http://i60.tinypic.com/t01836.jpg
Printable View
malai malar
http://i59.tinypic.com/68d7q8.jpg
the hindu
இலை அலை!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், இந்திய அளவில் மாநிலக் கட்சிகளை எடுத்துக் கொண்டால், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், பாஜக மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது அதிமுக.
முற்பகல் பிற்பகல் 12.20 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக ஓர் இடத்திலும், பாமக ஓர் இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் மாநில கட்சிகளில் அதிமுகதான் தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
அதிமுகவைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் 33 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இலை அலை!
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது சூறாவளி சுற்றுப் பயணப் பிரச்சாரத்தால் மக்களை வெகுவாகக் கவர்ந்தார். அவர் தனது பிரச்சாரத்தில், அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, 'செய்வீர்களா... செய்வீர்களா' என்று ஒவ்வொரு தொகுதியிலும் உரைத்தது மக்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. இதனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இலை அலையே மேலோங்கியிருப்பது தெரியவந்தது.
அதேவேளையில், திமுக ஓர் இடத்தில்கூட முன்னிலை பெறாதது, அந்தக் கட்சி மத்தியில் அங்கம் வகித்தபோது மேற்கொண்ட செயல்பாடுகள் மீதான அதிருப்தியையே காட்டுகிறது.
பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, தங்களை மாற்று அணி என்று கூறிக்கொண்டாலும், அதன் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாததையே முடிவுகள் காட்டுகின்றன. தருமபுரியில் மட்டும் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார்.
தனித்துப் போட்டியிட்டஅனைத்துத் தொகுதிகளிலும் சொற்ப வாக்குகளையே பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
அன்று 1973
திண்டுக்கல் இடைதேர்தல் வெற்றி மூலம் மக்கள் திலகத்தின் அரசியல் புகழ் அகிலமெங்கும் பரவியது .
இன்று 2014
மக்கள் திலகத்தின் அண்ணாதிமுக - இரட்டை இலை - மக்கள் திலகத்தின் படம் இன்றைய அதிமுகவின் மாபெரும்
வெற்றிக்கு அடிப்படை காரணம் என்பதை நாடு நன்கு உணர்ந்துள்ளது .
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று நிருபர்கள் கூட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி கூறியது பாராட்டுக்குரியது .
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.அவர்கள் உருவாக்கிய பேரியக்கம்
அ.இ .அ. தி.மு. க. 37 தொகுதிகளில் அபார வெற்றி.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவனுக்கு வெற்றி !
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆசைமுகத்திற்கு வெற்றி !
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நாடோடி மன்னனுக்கு வெற்றி.
உண்மையின் வெற்றி! தர்மத்தின் வெற்றி ! நீதியின் வெற்றி !
உழைப்பின் வெற்றி! நியாயத்தின் வெற்றி ! கொடை வள்ளலின் வெற்றி
புரட்சி தலைவரின் வழி தோன்றல் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு வெற்றி !
இந்த வெற்றியை அ. தி. மு.க கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆனந்த
பரவசத்துடன் பட்டாசுகள் வெடித்து , இனிப்புகள் வழங்கி, புரட்சி தலைவரின் முழு உருவ சிலைக்கு பாலபிஷேகம் செய்து மலர்மாலைகள்
இட்டு ஆரத்தி எடுத்து வணங்கி , மிகவும் விமரிசையாக கொண்டாட்டம் .
ஆர். லோகநாதன்.