சின்னா!
முகூர்த்தநாள் படத்தில் வரும் அந்த தங்கை விஜயநிர்மலா அல்ல. அது சந்தியா ராணி என்ற அதிகம் வெளியே தெரியாத நடிகை.
Printable View
சின்னா!
முகூர்த்தநாள் படத்தில் வரும் அந்த தங்கை விஜயநிர்மலா அல்ல. அது சந்தியா ராணி என்ற அதிகம் வெளியே தெரியாத நடிகை.
சி.க.
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அதுவும் இசையரசியின் ஈடு இணையற்ற குரலில் அந்நாளில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடலை அளித்தமைக்கு இன்னும் நன்றி. கல்யாணங்கள் அந்தக் காலத்தில் வீடுகளில் நடப்பதுண்டு. தெரிந்தவர்கள் வீடுகளில் சாப்பாட்டு பந்திக்கு இடம் தருவார்கள். கல்யாண வீட்டில் அலங்காரம் செய்து ஸ்பீக்கர் செட் வைத்து அமர்க்களப் படுத்துவார்கள். அப்போது தவறாமல் சில பாடல்களை ஒலிபரப்பி விட்டு அப்புறம் தங்கள் அபிமான நடிகர் படப்பாடல்களை ஒலிபரப்புவார்கள். அபிமான நடிகர் என்றால் என்ன - ரெண்டே பேர் தான் - ஒண்ணா சிவாஜி இல்லையா எம்.ஜி.ஆர்.. இப்படி ஊரே ரெண்டு பட்டு கிடந்த காலத்தில் யாருடைய அபிமானி வீடாக இருந்தாலும் தவறாமல் ஒலிக்க ஆரம்பித்தது இந்தப் பாடல். இந்தப் பாடலும் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், மணமகளே மணமகளே வாவா பாடலும் கண்டிப்பாக ஒலிபரப்பாகும்.
அப்படி பம்பர் ஹிட்டாகி இசையரசியை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்த பெருமை இப்பாடலுக்கு உண்டு.
படம் வருவதற்கு முன்பே ஹிட்டான இப்பாடலினால் படத்திற்கும் நல்ல விளம்பரம் கிடைத்தது. இந்தப் பாட்டு கே.ஆர். விஜயாவிற்காக்கும் என்று அவருடைய ரசிகர்கள் ஜம்பமாக திரிந்ததும் உண்டு - ஆம், கற்பகம், இதய கமலம் போன்ற படங்களின் மூலம் வெற்றி நாயகியாக மட்டுமின்றி புன்னகையரசியாகவும் அடையாளம் காணப்பட்டார் கே.ஆர்.விஜயா - எனவே இந்தப் பாட்டிற்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு.
பி.மாதவனின் முதல் தயாரிப்பு என நினைக்கிறேன். அருண் பிரசாத் மூவீஸ் மாதவன்-பாலமுருகன் கூட்டணி உதயமானது இந்தப் படம் மூலமே என்பது என் நினைவு. ஒளிப்பதிவு கூட வின்சென்ட் என்று தான் ஞாபகம். ஆனால் இந்தப் பாடல் கே.ஆர்.விஜயாவுக்கு இல்லை என்று தெரிந்ததும் புஸ்ஸென்று அடங்கி விட்டது படத்தின் ரிஸல்ட். அந்தப் புதுமுக நடிகரின் பெயர் ஈஸ்வர் என நினைக்கிறேன். ஏனென்றால் ஜெய்யின் காதல் பறவை தயாராகும் போது தான் இந்தப் படமும் தயாரானது. அப்போது பேசும் படத்தில் ஒரு புதுமுகம் படத்தைப் போட்டு ஈஸ்வர் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அது மறந்து விட்டது. ஆனால் முகூர்த்த நாள் படத்தில் இவரைப் பார்த்ததும் இவர் தான் ஈஸ்வரோ என்ற சந்தேகமும் வந்தது. இன்னும் அது தீர்ந்த பாடில்லை. பழைய பேசும்படம் வீட்டில் இருந்தால் தேடிப்பார்க்கிறேன்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
பாடலின் துவக்கத்தில் ஒரு அக்கார்டின் பிட் வரும்.. ஆஹா... அது ஒன்றே போதும்...கே.வி.எம்.மின் பெயர் சொல்ல..
மற்ற அனைத்துப்பாடல்களுமே போனஸ்.
வாசு சார்
என்ன சொல்வது..
அன்பு வந்தது எம்மை ஆளவந்தது - அது
வாசு என்ற பேரில் எம்மை வாழ்த்துகின்றது..
