Quote:
ஜெமினியின் நகைச்சுவை இழையோடும் குறும்புத்தனமான காதல் வெளிப்பாடுகளுக்கும் இயல்பான நட்புணர்வு பாராட்டுதல்களுக்கும் பெண் திரைப்படம் நல்லதொரு எடுத்துக்காட்டே!
மாறுதலுக்காக ஜெம்னிக்கு அஞ்சலியும் சந்திரபாபு சாயலில் அசத்திய வீணை பாலசந்தருக்கு வைஜயந்தியும் ஜோடிகள் !
அஞ்சலியின் காதல்மன்னர் வைஜயந்தியின் கல்யாண மன்னராக மாறும் வரை நகைச்சுவை களேபரமே !!
இந்த இனிமையான காதல் கலாட்டாக்களை சிறப்பாக வேறு எந்த நடிகராலும் வெளிக்கொணர இயலவில்லை என்பதே இன்றுவரை ஜெமினியை வெல்ல முடியாத நிரந்தர காதல் சக்கரவர்த்தியாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறது !!