒரு tough police officer என்று பெயர் எடுத்தவர் மனம் விட்டு அப்படி பேசியபோது அனுமதிக்காக சென்றவர்கள் புல்லரித்து போனார்களாம்.
புதுவையில் அரசு சார்பிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நடிகர் திலகத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நாள் முதல்வர் ரங்கசுவாமி, முன்னால் முதல்வர்கள் மத்திய அமைச்சர் நாராயணசுவாமி போன்றோர் நடிகர் திலகத்தின் சிலைக்கு மாலி அணிவித்து மரியாதை செலுத்தினாராம். அந்நேரம் அங்கு திரளாக கூடியிருந்த ரசிகர்கள் மத்திய அமைச்சரிடம் நடிகர் திலகத்தின் சிலை அமைந்திருக்கும் சாலைக்கு நடிகர் திலகத்தின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனராம். ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தாராம்.
மேற்கண்ட பல்வேறு செய்திகளை நமக்களித்த நண்பர்கள் சந்திரசேகர் மற்றும் ராமஜெயம் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி!
அன்புடன்
-
-
நடிகர்திலகத்துடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுளா அவர்களின் திடீர் மறைவிற்கு நமது அஞ்சலி
http://www.youtube.com/watch?v=VtZvbxo86Qg
http://www.youtube.com/watch?v=dmx2gkelEnc
-
-
-
நடிகர்திலகத்துடன்
எங்கள் தங்க ராஜா
என் மகன்
அவன்தான் மனிதன்
மன்னவன் வந்தானடி
அன்பே ஆருயிரே
டாக்டர் சிவா
உத்தமன்
அவன் ஒரு சரித்திரம்
ஆகிய எட்டு வண்ணப்படங்களில் ஜோடியாகவும் 'சத்யம்' படத்தில் ஜோடியில்லாமலும் நடித்திருந்த திருமதி மஞ்சுளா விஜயகுமார் மறைவு அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
-
நடிகர்திலகம் - மஞ்சுளா இணைந்து நடித்த டூயட் பாடல்கள் சில....
'இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'
'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா'
'பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை'
'ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ'
'அன்பு நடமாடும் கலைகூடமே ஆசை மழைமேகமே'
'காதல் ராஜ்ஜியம் எனது அந்த காவல் ராஜ்ஜியம் உனது'
'மல்லிகை முல்லை பூப்பந்தல்'
'காமதேனுவும் சோமபானமும்'
'காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்'
'மலரே குறிஞ்சி மலரே'
'நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்'
'படகு படகு ஆசை படகு... போவோமா பொன்னுலகம்'
'தேவன் வந்தாண்டி ஒரு தீபம் கொண்டாடி'
'அம்மானை.... அழகுமிகும் கண்மானை'
'மாலையிட்டான் ஒரு மன்னன் அதில் மயங்கி நின்றாள் ஒரு அன்னம்'
-
மஞ்சுளா மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.
-
கண்ணீர் அஞ்சலி!
http://f1.pepst.com/c/BF395A/279516/...4000_0_1_0.jpg
http://padamhosting.com/out.php/i692...h40m43s184.png
நடிகை மஞ்சுளா அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 1973 இல் வெளிவந்த நம் தங்கராஜாவின் எங்கள் தங்க ராஜாவில் தலைவருக்கு ஜோடியாக அறிமுகமாகி அதுவரை பார்த்து சலித்துப் போன நடிகர் திலகத்தின் பழைய ஜோடிகளுக்கு மாற்றாக இளமை கொலுவிருக்கும் அழகிய நடிகர் திலகத்தின் இளமைக்கு ஏற்ற ஜோடியாக அனைவர் மனதையும் கவர்ந்தவர். கொலு பொம்மையாக பல படங்களில் காட்சி தந்தவர் வழக்கம் போல நடிகர் திலகத்தின் படங்களில் நடித்து நடிப்பை மேம்படுத்தி நல்ல நடிகை என்று பெயர் எடுத்தார். குறிப்பாக டாக்டர் சிவா, உத்தமன் படங்களைக் குறிப்பிடலாம். அன்பே ஆருயிரே படத்தில் நகைச்சுவை நடிப்பிலும் நடிகர் திலகத்துடன் சேர்ந்து சோபித்தவர்.
எழுபதுகளுக்குப் பிறகு வந்த நடிகர் திலகத்தின் படங்களில் மஞ்சுளா அவர்கள் நடிகர் திலகத்துடன் நடித்த காதல் டூயட் பாடல்கள் முதன்மையானவை. கார்த்திக் சார் மிக அழகாக அந்த டூயட்களை இங்கே வரிசைப் படுத்தியிருந்தார்.
நடிகர் திலகத்தின் இணையில்லா அழகிற்கு பொருத்தமான ஜோடியாய் மஞ்சுளா பரிமளித்தார். அந்த 'ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி' யில் அழகுப் பதுமையாக சிறிய சைக்கிளில் வலம் வருவாரே! அதை மறக்க முடியாது. இவர் நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த டூயட் பாடல்களில் வேகம் இருக்கும். பெரும்பாலும் அவுட்டோர் காட்சிகள்தாம். தேக்கடியில் டாகடர் சிவா படத்தில் 'காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்' என்ற டூயட் நம் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். அதே போல அப்படத்தின் அற்புதமான டைட்டில் மியூசிக்கில் அழகான தொப்பி அணிந்து மலைவாழ் ஜாதியினரின் நடனத்தை கைதட்டி மஞ்சுளா ரசிப்பது என்றும் நம் நினைவில் நிற்கும் காட்சியாகும்.
'அன்பே ஆருயிரே' படத்தில் நடிகர் திலகத்திடம் மஞ்சுளாவை சேர விடாமல் மேஜர் தடுத்து விடும் காட்சிகளில் அதுவும் மேஜர் தாயுமானவர் பாடலை இவரை படிக்கச் சொல்லிக் கேட்க தலைவர் நினைப்பில் சலிப்புடன் அப்பாடலைப் படிப்பது அற்புதமாக இருக்கும்.
எழுபதுகளுக்கு பின் வந்த படங்களில் தலைவருக்கு மிகப் பொருத்தமான ஜோடியாக நான் இவரைத்தான் தேர்ந்தெடுப்பேன். அந்த அளவிற்கு என் மனத்தைக் கவர்ந்த ஜோடி. நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த அபிமானம் கொண்டவர். ஒவ்வொரு நடிகர் திலகத்தின் பிறந்த நாளுக்கும் தவறாமல் அன்னை இல்லத்திற்கு வந்து ஆசி பெற்று செல்வார். அதுமட்டுமல்ல.. கணவர் விஜயகுமாருடன் சேர்ந்து தலைவரை வைத்து 'நெஞ்சங்கள்' படமும் எடுத்தவர். இதிலிருந்தே தலைவரின் மேல் இவருக்குள்ள அபிமானத்தை புரிந்து கொள்ள முடியும்.
மறைந்த என் அபிமான நடிகை மஞ்சுளா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன். அவர்தம் குடும்பத்தினருக்கு நம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.
குறிப்பாக என்னுடைய மிக மிக ஆழ்ந்த அனுதாபங்களை நமது திரியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் திலகம் புகழுடன் அவருடன் பல படங்களில் பணியாற்றிய மஞ்சுளா அவர்களின் புகழும் நிலைத்து நிற்கும்.
கனத்த சோகத்துடன்
வாசுதேவன்.
-