Originally Posted by
joe
சமீபத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை திறப்புவிழா குறித்த விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவலான கவனிப்பை பெற்றன.
இந்த விளம்பரம் வெளிநாடுகளில் வராததால் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை .ஆனால் இந்த விளம்ம்பரம் குறித்து பல்வேறு நக்கல் நையாண்டிகளை பரவலாக காண முடிந்தது .
பின்னர் யூடியூப் மூலம் அந்த விளம்பரத்தை பார்க்க முடிந்தது .. அபிதாப் , பிரபு , விக்ரம் பிரபு பங்கு பெறும் அந்த விளம்பரத்தில் அமிதாப் வேட்டி கட்டியிருப்பதைப் பார்த்து விக்ரம் பிரபு "நீங்க பார்க்க சிவாஜி தாத்தா மாதிரியே " இருக்கீங்க என குறிப்பிடுகிறார் .
ஒரு முறை பார்க்கும் போது எனக்கு இதில் நக்கல் நையாண்டி செய்ய எதுவுமிருப்பதாக தெரியவில்லை .ஆனால் இந்த விளம்பரங்கள் அளவுக்கதிகமாக காட்டப்பட்டதால் என்னவோ பலர் எரிச்சல் அடைந்ததாக குறிப்பிட்டார்கள் .
அது போக பிரபு அவர்கள் இந்த விளம்பரத்திலும் அந்த நிறுவனம் சார்ர்ந்த காரியங்களிலும் அளவுக்கதிகமான ஈடுபாடு காட்டியதாக , சிவாஜியின் பெயரை சொந்த வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவது குறித்த விமர்சனங்களை பார்க்க முடிந்தது .
இது சிவாஜிக்கு பெருமையா இல்லையா என எனக்கு தெரியவில்லை .ஆனால் பொதுத்தளத்தில் பார்த்ததை இங்கு பகிர்ந்து கொள்ளவே இதை பகிர்கிறேன்.