சுடரும் சூறாவளியும் படத்தை பொறுமையோடு தியேட்டரில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்..
ஜெயாவுக்கு முதல் படம்...
குகநாதனின் தயாரிப்பில் முதல் படம்...
தமிழில் சந்திரமோகன் அறிமுகமான படம்...
குகநாதன் ஏவிஎம்மின் செல்லப்பிள்ளையாக இருந்தார் என்பதால் அவருக்கு உதவும் பொருட்டு ஏவிஎம் கூட்டு சேர்ந்து தயாரித்த படம். சித்ரமாலா கம்பைன்ஸ் தயாரித்த படம் இதே பேனரில் தான் ராஜபார்ட் ரங்கதுரையும் தயாரானது.
இவ்வளவு பாத்திரங்கள் மரணமடைந்தாலும் படத்தில் ஒருவிதமான பாதிப்பு மனதில் இருக்கத்தான் செய்தது. அதற்கு அடிப்படைக் காரணம் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை. படம் முழுமையிலும் அவருடைய ஆளுமை நம்மைக் கட்டிப்போட்டு விடும். அதுவும் பாலுவை பாடவைத்து இப்பாடலின் மேன்மையை மேலும் உயர்த்தி விட்டார். 1971ம் ஆண்டைப் பொறுத்த மட்டில் அதை பாலாவின் ஆண்டாகவே நாம் கொள்ள வேண்டும். உத்தரவின்றி உள்ளே வா தொடங்கி தீபாவளிக்கு வெளியான நீரும் நெருப்பும், பாபு வரையில் அந்த வருடம் ஒவ்வொரு பாட்டிலும் பாலுவின் குரல் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போனது. அதில் இந்தப் பாட்டிற்கு முக்கியமான பங்கு உண்டு.
பல நினைவுகளை அசை போட வைக்கிறது தங்களின் பாலா பாடல்கள் வரிசை.
தொடருங்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
வாசுஜி...
பாலு வரிசையில் இதெல்லாம் எப்போ வருமோ தெரியாது... ஆனா.. சுருளி குரலில் பாலு பாடிய பாடல்கள் எத்தனை ?
எனக்குத் தெரிஞ்சு ...
கொஞ்சம் ஒதுங்கு - வசந்த காலம்
கண்ணே கண்ணான கண்ணா - பெண்ணுக்கு யார் காவல்
சின்ன நாக்கு சிமிழி மூக்கு - ஓடி விளையாடு தாத்தா
கொக்கரக்கோ கொக்கரக்கோ - ஒரு மரத்துப் பறவைகள்
( இதெல்லாமே பாலுதானே ? )
வேறு ஏதாவது இருக்கா ?
ராகவ்ஜி..
உங்கள் எட்டாயிரந்து இரண்டு பதிவுகளுக்காக என் வாழ்த்துக்கள்.....
( ஹையா... மத்தவங்களை விட நான் அதிகமா வாழ்த்திட்டேன் )
ஒவ்வொரு பதிவும் முத்து மாணிக்க ரத்தினங்கள்.....
மதுண்ணா!
இப்போ ஞாபகத்துக்கு வந்தது இதுதான். அப்புறம் கொஞ்சம் யோசிச்சி இருக்கான்னு சொல்றேன்.
அடி என்னோட வாடி-----ஒருமரத்துப் பறவைகள்.
(இந்தப் பாடலைப் பத்தி ரொம்ப ஜாலியா எழுதப் போறேன் தொடர்ல)
எங்கெங்கும் கண்டேனம்மா----உல்லாசப் பறவைகள். (எல்லாம் பறவைகளா இருக்கு):) பாலா சுருளிக்கா இல்ல மூர்த்திக்கான்னு குழப்பம். ஆனா மலேஷியா சுருளிக்கு பாடின மாதிரி மாதிரி தெரியுது.
வா மச்சான் வா வண்ணாரப் பேட்ட -----வண்டிச் சக்கரம்
ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்புப் பாராட்டால் என்னை ஆண்டு விட்டீர்கள். இந்த நட்புச் சொந்தம் தெய்வ சொர்க்கம்தான்.
'மாணிக்க மூக்குத்தி'ப் பாடலைப் பற்றி மிக அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.
