Originally Posted by
pammalar
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் கற்கண்டாய் இனிக்கின்றன. நடிப்புலக களஞ்சியம் குறித்த ஆய்வுக்களஞ்சியங்கள் இவை என்றால் அது மிகையன்று. தாங்கள் தங்களது நினைவுகளை அசைபோடும் விதம் அற்புதம். மேலும் மேலும் தங்களின் நினைவு நதிகள், இத்திரி என்னும் கடலில் சங்கமிக்கட்டும். ஒரு படத்தின் ஒரு காட்சியில் நடிப்புச் சக்கரவர்த்தி எப்படியெல்லாம் நடித்திருப்பாரோ, அதனைக் கனக்கச்சிதமாக அப்படியே ஆராய்ந்து அலசி அள்ளி அளிக்கும் விதம் அதியற்புதம். 'ஆய்வரசர்' எனும் பட்டத்தையே தங்களுக்கு வழங்கலாம்.
"ஞான ஒளி"க் காட்சியை தொலைக்காட்சியில் கண்டு கண்கள் குளங்கள் ஆன பதிவு என்ன,
கறை படியாத கரங்களைக் கொண்ட, கலையுலகினில் கரை கண்ட நவரசத்திலகத்தின் "நவராத்திரி"யை அமைந்தகரை 'முரளிகிருஷ்ணா'வில், அந்த முரளிகிருஷ்ணணின் இன்னொரு நாமகரணத்தையே திருப்பெயாராகக் கொண்டுள்ள 'பார்த்தசாரதி'யாகிய தாங்கள், சுயமரியாதைச் சிங்கமான சிங்கத்தமிழனின் அன்புள்ளத்தோடு பார்த்து ரசித்த அனுபவப்பதிவு என்ன,
'கவரிமான்', 'வணங்காமுடி' காட்சிகள் குறித்த 'நறுக் சுருக்' அலசல்கள் என்ன,
'தியாகி', 'ஜல்லிக்கட்டு' பற்றிய ஷூட்டிங் ஸ்பாட் செய்திகள் என்ன,
நடிப்புலக மகானின் திரைக்காவியங்களை மூன்று வகைகளில் பிரித்து வகுக்க - ஒவ்வொரு வகையிலும் விஷயங்களைத் தொகுக்க - கலைப்பிளளையாரின் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட பதிவு என்ன,
"ராமன் எத்தனை ராமனடி" கிளைமாக்ஸை Sony Maxல் பார்க்கும் கிரிக்கெட் மாட்ச்சைப் போல் லைவ் ஆக கொடுத்த லாவகம் என்ன,
"ராஜா" பதிவுகள் என்ன,
எதைச் சொல்வது எதை சொல்லாமலிருப்பது,
தீபாவளியன்று கொடுக்கப்படும் விதவிதமான ஸ்வீட்டுகள் போலல்லலவா இனிக்கின்றன இவையாவும்.
தங்களின் பதிவு/பதிவுகள் வெளியாகும் ஒவ்வொரு நாளும் இத்திரிக்கு தீபாவளித் திருநாள் தான் !
தங்களின் திருத்தொண்டு தொய்வின்றித் தொடரட்டும் !
அன்புடன்,
பம்மலார்.