ஆமாம் ராகவேந்திரன் சார். 'முகூர்த்த நாள்' திரைப்படம் 1967ல் வெளிவந்தது. அருண் பிரசாத் மூவிசாருக்கு இது முதல் படம்தான். அப்படியே அதே கோஷ்ட்டி. ஆனால் இசை மட்டும் முதல் படத்திற்கு கே.வி.மகாதேவன். (வேறு படம் ஏதாவது மாம்ஸ் இசை அருண் பிரசாத் மூவிசாருக்கு அமைத்து இருக்கா?)
ஆனால் ஒளிப்பதிவு பி.என்.சுந்தரம் அவர்கள்.
நீங்கள் சொன்ன ஈஸ்வர் பற்றி நானும் பேசும்படம் பத்திரிகையில் படித்திருக்கிறேன். நல்ல நினைவு சக்தி தங்களுக்கு. அது என்றும் நிலைக்க வேண்டும் எங்களுக்காக.
அந்த நடிகர் பெயர் பெருமாள் ராஜ் என்று நினைவு. (ஒருவேளை ஈஸ்வர்தான் பெருமாள்ராஜ் என்று பெயர் மாற்றிக் கொண்டாரோ தெரியவில்லை)
உங்களுக்காக பெருமாள் ராஜ் அவர்களின் 'முகூர்த்த நாள்' படத்தை இங்கே பதிவிடுகிறேன். அவர் ஈஸ்வரா என்று கண்டுபிடிக்க முயலுவோம்.
http://oi64.tinypic.com/2rz4095.jpg
http://oi64.tinypic.com/2ueisdt.jpg
ராகவேந்திரன் சார்
http://s13.postimg.org/s800tkkjb/oie_oie_overlay.gif
தங்களது 8000 பதிவுகளுக்கு என் சந்தோஷமான வாழ்த்துக்களும், நன்றிகளும். எப்போதும் போல எங்களுக்கு ஆசானாய் நின்று வழி காட்ட வேண்டும். தங்கள் பொன்னான அரிய பதிவுகளை அளித்து எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.
http://padamhosting.com/out.php/i391...h13m00s170.png
http://img.xcitefun.net/users/2010/1...congrats-9.gif
மதுண்ணா!
உங்களுக்காக இது.
'முகூர்த்த நாள்' திரைப்படத்தில் நம் அனைவருக்கும் பிடித்த மாதிரி ஏ.எல்.ராகவன், கே. ஜமுனாராணி குரலில் ஒரு ரேர் பாட்டு இருக்கே. நாகேஷ் மாதவி ஜோடியில்.
நாகேஷ் ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன் கணக்கில் ஒரு பாதி ஆணாகவும், இன்னொரு பாதி பெண்ணாகவும் ஆடுவார். ஜோராக இருக்கும்.
'ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
அழைத்தால் வரலாம்
அன்பைப் பெறலாம்
தொடலாம்... விழி படலாம்... உடல் குளிரலாம்'
ஒரு இடத்தில் சந்திரபாபு மாதிரி நாகேஷ் ஆடுவார்.
கேட்டிருக்கீங்களா?
சின்னா!
'அன்பை' அன்பாக வாசித்ததற்கு நன்றி. 'சுடரும் சூறாவளியும்' பதிவுக்காகத்தான் இரண்டு நாட்களாக அதிகம் இங்கு வர முடியவில்லை.
அருமையான 'முகூர்த்த நாள்' படத்தின் 'மாணிக்க மூக்குத்தி' பாடலை தந்து சந்தோஷத்துடன் கூடிய பெண்டை எடுத்து விட்டீர். நடிக, நடிகையர் யார் என்று ஆராய்வதற்குள் மண்டை காய்கிறது.
அதைப் போல சூர்யன் போய் சந்தரன் வந்ததும் குளிர்ச்சிதான். இந்தப் பாட்டைரெகார்ட் செய்ய அப்போ 1980 வாக்குல நான் பட்ட பாடு. எங்கும் கிடைக்காம கடைசியில பாண்டியில ஒரு பாடாவதி கடையிலே கிடைச்சுது. இருந்து ரெகார்ட் பண்ணி கொண்டு வந்து வீட்டில் ஆனந்தமாக் கேட்டேன். இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்.
தேங்க்ஸ் சின்னா! 'முகூர்த்த நாள்' கதை சீக்கிரம் சொல்றேன். ஆனா அதுல பாலா பாட்டு இல்லேயே.:) பரவாயில்ல. கேட்டுட்டீர். இல்லன்னு சொல்ல முடியுமா? 'சுடரும் சூறாவளியும்' படம் பார்த்து கதை எழுதி செம டயர்ட். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. இன்னொரு நாள் சுருக்க சொல்றேன். கதை அப்படியே மனசுல ஓடுது.:)